privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்சிறுபான்மையினர்மாட்டிறைச்சி உண்டால் மரண தண்டனை - மறையாத மனு நீதி

மாட்டிறைச்சி உண்டால் மரண தண்டனை – மறையாத மனு நீதி

-

மாட்டிறைச்சி உண்டார் என்ற பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி ஒரு முஸ்லிமை அடித்து கொன்றுள்ளது இந்துத்துவ கும்பல். உத்திர பிரதேச மாநிலம் தாத்ரியில் வசித்து வரும் முகமது அக்லாக் தான் கொல்லப்பட்டவர். கடந்த 28-ம் தேதி இரவு அவர் வீடு புகுந்த ஒரு கும்பல் அக்லாக் மற்றும் அவரது மகன் தானிஷை வீட்டிலிருந்து தரதரவென இழுத்து வெளியே போட்டுள்ளது. பின்னர் தடிகளாலும், கற்களாலும் தாக்கியதில் அக்லாக் உடல் சிதைந்து இறந்துள்ளார். அவரது மகன் கவலைக்கிடமான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் நடைபெறுவதற்கு முன்னர் தாத்ரியின் அருகாமை கிராமமான பிசாராவில் ஒரு கோயிலின் மைக்கில் அக்லாக் குடும்பம் மாட்டிறைச்சி வீட்டில் வாங்கி வைத்து சாப்பிட்டு வருவதாக அறிவித்துள்ளனர்.

முகமது அக்லாக்
கொல்லப்பட்ட முகமது அக்லாக்

அக்லாக்கின் மகள் சஜிதாவை பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளது இந்துத்துவ கும்பல். பின்னர் வீட்டிலிருந்த நகைகளை கொள்ளையடித்து விட்டு சென்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஆறு பேரை கைது செய்தது போலீஸ். கொலையாளிகளில் சிலர் கைது செய்யப்பட்ட தகவல் பரவிய உடனே ‘மாட்டிறைச்சி உண்ட’ அக்லாக் குடும்பத்தினருக்கு தூக்கு தண்டனை வழங்கக் கோரி இந்துக்களை சாலை மறியலில் ஈடுபட வைத்திருக்கின்றனர் இந்து மதவெறியர்கள்.

போலீஸ் வந்து விசாரித்த போது அது ஈத் பெருநாளுக்காக வாங்கிய ஆட்டிறைச்சி என்று அக்லாக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தங்கள் நடவடிக்கையில் ‘நடுநிலையை பேண’ விரும்பிய போலீஸ் அக்லாக் வீட்டின் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த இறைச்சியை கைப்பற்றி தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளது.

‘தங்கள் வீட்டில் கைப்பற்றியது மாட்டிறைச்சி இல்லை என்றால் தனது தந்தையின் உயிரை திரும்ப பெற்று தருவார்களா?’ என்று கேட்கிறார், சஜிதா.

ரத்தத்தை உறைய வைக்கும் இந்த சம்பவம் பசுவை வைத்து ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க முன்னெடுக்கும் அரசியல் தொடர் நிகழ்வின் ஒரு பகுதி. 1996-ம் வருடம் இயற்றப்பட்டு கிடப்பில் கிடந்த மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கும் சட்டத்தை கடந்த மார்ச் மாதத்தில் புத்துயிரூட்டியது மகராஷ்டிர பா.ஜ.க. அரசு. அதனை தொடர்ந்து பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் அனைத்திலும் மாட்டிறைச்சிக்கு தடை கொண்டு வரப்பட்டது. பா.ஜ.க. கூட்டணி அரசு ஆளும் காஷ்மீரிலும் மாட்டிறைச்சிக்கு தடை கொண்டு வரப்பட்டதை எதிர்த்து அந்த மாநில மக்கள் செப்டம்பர் 25-ம் தேதி பக்ரீத் தொழுகை முடிந்து பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அக்லாக்கின் உறவினர்கள்
அக்லாக்கின் உறவினர்கள்

‘மாட்டிறைச்சிக்கு தானே தடை; நாம் தான் அதனை உண்பதில்லையே’ என்று இருந்து விடலாமா என்றால் அதற்கும் சோதனையை ஏற்படுத்தியது மகராஷ்டிரா அரசு. ஜைனர்களின் மதவிழா ஒன்றை காரணம் காட்டி செப்டம்பர் 14-ம் தேதியிலிருந்து 17-ம் தேதி வரை சிக்கன், மட்டனுக்கு தடை விதித்தது மகராஷ்டிர பா.ஜ.க அரசு.

உலகமே தின்னும் மாட்டிறைச்சியை கொலைக்கான தண்டனையாக வைத்திருப்பது மனுநீதியின் பிறப்பிடமான இந்தியாவில் மட்டும்தான். பல்வேறு நாடுகளில் விபத்துக்களால், போர்களால், குடும்ப வன்முறைகளால் மக்கள் இறக்கின்றனர். மதவெறியாலும் கூட இறக்கின்றனர். ஆனால் ஒரு உணவுப் பொருளால் கொல்லப்படும் இந்துமதவெறிக்கு இணை எதுவுமில்லை. இதைவிட காட்டுமிராண்டித்தனமும், அநாகரிகமும் எங்காவது உள்ளதா? இல்லை அசைவ உணவு உண்போருக்கு வீடு வாடகைக்கு இல்லை என்று வெளிப்படையாக பலகை போடும் அசிங்கம்தான் இந்தியா அன்றி எங்கேயாவது கேள்விப்பட முடியுமா?

