privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திபாங்காக் சமஸ்கிருத மாநாடு - குறுஞ்செய்திகள்

பாங்காக் சமஸ்கிருத மாநாடு – குறுஞ்செய்திகள்

-

சமஸ்கிருத மாநாடு : கோமியம்தான் புற்று நோய்க்கான மருந்து!

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், 60 நாடுகளைச் சேர்ந்த 600 சமஸ்கிருத அறிஞர்களின் பங்கேற்போடு ஜூன் 28-லிருந்து ஜூலை 2-ம் தேதி வரை 16-ஆவது சமஸ்கிருத மாநாடு நடந்துள்ளது. இதில் இந்தியாவிலிருந்து பங்கேற்ற 250 நபர்களில் 30 பேர் ஆர்.எஸ்.எஸ் பரிவார அமைப்பான சமஸ்கிருத பாரதியைச் சேர்ந்தவர்கள்.

சமஸ்கிருதம் தான் நவீன உலக மொழி”இத்தனை ஆண்டுகளாக நடந்த பழைய மாநாடுகளில், சமஸ்கிருதம் பற்றிய நவீன கண்ணோட்டம் கொண்டவர்கள்தான் கலந்து கொண்டு பேச அனுமதிக்கப்பட்டனர், இந்த முறை சமஸ்கிருதத்தோடு பாரத நாட்டைப் பற்றிய புரிதல் உள்ளவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்” என்கிறார் சமஸ்கிருத பாரதியின் ஒருங்கிணைப்பாளர் தினேஷ் காமத்.

அதாவது ராக்கெட் தொழில்நுட்பம், அணு சக்தி போன்றவற்றை இயற்பியலின் சாதனைகளாக பார்க்கும் அறிவியல் பார்வைக்கு பதில், 5000 வருடங்களுக்கு முன்பே புஷ்புக் விமானத்தை கண்டுபிடித்து விட்டோம், 10,000 வருடங்களுக்கு முந்தியே இதய மாற்று சிகிச்சை செய்திருக்கிறோம் என்று காதுகளே கதறும் வண்ணம் புருடா விடுகிறார்கள் அல்லவா, அதுதான் அந்த பாரத நாட்டுப் புரிதல்.

இந்த இலட்சணத்தில் மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், “சமஸ்கிருதம் தான் நவீன உலக மொழி” என்று தெரிவித்துள்ளார்.

இதன்படி கோமியம்தான் நவீன புற்று நோய்க்கான மருந்து. நாகா சாமியார்தான் நவீன உலகின் ஞானி! பெரிய மோடிதான் நவீன உலகம் சுற்றும் பிரதமர்! சின்ன மோடிதான் நவீன உலகம் சுற்றும் மைனர்!

மக்களின் மனதை தூய்மையாக்கும் சாக்கடை !

பாங்காக் சமஸ்கிருத மாநாட்டில் உரையாற்றிய சுஷ்மா சுவராஜ், ”கங்கை எப்படி தனது கிளை நதிகளைப் புனிதமாக்கி கடலில் கலக்கிறதோ, அதே போல் சமஸ்கிருதமும் மக்களின் மனங்களைத் தூய்மையாக்கி மொத்த உலகத்தையும் புனிதமாக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

புனித கங்கைஇந்தியாவின் மிகப் பெரிய சாக்கடையான கங்கையில் விடப்படும் தொழிற்சாலைக் கழிவுகளில் ஆர்சனிக், புளோரைடு, குளோரைடு, காட்மியம் மற்றும் கன உலோகங்கள் கலந்திருக்கின்றன. இதில் குளித்தால் கான்சர் மரணம் நிச்சயம் என்பது ஆய்வில் நிரூபிக்கப்பட்ட உண்மை
(வினவு பதிவு)

தவிர, பார்ப்பனிய மூட நம்பிக்கைகளின் காரணமாக நாளொன்றுக்கு சுமார் 200 பிணங்கள் விசிறியடிக்கப்படும் கங்கையில் தினமும் 60,000 பேர் குளிக்கிறார்கள். இந்த எண்ணிக்கை கும்பமேளா நாட்களில் பலமடங்கு அதிகம். இதனால், உயிரியல் கழிவுகளின் அளவு அதிகரித்து அந்த நதியே மரணப்படுக்கையில் கிடக்கிறது.

