privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.க‘அனைவரும் மது குடிக்க வாருங்கள்’ – கோவை பு.ஜ.தொ.மு போராட்டம்

‘அனைவரும் மது குடிக்க வாருங்கள்’ – கோவை பு.ஜ.தொ.மு போராட்டம்

-

கோவை NDLF (4)கோவையில் ஆகஸ்டு 2015, 3-ம் தேதி சாய்பாபா காலனியில் இருந்த டாஸ்மாக் கடையானது, மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்களால் உடைக்கப்பட்டது. ஒன்பது தோழர்கள் கைதாயினர். தோழர் பாபு, தோழர் மணிவண்ணன், தோழர் கிரீஷ், தோழர் தம்பிதுரை, தோழர் பிரகாஷ், தோழர் சிவகுமார் தோழர் ரகுராம், தோழர் சிட்டிபாபு மற்றும் ராஜதுரை. இதில் தோழர் ராஜதுரை மட்டும் இளம் தோழர் என்பதால் கூர் நோக்கு இல்லத்துக்கு அனுப்பப்பட்டு 11 நாட்கள் கழித்து விடுவிக்கப்பட்டார். இதர எட்டு தோழர்களில் தோழர் சிவகுமார் பொள்ளாச்சியில் சிறார் சிறையிலும் 7 தோழர்கள் கோவை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

யாருக்குமே இப்போது வரை பிணை கிடைக்கவில்லை. கோவைச் சிறையில் தோழர்கள் ரகுராம் கிரீஷ் மற்றும் பாபு ஆகியோர் நிர்வாண சோதனையை எதிர்த்து நின்றதாலும் காவல் துறையின் அடக்குமுறையை கேள்விக்குட்படுத்தி நெஞ்சு நிமிர்த்தியத்தாலும் காவல் துறையால் தாக்கப்பட்டு தனிமைச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்களும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும் டாஸ்மாக் சாராயக் கடையை எதிர்த்ததற்காக காவல் துறையின் அடக்கு முறையை எதிர்கொண்டு சிறையில் உள்ளனர்.

கோவை NDLF (6)மக்களின் மனசாட்சி எதிரொலித்தன் விளைவே சாய்பாபா காலனியில் டாஸ்மாக் கடை உடைப்பும் தமிழகமெங்கும் நடைபெறும் போராட்டங்களும். ஆனால், கிரிமினல் பாசிச ஜெயா அரசின் சட்டபூர்வ அடியாளான போலீசு சாராயக் கடைக்கும் பாருக்கும் காவல் இருந்து கொண்டிருக்கிறது. இப்படி ஒரு கொந்தளிப்பான சூழ்நிலை துவங்கிய உடனே தனது அடியாள் படையின் அவசர அவசிய ஆலோசனைக் கூட்டத்தை கூட்டி அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டதோடு, மக்களின் கவனத்தை திசை திருப்ப “ஆகஸ்ட் 15க்கு அம்மா அறிவிப்பார், அம்மாவே நேரத்தை குறைக்கப் போறாங்க” என பல்வேறு வதந்திகளையும் அரசு பரப்பியது. மேலும் திசை திருப்ப இளங்கோவன் பேசியதை பிடித்துக் கொண்டார்கள். இதை ஊடகங்களும் தலை வணங்கி ஏற்றுக் கொண்டன.

எனினும் எரியும் பிரச்சினையான இந்த டாஸ்மாக் பிரச்சினையை தீர்வுக்கு கொண்டு வராமல் நிறுத்த முடியாது. தமிழகம் முழுவதும் சிறையில் இருக்கும் எம் தோழர்களின் தியாகம் அதை மீண்டும் மீண்டும் உயிர்ப்பிக்கும்.

அந்த தோழர்களின் போராட்டத்தை ஆதரித்தும் பாசிச ஜெயா அரசைக் கண்டித்தும் நூதன வடிவிலான போராட்டமாக அனைவரும் மது குடிக்க வாருங்கள் அரசின் கரங்களை வலுப்படுத்துங்கள் என்ற முழக்கங்களுடன் கோவை கலெக்டர் அலுவலக வாசலில் கோவை மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சேர்ந்த பெண் தோழர்களால் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. ரயில் நிலையத்தின் எதிரே உள்ள ஐஸ்வர்யா காம்ப்ளெக்ஸ்சிலிருந்து துவங்கி சுமார் 40 தோழர்கள் பின் தொடர ஆட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக வந்தனர்.

பத்திரிகையில் வந்த போராட்டச் செய்திகள் – படங்களைப் பெரிதாக பார்க்க அழுத்தவும்:

பிஞ்சுக் கரங்கள் சில அமைப்பு பதாகையை ஏந்தி நடக்க கம்பீரமான முழக்கத்துடன் முன்னின்று தலைமை தாங்கினார் தோழர் சூர்யா. ஆட்சியர் அலுவலகத்தை நெருங்கும் போதே ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்திலிருந்து வஜ்ரா வேன் உள்பட ஐந்து வண்டிகளுடன் வந்தார் இன்ஸ்பெக்டர் சோதி. சி‌ஆர்‌ஐ தொழிலாளர் போராட்டத்தில் அதீத உற்சாகத்துடன் வேலை செய்து சி‌ஆர்‌ஐ முதலாளி சௌந்திர ராஜனின் செல்லப்பிள்ளையாக வலம் வந்தவராதலால் பயங்கர முன் தயாரிப்புடன் வந்திருந்தார். தோழர்களின் குழந்தைகள் வண்டியில் ஏற செல்கையில் தடுத்து நிறுத்தி இல்லையில்லை, ‘உங்களை நான் கைது செய்யவே இல்லை. நீங்களே முடித்துவிட்டு கிளம்புங்க’ எனக் கூறினார். நாம் ‘இல்லை பரவாயில்லை நீங்க கைது செய்யுங்க, எங்களையும் எங்களோடு வந்த எங்கள் குழந்தைகளையும் கைது செய்யுங்க’ நாங்க பாத்துக்கறோம் என பல முறை கூறியும் இல்லை இல்லை என மறுத்தவாறே நின்றிருந்தார்.

பின்னர், ஆட்சியர் அலுவலகத்தின் முன் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தி சுற்றியும் வேடிக்கை பார்க்க கூடியிருந்த மக்களிடம் ஊற்றிக் கொடுக்கும் தமிழக அரசின் கொடுஞ்செயலையும் அதற்கு பாதுகாப்பு கொடுக்கும் போலீசின் அடாவடிகளையும் தோழர்கள் விளக்கினார்கள். பெண்களும், குழந்தைகளும் நிறைந்திருந்த அந்த ஆர்ப்பாட்டமே தமிழகம் இந்த போராட்டத்தை நிறுத்தாது என்பதற்கு சாட்சி!

போராட்டப் படங்கள் – படங்களை பெரிதாக பார்க்க அழுத்தவும்: