privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.க60 பேர் சிறை : மூடு டாஸ்மாக்கை - வழக்கு நிதி தாரீர் !

60 பேர் சிறை : மூடு டாஸ்மாக்கை – வழக்கு நிதி தாரீர் !

-

மக்கள் அதிகாரம்

“மூடு டாஸ்மாக்கை!” இயக்கத்துக்கு வழக்கு நிதி தாரீர்..!         

மிழகத்தில் அரசே குடிவெறியைத் திட்டமிட்டு மக்களிடம் திணித்து இளைஞர்களை, மாணவர்களைச் சீரழித்து மனிதப் பேரழிவுக்கு இட்டுச் செல்வதை இனம் கண்டு, இதற்கு எதிராக ‘மூடு டாஸ்மாக்கை! கெடுவிதிப்போம் ஆகஸ்ட் 31” என்ற இயக்கத்தை மக்கள் அதிகாரம் அமைப்பு தமிழகமெங்கும் நடத்தி வருகின்றது. கடந்த இரண்டு மாதங்களாக எமது அமைப்பின் உறுப்பினர்கள் தமிழகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேலான இடங்களில் சுவர் எழுத்துக்கள், பல லட்சம் துண்டறிக்கைகள், பேருந்து, ரயில், தெருமுனைப் பிரச்சாரங்கள், சுவரொட்டிகள் எனப் பல வடிவங்களில் பிரச்சாரம் செய்து வந்தனர்.

இந்நிலையில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பின் தலைமையில் திரண்டு சென்று அருகிலிருந்த ஷெனாய் நகர் டாஸ்மாக் கடையை உடைத்து நொறுக்கினர். உடனே கல்லூரி மாணவர்களைக் கொடூரமாகத் தாக்கி அவர்களில் 15 மாணவர்களை மட்டும் கைது செய்து பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல், கொடுங்காயம் விளைவித்தல் உள்ளிட்டு 10 பிரிவுகளில் வழக்குப் பதிந்தது, போலீசு.

புழல் சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ள இம்மாணவர்கள் அங்கும் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள். இவர்களை ஆட்கொணர்வு மனு மூலம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யக் கோரினோம். ஆட்கொணரும் உத்தரவை ஏற்று மாணவர்களைக் கொண்டுவரச் செய்வதற்கு பதிலாக, மாவட்ட நீதிபதி விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டது, சென்னை உயர் நீதிமன்றம். மாவட்ட நீதிபதி சிறைக்கு சென்று விசாரணை நடத்தி, தாக்குதல் நடத்தப்பட்டதை வேறுவழியின்றி ஒப்புக்கொண்டாலும் மேம்போக்கான அறிக்கை ஒன்றைத் தந்துள்ளார்.

இதற்கிடையே மேற்படி சிறையில் வாடும் மாணவர்களைக் கொச்சைப்படுத்தி, “அவர்கள் மாணவர்களே அல்ல, கிரிமினல் பின்னணி கொண்டவர்கள்‘ என்ற பொய்ப் பிரச்சாரத்தை அரசு கட்டவிழ்த்து விட்டிருப்பதால், தாங்கள் பிணை கோரப் போவதில்லை என்று மாணவர்கள் அறிவித்து புழல் சிறையிலேயே உள்ளனர்.

சட்டவிதிகளுக்கு விரோதமாக புழல் பெண்கள் சிறைக்கு சென்ற ஆண் உளவுத்துறை அதிகாரி, அங்கு அடைக்கப்பட்டிருக்கும் மாணவிகளை தரக்குறைவாகப் பேசி மிரட்டி உளவியல் ரீதியான சித்திரவதை செய்தார். இதை வெளியில் கொண்டுவர தனியாக ஆட்கொணர்வு மனு போடப்பட்டது. உளவுத்துறை அதிகாரி மீதான புகாரை மறுத்த அரசுத் தரப்பு, போலீசு சிறைக்குச் சென்றது உண்மைதான் என்றும், ஆனால் மாணவிகளை சந்தித்து, மிரட்டவில்லை என்றும் சாதிக்கிறது. இதுகுறித்து உண்மையை அறிந்திட வீடியோ பதிவுகளைத் தரும்படி சிறைத்துறைக்கு உத்தரவிட்டுள்ள நீதிமன்றம் ஆட்கொணர்வைச் செய்யாமல் இழுத்தடிக்கிறது.

