privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்நீதித்துறை ஊழலுக்கெதிராக களமிறங்கிய மதுரை வழக்கறிஞர்கள்

நீதித்துறை ஊழலுக்கெதிராக களமிறங்கிய மதுரை வழக்கறிஞர்கள்

-

நீதித்துறை ஊழலுக்கெதிராக களமிறங்கிய மதுரை வழக்கறிஞர்கள்!

துரை உயர்நீதிமன்றத்தில் கடந்த 02-09-2015 அன்று நீதித்துறை லஞ்சம் – ஊழல் ஒழிப்பு கண்டன பொதுக்கூட்டம் மதுரை மாவட்ட, உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களால் நடத்தப்பட்டது.

நீதித்துறை ஊழல் - மதுரை பொதுக்கூட்டம்மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். வழக்கறிஞர்கள் ராமமூர்த்தி, வில்லவன்கோதை, சின்னராஜா, கருணாநிதி, கனகவேல், எழிலரசு, நெடுஞ்செழியன், அருண் அய்யனார், மதுரை வழக்கறிஞர் சங்கச் செயலர் ஏ.கே.ராமசாமி, தலைவர் தர்மராஜ், வழக்கறிஞர் லஜபதிராய் ஆகியோர் கண்டன உறையாற்றினர்.

பேசிய வழக்கறிஞர்கள் அனைவரும் உயர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஊழலில் திளைத்து, ஒட்டு மொத்த நீதித்துறையும் அரசின் தொங்கு சதையாக மாறிவிட்டதை அம்பலப்படுத்தினர்.

நீதித்துறை ஊழல் - மதுரை பொதுக்கூட்டம்கூட்டத்தில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.வரும் செப்டம்பர் 10-ம் தேதி நடைபெறவுள்ள நீதித்துறை லஞ்சம் – ஊழல் ஒழிப்புப் பேரணிக்கு தென்மாவட்ட வழக்கறிஞர்கள் அனைவரும் வருமாறு வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.

கீழ்க்கண்ட பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

 

நீதித்துறை லஞ்சம் – ஊழல் ஒழிப்புப் போராட்டம்

கண்டன பொதுக்கூட்டம்

நாள்: 02-09-2015 காலை : 10.00 மணி இடம்: உயர்நீதிமன்ற வாயில், மதுரை

அன்பார்ந்த நண்பர்களே,

ஹெல்மெட் பிரச்சனையில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்துப் போராடியதற்காக மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் திரு.தர்மராஜ், செயலர் திரு.ஏ.கே.ராமசாமி ஆகியோர் மீது தானே முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 24-08-2015-அன்று நீதிபதிகள் தமிழ்வாணன், சி.டி.செல்வம் முன்பு ஆஜராகச் சொன்னது.

மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் அவர்கள் மதுரை வழக்கறிஞர் சங்கத்துக்காக ஆஜராகி “நீதிபதி கிருபாகரன் தீர்ப்பில் ”சட்டவிரோதமாக வாகனத்தை, ஆர்.சி.யை பறிமுதல் செய்ய உத்தரவிட்டதற்கு எதிராக சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது; தற்போது தலைமை நீதிபதி கோரியதன்பேரில் போராட்டம் முடிக்கப்பட்டு நீதிமன்றம் நடக்கிறது. எனவே நீதிமன்ற அவமதிப்பை முடியுங்கள்” எனக் கோரினார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், “தலைவர் தர்மராஜ், செயலர் ஏ.கே.ராமசாமி ஆகியோரை கோட்டு, கவுனை முதலில் கழட்டுங்கள்” எனச் சொல்லி கழட்ட வைத்தனர்.

