privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்பா.ம.க.-வின் கொண்டை எது ? - கேலிச்சித்திரம்

பா.ம.க.-வின் கொண்டை எது ? – கேலிச்சித்திரம்

-

செய்தி : “தமிழகத்தின் சீரழிவை தொடங்கி வைத்ததே தி.மு.க.-தான்” – அன்புமணி

அன்புமணி கொண்டை
அட ..சங்கி..மங்கி .! திமுக ,அதிமுக வோட சேர்ந்து நீங்க கும்மாளம் போட்டதே இல்லையா ? ..நீ என்னதான் மாறு வேசத்துல வந்தாலும், நீ யார்ன்னு உன் தல மேல உள்ள கொண்ட காட்டி கொடுத்துடும் !

படம் : ஓவியர் முகிலன்

  1. அம்மாவை பற்றி பல கார்டூன்கள் வந்துள்ளன. அம்மாவை திட்டி கடிதம் எழுதிய தளபதியை திட்டி கடிதம் எழுதிய சின்ன ஐயாவை பற்றியும் கார்டூன் வந்து விட்டது. ஆனால், தளபதி பற்றி மட்டும் ஒன்றும் இல்லை, நஹி, லேது. தளபதியை திட்டி கடிதம் எழுதிய சின்ன ஐயாவை “உன் கொண்டையை பாரு” என கேட்பது போல, முதலில் கடிதம் எழுதிய தளபதியையும் கேள்வி கேட்க முடியும். ஆனால், வினவு செய்யவில்லை. எல்லாரையும் திட்டும் வினவிடம் இருந்து தப்புவதென்பது எளிதானதல்ல. இதை ஆதரவென்றே கருத வேண்டியுள்ளது.

    இந்த விவகாரத்தை பொருள் முதல்வாதம், அபேதாபேதம், பரமபத சோபானம், பாம்பு பஞ்சாங்கம் போன்ற கருவிகள் துணைகொண்டு ஆராய்ந்து பார்த்ததில் ஒரு விஷயம் புரிகிறது. ஒன்று தளபதியின் ஜாதகத்தில் ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்று இருக்க வேண்டும். அல்லது தளபதி உத்தம சீலராய் இருக்க வேண்டும். எப்படியாயினும், வினவின் ஆதரவு பெற்ற தளபதியை போற்றி, ஆராதித்து, ஆதரிக்க வேண்டியது நமது கடமை ஆகிறது.

  2. வெங்கடேசன்,

    வினவு முகப்பில், அல்லது இந்தப் பக்கத்தின் வலது புறத்தில் தொகுப்பு என்கிற மெனு இருக்கிறது. அதில் தி.மு.க என்று செலக்ட் செய்து பார்த்தால் தி.மு.க.வை தட்டிக் கேட்கும் பதிவுகள் வருகின்றன.

    உதாரணத்துக்கு சில
    1. கருணாநிதியின் வம்சம் 24×7 https://www.vinavu.com/2010/09/08/karunanidhi-24×7/
    2. தி.மு.கவில் குஷ்புவா, குஷ்புவுக்கான தி.மு.கவா? – https://www.vinavu.com/2010/05/20/kushpu-dmk/
    3. குடும்பக்கோட்டை திருட்டு சிங்கம் – கார்டூன் – https://www.vinavu.com/2010/07/16/karunanidhi-cartoon/
    4. முல்லைப் பெரியாறு: கருணாநிதியின் துரோகம்! சி.பி.எம். இன் பித்தலாட்டம்! – https://www.vinavu.com/2009/12/24/mullai-periyar-dmk-cpim/
    5. ஸ்பெக்ட்ரம் ஊழல்- தி.மு.க.-காங்கிரசின் கூட்டுக் களவாணித்தனம் – https://www.vinavu.com/2009/11/23/spectrum2/
    6. ஈழம்: கருணாநிதியின் கோழைத்தனம் ! – https://www.vinavu.com/2008/11/05/eelam8/
    7. ஒருபுறம் இலவசம், மறுபுறம் அடக்குமுறை! கொட்டமடிக்கும் கருணாநிதி ஆட்சி – https://www.vinavu.com/2010/10/20/karunanidhi/
    8. திமுக : திராவிட முதலாளிகள் கம்பெனி ! – https://www.vinavu.com/2011/03/23/dmk-ltd/
    9. ஆருயிர் நண்பன் சாதிக் பாட்சாவிற்கு ஆ.ராசாவின் இரங்கற் கவிதை! – https://www.vinavu.com/2011/03/21/a-raja-sadiq-basha/
    10. சின்னக்குத்தூசி: தி.மு.க விற்குத் தேவைப்படாத சுயமரியாதை மறைந்தது! – http://www.vinavu.com/2011/05/23/chinna-kuthoosi/

    அம்மாவப் பத்தியோ, சின்ன ஐயா பத்தியோ வந்த அளவு தளபதி பத்தியோ, தி.மு.க பத்தியோ கார்டூன்கள் ஏன் வரலைன்னு இதிலிருந்து புரிய முடிகிறது. நீங்களும் உண்மையிலயே புரிஞ்சிக்க விரும்பினா, இந்த 10 கட்டுரைகளையாவது ஒரு அறிவியலாளரின் ‘நிர்வாண’ நிலையிலிருந்து படிச்சிப் பாருங்க.

