privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விஅரசு இசைப்பள்ளியில் அடிமைத்தனம் - பு.மா.இ.மு எதிர்ப்பு

அரசு இசைப்பள்ளியில் அடிமைத்தனம் – பு.மா.இ.மு எதிர்ப்பு

-

மாவட்ட இசைப் பள்ளி
தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை 17 மாவட்டங்களில் அரசு இசைப்பள்ளிகளை நடத்தி வருகிறது.

விழுப்புரத்தில் கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் நடத்தப்படும் மாவட்ட அரசு இசைப்பள்ளி செயல்படுகிறது. அங்கு 95 மாணவர்கள் பயில்கிறார்கள். இங்கு வாய்ப்பாட்டு, பரதநாட்டியம், மிருதங்கம், நாதஸ்வரம், உள்ளிட்ட பல்வேறு இசைக்கலைகள் சொல்லித்தரப்படுகிறது.

இசைக்கலை பயில வரும் மாணவர்களின் ஏழ்மையை, அறியாமையை பயன்படுத்திக்கொண்டு தலைமை ஆசிரியர் உள்ளிட்ட மற்ற ஆசிரியர்கள் தாங்கள்  சாப்பிட்ட பாத்திரங்களை கழுவச் சொல்லுதல், ஹோட்டல்களுக்கு  சென்று காபி, தேநீர் மற்றும் பெரிய பெரிய காரியர்களில் உணவு வகைகளை வாங்கி வந்து தர வைத்தல் என்று அடிமைகள் போல் நடத்தியுள்ளனர்.

மேலும், இப்பள்ளி சொந்த கட்டிடத்தில் இயங்கினாலும் அப்பள்ளிக்கென பொதுக்கழிப்பறை ஆசிரியர்களும், மாணவர்களும் சேர்ந்தே பயன்படுத்தும் விதத்தில் ஒன்றே ஒன்று மட்டும் உள்ளது. ஆரம்பத்திலிருந்தே கழிப்பறையை சுத்தம் செய்ய ஆட்கள் நியமிக்கப்படவில்லை. மாறாக, தலைமை ஆசிரியை கலையரசி உத்தரவின் பேரில் மாணவர்களைக் கொண்டே இந்த வேலையை இது நாள் வரை செய்ய வைத்துள்ளனர்.

அப்படி மாணவர்கள் பள்ளிச் சீருடையில் கழிப்பறையை சுத்தம் செய்யும் காட்சி வாட்ஸ் அப்பில் வெளியானதோடு மட்டுமல்லாமல் கடந்த 18-062015 அன்று தினத்தந்தியில் படத்துடன் வெளியானது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இதைக்கண்டித்து விழுப்புரம் நகர புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி (RSYF)  சார்பில் பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் விசாரித்து தலைமை ஆசிரியர் கலையரசி மீதும், விசாரிக்காமலேயே விசாரித்ததுபோல் பித்தலாட்டம் புரிந்த துணை இயக்குனர் குணசேகரன் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி சுவரொட்டி இயக்கம் எடுக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் அரசு இசைப்பள்ளி

தகவல்

புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
விழுப்புரம் நகர் செயற்குழு,
தொடர்புக்கு 99650 97801