privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திசி.ஆர்.ஐ. பம்ப்ஸ் முதலாளி சௌந்தரராஜனின் அட்டூழியங்கள்

சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் முதலாளி சௌந்தரராஜனின் அட்டூழியங்கள்

-

தொழிலாளர்களை அழிக்கத் துடிக்கும்
சி.ஆர்.ஐ. முதலாளி சௌந்திரராஜனின் பயங்கரவாதத்தை முறியடிப்போம்!

ன்பார்ந்த உழைக்கும் மக்களே, தொழிலாளர்களே !

cri-kovai-strike-02

பொதுவாக அஷ்டமி நாளில் ‘நல்லகாரியங்களை’ செய்ய மாட்டார்கள். இதெல்லாம் நம்மைப் பொறுத்தவரை மூடநம்பிக்கை என்றாலும் இந்த நம்பிக்கைகளுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்து பக்திமான்களும் இருக்கிறார்கள். அந்த பக்திக்கு காசளிக்கும் தொழிலை செய்யும் முதலாளிகளுக்கு இவை இன்னும் பெரிய சடங்குகள். ஆனால் சின்னவேடம் பட்டி பகுதியில் செயல்படும் சி.ஆர்.ஐ. கம்பெனி நாள் முழுவதும் அஷ்டமி நிரம்பிய நாளான 27-03-2015 தேதியை தேர்ந்தெடுத்து கதவடைப்பு செய்யக் காரணம் என்ன? அப்படியாவது தொழிலாளிகளை ஒழிக்க வேண்டும் என்ற வெறிதான்.

காலை எட்டு மணிக்கு பகல் சிப்டு வேலைக்கு போன தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். ஏன் என்று கேட்ட போது தான் கதவடைப்பு எனும் செய்தியை 9 மணிக்கு ஒட்டுகிறார்கள்.

சி.ஆர்.ஐ தொழிலாளர் வேலைநிறுத்தம்
நாள் முழுவதும் அஷ்டமி நிரம்பிய நாளான 27-03-2015 தேதியை தேர்ந்தெடுத்து கதவடைப்பு.

சி.ஆர்.ஐ. முதலாளியான சௌந்திரராஜன் இதனைச் செய்துள்ளார். இவருக்கு பெயர்தான் சௌந்திரமான ராஜன். ஆனால் குரூர குணத்தில் டெரர் ராஜன்.

சி.ஆர்.ஐ பம்ப்ஸ் தொழிலாளர் வேலை நிறுத்தம்
சி.ஆர்.ஐ. முதலாளியின் பெயர்தான் சௌந்திரராஜன். ஆனால் குரூர குணத்தில் டெரர் ராஜன்.

தொழிலாளர்களுக்கு படியளக்கும் முதலாளியை இது போல திட்டுவது சரிதானா ? என சில அப்பாவிகள் கேள்வி கேட்கலாம். முதலாளிக்கு விசுவாசமாக இருப்பதுதானே சரி என்று அடிமைத்தனத்தை புரிந்து கொள்ளாதவர்கள் கீழ்க்கண்ட  விவரங்களை படித்து புரிந்து கொள்ள கொஞ்சம் முயற்சி செய்யலாம்.

சி.ஆர்.ஐ. தொழிலாளர்கள் முதலாளியின் மீது விசுவாசம் வைத்துத்தான் கடந்த இருபது வருடங்களாக தினசரி 12 மணி நேரம் உழைத்தார்கள். இதன் காரணமாக ஆவாரம்பாளையத்தில் சாதாரண முதலாளியாக இருந்த இவர் கார்ப்பரேட் முதலாளியாக உயர்ந்தார். விசுவாசத்திற்கு கிடைத்த பரிசு என்னவென்றால் தொழிலாளர்களை அழைத்து “இனிமேல் தொழிலாளர்களாக நீங்கள் இருக்க வேண்டியதில்லை காண்ட்ராக்ட் தொழிலாளியாக, ஒப்பந்தக் கூலியாக மாறிக் கொள்ளுங்கள்” என அறிவித்தார். விசுவாசத்திற்கு இவர் அருளிய சுவிசேசம் இதுதான். இதனைக் கேட்டு அதிர்ச்சியான தொழிலாளர்கள் அனைவரும் தங்களது உரிமைகளை மீட்டெடுக்க புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் 2012-ம் ஆண்டு தங்களை இணைத்துக் கொண்டார்கள்.

சி.ஆர்.ஐ பம்ப்ஸ் தொழிலாளர் வேலைநிறுத்தம்
தொழிலாளர்கள் தங்களது உரிமைகளை மீட்டெடுக்க புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.