    அதே போல அம்மா பத்தியும் (நூத்துக் கணக்கில கிடைக்கும்), சின்ன ஐயா பத்தியும் எழுதப்பட்ட பதிவுகள படிச்சிப் பார்த்தா அவங்களைப் பத்தியும் புரிஞ்சிக்க முடியுது.

    நீங்க அப்பப்போ பிராது கொடுத்துப் பார்க்கிறீங்க. கொஞ்சம் அப்ரோச்ச மாத்திப் பாருங்க.

  3. குமரன்,
    சுட்டிகளுக்கு நன்றி. படித்துப் பார்க்கிறேன்.

    நான் தொடர்ச்சியாக வினவு படிக்கத் தொடங்கி இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகின்றன. நினைவில் உள்ளவரை திமுக பற்றிய விமர்சனம் என்பதை மையமாக கொண்டு ஒரு கட்டுரை மட்டுமே நினைவுக்கு வருகிறது (அழகிரி பற்றிய நையாண்டி என நினைவு). நீங்கள் கொடுத்த சுட்டிகளும் நான்கைந்து ஆண்டுகளுக்கு முந்தியவை. இந்த காலகட்டத்தில் திமுக தமிழகத்தில் ஆட்சியில் இல்லை என்பதை உணர்கிறேன். ஆனால், மத்திய அரசில் முக்கிய இடம் பிடித்திருந்தது. “தொகுப்புகள்” பகுதியில் திமுக என தெரிவு செய்தால், திமுக பற்றி ஏதாவது சிறு குறிப்புடன் கூடிய, மற்ற கட்டுரைகள்தான் வருகின்றன. நிதானமாக, தேடிபார்க்க வேண்டி இருக்கலாம்.

    தவிரவும், ஜெவுக்கு நேரடி தொடர்பில்லாத இடங்களிலும், அவரை இழுப்பதை காண்கிறேன். சமீபத்திய உதாரணமாக, புதுவை பல்கலை துணைவேந்தர் பொது சொத்தில் ஆட்டையை போட்டு சுகவாழ்வு வாழ்வது வினவுக்கு ஜெவை நினைவுப் படுத்துகிறது. கலைஞரையும் நினைவுப் படுத்தலாம். பொருந்தித் தான் வரும்!

    பதினெட்டு ஆண்டுகாலம் வழக்கை இழுக்கடித்தாலும் ஜெவுக்கு ஏதோவொருவிதத்தில் தண்டனையாவது கிடைத்தது. கலைஞருக்கு அதுவும் இல்லை. ஒன்று அவர் கக்கனின் வாரிசாக இருக்க வேண்டும். அல்லது வேறு காரணங்கள் இருக்க வேண்டும். வினவு இது பற்றி பேசியதாக தெரியவில்லை.

    • வெங்கடேசன்,

      வினவில் திமுகவை முகவை திகவை இழுப்பது மட்டுமே உங்களது முக்கியஅஜென்டாவாக இருக்கிறது. அதற்கு வாய்ப்பேயில்லாவிட்டால் நாலாயிரம் என்று எதேதோ சொல்வீர்கள். பாவம் வெங்கடேசன் நீங்கள். சூத்திரர்களுக்குள் கொஞ்சமேனும் அட்ஜஸ்ட் மென்ட் இருக்கக்கூடாதா.
      அப்புறம் வினவில் கேலிச்சித்திரம் சமீபகாலத்திய வருகைதான். ஸ்டாலினுக்கு ஒன்று போடுமளவுக்கு முக்கியத்துவமிலலை என்றே நினைக்கிறேன். தேர்தல் வரும்வரை பொறுங்கள்.

      • pk
        நியாயமாக திமுக, மு க வை வினவு இழுக்க வேண்டும். அப்படி இல்லையாதலால் நான் இழுக்கிறேன். யாராவது இழுக்க வேண்டுமல்லவா? இதை தொடர்ந்து செய்யப் போகிறேன். பிரச்சனை என்னிடம் இல்லை.

        நாலாயிரம் பாடுவது இயல்பாக வருகிறது. இவை பொதுவாக விவாதத்தின் மையத்தில் இருப்பதில்லை. நாலு பேர் பேசிக்கொண்டு இருக்கும்போது, ஒருவர் ஏதாவது சினிமா பாடலை முணுமுணுத்துக் கொண்டு இருப்பதில்லையா. அவ்வாறு. இதில் மற்றவர்க்கு பிரச்சனை இல்லை என்று தான் புரிந்து வைத்திருக்கிறேன்.

    • //இந்த காலகட்டத்தில் திமுக தமிழகத்தில் ஆட்சியில் இல்லை என்பதை உணர்கிறேன்//

      //ஜெவுக்கு நேரடி தொடர்பில்லாத இடங்களிலும், அவரை இழுப்பதை காண்கிறேன். சமீபத்திய உதாரணமாக, புதுவை பல்கலை துணைவேந்தர் பொது சொத்தில் ஆட்டையை போட்டு சுகவாழ்வு வாழ்வது வினவுக்கு ஜெவை நினைவுப் படுத்துகிறது. கலைஞரையும் நினைவுப் படுத்தலாம். பொருந்தித் தான் வரும்!//

      அம்மா மாதிரியானவங்கள வாய்ப்பு கிடைகக்கும் போதெல்லாம் சாத்தணும், கலைஞர ஆட்சியில இருக்கும் போது மட்டும் சாத்தினா போதும்கிற வித்தியாசத்தை எப்படி புரிஞ்சிக்கிறது என்பதுதானே உங்க சந்தேகம்.

