privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்எல்லாம் 'பத்து' மயம், ஊழலின் உரைகல் தினமலர்

எல்லாம் ‘பத்து’ மயம், ஊழலின் உரைகல் தினமலர்

-

எல்லாம் ‘பத்து’ மயம்!

(தமிகத்தின் ஓட்டுப் பொறுக்கி அரசியலில் முக்கிய இடம்பிடிக்கும் அம்சம் – சவடால் அரசியல். சந்தர்ப்பவாதத்தையே வீரமாகவும், கோழைத்தனத்தையே மதியூகமாகவும், தோல்வியுற்ற ஆண்டு எண்ணிக்கையை பாண்டவரின் வனவாசமாகவும் சித்தரிக்கும் அலங்கார பேச்சுக்களை இவர்களது மேடைகளில் காணலாம். வைகோ, நாஞ்சில் சம்பத் போன்றோர் அதில் முன்னணியாளர்கள். குமராசாமி தீர்ப்புக்கு பிறகு 10 என்ற எண் ‘வரலாற்றில்’ இடம் பிடித்து விட்டது. அதை ‘கவிதை’யாக்கும் முயற்சி இது…..

paththuத்துக்குள் நம்பர் ஒண்ணு சொல்லு..ன்னு
சினேகா அக்கா பாடும் போதே புரிஞ்சிருக்கணும் மாமு!

பத்துதான் கெத்து!

படையில கலகமா?
பத்துக்கு ஒருத்தன கொல்லுன்னான்
பண்டைய ரோமாபுரி ராஜா.
யூனரி, பைனரி, டெர்னரி, கொய்னரி, செனரின்னு
கணக்கு சூத்திரத்துல கிங்கும் நம்ம பத்துதான்
நியானோட அணு எண்ணும் பத்துதான்

எகிப்துல பகவான் சொன்ன கட்டளைங்க பத்து
பெந்தகோஸ்தே பாதிரியாரு கேக்குற
தசமவரி ஷேரும் பத்துதான்
தமிழ்ப் புலவருங்களுக்கு வெச்ச
தசாவதானி டெஸ்ட்டுல
இருக்குற போட்டியும் பத்துதான்.

பித்தகோரனிசத்துல இருக்குறதும் அந்த பத்துதான்
பார்ப்பனிய பெருமாளு போட்ட அவதாரம் பத்துன்னா
அல்லா நாடுங்க செலவாணியிலயும்
இருக்குறதும் அதே பத்துதான்
வெள்ளைக்கார சங்கீதத்துலயும்
இடைவெளி கணக்காய் இருக்குதப்பா அந்த பத்து

ஒலிம்பிக்குல விளையாடுற
டெக்காத்துலன் போட்டி பத்துதான்
கால்பந்துல பட்டையக் கிளப்புற
சட்டை நம்பரும் பத்துதான்
கூடைப்பந்து வளையத்தோட தூரமும்
அடி கணக்குல பத்துதான்
ரம்மியாட்டத்துல ராஜா, ராணி, மந்திரி
அல்லாத்துக்கும் மதிப்பு பத்துதான்

குத்துச் சண்டையில கீழ விழுந்தவன்
தோக்கணும்னா
அதுக்கும் காரணமான விநாடியும் பத்துதான்.
கிரிக்கெட்டுல கெலிக்க
தூக்க வேண்டிய விக்கட்டும் பத்துதான்

டவுணிங் தெருவுல குடியிருக்குற
இங்கிலாந்து பிரதமரு
வீட்டு எண்ணும் பத்துதான்
கனடாவுல இருக்குற மாநிலங்களும் பத்துதான்
நியூமராலஜி உதாருல
அன்பும், ஒளியும் கொடுக்குற
வைஃப்ரேஷனே பத்துதான்

மனுசன் கையில பத்து விரலுன்னா
மப்சல் வறுமையை ஒழிக்க நிலத்தை புடுங்குனா
மத்திய மந்திரி
சொல்லுற வளர்ச்சியும் சதவீதத்துல பத்துதான்
ராம லீலாவுல
திராவிட அசுரப் பயலுவல ஒழிக்கணும்னு
எரிக்கிற ராவணன் தலையும் பத்துதான்

இதெல்லாம் டி.வி பெட்டியில விளக்குற
அண்ணன் பத்ரி பேருலயும்
பாதியா இருக்குடே அந்த பத்து!

இப்ப சொல்லு ராசா…

அங்கிள் குமராசாமி
10% சொத்து ஜாஸ்தி சேத்தா
அது ஊழலில்லேண்ணு
அப்பீட்டு அட்ச்சாரே!
இதுல இன்னா தப்பு!

– காளமேகம் அண்ணாச்சி!

கடலைமிட்டாயில் காசு பார்ப்பது குற்றமா? தினமலர் வேதனை!

“குறைகளை அடுக்குவதால் ஜனநாயகத்திற்கு பயனா?” இப்படியொரு தலைப்பில் தினமலர் தலையங்கம். மராட்டிய மாநிலத்தின் குழந்தைகள் நல அமைச்சர் பங்கஜா முண்டே தனது அமைச்சகத்திற்காக கடலை மிட்டாய் வாங்கியதில் செய்த ஊழல் வெளிச்சத்திற்கு வந்ததல்லவா, அதை இருட்டாக்கத்தான் இந்த நீதி போதனை.

dianamalarஅரவிந்த் கேஜ்ரிவால் மாத மின்கட்டணம் 1,30,000 ரூபாய். மம்தா பானர்ஜி மாநிலத்தில் சாரதா சிட்பண்ட்ஸ் ஊழல்…. இவற்றோடு அல்பம் ஒரு கடலை மிட்டாய் வாங்கியதில் இருக்கும் கமிஷனா பிரச்சினை என்று குதிக்கிறது தினமலர். பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்பது போல, நான் மட்டுமா திருடனா, நீங்களெல்லாம் திருடவே மாட்டீர்களா என்று நேரடியாக எழுதாமல் இப்படி எழுதினால் தன்னையும் நீதிவானாக கருத நான்கு பேர் இல்லாமலா போவார்கள் என்று நினைக்கிறது ராமசுப்பையர் கம்பெனி.

இப்படியெல்லாம் ஒரு மாநில முதல்வரை தொல்லைப்படுத்தினால் பிறகு ஜனநாயகம் எப்படி தழைக்கும் என்றும் வருந்துகிறது. மேலும் கடலை மிட்டாய் ஊழலில் இதற்கு முந்தைய காங்கிரசு அரசிற்கும் பங்குண்டு என்றும் கருத்துரைக்கிறது.

சரி, எதற்கு இப்படி சுத்தி, வளைத்து, இழுத்து, நீட்டி வழிய வேண்டும்? இந்தியாவின் ஊழல் வழக்குகளிலிருந்து பா.ஜ.கவிற்கு மட்டும் விலக்கு வேண்டும் என்று சட்டம் கொண்டு வாருங்கள். அது சிரமமா, மத்திய பிரதேசத்தில் வியாபம் ஊழல் சாட்சியங்களை ‘மர்மமான’ முறையில் மரிக்கச் செய்வது போல முடியுங்கள்.

ஆனால் ஒன்று, ஜனநாயகம் என்றால் குறைகளை கூறக்கூடாது என்று விளக்கமளித்த ஒரே ஊடகம் தினமலராகத்தான் இருக்கும். என்ன இருந்தாலும் பாசிஸ்டுகளின் மொழியில்தான் ஜனநாயகம் தனது தரிசனத்தை கண்டடைகிறது!

வினவு ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட குறுஞ்செய்திகள்
இணையுங்கள்