privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்கோவில்பட்டி : கரிசல் மண்ணை சிவப்பாக்கிய மே நாள் பேரணி

கோவில்பட்டி : கரிசல் மண்ணை சிவப்பாக்கிய மே நாள் பேரணி

-

மே நாள் சூளுரை :
ஆளும் அருகதையற்ற அரசுக் கட்டமைப்பை வீழ்த்துவோம்!
மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்!

கோவில்பட்டியில் மதுரை, உசிலை, தேனி, சிவகங்கை, ராஜபாளையம், தூத்துக்குடி, நெல்லை ஆகிய தென் பகுதிகளைச் சார்ந்த மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி மற்றும் விவசாயிகள் விடுதலை முன்னணி ஆகிய தோழமை அமைப்புகள் சேர்ந்து மே 1-ல் பேரணி, பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடானது.

may-day-kovilpatti-posterஇதற்காக DSP அனுமதிக்கு சென்றபோது அனுமதி மறுத்த்தால் ASP யிடம் தோழர்கள் முறையிட்டனர்.

“பொதுக்கூட்டம் வேண்டுமானால் நட்த்திக்கொள்ளுங்கள்” என்றார்.

மக்கள் உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர் ராமச்சந்திரன், “சார் நீங்கள் அனுமதி கொடுத்தால் வரும் தோழர்களை விட அனுமதி மறுத்தால் கண்டிப்பாக நிறைய பேர் வருவார்கள். பேரணியை கண்டிப்பாக நடத்துவார்கள். அப்புறம் கைது கோர்ட் என நீண்டு செல்லும். வேண்டுமானால் நீங்கள் எஸ்.பி, இன்ஸ்பெக்டரிடம் எங்கள் அமைப்பை பற்றி கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்” என்றார்.

எஸ்.பி,  “ஆமாங்கய்யா, அந்த அமைப்பினர் செய்யணும்னு சொல்லிட்டா கண்டிப்பா செய்வார்கள்” என உறுதிப்படுத்தினார்.

வேறு வழியின்றி ASP யும் பேரணி, பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கி, “கொஞ்சம் மரியாதை நிமித்தமாக DSP-யையும் பார்த்து சொல்லி விடுங்கள்” என்றார்.

பேரணி பொதுக்கூட்டம் உறுதியாகி நாம் தீர்மானித்த இடங்கள் மட்டும் மாற்றப்பட்டன.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மே 1 மாலை 5 மணி அளவில் எட்டயபுரம் மெயின் ரோட்டில் உள்ள சத்யபாமா திருமண மண்டபம் அருகில் இருந்து வி.வி.மு உசிலை வட்டச்செயலாளர் தோழர் குருசாமி பேரணிக்கு தலைமை தாங்கி “இனி மக்கள் தமது பிரச்சனைகளுக்காக மனுக் கொடுத்தோ, கோரிக்கை வைத்தோ கேட்டு உரிமையை பெறமுடியாது. இந்த அரசமைப்பு அழுகி நாறிவிட்டது. இதை அடித்து நொறுக்கி வீழ்த்தாமல் உழைக்கும் மக்களுக்கு விடுதலை இல்லை” என முழங்கி பேரணியை கொடி அசைத்து துவக்கினார்.

முழக்கங்கள் அரசை கிழித்து துவைப்பதாய் இருந்தது.

பொறுக்கி எல்லாம் போலீசு!
கன்னம் வைப்பவன் கலெக்டரு!
நியாயம் கெட்டவன் நீதிபதி!

போன்ற முழக்கங்கள் அருகிலிருந்த காவலர்களை என்னவோ செய்ததை உணர முடிந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மாலை 6.45 மணிக்கு பேரணி கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பொதுக்கூட்ட மேடையை வந்தடைந்தது. பேரணியில் நடந்து வந்த களைப்பை எல்லாம் போக்கும் வகையில் பொதுக்கூட்ட மேடையில் தோழர்கள் முழக்கங்களை படு கம்பீரமாய் எழுப்பினர்.

பொதுக்கூட்டத்திற்கு கோவில்பட்டி பு.ஜ.தொ.முஅமைப்பாளர் தோழர் ஆதி தலைமை தாங்கினார். “போலீசும் ராணுவமும் பாலியல் வன்முறையில் முதலிடத்தில் உள்ளது. மக்களுக்கு எதிரான சக்திகளாய் மாறியுள்ளது” என்பதை விளக்கி பேசினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

கோவில்பட்டி பு.மா.இ.மு தோழர் மணி தனது உரையில், “மே 1 என்றால் இன்றைய இளைஞர்களுக்கு தெரியவில்லை” என்பதை விளக்கிவிட்டு இளைய தலைமுறை பொறுப்போடு செயல்பட வேண்டிய அவசியத்தை விளக்கினார்.