      //பதினெட்டு ஆண்டுகாலம் வழக்கை இழுக்கடித்தாலும் ஜெவுக்கு ஏதோவொருவிதத்தில் தண்டனையாவது கிடைத்தது. கலைஞருக்கு அதுவும் இல்லை. ஒன்று அவர் கக்கனின் வாரிசாக இருக்க வேண்டும். அல்லது வேறு காரணங்கள் இருக்க வேண்டும்.//

      சொத்துக் குவிப்பு தொடர்பான வினவு கட்டுரைகள் எல்லாத்தையும் படித்தால், உங்களுக்கு மர்மமா இருக்கிற ஜெ.வுக்கும், மு.க.வுக்குமான வித்தியாசம் புலப்படலாம். அதற்கு சீரங்கநாதனையும் தில்லை நடராசனையும் பார்வையிலிருந்து கொஞ்சம் ஒதுக்கி வைப்பது உதவலாம்.

      முயற்சி பண்ணுங்க.

  4. குமரன்,
    கடந்த மூன்றாண்டுகள் என வைத்துக் கொள்வோம். நான் சுட்டிய கட்டுரை தவிர திமுக விமர்சனம் என்பது மையமாக உள்ள வேறேதாவது கட்டுரை வந்துள்ளதா?

    வினவின் கட்டுரைகள் பெரும்பாலும் விமர்சனம் வகையில் அமைந்தவை, அரசியல் பற்றி அதிகம் பேசுபவை. அப்படி இருக்க தமிழகத்தின் முக்கிய எதிர் கட்சி பற்றி விமர்சிக்க மூன்றாண்டுகளில் ஒன்றும் இல்லை என்பது எனக்கு ஆச்சர்யம் தருகிறது. இந்த காலகட்டத்தில் திமுக மத்திய அரசில் முக்கிய இடம் பெற்றது என்பது கூடுதல் விஷயம்.

    ஜெ சொத்து குவிப்பு வழக்கு பற்றி பல கட்டுரைகள் வந்துள்ளன. அவர் குவித்த சொத்து பற்றியும், பதினெட்டு ஆண்டு வழக்கு இழுத்தது பற்றியும், உடனே ஜாமீன் கிடைத்தது பற்றியும். எனது பிராது இதுவே: இவருக்காவது வழக்கு, ஜாமீன், ஜெயில், ஆட்சி பறிப்பு என ஏதாவது நடந்தது. பொதுவெளியில் கலைஞரையும் பெரிய ஊழல் வாதியாகத்தான் பார்க்கின்றனர். ஆனால் அவர் மீது உருப்படியான் வழக்கு கூட நடக்கவில்லை. அவர் உத்தம சீலரா? வினவு இது பற்றி ஒன்றும் பேசியதில்லை. குறைந்தது “ஆமாம், அவர் உத்தம சீலர்தான்” என்றாவது கட்டுரை வந்திருக்க வேண்டும்.

    என் கருத்துப்படி இருவருக்குமான வித்தியாசங்கள் இவை: கலைஞர் அளவுக்கு ஜெ வுக்கு சாமர்த்தியம் போதாது. கலைஞர் அடக்கி வாசித்தவர். ஜெ பிடாரி போல ஆடினார். ஆனால், இது போன்ற புற விஷயங்கள் தவிர, ஊழல் என்ற அக விஷயத்தில் இருவருக்கும் அதிகம் வேறுபாடு இல்லை.

  5. பல வருடங்கள் நுணுக்கமாக ஆராய்ந்து நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை மூன்றே நிமிடங்களில் முடித்து விட்டார் குமாரசாமி. இந்த சூழலில் “கலைஞரை ஏன் உமவையாக்கவில்லை” என்றெல்லாம் நான் வைத்த விவாதங்கள் மொக்கைத்தனமானவை. கடுகளவாவது நீதி, நேர்மை உள்ள சூழலில் இப்படியெல்லாம் விவாதம் செய்ய சிறிதாவது நியாயம் இருக்கும். இவ்வளவு மோசமான நிலையில் இந்திய நீதித்துறையும், அரசியலும் இருக்கும் போது வினவை விமர்சிக்க நியாயம் ஒன்றும் இல்லை.

    வினவிடம் முழு மன்னிப்பு கேட்டுக் கொண்டு, இந்த கட்டுரையில் நான் எழுதிய மறுமொழிகளை வாபஸ் பெறுகிறேன்.

    • பரவாயில்லையே வெங்கடேசன்.

      இப்போதாவது புரிகிறதா. பார்ப்பனியத்தின் மீதான கூடுதல் அக்கறைப் பற்றி.

