privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்பெஸ்ட் பம்ப்ஸ் ஸ்ரீபிரியா வீட்டில் தொழிலாளர் குடும்பம் முற்றுகை

பெஸ்ட் பம்ப்ஸ் ஸ்ரீபிரியா வீட்டில் தொழிலாளர் குடும்பம் முற்றுகை

-

கோவை ஐயர் கம்பெனியின் யோக்கியதையை சமீபத்தில்தான் அம்பலப்படுத்தியிருந்தோம்.

வீட்டினுள் நுழைந்து போராட்டம் நடத்திய பின்பு, “நாளை கண்டிப்பாக தொழிலாளர் நலத் துறை அலுவலகம் வருகிறேன். போராட்டத்தை நிறுத்திக் கொள்ளுங்கள்” எனக் கூறிய ஸ்ரீப்ரியா மறுநாள் வழக்கம் போல தனது இரட்டை நாக்கு வேலையை நிரூபணம் செய்வது போல வரவில்லை. மறுபடியும் வாய்தா போட்டு அந்த வாய்தாவுக்கும் வராமல் அவமதிப்பு செய்கிறார். இப்படி சட்ட விரோத நடவடிக்கைகளில் மிக இயல்பாக நடந்து வருகிறார்.

வேலாண்டிபாளையம் முழுவதும் பெஸ்ட் கம்பெனியின் பெயர் இருக்கும் இடங்களில் பிரச்சாரம் செய்து ஸ்ரீப்ரியாவின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியும் அசராமல் இருக்கிறார். ஆனாலும், “நாங்கள் விடப்போவதில்லை” என முடிவெடுத்து 06-05-2015 அன்று காலை 10:30 மணிக்கு ஸ்ரீப்ரியாவின் வீட்டின் முன்பு முற்றுகைப் போராட்டம் என முடிவெடுத்து சென்று குடும்பமாக அமர்ந்தார்கள், தொழிலாளர்கள்.

பெஸ்ட் கம்பெனி முற்றுகை போராட்டம்
ஸ்ரீப்ரியாவின் வீட்டின் முன்பு முற்றுகைப் போராட்டம்

வீட்டினுள் இருந்த ஸ்ரீப்ரியா வெளியே வரவில்லை. ஆனால், அடுத்த ஐந்து நிமிடங்களில் சாய்பாபா காலனி காவல்துறை அங்கு ஆஜராகி விட்டது; தொழிலாளர்களை வீடியோ எடுக்க அமர்த்தப்பட்டிருக்கும் கைக்கூலி வீடியோகிராபரும் வந்துவிட்டான்.

பெஸ்ட் கம்பெனி முற்றுகைப் போராட்டம்
உள்ளே வெளியே விளையாடிய போலீஸ்.

தனது தந்தை முதல் தான் வரை அனுபவிக்கும் சுகபோகத்திலிருந்து உண்டு கொண்டிருக்கும் சோறு வரை உழைத்து உருவாக்கிக் கொடுத்த தொழிலாளிகளிடம், தான் குடும்பத்தோடு குளிரூட்டப்பட்ட அறையில் இருக்கையில் சாலையில் குடும்பத்தோடு அமர்ந்திருக்கும் தொழிலாளிகளிடம், தனது வீட்டிலிருந்து 100 அடி தூரத்தில் அமர்ந்திருக்கும் தொழிலாளிகளிடம் பேச்சு வார்த்தை நடத்த 3 கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் காவல் துறையை கூப்பிடும் அளவு தெனாவெட்டில் இருக்கிறார் ஸ்ரீப்ரியா.

பெஸ்ட் கம்பெனி முற்றுகைப் போராட்டம்
சாயம் போன சீருடைகளுடன் தவணை முறையில் வாகனங்களுக்கு கடன் கட்டிக் கொண்டு எங்கள் குழந்தைகளை படிக்க வைக்க கடன் வாங்கிக் கொண்டிருக்கும் தொழிலாளர்கள் போராட்டம்.

ஸ்ரீப்ரியாவின் தகப்பனார் காலஞ்சென்ற கௌரி சங்கர் 10×10 ரூமில் சின்ன அலுவலகத்துடன் இந்த கம்பெனியை துவக்கியது முதல், 30 வருடங்களாக உழைத்து உழைத்து இத்துணை யூனிட்டுகளை உருவாக்கி கொடுத்தவர்கள் நாங்கள். நாங்கள் இன்னமும் சாயம் போன சீருடைகளுடன் தவணை முறையில் வாகனங்களுக்கு கடன் கட்டிக் கொண்டு எங்கள் குழந்தைகளை படிக்க வைக்க கடன் வாங்கிக் கொண்டிருக்கும் பொழுதும் இவ்வளவு பொறுமையாக போராடிக் கொண்டிருக்கிறோமே..! எங்கள் மனிதாபிமானத்தை இங்கு காணலாம்.

