privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திநீலகிரி : வனவிலங்குகளை பாதுகாப்பது எப்படி ?

நீலகிரி : வனவிலங்குகளை பாதுகாப்பது எப்படி ?

-

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக வனவிலங்குகளால் மனிதர்கள் படுகொலை செய்யப்படும் நிகழ்ச்சி நடந்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்தவோ தடுக்கவோ பாரிய அளவில் அரசு நடவடிக்கை எடுப்பது இல்லை. இது தொடர்பாக நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கத்தின் தலைமையில் அனைத்துக் கட்சி சங்கங்களின் சார்பில் எடச்சேரி ஹாலில் 29.03.2015 அன்று நடைபெற்ற கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கம்
வன விலங்குகளை பாதுகாப்போம்

1. முதலாளிகள், பெரு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் ஆக்கிரமிப்பில் உள்ள அனைத்து நிலங்களும் நட்ட ஈடு இன்றி பறிமுதல் செயயப்பட்டு அவை மீண்டும் வனமாக்கப்பட வேண்டும்.

2. வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்.

3. விவசாயத்தை நாசம் செய்யும் விலங்குகளை பிடித்து காடுகளில் விட வேண்டும். பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

4. நீலகிரி மாவட்டம் முழுவதும் இனி புதிய காட்டேஜ் கட்டவும், பங்களா கட்டவும் அனுமதி வழங்கக் கூடாது. ஏற்கனவே, அனுமதி இன்றியும், அனுமதிக்கு மீறியும் கட்டப்பட்ட கட்டடங்கள் இடித்து தள்ளப்பட வேண்டும்.

5. நீலகிரி மாவட்டத்தில் நிலம் வாங்குபவர்கள், இதற்கு முன் நிலம் வைத்திருப்பவர்கள், தமது நிலத்தில் நீண்ட வேலிகள், மின்வேலிகள் அமைக்கக் கூடாது. வேலிகள் அமைக்க தடை சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்.

6. வனவிலங்கு நடமாட்டம் அதிகரித்து விட்டபடியால் வனத்துறை வாரா வாரம் அனைத்து கிராமங்களிலும் ஆய்வு செய்து கூணடு வைப்பது, வனவிலங்குகளை கண்காணிப்பது போன்ற வேலைகளை செய்ய வேண்டும்.

7. வனவிலங்குகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ள மக்களுக்கு துப்பாக்கி வழங்க வேண்டும்.

8. வனவிலங்குகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த குடும்பத்திற்கு ரு 10 இலட்சம் நிவாரணமும், உடல் ஊனம் ஏற்பட்டால் 10 இலட்சம் நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்கப்பட வேண்டும். படுகாயமடைந்து மருத்துவமனையில் உள்ளவாகளுக்கு மருத்துவம், பராமரிப்புக்கென்று ரு 3 இலட்சம் வழங்கப்பட வேண்டும். இதுகுறித்து சட்டமன்றத்தில் உடனடியாக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.

9. நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகளால் பாதிப்பு அதிகரிக்கும் அதே வேளையில் சாலை விபத்துகளும் அதிகரித்து விட்டன. மக்கள் தொகை பெருக்கம், சுற்றுலா பயணிகள் அதிகரிப்பது போன்ற விசயங்களை மையப்படுத்தி கோத்தகிரி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும்.

கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் உடனடியாகவும், வரும் 13-ம் தேதி ஒரு நாள் பொது வேலை நிறுத்தம், பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இக்கூட்டத்திற்கு ஆனந்தராஜ் (நீலமலை அனைத்து தொழிலாளர் சங்கத் தலைவர்) தலைமை தாங்கினார். விடுதலை தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலர் பூவரசன், தமிழர் வாழ்வுரிமை கட்சி தலைவர் திரு. அழகு, சோசலிச தொழிலாளர் சங்க தலைவர் கரு. வெற்றிவேல், வாகன ஓட்டுனர் உரிமையாளர் சங்க பிரதிநிதிகள், வாகன பழுதுபார்ப்போர் சங்கம் மற்றும் பல்வேறு கிராமங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

தகவல்
ஆனந்தராஜ்
நீலமலை அனைத்து தொழிலாளர் சங்கத் தலைவர்
கோத்தகிரி.