    • வெங்கடேசனின் நேர்மையான இந்த விளக்கத்திற்கு நன்றி மகிழ்ச்சி வாழ்த்துக்கள். வினவுடன் முரன்படும் வேறு விசயங்களையும் இது போன்ற பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

  6. நீதி வளைக்கப்படுவதில் பணம், அதிகாரம், பதவி ஆகியவற்றிற்கும் பங்கு இருக்கிறது. வினவு பார்ப்பனீயத்தை மட்டும் குறிப்பாக முன்வைகிறது. இதில் இன்னும் எனக்கு உடன்பாடு இல்லை. தா கிருட்டிணன் வழக்கு சித்தூர் நீதிமன்றத்தில் என்ன ஆயிற்று என்பது பற்றி அதிகம் பேசப்படுவதில்லை. தினகரன் அலுவகலம் எரிக்கப்பட்டதன் காணொளிகள் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகியது. எனினும், இவ்வழக்கில் யாருக்கும் தண்டனை இல்லை. சமீபத்தில், சல்மான் கானுக்கு ஒரே நாளில் ஜாமீன் கிடைத்தது. ஜெ வுடன் கூட அவரது அமைச்சரவை சகாக்கள் பலர் மீதும் வழக்கு தொடரப்பட்டது. இவர்களில் சேடப்பட்டி முத்தையாவுக்கு தண்டனை தரப்பட்டது நினைவில் உள்ளது. மேலும் ஓரிருவர் இருக்க கூடும். திமுகவில் ஐக்கியமாகியவர்கள் உட்பட பலரும் தண்டிக்கப்படவில்லை. மாயாவதி மீதான் தாஜ் ஊழல் வழக்கு அப்படி இப்படி போக்கு காட்டி மூடிவிட்டனர். முலாயம், அகிலேஷ் யாதவ் மீதான ஊழல் வழக்குகளும் இப்படியே. சாதிக் பாட்சா கொலையா, தற்கொலையா என்பதும் கேள்விக்குறியே. எனவே, நீதி வளைக்கபடுவதில் பார்ப்பனீயம் முக்கிய காரணி என்பதை நான் இன்னனும் ஏற்கவில்லை.

    ஆனால், இரண்டு விஷயங்களில் தெளிவு கிடைத்துள்ளது.

    மற்ற விஷயங்கள் போலவே இந்திய நீதித்துறையும் நல்லதும், கெட்டதும் கலந்த கலவை என்று நம்பிகொண்டிருந்தேன். இது பொய்த்துப் போய் விட்டது. ஜெ வுக்கு கீழ் நீதிமன்றத்தில் தண்டனை தரப்பட்டதை இந்திய நீதித்துறையின் நேர்மைக்கு சாட்சியாக காண முடியாது. மாறாக, நீதிபதி குன்ஹா, அரசு வக்கீல் ஆச்சார்யா போன்ற தனி மனிதர்களின் நேர்மை என்ற அளவில் மட்டுமே காண முடியும். துரியோதனாதிகள் நூறு பேரில் ஒருவன் மட்டும் நல்லவன் என்று சொல்லுவார்கள். இந்த விஷயத்தையும் அப்படித்தான் பார்க்க வேண்டியுள்ளது.

    இரண்டாவதாக இவ்விஷயத்தில் நான் அவ்வப்போது வினவு மீது வைத்த விமர்சனங்கள் அர்த்தமற்றவை என்பதை உணர்கிறேன். முழுதும் கெட்டுப்போன ஒரு சூழலில், “நீ ஏன் கலைஞரை குற்றம் சொல்வதில்லை” எனக் கேட்பதில் பொருள் இல்லை. குவிந்துள்ள குப்பைக் கூளத்தில் இருந்து துர்நாற்றம் வீச அழுகிய பழங்கள் காரணம் என ஒருவன் சுட்டிக்காட்டினால், அவனிடம் “நீ ஏன் குப்பையில் இருக்கும் செத்த எலியை பற்றி பேசவில்லை” என கேள்வி கேட்பது அர்த்தமற்றது. “நீதி வளைக்கப்படுவதில் முக்கியக் காரணம் பணம்-அதிகாரமா அல்லது பார்ப்பனீயமா”, “ஜெ, கலைஞர் ஆகியோரில் யார் அதிக ஊழல்வாதி” போன்றவற்றை சும்மா விவாதிக்கலாம். “கர்ணனிடம் விஞ்சி நிற்பது நட்பா, கொடையா” என்பது போன்ற பட்டிமன்ற பாணியில் பொரி கடலை தின்றுகொண்டு விவாதித்து பொழுது போக்கலாம். மற்றபடி இதை வினவின் மீது விமர்சனமாக் வைக்க நியாயம் இல்லை. அந்த அளவிற்கு இந்த விஷயம் வொர்த் இல்லை.

    மொத்தத்தில் மேலே சொன்ன விஷயங்களில் வினவின் கருத்தோடு எனக்கு முழு உடன்பாடு இல்லை. ஆனால், பொழுது போக்குதல், தமிழ் தட்டச்சு பயிற்சி எடுத்தல் போன்ற நோக்கங்களோடு இவை பற்றி விவாதிக்கலாமே தவிர இதை போய் வினவின் மீது கூரிய விமர்சனமாக் வைக்க இடம் இல்லை.

    • நண்பர் வெங்கடேசன்,

      உங்களது பின்னூட்டம் அருமை. இருந்தபோதிலும் ஒரு தொகுப்பான பார்வையை தவறவிடுகிறீர்கள். நீதி வளைக்கப்படுவதில் பார்ப்பனீயம் முதலாளித்துவம் இரண்டுமே இருகண்களைப் போன்றவை.

      1. இதே குமாரசாமி பிடி பருத்திக்கு ஆதரவாக தீர்ப்பளித்து ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் எதிராக இருந்திருக்கிறார். பிடிபருத்தி விசயத்தில் அனைத்து அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகளும் ஒன்றுதான். அது மக்களுக்கு எதிரானது. இங்கே கோலோச்சுவது பார்ப்பனியத்திற்கு ஈடான முதலாளித்துவமே.

