privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்நெஸ்லே : சோற்றில் விசம் வைத்தால் இதுதான் தண்டனையா ?

நெஸ்லே : சோற்றில் விசம் வைத்தால் இதுதான் தண்டனையா ?

-

உணவில் விசம் கலக்கும் கார்ப்பரேட் பயங்கரவாதிகளை விரட்டுவோம்!

ன்பார்ந்த உழைக்கும் மக்களே!

maggi-nooseவெளிநாட்டுக் கம்பெனிக்காரன் கலர், கலராக பாக்கெட்டில் கழுதை விட்டையை அடைத்து விற்றாலும் அதுதான் சிறந்தது என்று நம்புகிறோம். சினிமாக் கழிசடைகளை வைத்து எதை விளம்பரம் செய்தாலும் அதை வாங்கித் தின்பதுதான் கவுரவம் என்று மயங்கிக் கிடக்கிறோம். ஆனால், இப்பொழுது நெஸ்லே மேகி நூடுல்ஸில் கொடிய ரசாயனமும், உயிரைப் பறிக்கும் உப்பும் கலந்திருப்பது அம்பலமாகி நமது போலி கவுரவத்தில் மண்ணள்ளிப் போட்டிருக்கிறது.

உடனே, பல மாநிலங்களில் தடை விதித்ததன் மூலம் மக்கள் மீது அக்கறை இருப்பதாகக் காட்டிக் கொள்ளத் துடிக்கிறது, அரசு. இதில் மறைக்கப்படும் உண்மைகளைத் தெரிந்து கொள்வது குடிமக்கள் உரிமை. அதை தெரிவிப்பது உங்களை நேசிக்கும் எங்கள் கடமை.

மேகியா? நெஸ்லே மேகியா?

சுவிட்சர்லாந்தைச் சார்ந்த நெஸ்லே என்ற பன்னாட்டுக் கொள்ளைக் கும்பலின் நூடுல்ஸ் பெயர்தான் மேகி. ஆனால், இன்று எல்லா டி.வி, பத்திரிகைகளும் வெறும் மேகிக்கு தடை என்று சப்பைக்கட்டு கட்டுகின்றனர்.

உண்மையில், இதைத் தயாரிக்கும் நெஸ்லேவின் பெயர் மக்களின் முன் நாறிவிடக் கூடாது என்பதாலும் அதன் பிற பொருட்களின் விற்பனை இந்தியாவில் தடைபடக் கூடாது என்பதாலும் இப்படிச் சொம்படிக்கிறார்கள்.

என்ன இருக்கிறது நெஸ்லே மேகியில்?

துப்பாக்கித் தோட்டா செய்யப் பயன்படும் உயிருக்கு ஆபத்தான ‘காரீயம்’, அபாய அளவை விட 700% அதிகமாக மேகியில் உள்ளது. நாக்கில் பட்டவுடன் சுவையைத் தூக்கிக் கொடுக்கும் அதே நேரத்தில் எமனை உடனே அழைத்து வரும் மோனோ சோடியம் குளூட்டமேட் என்ற அஜினமோட்டோ 3 கிராம் உள்ளது. இதை உணவில் சேர்ப்பதால் புற்றுநோய், ஜீரண மண்டலம் நாசமாவது உட்பட பலவித நோய்கள் வரும்.

இதைப் பயன்படுத்த உணவுத் தரக்கட்டுப்பாடு சட்டப்படி தடையும் உள்ளது. அதையெல்லாம் மயிரளவுக்குக் கூட எந்தக் கார்ப்பரேட்டும் மதிப்பதில்லை.

இது மட்டும்தான் விசமா?

ஏற்கனவே கோக், பெப்சி குளிர்பானங்களில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கொடிய பூச்சிக்கொல்லி மருந்து 27 மடங்கு அதிகமாக இருப்பதாக நிரூபிக்கப்பட்டது.

லேஸ் (Lays) குர்குரே (Kurkure), பிங்கோ (Bingo), சீட்டோஸ் (Cheetos) போன்ற எல்லாக் குப்பைகளிலும் தடை செய்யப்பட்ட ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. நம் பிள்ளைகளுக்கு வரும் பெரும்பாலான வியாதிகளுக்கு இந்த விசக் குப்பைகள்தான் காரணம். ஆனால், நடிகர், நடிககள் விளம்பரத்தில் வந்து மயக்குவதையும் கோடிக்கணக்கில் விற்பதையும் அரசு அனுமதிக்கத்தானே செய்கிறது.