pachayappa protest 2 sliderமாணவர்களின் பதினைந்து நாட்கள் காவல் முடிந்தபின்னர் அடாவடியாக காவலை நீட்டித்து உத்தரவிட்டார், எழும்பூர் நீதிமன்ற நீதிபதி. இதனை ஆட்சேபித்து நீதிமன்றத்துக்கு எதிரே எமது தோழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியபோதும் நீதிபதி அசைந்து கொடுக்கவில்லை. இந்த அநீதியான உத்தரவுகளுக்கும் பிணை மறுப்புகளுக்கும் எதிரான சட்டப் போராட்டத்தில் பல்வேறு மூத்த வழக்கறிஞர்களின் உதவியுடன் இறங்கியுள்ளோம்.

விருத்தாச்சலம் நகரில் ஒரு டாஸ்மாக் கடைக்கு எதிராக மாணவர்கள் போராடியது, விருத்தாச்சலம் வட்டம் மேலப்பாளையூரில் டாஸ்மாக் கடை மூடச் செய்து முற்றுகையிட்டது ஆகிய இரு வழக்குகளிலும் கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறி மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜூவையும் பிற தோழர்களையும் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்துள்ளனர். அவர்களுக்கு பிணை தர அரசு கடுமையாக எதிர்க்கின்றது. அத்துடன் நில்லாமல் மணல் கொள்ளையர்களுக்கு எதிராகவும், கல்விக் கொள்ளையர்களுக்கு எதிராகவும் மக்களைத் திரட்டி தோழர் ராஜூ போராட்டங்களை நடத்திய போது போடப்பட்ட வழக்குகளைக் காரணங்காட்டி அவரை குண்டர் சட்டம் / தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க அரசு திட்டமிட்டது. இதனை உணர்ந்து கொண்ட நாம், சென்னை உயர் நீதிமன்றத்தில் போராடி அரசின் இம்முயற்சிக்கு தடை வாங்கியுள்ளோம்.

கோவையில் டாஸ்மாக் கடை நொறுக்கப்பட்ட வழக்கில் எட்டு தோழர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கும் பிணை மறுக்கப்பட்டுள்ளது.

விருத்தாசலம், மேலப்பாளையூர் டாஸ்மாக் கடை உடைப்புகளில் ஈடுபட்டதாக 30 க்கும் மேற்பட்ட புமாஇமு தோழர்களும், ஊர்ப் பொதுமக்களும் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கும் பிணை வழங்கிட அரசு கடுமையாக எதிர்ப்புக் காட்டி வருகின்றது.

கரூர், சென்னை உள்ளிட்ட பல இடங்களில் சுவரொட்டி ஒட்டியதற்காக, வழக்குப் பதிவு செய்து சுவரொட்டி ஒட்டிய தோழர்களையும் சிறையில் அடைத்தது, அரசு. இவர்களைப் பிணையில் வெளியில் எடுத்துள்ளோம். டாஸ்மாக் கடை முற்றுகை நடத்தி சிறை சென்ற பென்னாகரம் தோழர்களையும் பிணையில் எடுத்துள்ளோம்.

சிறை சென்றுள்ள தோழர்களைப் பிணையில் எடுக்கவும் இவர்களின் மீதான பொய்வழக்குகளை எதிர்கொள்ளவும் பெருமளவில் நிதி தேவைப்படுகின்றது.

அரசின் அடக்குமுறைகளை முறியடிக்கும் நோக்கில் எங்களோடு தோள் கொடுத்து வழக்கு நிதி தரும்படியும், தொடர்ந்து போராட்டத் தீயை அணையாது காக்கும்படியும் மக்களைக் கேட்டுக்கொள்கின்றோம்.

பின்வரும் வங்கிக்கணக்குக்கு பணம் அனுப்புமாறு கேட்டுக்கொள்கின்றோம்

Name:                           Vetrivel Chezhiyan
Account Number:          62432032779
Bank Name:                  State Bank of Hyderabad
Branch:                         Pozhichalur, Chennai
IFSC Code:                          SBHY0021334

– இவண்
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு
தொடர்புக்கு: 99623 66321