      2.இதே குமாரசாமி தலித்படுகொலைகளுக்கு ஆதாரமில்லை என்று கொலைக்குற்றவாளிகளை விடுவித்தவர். அங்கேயும் முழுக்கவும் பார்ப்பனியம். இதில் எங்கே பார்ப்பனர் வருகிறார்? இது எப்படி பார்ப்பனிமாகும் என்று கேட்டுவிடமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

      3. ஜெயாவும் கருணாவும் பிசினஸில் சேர்ந்து இயங்குகிற அதாவது பொறுக்கித் தின்னும் பல தரகுத்தொழில்களில் அசையாத ஒற்றுமை உண்டு. அங்கே படியளப்பது பன்னாட்டு கம்பெனிகள்.

      நாம் இதை எப்படி விளங்கிக்கொள்ளலாம் என்றால் தேவர்களும் அரக்கர்களும் சேர்ந்து அமுதத்திற்காக பாற்கடலை கடைவர். கடைசியில் அரக்கர்களான அடிப்பொடி சூத்திராள் கட்சிகள் ஏமாற்றப்பட்டு ஆட்டையில் இருந்து விலக்கப்படுவர். கடையில் பார்ப்பனியமும் நோண்டச் சொல்லி ஆர்டர்போட்ட முதலாளித்துவமும் பலன் அடைவார்கள். பொறுக்கித் தின்னும் கட்சிகளுக்கு ஏதேனும் ஓரிரு சொட்டுகள் கிடைக்கலாம்.

      ஆனால் தலைமேற்பதும் முழுக்கச் சுரண்டுவதும் முதலாளித்துவமும் பார்ப்பனியமுமே!

    • வெங்கடேசன்,

      //நீதி வளைக்கப்படுவதில் பணம், அதிகாரம், பதவி ஆகியவற்றிற்கும் பங்கு இருக்கிறது//

      இதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் இவை வெற்றிடத்திலிருந்து வருபவை அல்ல. இவற்றைப் பெறுவதற்கு பார்ப்பனியத்தின் பங்கு, குறிப்பாக இந்தியாவில், முக்கியம் என்பது உங்களுக்குத் தெரியாதா.

      இதைப்பற்றி விவாதிக்க விரும்பினால் விவாதிக்கலாம். அது தட்டச்சுப் பழக்கத்திற்காகவே அல்லது எந்த காரணத்திற்காக இருந்தாலும் எனக்கு பரவாயில்லை.

  7. பிகே, தென்றல்,
    1989 முதல் தமிழகத்தில் ஜெ-கலைஞர் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றனர். கலைஞர், மாயாவதி, முலாயம், நிதீஷ் குமார் ஆகியோர் ஆட்சியை பிடித்ததில் பார்ப்பனீயத்தின் பங்கு பற்றி விளக்க முடியுமா?

    பொழுதுபோக்காக மட்டுமே விவாதிப்பதால், இதை விட சுவாரஸ்யமான விஷயம் ஏதாவது கிடைத்தால் இந்த விவாத்தில் இருந்து காணமால் போய் விடுவேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    • வெங்கடேசன்

      \\1989 முதல் தமிழகத்தில் ஜெ-கலைஞர் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றனர். கலைஞர், மாயாவதி, முலாயம், நிதீஷ் குமார் ஆகியோர் ஆட்சியை பிடித்ததில் பார்ப்பனீயத்தின் பங்கு பற்றி விளக்க முடியுமா?\\

      இந்தக் கேள்விக்கு நாம் அரசு, அரசாங்கம் என்ற இருபதங்களை பரிசீலிக்க வேண்டும். அரசு (State) என்பதற்கு அதிகாரம் என்றும் அரசாங்கம் (Government) என்பதற்கு அதைச் செயல்படுத்தும் உறுப்பு நிர்வாகம் என்றும் பொருள் கொள்ளலாம் என்பது சரிதானே?

      நம் நாட்டில் அதிகாரம் என்பது பார்ப்பனிய பனியாக்களின் கைகளில் தான் உள்ளது. ஆட்சி மாறினாலும் அதிகாரம் மாறுவதில்லை. உள்ளாட்சி மாநில ஆட்சி ஆகியவற்றிற்கு இந்தியாவில் அதிகாரங்கள் குறைவு!! இதே ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற அதிகார வர்க்க உறுப்புகள் எல்லாம் யாரலும் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. ஆகையால் தான் ஜெயாவிற்கு சேவை செய்ய தலைமைச்செயலரில் இருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வரை வரிசைகட்டி நிற்கிறார்கள்.

      இந்த இடங்களில் முழுவதும் இருப்பதும் பார்ப்பன பனியாக்களே! இந்தியாவைப்பொறுத்தவரையில் பார்ப்பனியமும் முதலாளித்துவமும் நிர்வகிக்கும் ஓர் உறுப்பு தான் அரசாங்கம். இதை ஏற்றுக்கொண்டால் தலித் முதலமைச்சராகலாம். தலித் முதலாளியாகவும் மாற முயற்சி செய்யலாம்.

      உங்களுக்கு பாடல்கள் பிடிக்கும் என்பதால் அரசு, அரசாங்கம் குறித்து சில எடுத்துக்காட்டுகள் முன் வைக்க விரும்புகிறேன்.

