privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கமூடு டாஸ்மாக்கை - அரியலூர் சுத்தமல்லியில் பெண்கள் எழுச்சி !

மூடு டாஸ்மாக்கை – அரியலூர் சுத்தமல்லியில் பெண்கள் எழுச்சி !

-

பு.மா.இமு தோழர்களின் தலைமையில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், நடத்திய டாஸ்மாக்கிற்க்கு எதிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்ட தீ பற்றத் தொடங்கியுள்ளது.

suthmalli vinavu (3)
கடையை பூட்ட வைத்துவிட்டு யாரும் வாங்க முடியாமல் காவல் காக்கும் பெண்கள்

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள சுத்தமல்லி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையினால் ஏற்படும் பிரச்சினைகள் கொஞ்ச நஞ்சமல்ல. குடிக்கும் போது பெண்களையும், பள்ளி மாணவர்களையும் அச்சுறுத்துவது, குடித்த பின்னர் வீட்டிற்கு சென்று பெண்களை போட்டு அடிப்பது என்பதெல்லாம் அன்றாடக் கதை. பொறுத்துப் போன மக்கள் குறிப்பாக பெண்கள் கிளர்ந்தெழுந்தார்கள்.

05-08-2015 அன்று காலை பெண்கள் திரண்டு மதுக்கடைமுன் நின்று கொண்டு யாரையும் வாங்க விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளார்கள். இதை பார்த்து கொண்டிருந்த அந்த ஊரை சேர்ந்த இளைஞர்கள், மக்களை திரட்டி பெண்களுக்கு ஆதரவாக நின்றனர். அங்கு வந்த தாசில்தார் மற்றும் காவல்துறை ஆய்வாளர்கள் கொடுத்த உத்திரவாதத்தினால் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தினர். கடையை நிரந்தரமாக மூடாவிட்டால் போராட்டம் தொடரும் என மக்கள் எச்சரிக்கை விடுத்தனர். அதை தொடர்ந்து முன்னணியாளர்களை அழைத்து 20-08-2015 தேதிக்குள் கடையை மூடுவதாக காவல்துறை எழுத்துபூர்வமாக உறுதியளித்தது.

அரசு மதுபானக் கடையை மூடக்கோரி கிராம பெண்கள் மற்றும் பொதுமக்கள் தாங்களாகவே பிரசுரம் அச்சடித்து சுற்றியுள்ள கிராமங்களில் கொடுத்து குறிப்பாக மதுவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், பெண்கள் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தனர். இதுவரை இவ்வூரில் 16 பேர் குடியால் இறந்துள்ளனர், என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது…

அருகாமை பகுதிகளில்“மூடு டாஸ்மாக்கை” சுவரெழுத்தை பார்த்து விட்டு மக்கள் அதிகார அமைப்பு போல தாங்களும் தங்கள் ஊரில் டாஸ்மாக்கை மூடவேண்டும் என்று உற்சாகமடைந்துள்ளார்கள், இம்மக்கள்.

மக்களிடம் பேசிய போது, “முதல்ல கடை இருக்கிற இடத்த விட்டு வேற இடத்திற்க்கு மாத்திடுறோம், என்று இன்ஸ்பெக்டர், தாசில்தார், ஆர்.ஐ பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதற்கு கிராமக்கள் எங்கள் பஞ்சாயத்துக்கே கடை வேண்டாம் என்று உறுதியாக தெரிவித்துள்ளார்கள்.” என்றனர்.

தோழர்கள்: உங்க ஊர்ல கடை இல்லனா என்ன? பக்கத்து ஊர்ல கடைய திறந்தா உங்க ஊர்காரங்க அந்த கடையில குடிக்க மாட்டாங்களா?

மக்கள் : “நீங்க சொல்றதும் சரிதான் தமிழ் நாட்டிலேயே கடை இருக்க கூடாது. எல்லா கடையும் மூடனும். தாலிக்கு தங்கத்த தர்ற அரசு எங்க தாலிய அறுக்கவா இருக்கு” என்று ஆத்திரத்துடன் பேசினர்.

தோழர்கள் :விருத்தாசலம் வட்டம் மேலப்பாளையூர் கிராமத்தில் அந்த ஊர் மக்களே கூடி மதுக்கடை மூடியுள்ளார்கள். ஆயிரகணக்கான மக்கள் திரண்டு போராட்டம் நடத்தி வழக்கறிஞர்கள் பெண்கள் என 30 பேர் கைதாகி சிறை சென்றுள்ளார்கள். அடுத்த நாள் காலை மீண்டும் மக்களை அணிதிரட்டி மக்கள் அதிகாரத்தின் சார்பாக போராட்டம் நடத்தப்பட்டது. சிறையில்லிருக்கும் தோழர்களை விடுவிக்க கோரியும், நிரந்தரமாக கடையை மூடக்கூறியும் தொடர்ச்சியான போராட்டங்கள் செய்ததன் விளைவாக நிரந்தரமாக மூடியுள்ளார்கள்.

ஓட்டு கட்சிகாரர்கள் இப்போராட்டத்தை கலைக்க திட்டமிட்டு வேலை செய்துள்ளார்கள். அந்த ஊர் இளைஞர்களை “ஏம்பா உங்களுக்கு தேவை இல்லாத வேல , போலீசுகிட்ட அடிவாங்கனும் , ஜெயிலுக்கு போகனும் நீ வேற பாரீனுக்கு போகனும் உம்மேல கேஸ் எதுவும் இருக்க கூடாது, எதுக்கு போராட்டமல்லாம்” என்று மூளை சலவை செய்துள்ளனர். ஆனால் இளைஞர்கள் கடையை மூடுவதில் உறுதியாக இருந்துள்ளனர்.

இதைக் கேட்டு மக்கள் உற்சாகம் அடைந்தனர்.

சுத்தமல்லி கிராமத்தை சுற்றியுள்ள ஆலம்பள்ளம், புளியங்குழி, பருக்கல், நடுவலூர், வளவட்டிகுப்பம், வடகடல், அணிகுறிச்சி, கோரைக்குழி, நரியங்குழி வெண்மாங்கொண்டான் என பத்தாயிரத்திற்க்கும் மேற்ப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதற்க்கு மையமான சுத்தமல்லி ஊரில் டாஸ்மாக்கடை உள்ளது நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் வசூல் ஆகிறது.

எங்கள் பகுதியில் விவசாயம் செழித்து வளரும் பூமி , உழைக்கும் விவசாயிகளை குடிகாரர்களாக்கி விவசாயத்தை அழிக்க திட்டமிட்டுள்ளது இந்த அரசு.

20–8-2015 வரை கெடு! கடையை மூடவில்லையென்றால் ஆயிரக்காண மக்களை திரட்டி கடைய மூடுவேம் என மக்கள் உறுதியேற்றுள்ளார்கள்…

செய்தி: மக்கள் அதிகாரம், தமிழ்நாடு

தொடர்புக்கு: 99623 66321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க