privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திசாராய ரவுடிகளை முறியடிப்போம் ! விழுப்புரம் ஆர்ப்பாட்டம்

சாராய ரவுடிகளை முறியடிப்போம் ! விழுப்புரம் ஆர்ப்பாட்டம்

-

மிழகம் முழுவதும் பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் வாழ்வை சூறையாடுவதற்கு அரசே டாஸ்மாக் கடைகளை நடத்தி வருகிறது. மற்றொரு புறம் ஊர்தோறும் கள்ளச்சாராய விற்பனையும் போலீசின் ஆசியோடு படுஜோராக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

விழுப்புரம் கள்ளச்சாராய எதிர்ப்பு பிரச்சாரம்
“ஊர்தோறும் கள்ளச்சாராய விற்பனையும் போலீசின் ஆசியோடு படுஜோராக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.”

இந்தச் சூழலில் கடந்த மாதம் 29-ம் தேதி அன்று வி.மருதூரில் கள்ளச்சாராயம் விற்று கொண்டிருந்த ரவுடி கும்பலை அப்பகுதி இளைஞர்கள் எதிர்த்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த ரவுடி கும்பல் அப்பகுதி இளைஞர்களை தாக்கியதோடு இதனை தட்டிகேட்ட புரட்சிகார மாணவர் இளைஞர் முன்னணி தோழர்களையும் தாக்கினார்கள். அதோடு மட்டுமில்லாமல் அந்தப் பகுதி மக்கள் அனைவரையும் ஆபாசமாக திட்டி கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். தொடர்ந்து தோழர் வீடு மற்றும் பகுதி இளைஞர்களின் வீட்டையும் அடித்து நொறுக்கி எரித்தும் விட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்துடனே வாழ்ந்து வந்தனர்.

இச்சூழலில் இப்பகுதி மக்களின் பயத்தை போக்குவதற்கும், ரவுடி கும்பலை ஒழித்து கட்ட வேண்டும், அவர்களின் அராஜகத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்களிடம் பெருந்திரளான தோழர்கள் 26-07-2015 அன்று வி.மருதூர் மற்றும் நரசிங்கபுரம் ஒட்டியுள்ள பகுதிகளில் செங்கொடி ஏந்தி வீடு வீடாக பிரச்சாரம் செய்தனர். தோழர்களை பார்த்த அனைவரும் ஆர்வமாகி வீட்டிலிருந்தவர்களும் வெளியில் வர ஆரம்பித்தனர். “ரௌடிகளை ஒழித்துக்கட்ட வேண்டிய அவசியம் குறித்தும் ரௌடிகளை ஒடுக்காமல் அவர்களுக்கு துணை போகும் காவல்துறையின் அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்தியும் கள்ளச் சாராயம் மற்றும் அரசு விற்கும் டாஸ்மாக் சாராயத்தால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்தும், ஆள அருகதை இழந்த அரசின் யோக்கியதை குறித்தும் தோழர்கள் விளக்கியதும் அதனை ஏற்றுக்கொண்டு “சாராயத்தை ஒழிப்பதற்கு நாங்களும் வருகிறோம் எப்பொழுது வர வேண்டும் கூறுங்கள்” என்று தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள்.

குடிகார கணவனால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் நாம் சொல்வதை கேட்டுக்கொண்டு உள்ளே சென்று, அரை போதையில் இருந்த தனது கணவனை வெளியில் இழுத்து வந்து…

“இவன போட்டு சாத்துங்க. தெனமும் குடிச்சிட்டு வந்து எங்க தாலிய அறுக்குறான்” என்று தனது நீண்ட நாள் குமுறலை வெளிப்படுத்தினார். கூடவே அப்பெண்ணின் வயதான மாமனாரும் “இவன அடிச்சு தூக்கிப்போட்டு போங்க” என்று கோபத்தில் வெடித்தார். நாம் அவர்களுக்கு ஆறுதல் சொல்லியதோடு, “டாஸ்மாக்கை மூடும் போராட்டத்தில் உங்களை இணைத்துக்கொள்ளுங்கள். அது மட்டும்தான் தீர்வு” என்று புரியவைத்தோம்.

டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம்
“டாஸ்மாக்கை மூடும் போராட்டத்தில் உங்களை இணைத்துக்கொள்ளுங்கள். அது மட்டும்தான் தீர்வு”

குடியினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் “இந்த பாழாப் போன சாரயத்த ஒழிச்சே ஆகணுங்க” என்று கண்ணீர் மல்க கூறினார்கள்.

ஒரு சிலர், “இந்த சாராயத்த எல்லாம் ஒழிக்க முடியாது, அரசாங்கம் தான் விக்குது. ஊர்ல சாராயம் விக்கிரது போலிசுக்கு தெரிஞ்சி தான் விக்குரானுங்க நாம என்ன பண்ண முடியம்” என்றார்கள் ஆதங்கமாக… இந்த அரசு அமைப்பின் யோக்கியதை பற்றி நாம் விளக்கி கூறி மக்கள் ஒன்றிணைந்தால் எதையும் செய்ய முடியும். மக்கள் தான் எஜமானர்கள் என்பதை விளக்கி கூறியதும் புரிந்து கொண்டார்கள்.