      திருமாலின் மார்பைப் பற்றி தீண்டத்தகாத குலத்தைச் சேர்ந்த திருப்பாணாழ்வார் பாடும்

      “பாரமாய பழவினை பற்றறுத்து
      என்னைத்தன்
      வாரமாக்கி வைத்தான் வைத்ததன்றி
      யென்னுள் புகுந்தான்
      கோர மாதவம் செய்தானென்கொ
      லறியே னரங்கத் தம்மான்திரு
      வார மார்பதன் றோஅடி
      யேனை யாட்கோண்டதே”

      என்று ஒரு தாழ்ந்த குலத்தவர் திருமாலைப் பற்றி பாடுவதும் மாயாவதி முதலமைச்சர் ஆவதும் இந்த அமைப்பையும் திருமாலையும் ஏற்றுக்கொண்டால் மட்டும்தான் சாத்தியம். இது அரசாங்கம்.

      ஆனால் அதிகாரம் என்னவென்றால் இதே பல பாடகர்களின் கனவில் அந்தணர்கள் கனவில் வந்து முக்திக்கும் இறைமைக்கும் வழி சொல்வார்கள். சைவத்தில் நந்தன் கொளுத்தப்பட்டது அதிகாரத்திற்கு ஒர் எடுத்துக்காட்டு.

      தாங்கள் பொழுதுபோக்காக அல்லாமல் சீரியசாக படிக்க விரும்பினால் (குமரன் சொல்வதைப்போன்று ஓர் அறிவியல் அறிஞனின் நிர்வாண நிலையில் இருந்து படிக்க விரும்பினால்) வினவின் இந்தக் கட்டுரையைப் படித்து பதில் எழுதுமாறு கோருகிறேன்.

      அரசு, அரசியல், அரசாங்கம், உரிமைகளற்ற மக்கள்!
      https://www.vinavu.com/2011/04/13/state-of-indian-politics/

  8. வெங்கடேசன்,

    நாம் பலநூற்றாண்டுகளின் நிலையையும் அதன் தொடர்ச்சியைப் (Persistency) பற்றியும் பேசிக்கொண்டிருக்கிறோம். நீங்கள் கடந்து ஜம்பது ஆண்டுகளில் நடந்த சில சிறிய மாற்றங்களைப் பற்றி கேட்கிறீர்கள்.

    மாற்றங்கள் நிகழவே இல்லை என்று நாங்கள் சொல்லவில்லை. வெள்ளைக் காரர்களின் தலையீட்டால் நமக்கு தேர்தல் ஜனநாயகம் கிடைத்திருக்கிறது. அதனால் திராவிடர் ஆரியருக்கிடையேயான சமன்பாட்டில் சிறிது மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆட்சி அதிகாரத்தில் திராவிடர்களுக்கு சிறிது இடம் கிடைத்திருக்கிறது. அரசுப் பணிகளில் திராவிடர்களுக்கு சிறிது இடம் கிடைத்திருக்கிறது. இது ஆரியர்கள் மனமுவந்து விட்டுக்கொடுத்ததினால் அல்ல மாறாக திராவிடர்கள் சிறிது நெட்டித்தள்ளி தங்களுக்கென்று சிறிய இடத்தை பிடித்துக் கொண்டதால் கிடைத்தது. திராவிடர்களுக்கு சொன்னது யாதவர்களுக்கும் மற்றவர்களுக்கும் பொருந்தும்.

    திராவிடர்களின் புதிய அதிகாரம் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மாறும் நிலையில் உள்ளது. இதை உள்வட்டம் எனக்கொள்ளலாம். தமிழகத்தில் இதையும் கூட பாதி காலம் பாப்பாத்தியிடம் இழக்கவேண்டியிருக்கிறது. பல நூற்றாண்டுகளாக பார்ப்பணர்கள் மற்றும் பார்ப்பணியர்கள் தங்களிடம் கட்டுப்பாட்டிற்குள் வந்த நிலங்களை, சொத்துக்களை, கோயில்களை, அதிக அதிகாரமுள்ள அதிக வருமானமுள்ள பதவிகளை மற்றும் வேலைகளை அவர்கள் இன்னும் தக்கவைத்திருக்கிறார்கள். இது உள் வட்டத்தை சுற்றிச்சூழ்ந்திருக்கும் வெளிவட்டம் என்று கொள்ளலாம். கவர்ச்சியான வெளித்தோலைக் கொண்டிருக்கும் இந்த வெளி வட்டத்தின் ஊடக ஆதிக்கத்தை வைத்தும் இதன் சமூக ஆதிக்கத்தைப் புரிந்து கொள்ளமுடியும்.

    மாயவதி அதிகாரத்திற்கு வந்தது ஒரு அரிய நிகழ்வு என்றுதான் கூறமுடியும். அது கூட பார்ப்பனர்களுடன் அதிகாரப்பகிர்வு ஒப்பந்தம் போட்டுக்கொண்டதால் தான் முடிந்தது.

    உள்வட்டத்தின் அதிகாரத்தை மீறிய சக்தி கொண்டதாக வெளிவட்டம் இருப்பதற்கான சில ஆதரங்கள் கீழே.

    1. முக வினால் கொண்டுவரப்பட்ட அனைத்து சாதி அர்ச்சகர்கள் சட்டம் பார்ப்பனர்களின் தலையீட்டால் செல்லுபடியாகமால் இருப்பது.

    2. இட ஒதுக்கீட்டில் 50 சதம் வரம்பு இருப்பது.