சங்கமாக சேர்ந்த காரணத்தால் சின்னவேடம்பட்டி சி.ஆர்.ஐ. முதலாளி தொழிலாளர்கள் மீது அடை மழை பொழிவது போல அடக்குமுறை குண்டுகளை வீசிக் கொண்டே உள்ளார். அதன் விபரம் :

  • சி.ஆர்.ஐ. யின் இதர கிளைகளில் 30% போனஸ் கொடுக்கப்படுகிறது. சின்னவேடம்பட்டி கிளைக்கு மட்டும் 8.33% போனஸ் கொடுக்கப்படுகிறது.

cri-kovai-strike-11

  • ACL முன் நடக்கும் எந்த ஒரு பேச்சுவார்த்தையிலும் சட்ட விரோதி சௌந்திரராஜன் கலந்து கொள்ள மாட்டார். சட்டத்தை தனது உரோமத்துக்கு சமமாகக் கருதுகிறார்.
  • ஆனால் சட்டப்படி காவல் துறை இவருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டுமாம்.

cri-kovai-strike-12

  • தொழிற்சாலை ஆய்வாளர் 420 நாட்கள் வேலை செய்த அனைத்து தொழிலாளர்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும் என அரசாணை பிறப்பித்தார். உடனே “சௌந்திர” ராஜபக்சே சென்னை உயர்நீதி மன்றம் சென்று தடையாணை வாங்க திட்டம் போட்டு தனக்காக உழைத்த தொழிலாளர்கள் குடும்பங்களின் வயிற்றில் மண் அள்ளிப் போடுகிறார்.

cri-kovai-strike-14

  • சின்னவேடம்பட்டி சி.ஆர்.ஐ. தொழிலாளர்களுக்கு முறையான சீருடை இல்லை; காலணிகள் இல்லை, சுகாதார வசதி இல்லை, கேண்டீன் இல்லை. இவையெல்லாம் கேட்டால் சம்பளத்தில் PLW என்று ஆயிரக்கணக்கில் பிடித்தம் செய்கிறார். வாங்கும் சம்பளமே ஆறாயிரம். பிடித்தம் மட்டும் ரூ.2000 செய்தால் தொழிலாளர்கள் எப்படி விலைவாசி உயர்வில் வாழமுடியும் ?
  • தனது கம்பெனியின் பெயரை மாற்றி பித்தலாட்டம் செய்கிறார். இதற்கு பதிலாக சி.ஆர்.ஐ. கசப்புக் கடை என வைத்துக் கொள்ளலாம்.
சி.ஆர்.ஐ பம்ப்ஸ் தொழிலாளர் வேலை நிறுத்தம்
சி.ஆர்.ஐ செயலாளர் குமாரவேல்
  • தொழிலாளர்கள் தங்கள் இரத்தத்தை வியர்வையாக மாற்றி பம்ப்’களை உற்பத்தி செய்து தருகிறார்கள். ஆனால் முப்பது வருடம் வேலை செய்தவர்களுக்கு கூட சம்பளம் மாதம் பத்தாயிரத்தை தாண்டவில்லை.
  • விடுப்பு கேட்டால் தர மறுப்பார். ஆனால் ஆப்சென்ட் மட்டும் போட்டு டிஸ்மிஸ் செய்கிறார்.
  • ESI விடுப்பு எடுத்தாலும் அதனையும் குற்றம் என்று சொல்லி விசாரித்து முடிவு செய்ய வழக்கறிஞர் எனும் பெயரில் விசாரணை அதிகாரிகள் உள்ளனர்.
சி.ஆர்.ஐ பம்ப்ஸ் தொழிலாளர் வேலைநிறுத்தம்
விளவை ராமசாமி
  • விசுவாசமாக முதலாளிக்கு சேவகம் புரிந்தால் எட்டி உதைத்து கேவலப்படுத்துவது, அதே தொழிலாளர்கள் சங்கம் அமைத்து போராடினால் “போராடுகிறார்கள்” எனப் புகார் செய்வது இதுதான் திரு.சௌந்திரராஜன் அவர்களின் ஸ்டைல்.
  • தொழிலாளர் ஆணையர் கம்பெனி கேட்டுக்கு நேரில் வந்து கதவடைப்பு சட்ட விரோதம் என்று தெரிவிக்கிறார். தாசில்தாரும் வந்து கதவடைப்பு தவறு, உடனே கம்பெனியை திறங்கள் என அறிவுரை கூறுகிறார்.
  • காவல் துறை ஆய்வாளரும் கதவடைப்பு தவறு என்கிறார். இப்படி அனைத்து அதிகாரிகளும் சொன்ன பிறகும் முதலாளி கேட்க மறுக்கிறார். சட்டத்தை மதிக்காத இவரை உடனடியாக கைது செய்ய வேண்டும். இல்லையெனில் சட்டத்தை மதித்து நடக்குமாறு இவரை நிர்ப்பந்திக்க வேண்டும்.

cri-kovai-strike-13

  • 100 தொழிலாளர்களும் அவர்கள் குடும்பங்களும் ரோட்டில் நிற்க வேண்டும். இவர் மட்டும் குடும்பத்தோடு குதூகலமாக இருப்பார். தொழிலாளர்கள் வயிற்றில் ஈரத்துணி கட்டிக் கொண்டு சாக வேண்டுமா ? இது எந்த ஊர் நியாயம் ? இது நடக்காது, நடக்க அனுமதிக்க மாட்டோம்.
  • தனக்காக உழைத்த தொழிலாளர்களை வேலையை விட்டு துரத்துவாராம். ஆனால் அரசு பள்ளி குழந்தைகளுக்கு பரிசு கொடுப்பாராம். இந்த பரோபகாரி நாடகத்தை பொது மக்கள் மத்தியில் திரை கிழிக்கிறோம்.

cri-kovai-strike-08இவண்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை.
தொடர்புக்கு : விளவை இராமசாமி | 9629730399