privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விபோராடும் ஆசிரியர்கள் - குறட்டை விடும் பினாமி அரசு !

போராடும் ஆசிரியர்கள் – குறட்டை விடும் பினாமி அரசு !

-

மிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (JACTO) சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து 19-04-2015, ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் 32 மாவட்டத் தலைநகரங்களிலும் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

அதன் ஒரு பகுதியாக, திருச்சியில் ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தின் மாவட்ட செயலர் திரு கா.உதுமான் அலி  தலைமையில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் சிந்தாமணி அண்ணாசிலை அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. போராட்ட கூட்டுக்குழுவை சேர்ந்த பல்வேறு நபர்கள் கோரிக்கையின் நியாயத்தை விளக்கியும், அவற்றை நிறைவேற்றி தரக் கோரியும் உரை நிகழ்த்தினார்கள். இந்த போராட்டத்தில் 200-க்கும் மேலானவர்கள் கலந்து கொண்டனர்.

ஆசிரியர் போராட்டம்
தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை தாய்மொழியான தமிழ் வழிக்கல்வியை நடைமுறைப்படுத்திட வேண்டும்.

உண்ணாவிரத போராட்த்தில் வைக்கப்பட்ட கோரிக்கைகள்

  1. ஆறாவது ஊதியக்குழு அறிக்கையின்படி தமிழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மத்திய அரசில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகின்ற ஊதியம் தமிழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும்.
  2. தாய்மொழி தமிழ்ப் பாடத்தைக் கடைசியாக வைத்துள்ள அரசாணை 266-ஐ திருத்தம் செய்து தமிழ் பாடத்தை முதல் பாடமாக வைக்க வேண்டும்.
  3. தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை தாய்மொழியான தமிழ் வழிக்கல்வியை நடைமுறைப்படுத்திட வேண்டும்.
  4. தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையில் ஆசிரியர்களின் பணியில் சமீப காலமாகச் சமூகவிரோதிகளின் தலையீடும் ஆசிரியர் பணிக்கு பாதுகாப்பின்மையும் ஒரு தொடர் நிகழ்வாக நடந்து வருகிறது. அதன் காரணமாக, பணிகளில் ஈடுபட முடியாமல் மன உளைச்சலுடன் பணியாற்றும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு தமிழகத்தில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு மருத்துவப்பணி சார்ந்த பாதுகாப்புச் சட்டம் இயற்றியதை போன்று ஆசிரியர்களின் பாதுகாப்பிற்குத் தனியாக ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும்.
  5. மாணவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு தொடக்கப் பள்ளிகளை மூடும் நோக்கத்தை கைவிட்டு அனைத்து பள்ளிகளும் செயல்படத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  6. ஆசிரியர் தகுதித் தேர்வை நீக்கிவிட வேண்டும், ஆசிரியர்களை பதிவு மூப்பு அடிப்படையில் நியமித்திட வேண்டும்.
  7. 2011 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரகாலத்தில் வாக்குறுதி அளித்தற்கு ஏற்ப, தமிழக அரசின் தன் பங்களிப்பு ஓய்வு ஊதியத்திட்டத்தை நீக்கம் செய்து பழைய ஓய்வு ஊதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஆசிரியர் போராட்டம்
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கையை முன் வைத்து உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கையை முன் வைத்து உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. கோரிக்கைகள் தமிழக அரசால் ஏற்கப்படாவிட்டால் கூட்டு நடவடிக்கைகுழு கூடி அடுத்த கட்ட போராட்டம் நடத்துவது பற்றி முடிவு செய்ய இருப்பதாக கூறினார்கள்.

விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடந்த உண்ணாவிரதப்போராட்டத்திற்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் துணைத்தலைவர் சந்தானகிருஷ்ணன் தலைமை வகித்தார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் குணசேகரன் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில செயலாளர் அலெக்ஸாண்டர் உண்ணாவிரதப்போராட்டத்தை தொடங்கி வைத்தார்

ஆசிரியர் போராட்டம்
சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த உண்ணாவிரத போராட்டம்.

சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் பாரி, தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சந்திரசேகர் ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழக ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் முருகேசன் கலந்து கொண்டு உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசினார்.

இதே கோரிக்கைகளை முன் வைத்து தமிழக மாவட்ட தலைநகரங்களில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டங்களில் மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். முன்னதாக, இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 8-ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றனர், ஆசிரியர்கள்.

ஜேக்டோ கூட்டுக் குழுவின் சார்பாக எமக்கு அளிக்கப்பட்ட பேட்டி

ஆனால், ‘மக்கள் முதல்வர்’ ஊழல் குற்றவாளி ‘அம்மா’ வழிகாட்டலில் நடக்கும் பினாமி முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் அரசாங்கமோ, தமது உரிமைகளுக்காகவும், அரசுப் பள்ளிகளின் நலன்களுக்காகவும் கோரிக்கைகளை முன் வைத்து போராடும் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருக்கிறது.

கோரிக்கைகளை பரிசீலிக்க அரசு தவறினால், “ஜியோ’ கூட்டமைப்பினரோடு இணைந்து மாநில அளவில் போராட்டத்தை நடத்த உள்ளோம், என “ஜாக்டோ’ அமைப்பு அறிவித்துள்ளது.

தகவல் :
பு.ஜ. செய்தியாளர்,
திருச்சி.