    3. தமிழ் நாட்டில் பிற்பட்ட வகுப்பிற்கு ஒதுக்கப்பட்ட விகிதம் ஒதுக்கப்படாத பொது விகிதத்தை பாதிக்காமல் இருக்க இடங்களின் எண்ணிக்கையை கூட்டவேண்டிய நிலை. Etc.

  9. பிகே
    நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் நேரடி பதில் தரவில்லை. அதற்கு பதிலாக, மற்ற பல விஷயங்களை தொடுகிறீர்கள். ஒவ்வொன்றும் நீண்ட விவாதமாக வளரக்கூடியது. நேரம் பிடிக்கக் கூடியது. எனக்கு தெம்பு இருக்குமா என தெரியவில்லை.

    சரி. உங்களது மறுமொழியில் உள்ள individual statements பற்றி சில கேள்விகள்.

    ஆரியர்-திராவிடர் பற்றி சொல்லி உள்ளீர்கள். கலைஞர், ஜெ, முலாயம், மாயாவதி, நிதீஷ் குமார், தேவே கௌடா, மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, வாஜ்பாய் ஆகியோரை உதாரணமாக கொள்வோம். இவர்களில் யாரெல்லாம் ஆரியர், யாரெல்லாம் திராவிடர் என நீங்கள் வரையறுக்கிறீர்கள்? அல்லது இரண்டாக பிரிக்காமல் வேறு விதமாக பிரிக்கிரீர்களா?

    ஜெ ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சியில் ஆட்சிக்கு வருவது அவர் பாப்பாத்தி என்பதாலா? அதனால் தான் மக்கள் ஒட்டு போடுகிறார்களா?

    // பார்ப்பணியர்கள் தங்களிடம் கட்டுப்பாட்டிற்குள் வந்த நிலங்களை சொத்துக்களை, கோயில்களை, அதிக அதிகாரமுள்ள அதிக வருமானமுள்ள பதவிகளை மற்றும் வேலைகளை அவர்கள் இன்னும் தக்கவைத்திருக்கிறார்கள் //

    அப்படியா? சான்று தர முடியுமா? தமிழகத்தில் மொத்த தனியார் நிலம் எத்தனை ஏக்கர்? இதில் பார்பனர் வசம் எத்தனை ஏக்கர் உள்ளது? தமிழ்நாட்டின் மொத்த வருமானம் (state GDP) எவ்வளவு? இதில் பார்ப்பனர் வசம் எவ்வளவு உள்ளது?

    // மாயவதி அதிகாரத்திற்கு வந்தது ஒரு அரிய நிகழ்வு என்றுதான் கூறமுடியும். அது கூட பார்ப்பனர்களுடன் அதிகாரப்பகிர்வு ஒப்பந்தம் போட்டுக்கொண்டதால் தான் முடிந்தது. //

    மாயாவதி ஆட்சிக்கு வந்தது வாக்கு வங்கி அரசியலில் அவர் காட்டிய ‘திறமை’. மற்றவர்களும் இதையே செய்திருக்கின்றனர்.

    இட ஒதுக்கீடு பற்றிய விவாதம் கிளப்புகிறீர்கள். ஒதுக்கீடு சதவீதம் எவ்வளவு இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்? இதை அவ்வப்போது பரிசீலனை செய்யப்படவேண்டுமா அல்லது நிலைத்து நிற்க வேண்டுமா?

    // முக வினால் கொண்டுவரப்பட்ட அனைத்து சாதி அர்ச்சகர்கள் சட்டம் பார்ப்பனர்களின் தலையீட்டால் செல்லுபடியாகமால் இருப்பது. //

    இச்சட்டத்தை நான் முழுமனதோடு ஆதரிக்கிறேன்.

    • வெங்கடேசன்,

      பணம், அதிகாரம், பதவி ஆகியவற்றை பெறுவதற்கு பார்ப்பனியத்தின் பங்கு முக்கியம் என்று கூறியிருந்தேன். இதை மறுக்கிறீர்களா அல்லது ஏற்றுக்கொள்கிறீர்களா, ஏன் என்பதை தெளிவு படுத்தவும்.

      // நேரடி பதில் தரவில்லை//

      எனது பின்னூட்டத்தில் பதில் இருக்கிறது. இருந்தாலும் அதைவிட நேரடியாக பதில் கொடுக்க முயல்கிறேன். கலைஞர் போன்றவர்கள் ஆட்சியை பிடித்ததில் பார்ப்பனீயத்தின் பங்கு எதிர்மறையானது. தேர்தல் ஜனநாயகமுறை இந்த மாற்றத்திற்கு வசதி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

      // யாரெல்லாம் ஆரியர், யாரெல்லாம் திராவிடர் //

      இதை முடிந்த வரை எளிமைப்படுத்தினால் வருவது.

      திராவிடர்கள் : கலைஞர், முலாயம், மாயாவதி, நிதீஷ், தேவே, சந்திரபாபு

      ஆரியர் : ஜெ, வாஜ்பாய்

      கலப்பு : மம்தா

      //ஜெ *** ஆட்சிக்கு வருவது அவர் பாப்பாத்தி என்பதாலா?//

      கவர்ச்சியான வெளித்தோலினால் தான் ஜெ யினால் திரையுலக கனவுக்கன்னியாக வரமுடிந்தது. எம்ஜியார் இறந்த பின்னர் இந்த கவர்ச்சியை வைத்துத்தான் அவரை அந்த கட்சியினர் தலைவராக ஏற்றுக்கொண்டனர்.