அடியாளாக அரசு…

இன்று நெஸ்லே மேகிக்குத் தடை போடும் அரசுதான், 30 ஆண்டுகளாக நஞ்சுள்ள பொருட்களை அவன் நம் தலையில் கட்டுவதையும் அத்ன மூலம் ஆண்டுக்கு 15,000 கோடி கொள்ளையடிப்பதையும் அனுமதித்தது.

தனியார் நிறுவனங்களில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கும் பாலில் யூரியா, சவ்வரிசி மாவு கலப்பதை அரசே கண்டுபிடித்த பிறகு கூட எந்தக் கம்பெனியையும் தடை செய்யவில்லை.

இப்போது கூட நெஸ்லே கம்பெனி அதிகாரி எவனும் கைது செய்யப்படவில்லை. நூடுல்ஸ் பாக்கெட்டுகளை திரும்ப வாங்கிக் கொண்டால் போதுமா? சோற்றில் விசம் வைத்தவனுக்கு இதுதான் தண்டனையா? இப்படி கார்ப்பரேட் கம்பெனிகளின் அடியாளாகத்தான் அரசு எப்போதுமே இருந்து வருகிறது.

தப்பிக்க முடியாதா?

“கவர்மெண்டே துணை நிற்கும்போது கார்ப்பரேட் கம்பெனிகளை நாம் என்ன சார் செய்ய முடியும், இதெல்லாம் நடக்குற காரியமா” எனச் சிலர் கேட்கிறார்கள். வேறு எதுதான் நடக்குற காரியம்?

“மேகி நூடுல்ஸ்ல விசம் இருக்காமே” என 4 நாட்களுக்குப் பேசிப் புலம்புவது, எவளாவது நடிகை வந்து, ‘என்னை நம்புங்க, மேகி சாப்பிட்டா சத்து’ என்றால் உடனே ஓடிச் சென்று வாங்கி பிள்ளைகள் மீது திணிப்பது, இது மட்டும்தான் நம்மால் செய்ய முடியுமா?

நமது பிள்ளைகள் மீது உண்மையான அக்கறை இருக்கிறதென்றால், அவர்களுக்குப் பாதுகாப்பான உணவு கிடைக்கப் போராடுவதுதானே நியாயம்? சோற்றில் விசம் கலக்கும் கார்ப்பரேட் கம்பெனிகளை அடித்து விரட்டாமல் பாதுகாப்பான உணவு பற்றிப் பேச முடியுமா?

இதை, இப்போதுள்ள கார்ப்பரேட்டுகளின் எடுபிடியான அரசு செய்யுமென நம்புவது முட்டாள்தனம். அதை நாம்தான் செய்ய வேண்டும். அதற்கு நமக்கு அதிகாரம் வேண்டும்.

எனவே,

மக்கள் அதிகாரக் கமிட்டிகளைக் கட்டுவோம்!
பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட்டுகளை விரட்டியடிப்போம்!

மக்களின் உயிருக்கு வேட்டு வைக்கும் மேகி, பெப்சி, கோக்கை தடை செய்!
தரக்கட்டுப்பாட்டுச் சட்டங்களை கார்ப்பரேட்டுகளுக்கு ஏற்ப வளைத்துக் கொடுத்த அதிகாரிகளுக்குத் தண்டனை கொடு!

ஃபாஸ்ட்புட் மோகத்தை ஒழித்துக் கட்டுவோம்!
உணவே மருந்து, மருந்தே உணவு எனும்
உழைக்கும் மக்கள் பண்பாட்டைக்
காத்து வளர்த்திடுவோம்!

மேகி, பெப்சி, கோக், லேஸ், குர்குரே, – குப்பைகள்
வெறும் கலப்படமும் விசமும் மட்டுமல்ல!
இயற்கை, மக்களின் உயிராதாரப் பறிப்பும்
இறையாண்மை அழிப்பும் கூட!

பன்னாட்டு, கார்ப்பரேட், தரகு முதலாளிகள் குற்றம் செய்தால் தண்டிக்க முடியாது!
அதிகாரி, போலீசு, இராணுவத், நீதிமன்றம் சட்ட – பாராளுமன்றங்கள் செயலிழந்து போச்சு!
நாட்டையும் மக்களையும் பாதுகாக்க மக்கள் அதிகாரம் ஒன்றே வழி

தகவல்
மக்கள் கலை இலக்கியக் கழகம், சென்னை
95518 69688

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க