தேனி மாவட்ட வி.வி.மு செயலாளர் தோழர் மோகன் தனது சிறப்புரையில்…

மே நாள் கோவில்பட்டி பொதுக்கூட்டம்
“மதுரை மாவட்ட்த்தில் உயிர்நீத்த மற்றும் நமது பகுதிகளுக்கு அருகில் எல்லாம் உயிர்த்தியாகம் செய்த அனைத்து தியாகிகளையும் நினைவு கூறுவோம்”

“மே 1 தொழிலாளர்தினம் என்பது ஏதோ வாழ்த்து சொல்வதற்கான விசயம் அல்ல. சிகாகோ நகரத்தில் தொழிலாளர்கள் தமது உரிமையை நிலை நாட்ட உயிரையும் கொடுத்த வீரம் செறிந்த வரலாறு. அன்று உயிர் நீத்த அத்தியாகிகளின் மெளனமே இன்று மிக்க வலிமையாய் மாறி உள்ளது. அது போல, மதுரை மாவட்ட்த்தில் உயிர்நீத்த மற்றும் நமது பகுதிகளுக்கு அருகில் எல்லாம் உயிர்த்தியாகம் செய்த அனைத்து தியாகிகளையும் நினைவு கூறுவோம். இந்நாளில் சபதம் ஏற்போம். கடமையாற்றுவோம். அநீதிகளுக்கு முடிவு கட்டுவோம்” என தியாகிகளை நினைவு கூர்ந்து பேசினார்.

ம.உ.பா.மைய மதுரை மாவட்ட துணைச்செயலாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தனது உரையில்

மே நாள் கோவில்பட்டி பொதுக்கூட்டம்
“மக்கள் முதல்வர் களவாணி ஜெயா என்றால் பன்னீர்செல்வம் ஆடுமாடு பன்னிகளுக்கு முதல்வரா?”

“மக்கள் முதல்வர் களவாணி ஜெயா என்றால் பன்னீர்செல்வம் ஆடுமாடு பன்னிகளுக்கு முதல்வரா? 100 கோடி பேர் காலையில் எழுந்தவுடன் பிரச்சனைக்கு, நெருக்கடிக்கு ஆளாகி இன்று வாழ்க்கையை எப்படி ஓட்டப்போகிறோம் என தவிக்கும் லட்சணத்தில், ஓட்டுப்பொறுக்கி அரசியல் தலைவர்கள் மே நாள் வாழ்த்து கூறுகிறார்கள். நாங்கள் வாழ்த்து கூறமாட்டோம், இந்த நெருக்கடிகளுக்கு தீர்வு சொல்கிறோம்” என ஆரம்பித்து, அரசின் நிர்வாகம், கல்வித்துறை, உயர்கல்வித்துறை, மருத்துவத்துறை, நீதித்துறை மற்றும் பத்திரிகைத்துறை அனைத்தும் எப்படி சீரழிந்து சின்னாபின்னமாகி போயுள்ளது. “அவன் வகுத்த சட்ட்த்தை அவனே மதிக்காதபோது நாம் என்னா மயித்துக்கு மதிக்கணும்” என்று பிரித்தெடுத்தார்.

ம.க.இ.க மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கதிரவன் புதிய கலாச்சாரத்தின் “மாட்டுக்கறி: பார்ப்பன மதவெறி” இதழ் வெளியீடு பற்றி விளக்கி பேசினார்.

இறுதியில், ம.க.இ.க வின் மைய கலைக்குழுவின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

நெல்லை மாவட்ட்த்தில் ஒரு குடும்பம் வறுமையின் காரணமாக இனிப்பில் விசம் கலந்து தின்னும் பொழுது தந்தை மகளிடம் கேட்கிறார் : “இதில் என்ன கலந்து உள்ளது என்று தெரியுமா?” என.

பெரிய மகளோ, “தெரியுமப்பா விசம் உள்ளது” என்று சொல்லி குடும்பமே தற்கொலை செய்து கொண்ட நமது நாட்டின் அவலத்தை உணர்ச்சிப் பிழம்பாய் விவரித்து பாடினார்கள் கலைக்குழு தோழர்கள். “நான் உலகம்” பாடலுக்கான உச்சரிப்பு, நடனம் கலையின் உச்சத்தை எட்டியது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

புரட்சிகர கலைநிகழ்ச்சியில் கட்டுண்ட மக்களுடன் கூட்டம் கடைசி வரை அசராமல் கட்டுக்கோப்பாய் சிறப்பாய் நடந்தது.

பு.ஜ செய்தியாளர்கள்
கோவில்பட்டி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க