ஆனால், இப்படி சுரண்டிக் கொழுத்த உங்கள் தகப்பனாரும், அவரது வழித்தோன்றிய நீங்களும் நேரடியாக வெளியே வராமல் குறைந்த பட்சம் எங்களை நேரடியாக எதிர் கொள்ள தைரியம் இல்லாத கோழையாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை.

காவல் துறை வழக்கம் போல தமது “நாங்கள் சட்ட ஒழுங்கை நிலை நாட்டுவதற்காகவே பிறப்பெடுத்தவர்கள்” என்ற நிலையை எடுத்தது. குடும்பத்தோடு கைதாகவும் தயாராக இருக்கிறோம் என்பதை அறிந்தவுடன் பின்வாங்கி பேச்சு வார்த்தை என்ற நயவஞ்சக நாடகத்துக்கு தயாரானது. பின்னர் ஒரு அரை மணி நேரம் உள்ளே வெளியே விளையாடி பின்னர்,

பெஸ்ட் கம்பெனி முற்றுகைப் போராட்டம்
பின்னர் மழை பெய்ய துவங்கியது தொழிலாளிகள் கொட்டும் மழையிலும் தமது முற்றுகையை தொடர்ந்தனர்.

போலீஸ் : “மேடம் நாளைக்கு கண்டிப்பா லேபர் கோர்ட்ல ஃபைல் பண்றேன்னு சொல்லிருக்காங்க…?”

நமது தோழர் : “சார், இந்த வசனங்களைத்தான் ஏற்கெனவே அவங்க பல முறை சொன்னாங்க.”

போலீஸ் : “இல்லைங்க, இந்த முறை கண்டிப்பாக செய்றேன்னு சொல்றாங்க. அப்டி அவங்க செய்யலைனா நீங்க மேற்கொண்டு என்ன செய்யணுமோ செய்யுங்க”

நமது தோழர் : “சரிங்க சார்., நாங்க இப்ப அவங்க கூட பேச முடியாத அளவுக்கு தொலைவில இருக்கோம் பாருங்க., அதனால அவங்களால பேச முடியாது. அவங்க நாளைக்கே பேசட்டும். அது வரை நாங்க குடும்பத்தோடு இங்கயே இருக்கோம்.”

தொழிலாளிகளின் மனைவிமார்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத காவல் துறை ஒன்றும் பேசாமல் அமைதியாக நின்று விட்டனர்.

அடுத்து என்ன பேசுவது, எப்படி ஸ்ரீப்ரியாவின் செயலை நியாயப்படுத்துவது என காவல் துறையும் சற்று குழம்பியது. பின்னர், “சரி நீங்க போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாமல் பண்ணுங்க” எனக் கூறிவிட்டு ஓரமாக சென்று விட்டனர்.

அதன் பின்னர், தந்தி டி‌வி மற்றும் லோட்டஸ் போன்ற தொலைக்காட்சிகளில் இருந்து பேட்டி எடுக்க வர, பெஸ்ட் கம்பெனி கைக்கூலி போட்டோ கிராபர் பத்திரிகையாளர் களையும் சேர்த்து வீடியோ எடுக்க அவர்கள் கடுப்பாகி அந்த நபரை தடுக்க முயன்றனர்.

பெஸ்ட் கம்பெனி போராட்டம்
“கமிஷனர் ஆர்டர் இருக்கு. அது இருக்கு இது இருக்கு” என சவடால்

அவன், “கமிஷனர் ஆர்டர் இருக்கு. அது இருக்கு இது இருக்கு” என சவடால் விட்டு, பின்னர் அடங்கி மன்னிப்பு கேட்டு விட்டு அந்த பதிவுகளை அழித்து விட்டு சென்று அமைதியாக அமர்ந்து விட்டான்.

பின்னர் மழை பெய்ய துவங்கியது தொழிலாளிகள் கொட்டும் மழையிலும் தமது முற்றுகையை தொடர்ந்தனர்.

போராட்டம் தொடரும்…!

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க