ஒருபடி மேலே போய் ஒரு பெண்மணி புகாராக கூறினார்…

“இந்த தெரு சுப்ராயர் தெருப்பா. நகரத்தோட மையப்பகுதி. இந்தத் தெரு மொனையிலதான் அந்த ரவுடி பத்து கும்பல் சரக்கு ஓட்றானுங்க. தெனமும் பல பேர் வரானுங்க, அந்தப் பக்கம் கடத்தெருவுக்கு கூட போக முடியல. குடிச்சிட்டு கேலி பண்றானுங்க. டிரெஸ் இல்லாம விழுந்து கடக்குரானுங்க. அத விட கேவலம் கூப்பிடற தூரத்துல தான் CID ஆபீஸ் (க்யு பிரான்ச் ஆபிசதான் CID னு சொல்றாங்க.) இருக்கு. தெனமும் ஜீப்புல போலீஸ் வந்து வந்து போய்கிட்டு இருக்குற இந்த இடத்துலேயே இதான் நெலம. இந்த போலீஸ் மக்கள பாதுகாக்கும் அப்பிடிங்கற கொஞ்ச நஞ்ச நம்பிக்கை கூட இப்ப எனக்கு இல்ல. சொந்த வீட்ட வித்துட்டு போய்டலாம்னு முடிபண்ணி இருக்கோம். காலேஜ் படிக்கிற ரெண்டு பொண்ணுங்கள வச்சுக்கிட்டு இருக்கிற எங்களுக்கெல்லாம் யாருங்க பாதுகாப்பு? நெஜமாவே இதுக்கு ஏதாவது பண்ணனும் சார்” என்றார் கோபமாக.

விழுப்புரம் சாராய எதிர்ப்பு பிரச்சாரம்
“காலேஜ் படிக்கிற ரெண்டு பொண்ணுங்கள வச்சுக்கிட்டு இருக்கிற எங்களுக்கெல்லாம் யாருங்க பாதுகாப்பு? நெஜமாவே இதுக்கு ஏதாவது பண்ணனும் சார்”

இளைஞர் ஒருவரிடம் பேசும் பொழுது, “என்ன தப்பா எடுத்துக்காதிங்க, நான் இப்ப கூட குடிச்சிட்டு தான் இருக்கேன் என்னோட வேலை அது மாதிரி. ஆனா இந்த டாஸ்மாக் எல்லாம் இழுத்து மூடியே ஆகனும் அது இருக்கிறதால் தான் குடிக்கணும்னு தோணுது கண்டிப்பா இந்த போராட்டத்துக்கு நான் வருகிறேன்” என்று கூறினார். இவ்வாறு ஒவ்வொரு வீட்டிலும் டாஸ்மாக் மற்றும் கள்ளச்சாராயத்திற்கு எதிரான தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி நம்மை மேலும் உணர்வூட்டி தீவிரமாக பிரச்சாரத்திற்கு உந்தித் தள்ளினர்.

பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் பொழுது அங்கு வந்த நகர காவல் நிலையத்திற்கு புதிதாக பொறுப்பேற்றிருக்கும் இன்ஸ்பெக்டர் சியாம் சுந்தர், நாம் பிரசுரம் விநியோகித்த மக்களிடம்சென்று “அவர்கள் என்ன பேசுகிறார்கள், காசு ஏதேனும் கட்டாயப்படுத்தி வாங்குகினார்களா” என்று மிரட்டி கேட்டுள்ளார். அதற்கு மக்கள் “அவர்கள் சாராயத்தை ஒழிக்க சொல்லி தான் பேசுகிறார்கள், ஆர்ப்பாட்ட செலவுக்கு நாங்கள் தந்ததை வாங்கி சென்றார்கள்” என்று மக்கள் கூற.. இன்ஸ்பெக்டர் மூக்குடைபட்டு போனார். அங்கிருந்த இளைஞர்கள் “செம பல்பு” என்று கலாய்த்துள்ளார்கள்

பகுதி முழுவதும் தோழர்கள் செய்த பிரச்சாரம் மக்கள் ஆர்ப்பட்டத்திற்கு வருவதற்கான நம்பிக்கையை மிக ஆழமாக உருவாக்கியுள்ளது..

[நோட்டீசை பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

விழுப்புரம் வி.மருதூர்- நரசிங்கபுரம் சாராய ரவுடிகளின் கொட்டத்தை அடக்குவோம்!

கள்ளச்சாராய விற்பனைக்கு முடிவு கட்டுவோம்!

கண்டன ஆர்ப்பாட்டம்

28.07.2015 செவ்வாய் மாலை 4.00 மணி

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் விழுப்புரம்

அனைவரும் வாரீர்!

தகவல்

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
விழுப்புரம்

  1. அருமையான பணி….

    டாஸ்மாக் கை அடித்து நொறுக்கிநாள் மட்டும் போதாது மதுபான தொழிற்சாலைகளை பந்தாட வேண்டும். இன்றைக்கு மதுவை ஒழிக்க நு ம் நு கூப்பாடு போடும் நரி கூட்டம் எல்லாம் மதுபான தொழிற்சாலை வைத்துக் கொண்டு காசு பார்க்கிறது.
    இதுல்ல வருங்கால ஜனாதிபதி sorry முதல்வர் அன்புமணி தனுஷ் கு காதல் கடிதம் வேறு அனுப்பி வைத்தார்,சிகுரட் புடித்த மாதிரி நடிக்காதிங்க நு. இவங்க மாநாட்டில் கலந்து கிட்ட பாதி மக்களை சிகுரட்,மதுபான தொழிற்சாலை க்கும் அனுப்பி வைத்தாலே போதும் எல்லாம் ஓலிந்து விடும். ஓட்டு கட்சி களுக்கு விளம்பரம் மட்டுமே முக்கியம் .
    மக்களை ஒன்று திரட்டி போராடினால் மட்டுமே இவைகளை ஒழிக்க முடியும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க