privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்விவசாயிகள்மார்ச் 28 வேலை நிறுத்தம் - திருச்சியை திகைக்க வைத்த ரயில் மறியல்

மார்ச் 28 வேலை நிறுத்தம் – திருச்சியை திகைக்க வைத்த ரயில் மறியல்

-

திருச்சி

மிழக விவசாயத்தை ஒழித்துக்கட்டி விவசாயிகளை நாட்டை விட்டே விரட்டி அடித்து தற்குறியாக்கி முதலாளிகளின் கொள்ளைக்கு வழிவகுக்கும் கர்நாடக அரசின் மேக்கே தாட்டு, ராசிமணல் அணைத்திட்டங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கைகட்டி வேடிக்கை பார்க்கும் மத்திய அரசை கண்டித்தும் 28-03-2015 அன்று மாநிலம் முழுக்க முழு கடையடைப்பு நடத்தப்பட்டது.

ரயில் மறியல் போராட்டம்
கர்நாடக அரசின் மேக்கே தாட்டு, ராசிமணல் அணைத் திட்டங்களை தடுத்து நிறுத்த வேண்டும்

இந்தக் கடையடைப்பு போராட்டத்தை ஆதரித்தும், மத்திய மாநில அரசுகளின் சதித்திட்டத்தை எதிர்த்தும் திருச்சியில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி சார்பில் திருச்சி மாநகரம் முழுவதும் இரயில் மறியல் போராட்டம் என்பதை அறிவித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

வி.வி.மு ரயில் மறியல் போராட்டம்
எந்த வழியில் வந்தாலும் கைதாகிவிடும் சூழல் உள்ளது என்பதை அறிந்து தோழர்கள் தனித் தனியாக ரயில் நிலையத்தினுள் நுழைந்தன.

போராட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே அரசின் அடியாள் படையான காவல் துறை இரயில் நிலையம் சுற்றி உள்ள இடங்களில் நிற்கும் அனைத்து பொதுமக்களையும் சோதனைக்கு உட்படுத்துவது, மாணவர்கள் நான்கு பேரை காரணமே இல்லாமல் சந்தேகம் என்ற அடிப்படையில் கைது செய்வது என்று காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டது. பெண்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த 4 பெண் தோழர்கள் ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். தாங்கள் கைது செய்யப்படப் போகிறோம் என்று அறிந்த உடனே கர்நாடக அரசின் திட்டத்தை எதிர்த்து தீவிரமாக முழக்கமிட்டு தோழர்கள் கைது ஆனார்கள்.

திருச்சி ரயில் மறியல் போராட்டம்
கர்நாடக அரசின் திட்டத்தை எதிர்த்து போராட்டம்

ரயில் நிலையத்திற்கு எந்த வழியில் வந்தாலும் கைதாகிவிடும் சூழல் உள்ளது என்பதை அறிந்து தோழர்கள் தனித் தனியாக ரயில் நிலையத்தினுள் நுழைந்தனர். ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து தீவிரமான முழக்கமிட்டனர். காவல் துறையினருக்கு தெரியாமல் உள்ளே நுழைந்து மறியல் செய்ததால் அவர்கள் உடனடியாக தடுத்து நிறுத்த வந்தனர். ஆனால் தோழர்களின் உறுதியான போராட்டத்தால் தள்ளுமுள்ளு நேர்ந்தது. உடனடியாக அப்புறப்படுத்த முடியாமல் காவல் துறையினர் திணறினர். ஆவேசமாக கைது செய்ய வந்த காவலர்களிடம், “நீங்களும் காவேரி தண்ணீரைத் தானே குடிக்கிறீங்க, காவிரி தண்ணீரில் விளையும் அரிசியைத்தானே தீன்றீங்க அல்லது வேறு எதையாவது தின்றீங்களா” என்று தோழர்கள் எழுப்பிய கேள்வி காவலர்களையும் சற்றே திகைக்க வைத்தது.

மற்ற அமைப்புகளின் போராட்டத்தை தடுப்பது போன்று எளிமையாக கைது செய்துவிட முயன்றது காவல்துறை. ஆனால் ஒவ்வொரு தோழரையும் கைது செய்ய 10-க்கும் மேற்ப்பட்ட போலீசார் சேர்ந்து படாதபாடு பட்டனர்.

திருச்சி ரயில் மறியல் போராட்டம்
“நீங்களும் காவேரி தண்ணீரைத் தானே குடிக்கிறீங்க? காவிரி தண்ணீரில் விளையும் அரிசியைத்தானே தீன்றீங்க அல்லது வேறு எதையாவது தின்றீங்களா?” என்று கேட்டனர் தோழர்கள்.

தோழர்களின் போர்க்குணத்தின் முன் நிற்க முடியாமல் நிலைக்குலைந்து ஆத்திரமடைந்த போலீசு தோழர்களை குண்டுக் கட்டாக தூக்கி வீசினர். இதைப்பார்த்த பொதுமக்கள் சிலர் கூட “அதான் கைது பண்ணிட்டீங்க அப்புறம் ஏன் அவர்களை இப்படி இழுக்கிறீங்க” என்று கேள்வி எழுப்பினர்.

திருச்சி ரயில் மறியல் போராட்டம்
போலீசுடன் தள்ளுமுள்ளு

தோழர்களின் முழக்கம் மத்திய மாநில அரசின் சதி திட்டத்தை கண்டித்தும் கர்நாடக அரசின் அயோக்கியத் தனத்தை கண்டித்தும் ஆவேசமாக இருந்தது. 45 நிமிட போராட்டதிற்குப் பின் (பெண்கள் உட்பட) தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி ரயில் மறியல் போராட்டம்
கைது செய்யப்பட்ட தோழர்கள்

இந்தப் போராட்டம் இறுதியானது அல்ல காவேரியின் நடுவே அணைகட்டும் திட்டத்தை முழுமையாக முறியடிக்கும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும் என்ற வகையில் தொடர்ச்சியாக நாம் செய்த போராட்டத்தின் தொடர்ச்சி என்ற வகையிலும் தமிழகத்திலே ஒரு தாக்கத்தை உண்டு பண்ணும் வகையிலும் திருச்சி நகரம் ஒரு பரபரப்பை சந்தித்தித்தது.

ரயில் மறியல் போராட்டம் பற்றிய, மற்றும் பிற பத்திரிகை செய்திகள்

மேலும் போராட்ட புகைப்படங்கள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
திருச்சி.

பட்டுக்கோட்டை

ட்டுக்கோட்டை பகுதியில் விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் அதிராம்பட்டினத்தில் விண் அதிரும் முழக்கங்களோடு ஊர்வலமாக கிழக்கு கடற்கரை சாலை வழியாகச் சென்று, பேருந்து நிலையம் சென்று அரசு பேருந்தை மறியல் செய்து தோழர்கள் கைதானார்கள்.

பட்டுக்கோட்டை பேருந்து மறியல்
பட்டுக்கோட்டையில் பேருந்து மறியல் போராட்டம்

தகவல்
விவசாயிகள் விடுதலை முன்னணி,
திருவாரூர்

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க