“மதுரையில் நடந்த சம்பவத்திற்கு, மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடத்துங்கள், எனக்கு 73 வயதாகிறது, உடலில் பல நோய்கள் உள்ளது, அலைய முடியாது” என்று பேச முயன்ற திரு.ஏ.கே.ராமசாமி அவர்களைப் பேசவே அனுமதிக்காததுடன்,

“வழக்கைத் தவிர வேறு எதுவும் பேசக்கூடாது, இது பொதுமேடை அல்ல” என்று சொல்லி, நான்கு வாரம் வாய்தா தர மறுத்து 16-09-2015-ல் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.

கறார் கந்தசாமிகளின் யோக்கியதை என்ன?

நீதிமன்றத்தில் சட்டப்படி நடக்க வேண்டுமென கறாராகப் பேசும் நீதிபதி சி.டி.செல்வம்தான் வழக்கறிஞர்களால் கிரானைட் செல்வம், சூட்கேஸ் செல்வம் எனச் செல்லமாக அழைக்கப்படுபவர். கிரானைட் மாபியாக்களிடம் பெட்டி வாங்கிக் கொண்டு கடந்த 2013-ல் பல்லாயிரம் கோடி கொள்ளையடித்த கிரானைட் திருடர்களுக்கு ஜாமின் வழங்கியதுடன், அரசு , உச்சநீதிமன்றம் செல்வதாகச் சொன்னவுடன், உச்சநீதிமன்ற வழக்கு விசாரணைக்கு வரும்வரை ஏற்கனவே உள்ள, இனி வரும் எந்த வழக்கிலும் கிரானைட் திருடர்களை கைது செய்யக் கூடாதெனச் சொல்லி உத்தரவிட்டார்.

வழக்கறிஞர்களுக்கு உபதேசிக்கும் இவர்தான், தனது தம்பிக்கு எதிரான வழக்கை தானே விசாரித்துத் தீர்ப்பளித்தார். இதை எதிர்த்த சவுக்கு சங்கர் என்பவரின் இணையதளத்தை முடக்கி, சங்கரை விரட்டி, விரட்டி கைது செய்ய வைத்தார்.

அடுத்து நீதித்துறையின் அப்துல்கலாம் அய்யா டாக்டர்.தமிழ்வாணன் அவர்கள். இவர் மீது பல பாலியல் புகார்கள் உள்ளது. தற்போது மதுரை ரவுடி வரிச்சியூர் செல்வத்திற்கு டாக்டர் பட்டம் வழங்கிய உப்புமா பல்கலையில் லட்சரூபாய் கொடுத்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.

பவர்புல்லான பார் கவுன்சில் நிர்வாகிகள் வந்தால் இவரது நீதிமன்றத்தில் உத்தரவு நிச்சயம். இந்த உப்புமா கம்பெனிதான் மதுரை வக்கீல் சங்கத்தை மிரட்டுகிறது.

நீதிபதிகளா? ஆளும் கட்சி எடுபிடிகளா?

Sasi-perumal-posterசமீபத்தில் இறந்த சசி பெருமாளை மரணத்தை எடுத்துக் கொள்வோம். உயர் நீதிமன்றமும் அவரது மரணத்துக்குக் காரணம் என்ற உண்மையை யாரேனும் மறுக்க முடியுமா?

சட்டத்தின் மீதும், நீதிமன்றத்தின் மீதும் நம்பிக்கை வைத்து மூன்றாண்டு காலம் சசிபெருமாள் போராடினார். உண்ணாமலைக் கடை டாஸ்மாக்கை அகற்ற வேண்டும் என்று ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னரே உயர்நீதிமன்றம் உத்தரவும் பிறப்பித்து விட்டது. விதியை மீறி நெடுஞ்சாலைகள், பள்ளிகள் அருகில் அமைக்கப்பட்டிருக்கும்கடைகளை அகற்றுமாறு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு எதையும் தமிழக அரசு அமல்படுத்தவில்லை என்பது எல்லா நீதிபதிகளுக்கும் தெரியும். மதுரை வழக்கறிஞர்கள் மீது தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கும் நீதிபதிகள், டாஸ்மாக் விவகாரத்தில் ஒரு இடத்தில் கூட அரசுக்கு எதிராகநீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவில்லை.

