privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திதெலுங்கு மொழியில் மக்கள் அதிகாரம் பிரச்சாரம் !

தெலுங்கு மொழியில் மக்கள் அதிகாரம் பிரச்சாரம் !

-

20150731 Tasmac Telugu A“மூடு டாஸ்மாக்கை! குடிகெடுக்கும் அரசிடம் கெஞ்சியது போதும்! கெடுவிதிப்போம் ஆகஸ்டு 31!”

என்ற தலைப்பின் கீழ் மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்கள் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எல்லையோர பகுதிகளான ஒசூர், தேன்கனிக்கோட்டை வட்டங்களும் வேப்பனப்பள்ளி ஒன்றியமும் தெலுங்கு மொழி பேசும் கிராமங்கள். இக்கிராம மக்களிடம் மக்கள் அதிகாரத்தை சேர்ந்த தோழர்கள் தெலுங்கு மொழியில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

பொதுவாகவே அடிப்படை வசதிகள் புறக்கணிக்கப்பட்ட கிராமப்புறப் பகுதிகளில் இக்கிராமங்கள் மேலும் பின்தங்கியுள்ளன. விவசாயம் பொய்த்துப் போனதால் இளைஞர்கள் பெரும்பாலும் கட்டிடத் தொழிலாளர்களாக செல்வதும், ஆலைகளில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக அற்பக் கூலிக்கு செல்வதுமாய் இருக்கின்றனர். அருகில் பெங்களூரு மாநகருக்கு கூலி வேலை செல்பவர்களும் அதிகம். இவர்களுக்கு கல்வியறிவும் குறைவு. தெலுங்கு, தமிழ் இரண்டு மொழிகளிலும் போதிய படிப்பறிவு இல்லாமல் இருப்பது, மக்களிடம் விழிப்புணர்வூட்டுவதற்கு பெரிதும் தடையாக உள்ளன.

இப்பகுதிகளில் பல ஆண்டுகளாக செல்வாக்குடன் இருக்கும் போலி கம்யூனிஸ்ட் கட்சிகள் மக்களைத் திரட்டி, கம்யூனிசம் என்பதே பொருளாதாரக் கோரிக்கைகள் என்ற புரிதலை ஏற்படுத்தியிருந்தனர். அக்கட்சிகளிலும் குறைந்த பட்ச ஜனநாயகம் இல்லாமல் ஒழிந்து போன பின்பு, தற்போது செட்டில்மெண்ட் கட்சிகளாக அவை காட்சியளிக்கின்றன. இது மக்களிடம் கம்யூனிஸ்ட் என்றாலே அதிருப்தியும் அதிமுக போன்ற கட்சிதான் என்று புரிந்து கொள்வதற்கு காரணங்களாக உள்ளன.

அதே நேரம் தற்போது மக்கள் அதிகாரம் அமைப்பு தோன்றியவுடன் இப்பகுதி மக்களிடம், “பிரஜா அதிகாரம்” (ప్రజా అధికారం) என்ற புதிய அமைப்பை அறிமுகப்படுத்தும் போது, வரவேற்புடன் பார்க்கின்றனர். மக்கள் அதிகாரம் என்ற கருத்தின் மீது விவாதிக்கின்றனர். பெரியவர் சசிபெருமாள் மரணத்தை ஒட்டி இப்பகுதியில் நடத்தப்பட்ட தெருமுனைப் பிரச்சாரத்தின் போது, மக்கள் பலரும் ஆர்வமாக கலந்துகொண்டனர்.

எல்லை ஓர பகுதிகளாக இருப்பதால், இங்கு சாரயத்தைத் தடுக்கமுடியாது என்ற கருத்தை மக்கள் உறுதியாக வைத்துள்ளனர். பலரும் கர்நாடகாவிலிருந்தும் ஆந்திராவிலிருந்தும் சாராயம் வாங்கி வருவதும், குடித்துவிட்டு வருவதும் சகஜமாக இருப்பதால் டாஸ்மாக்கை எதிர்ப்பதால் ஒன்றும் செய்துவிட முடியாது என்று தெரிவிக்கின்றனர்.

டாஸ்மாக்குக்கு எதிரான போராட்டம் என்பது, அரசு மதுபானக் கடை நடத்துவதற்கு எதிரான போராட்டம் மட்டுமல்ல, நமது ஊரில் மதுபானங்களையே தடை செய்வதற்கான மக்கள் போராட்டம். இது மக்கள் போராட்டம் என்பதையும் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் மதுபானங்களை ஊருக்குள் கொண்டு வராமலும் மதுபானங்கள் குடிப்பதையும் கட்டுப்படுத்த முடியும் என்பதை விளக்கி பிரச்சாரம் செய்யப்படுகின்றது.

1998-ல் கர்நாடகாவில் இருந்து விஷச் சாராயத்தை கொண்டுவந்து விற்றதால் சூளகிரி சுற்றுவட்டாரப் பகுதியில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பாகலூர் பகுதியில் சாராயத்திற்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்தது. பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் கூடி விஷச் சாராயத்தை கைப்பற்றி எரித்தனர். இந்தப் போராட்டத்தை அடக்க போலீசு 100-க்கும் மேற்பட்டவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்து, போராட்டத்தை அடக்கியது. இந்தப் போராட்டங்களின் போது ஓட்டுக் கட்சிகள் துரோகம் செய்து பின்வாங்கினர்.

இந்தப் போராட்ட பாரம்பரியத்தை விளக்கி, நம்பிக்கையூட்டி மக்கள் ஒன்றிணைந்து போராடினால், அண்டைமாநில சாராயங்களையும் தடுக்க முடியும். அந்த வகையில், ஆளத் தகுதியிழந்த இந்த அரசையும் போலீசையும் எதிர்த்துப் போராடவும் மக்கள் அதிகாரத்தைக் கையிலெடுக்கவும் வேண்டும். மக்கள் அதிகாரம் என்பது சாராயத்தை தடை செய்வதோடு, சாராயத்திற்கு ஆதரவாக செயல்படும் போலீசு, அரசை எதிர்த்துப் போராடுவதற்கான களம் என்பதை உணர்த்தி தோழர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

  • மக்கள் அதிகாரம், தமிழ்நாடு.
    தெலுங்கு மொழியில் பேச: 80152 69381

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க