இது தான் ’தூய்மையான’ கங்கையின் யோக்கியதை – சமஸ்கிருதமும் இதே போல் ’தூய்மையானது’ என்கிறார் சுஷ்மா சுவராஜ்.

சில நேர் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் கூட உண்மையைப் பேசி விடுகிறார்கள்!

சமஸ்கிருதம் படித்தால் பசிக்கவே பசிக்காதாம்.!

பாங்காக் சமஸ்கிருத மாநாட்டில் உரையாற்றிய சுஷ்மா சுவராஜ், சமஸ்கிருத அறிவு என்பது புவி வெப்பமடைதல், தீவிரவாதம், வறுமை மற்றும் பேண்தகுநிலையற்ற வளர்ச்சி (unsustainable growth) போன்ற சமகால பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவும் என்று தெரிவித்துள்ளார்.

சுஷ்மா சுவராஜ் - ரெட்டி சகோதரர்கள்ஐ.நா மற்றும் பல்வேறு இந்திய அரசுத் துறைகள் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் படி, சுமார் 21 கோடி இந்தியர்கள் பட்டினியால் வாடுகின்றனர். ஒவ்வொரு நாளும் சுமார் 7,000 இந்தியர்கள் பட்டினியால் மடிகிறார்கள், ஆப்பிரிக்காவின் சப்-சகாரா நாடுகளை விட ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளின் எண்ணிக்கையில் இந்தியா முன்னிலையில் நிற்கிறது.

நாட்டில் உள்ள ரேஷன் கடைகளை மூடி விட்டு சமஸ்கிருத டியூஷனை ஆரம்பித்தால் எல்லாப் பிரச்சினைகளும் நொடியில் தீர்ந்து விடுமாம்.

‪#‎வெளங்கிடும்‬

அடுத்து பேண்தகுநிலையற்ற வளர்ச்சி (unsustainable Growth) – அதாவது, இயற்கையை வரன்முறையில்லாமல் வளர்ச்சி என்ற பேரில் சுரண்டி குலைப்பதற்கும் சமஸ்கிருதத்தில் தீர்வு இருக்கிறதாம்.

அது என்ன தீர்வு? சுஷ்மாவின் செல்லக் குழந்தைகள் கருநாடகத்தில் வெறும் ஆறே ஆண்டுகளில் 60,000 கோடி ரூபாய் மதிப்புடைய 71 இலட்சம் டன் இரும்புக் கனிமங்களைக் கொள்ளையடித்து செயல்முறை விளக்கமாகவே காட்டியுள்ளனர்.

செய்திக்கு

கொள்ளையடிப்பதையே தீர்வாக சம்ஸ்கிருதமும் சொல்கிறது என்றால் மோடியின் நண்பர்கள் அம்பானியோ அதானியோ, மல்லையாவோ மறுக்கவா போகிறார்கள்!

போர்னோ சாஸ்திரத்தையும் செல்போன் சாஸ்திரத்தையும் இணைக்கும் பாலம் சமஸ்கிருதம்!

பாங்காக் மாநாட்டில் பேசிய சுஷ்மா சுவராஜ், ஐ.ஐ.டி போன்ற கல்வி நிறுவனங்கள் சமஸ்கிருத பல்கலைக்கழகங்களோடு இணைந்து செயல்பட வேண்டும், அப்போதுதான் அறிவியலுக்கும் சாஸ்திரங்களுக்குமான இடைவெளி குறையும் என்று தெரிவித்துள்ளார். மேலும், அயலுறவுத் துறையில் சமஸ்கிருத இலாக்கா ஒன்று உருவாக்கப்பட்டு அதற்கு செயலர் பதவி ஏற்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.

அயலுறவுத் துறைக்கும் சமஸ்கிருத மொழிக்கும் என்னய்யா சம்பந்தம் என்று மண்டை குழம்புகிறதா? வரலாற்றைக் கொஞ்சம் திரும்பிப் பாருங்கள் ஐயா! அறிவியலுக்கும் சாஸ்திரங்களுக்கும் இடையிலான இடைவெளியை எப்படிக் குறைப்பது என்பதை கருநாடக மற்றும் குஜராத் பாரதிய ஜனதா சட்ட மன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உலகத்துக்கே படம் எடுத்துள்ளனர். அந்தப் படம் குறித்த பாடம் கீழே..

sushma-bjp-mlasவினவு ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட குறுஞ்செய்திகள்
இணையுங்கள்