சசி பெருமாள் உயிர் துறந்த பிறகாவது, தன்னுடைய குற்றத்தை உயர்நீதிமன்றம் ஒப்புக் கொண்டிருக்கிறதா? சசி பெருமாளை மரணத்துக்குத் தள்ளிய அரசைக் கண்டித்து உயர்நீதிமன்றம் ஒரு வார்த்தையாவது பேசியதா? சசி பெருமாளின் மரணத்துக்குப் பின்னராவது, சட்டவிரோதமான கடைகள் அனைத்தையும் மூடுமாறு தமிழக அரசுக்கு அறிவுறுத்தியதா? எதுவும் இல்லை.

அரசமைப்புச் சட்டத்தின் விதி 47, “மதுவிலக்கை அமல்படுத்துவது அரசின் கடமை” என்கிறது. அரசமைப்புச் சட்டத்தின் மீதான நம்பிக்கையை விட, அரசு அதிகாரத்துடனும் ஆளும் கட்சியுடனும் அனுசரித்துப் போவதால் கிடைக்கக்கூடிய ஆதாயங்களின் மீதுதான் நீதிபதிகளுக்கு நம்பிக்கை இருக்கிறது. பணம் வாங்குவது மட்டும் ஊழல் அல்ல.அரசு, போலீசுடன் ஒத்துழைத்து நீதிபதிகள் போவதுதான் மிகப்பெரிய அறம் கொன்ற, ஊழல் மலிந்த செயலாகும். குறிப்பாக மாஜிஸ்ட்ரேட்டுகள் உள்ளூர் போலீசின் எடுபிடிகளாகவே இருக்கிறார்கள்.உயர்,உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உயர் காவல்துறை, அரசின் கூட்டாளிகளாகவே உள்ளனர்.

கொள்ளையின் பங்காளிகளாக………………….நிதி அரசர்கள்….!

ஆற்று மணல், கிரானைட், தாது மணல் கொள்ளை வழக்குகளைக் கையாண்டநீதிபதிகள் பலர் கனிமவளக் கொள்ளையர்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பளிக்கிறார்கள். “இந்த தீர்ப்புகள் பற்றி சகாயம் குழு விசாரணை நடத்த வேண்டும்” என்றுமுன்னாள் நீதிபதி சந்துருநாளேடு ஒன்றில் கட்டுரை எழுதிய பின்னரும் நீதிபதிகள் யாருக்கும் கோபம் வந்ததாகத் தெரியவில்லை. மாறாக, “முழுதும் நனைந்தவனுக்கு முக்காடு எதற்கு” என்று வெளிப்படையாகவே இறங்கிவிட்டார்கள்.

மதுரையில் கடந்த டிசம்பர், 2014-ல் கிரானைட் கொள்ளைக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்த நீதிபதி ராஜா சென்னையில் ஜூலை மாதம் வைகுண்டராஜனுக்கு ஆதரவாகத் தீர்ப்பளிக்கிறார். ஆகஸ்டு மாதம் மதுரைக்கு வந்த இந்த நீதிபதிக்கு மீண்டும் கனிமவளத்துறையே ஒதுக்கப்படுகிறது. வைகுந்தராசனின் கனிம வளக்கொள்ளை தொடர்பாக பேடி குழு அளித்த பரிந்துரையை அப்படியே நிராகரித்து, வினோத் குமார் சர்மா என்ற தமிழே தெரியாத பஞ்சாப் மாநில ஒய்வு பெற்ற நீதிபதி விசாரணை அதிகாரியாக நியமிக்கப் படுகிறார். 9 மாதங்களாக கனிமவளத்துறை என்ற ஒரு துறையை ஒரு குறிப்பிட்ட நீதிபதிக்கு மட்டுமே ஒதுக்கித் தந்திருப்பவர், சட்டத்தின் ஆட்சி பற்றி பெரிதும் கவலைப்படும் தலைமை நீதிபதி சஞ்சய் கிசன் கவுல்தான்.