      // பார்பனர் வசம் எத்தனை ஏக்கர் உள்ளது?//

      இந்த இடத்தில் நான் பார்ப்பணர்களை மட்டும் குறிப்பிடவில்லை. பார்ப்பனீயர்களையும் சேர்த்துத்தான். ஆதாவது பார்ப்பணர்களின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு அடுத்த இடத்தை வைத்திருப்பவர்கள். வெள்ளாளர்கள், பிள்ளைகள், முதலியார்கள், செட்டியார்கள், ரெட்டிகள் போன்றவர்கள்.

      சுதந்திர இந்தியாவின் ஆரம்ப காலத்திலேயே பார்பனர்கள் கிராமத்தில் இருந்த ஏக்கர்களை விற்றுவிட்டு நகரத்தில் பங்களாக்களை அப்பார்மன்ட்களை கட்டிக்கொண்டனர். பெரும்பாலானவர்கள் நிலப்பங்கீடு வரும் என்று எதிர்பார்த்ததும் ஒரு முக்கிய காரணம். அரசு வேலைகளுக்கு சென்று விட்டதும் மற்றொரு காரணம். இன்றும் கோயில்களின் மற்றும் இதைப்போன்ற நிறுவனங்களின் சொத்துகளால் முதன்மையான பயனாளிகள் இவர்கள்தான். இதைப் போன்ற விசயங்களில் புள்ளிவிவரங்கள் நம்மிடையே இல்லை. ஏன் இல்லை என்பதும் தெளிவானது தான். எனவே நாம் இந்த விசயத்தை வேறுவழிகளில் தான் அனுகமுடியும். எகா. நீதிபதிகள் வீதம் ஒரு முக்கிய indicator. சினிமா பாடகர்களை எடுத்துக்கொள்வோம். பார்ப்பனப் பாடகர்கள் பாடிய பாடல்களின் எண்ணிக்கையுடன் மற்ற பாடகர்களின் பாடல்களின் எண்ணிக்கையுடன் ஒப்பீட்டால் வித்தியாசம் தெரியும். காட்சி ஊடக விளம்பரங்களில் வரும் பார்ப்பன பார்ப்பணீய திராவிட நடிகர் நடிகைகளின் விகிதம் கொண்டும் இதைப் புரிந்து கொள்ளமுடியும்.

      // ஒதுக்கீடு சதவீதம் எவ்வளவு இருக்க வேண்டும்//

      ஒவ்வொரு சாதியின்/அல்லது சாதிக்குழுவின் எண்ணிக்கைக்கு சமமான சதவீதம் இருக்கவேண்டும். கலப்பினத்தவருக்கும் தனியான ஒதுக்கீடு இருக்கவேண்டும். இந்த ஒதுக்கீடு சற்று கூடுதலாகக்கூட இருக்கலாம். பத்துவருடத்திற்கு ஒருமுறை கணக்கெடுப்பில் ஏற்படும் மாற்றத்திற்கேற்ப வீதங்கள் மாற்றப்படவேண்டும். படிப்படியாக சாதிகளின் பலம் குறைந்து கிட்டத்தட்ட எல்லோருமே கலப்பினர் என்று வரும் வரையிலோ அல்லது சாதி என்ற அடையாளம் உன்மையிலேயே பொருளற்றதாக போகும் வரையிலோ அதாவது கலப்பு மணம் சர்வசாதாரணமாக நடக்கும் வரையிலோ அதாவது matrimony யில் சாதிபற்றி எந்த குறிப்பும் இல்லாமல் பெரும்பாலான விளம்பரங்கள் வரும் வரையிலோ இந்த ஒதுக்கீடு தொடரவேண்டும்.

      // இச்சட்டத்தை நான் முழுமனதோடு ஆதரிக்கிறேன்//

      நல்லது. மகிழ்ச்சி.

  10. பிகே, தென்றல்
    தற்சமயம் அடியேன் வேறு விஷயங்களில் பிசியாக இருப்பதால், சில நாட்களுக்குப் பிறகு இந்த விவாதத்தை தொடர்கிறேன். பொறுத்தருள்க.

  11. இந்த தலையங்கம் ஒரு vanniyar fobia sindrom போலத்தான் உள்ளது. நான் சொல்ல விரும்புவது அன்புமணி அவர்களின் புகை இலை தடுப்பு திட்டத்தாலும்,108 ஆம்புலன்ஸ் திட்டத்தாலும் வருடத்திற்கு குறைந்தது 10லட்சம் இந்தியர்களின் உயிர் தோராயமாக காப்பாற்றப்படுகிறது என்ற உண்மையை கூட தெரிந்துகொள்ளாத உங்களது metropolitan Journalisaத்தைக்கண்டு நான் வியந்துபோகிறேன் மக்கா!!! மேலும் அவர் பணம் வாங்கிக்கொண்டு மருத்துவகல்லூரி அங்கீகாரம் கொடுத்திருந்தால் நானும் கூட ஒன்றை வாங்கிஇருப்பேன் மக்கா!! ஆனால் புற்றீசல்போல் தமிழகத்தில்(ஒட்டுமொத்த இந்தியாவுலேயுந்தான் உள்ள எஞ்ஜினீரிங்காலேஜ்க்கு காசேவாங்காம அப்ரூவல் தந்தாங்களா மக்கா!!!!???????☝️☝️☝️

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க