  • கிரானைட், தாதுமணல், ஆற்றுமணல் கொள்ளைகளில், நீதிபதிகள் தனபால், வேலுமணி, கர்ணன், ராஜேந்திரன், பி.என்.பிரகாஸ் உள்ளிட்ட பலரும் திருடர்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்துள்ளார்கள்.
  • நீதிபதி தனபாலின் மருமகள் “தனது கணவர் நீதிமன்றம் செல்லாமலே சட்டவிரோதமாக பலலட்சம் சம்பாதிக்கிறார், தன்னைக் கொடுமைப்படுத்துகிறார்கள்” என்று சொல்லித் தொடுத்த வழக்கில் ஊழல் நீதிபதி தனபாலுக்கு ஆதரவாக வழக்கைத் தள்ளுபடி செய்கிறார் நீதிபதி நாகமுத்து.
  • 22,000 கோடி கொள்ளையடித்த நோக்கியா கம்பெனியிடம் பெட்டி வாங்கிக் கொண்டு ஸ்டே கொடுக்கிறார் நீதிபதி ராஜேந்திரன்.
  • நீதிபதிகள் பி.என்.பிரகாஸ், வைத்தியநாதன் ஆகியோர் சாதி பார்த்தே தீர்ப்பளிக்கின்றனர்.
  • நீதிபதி மணிக்குமார் மீது பாலியல் புகார் உள்ளது.
  • இன்னும் நீதிபதிகள் பி.ஆர்.சிவக்குமார்,வாசுகி, விமலா உள்ளிட்ட பலர் மீதும் குற்றச்சாட்டுகள் உள்ளது.
  • சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூரில் நடக்கும்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு வழங்கினார் நீதிபதி அருணா ஜெகதீசன்.
  • ஆற்றுமணல் கொள்ளைக்கு எதிராக சென்றமாதம் ஆவேசமாகப் பேசிய நீதிபதி சுதாகர் அடுத்த வாய்தாவில் பதுங்குகிறார்.
  • உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து ஊழல்பேர்வழி என்று நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ சொல்கிறார். அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்க வேண்டியதுதானே?
  • நீதிபதி கங்குலி மீது பாலியல் புகார். நீதிபதி சதாசிவம், கே.ஜீ.பாலகிருஷ்ணன், முன்னாள் சட்ட அமைச்சர் மூத்த வழக்கறிஞர் சாந்திபூசன் சொன்ன 8 ஊழல் இந்திய தலைமை நீதிபதிகள் மீது யார் நடவடிக்கை எடுப்பது?

நீதிபதிகள் தங்கள் மனதை தொட்டுச் சொல்லட்டும்.மேற்சொன்ன விபரங்கள் உண்மை இல்லையா? கீழமை நீதிமன்றங்களிலிருந்து, உயர்,உச்சநீதிமன்றம்வரை பல நீதிபதிகள் லஞ்சம், ஊழல், பாலியல் குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்களா? இல்லையா? இவர்கள் மீது கடந்த 65 ஆண்டுகளாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? இக்குற்றங்களை சாதாரண மக்கள் செய்தால், விட்டுவிடுவோமா?

இதில் மிக முக்கிய பிரச்சனை ஒரு கீழ்நிலை அதிகாரி லஞ்சம் வாங்கும்போது அது அந்தத் தனிநபரின் குற்றமாக முடிந்து விடுகிறது. ஆனால் ஒரு உயர், உச்சநீதிமன்ற நீதிபதிகள் லஞ்சம் வாங்கிக் கொண்டு தீர்ப்பெழுதும்போது, அந்தக் குற்றமே சட்டமாகி விடுகிறது. அந்தத் தீர்ப்பைக் காட்டி சட்டபூர்வமாகவே கொள்ளையிடும் வாய்ப்பு எல்லோருக்கும் திறந்து விடப்படுகிறது.

குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் காவலன் என்று கூறிக்கொள்ளும் உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள், தங்கள் சொந்த ஆதாயத்துக்காக தமிழ் மண்ணையும் தமிழ் மக்களின் உரிமைகளையும் சூறையாடுவதுடன்,நீதித்துறை, வழக்குரைஞர் தொழிலுக்குரிய மாண்பையும் சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை அம்பலப்படுத்துவதுதான் அரசியல் சட்டம், நீதித்துறையின் மாண்பைக் காப்பதாகும்.

இனித் தயங்குவதில் பயனில்லை. வழக்கு எங்களுக்குப் பொருட்டல்ல. இது தொடக்கம்தான். அடுத்தடுத்து நீதித்துறை ஊழலுக்கு எதிரான எங்களது போராட்டக்களம் ஒட்டுமொத்தத் தமிழகம், இந்தியா என விரிவடையும். ஊழல் நீதிபதிகள் பட்டியலும் விரைவில் வெளியிடப்படும்.

இவண்:
அனைத்து வழக்கறிஞர் சங்கங்கள்,
மதுரை மாவட்ட உயர்நீதிமன்றங்கள்.

  1. நீதிமன்றங்கள் என்று சொல்லிக்கொள்ளும் நிதிமன்றங்கள் தாமதமான தவறான தீர்ப்பையே வழங்குகின்றன.
    நமது ஊர் பஞ்சாயத்துகள் உடனடியாக ஓரளவுக்கு நியாயமான தீர்ப்பை வழங்குகின்றன.

    புறக்கனிப்போம் நீதிமன்றங்களை.

  2. ஆள்/அதிகாரம்/பண/ஆளும்/சட்டத்தை-மதிக்காமல் குற்றம் செய்வோர்க்கு தான் இந்த சிறிதும் பொறுப்பில்லாத “நிதி அரசர்கள்” தீர்ப்பு (அ) வாய்தா என்ற பெயரிலோ, இன்னும் குற்றம் செய்ய உதவி புரிவார்கள், துரோகிகள்.

    சட்டத்தை மதிப்போர்க்கு உயிரோடு சமாதி கட்டிடுவர் அவர்களுடைய அராஜக தர்பாரிலே.
    துரதிஷ்டவசமாக 90% வக்கீல்களும் உடந்தை.

    இன்று போராடும் 10% வக்கீல்களுக்கு என் வாழ்த்துக்கள்.

  3. ஊழல் நீதிபதிகளால் உண்மையிலேயே பாதிக்கப்பட்ட பொதுமக்கள்; நீதிபதிகளை ஓட ஓட விரட்டி ………………..

  4. அரசியல் சட்டத்தை பாதுகாக்கும் தூண்களில் ஒன்றான நீதித்துறையும், இந்திய அரசின் மற்ற ஜனனாயக அமைப்புகளைப்போலவே, பணம், பதவிக்கு தங்களை விலைபேசும் அரசியலில் இறங்கிவிட்டார்கள்! இந்த லட்ஷனத்தில் இவர்களை மிலார்ட் என்று அழைக்கவில்லை என்றால் நீதி மன்ற அவமதிப்பு குற்றமாம்!

    தமிழத்தில் அம்மா புகழ் பாடியும் பதவிநீட்டிப்பு கிடைக்காத கட்ஜுகள் , டெல்லியில் ஊழலுக்கு எதிராக தூள் கிளப்புகிரார்! உச்ச மன்ற தலையையே ஊழல் குற்றச்சாட்டோடு சாடிவரும் இவரை, இதுவரை யாரும் கண்டிக்கவில்லை! இவர் காந்தியையும்,நேதாஜியையும் அன்னிய ஏஜண்டுகள் என்ற போதிலும், அதை தட்டி கேட் க , மக்கள் பிரதினிதிகளுக்கு கூட அதிகாரமில்லையாம்! போலி ஜனனாயகம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க