வேண்டாம் வம்பு என்று ஒதுங்கி செல்ல நினைத்தாலும் கையை பிடித்திழுத்து அடிக்கும் கதையாக இந்த சமூகம் இந்துமதவெறியால் பாதிக்கப்பட்டு வருகிறது. ‘அக்லாக் மாட்டிறைச்சி உண்ணவில்லை’ என்ற ‘நற்சான்றிதழுடன்’ அவர் குடும்பம் நீதிக்காக ஏங்குகிறது. இந்த கையறு நிலை உங்களை உறுத்தவில்லை என்றால் பார்ப்பன இந்துமதவெறியின் பலிபீடத்தில் நமது அரசியல், பண்பாட்டு உரிமைகளை நாம் ஒவ்வொன்றாக இழக்க நேரிடும்.

– சம்புகன்

பி.பி.சி செய்தி

  1. //அசைவ உணவு உண்போருக்கு வீடு வாடகைக்கு இல்லை என்று வெளிப்படையாக பலகை போடும் அசிங்கம்தான் இந்தியா அன்றி எங்கேயாவது கேள்விப்பட முடியுமா?//

    ஒ… கேள்விப் பட முடியுமே. அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் வீட்டுக்கு வெளியே “கறுப்பர்களுக்கு கண்டிப்பாக வீடு கிடையாது” (Only For Whites) என்று போர்டு தொங்கும் என்பதை கேள்வி பட்டதில்லையா. ஒவ்வொரு நாட்டிலும் பாசிசம் ஒவ்வொரு ரகத்தில் இருக்கும்.. இங்கு உணவு ரீதியாக அங்கு இன ரீதியாக.

    • வெள்ளையர் மட்டும் என்று மனத்தில் வேண்டும் நினது கோளல்லாம் , தனியாக சர்ச் கூட வைத்து கோளல்லாம் ஆனால் போர்டு எல்லாம் வைத்தாள் சட்ட ரீதியாக கம்பி என்ன வேண்டியது தான்.
      இங்கே சட்ட ரீதியாக குறிப்பிட்ட சமூகத்தினர் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதால் வினவு கூறுவது சரியே

  2. எங்க சாப்பாடு எங்களுக்கு செரிக்குது. …நாங்க சாப்பிட்டா உங்களுக்கு ஏண்டா செரிக்கமாட்டேங்குது. ….

  3. செருப்பை கொண்டும் , மனித கழிவினை கரைத்தும் மூஞில் அடிக்க வேண்டும் இந்த கழிசடைகளை

    எப்போது திருந்த போகிறதோ இந்த நிலை கெட்ட சமூகம்

    ராஜா நரசிம்மா விவேக்

  4. யார் என்ன சாப்பிட வேண்டும் என்பதை இங்கு அரசும், நீதிமன்றமும்தான் தீர்மானிக்கிறது. இதனை வேடிக்கை பார்க்கும் நாம்தான் வெட்கப்பட வேண்டும். கோழி, ஆட்டுக்கறிக்கு தடை என்றதும் துடித்த நீதிமன்றமும், கட்சிகளும் மாட்டுக்கறிக்கு மட்டும் வேடிக்கை பார்ப்பது ஏன்?

  5. உத்ரபிரதேசத்தில்தான் மாட்டுக்கறிக்கு தடையில்லையே. அப்புறம் அவர் ஆட்டுக்கறி வைத்திரு்ந்தால் என்ன மாட்டுக்கறி வைத்திருந்தால் என்ன? அந்த சம்பவத்தில் இதுவரை ஒருவரும் கைது செய்யப்படவில்லை. பலர் மீது வழக்கு மட்டும் பதிந்திருக்கிறாரகள். அவ்வளவுதான்

  6. Human is a predator of all animals, this is natural food, if you are opposing it (like sin), you should not drink milk that also sin, fools will be always foolish

  7. இது கண்டிப்பாக மிக மிக அதிகப்பட்ச தண்டணை வழங்கப்படவேண்டிய குற்றம்… அதே சமயத்தில் ஒரு கும்பல் செய்த குற்றத்திற்க்காக ஏதோ இந்து மதத்தில் பிறந்தவர்கள் எல்லாம் “வெறி” பிடித்தவர்கள் போல சாடியிருப்பது தவறு… தன்னுடைய வீட்டில் யாரை குடியமர்த்தலாம் என வீட்டின் உரிமையாளர் முடிவுசெய்வது சரியானதுதான்… இப்பொழுது கூட முஸ்லீம்கள் வீட்டில் “இந்துக்களை” குடியமர்துவது இல்லை… ஏற்றத்தாழ்வு இயற்க்கையானது…இதனை மாற்ற முடியாது.. போன மாதம் ஒரு இந்து பெண்ணை “மந்திரவாதி” என கூறி அடித்துக்கொன்றனர்… கேடு புரிவோர் எல்லா இடத்திலும், மதத்திலும்,நாட்டிலும் உள்ளனர்…வினவு இதனை ஒரு தேசிய பிரச்சனையாக பார்க்க வேண்டிய அவசியம் இல்லை… தேசியத்தை பற்றி துளியும் தெரியாத வினவு “மாட்டுக் கறியை” வைத்து ஒரு அரசியல் செய்து மற்றொரு ப.ஜா.கா. வாக காட்டிக் கொள்ள தேவையில்லை….இந்த நாட்டில் “முஸ்லீம்களை” அழிக்க நினைத்தால் அதை மாட்டுக்கறியை வைத்து செய்ய தேவையில்லை… அதற்கு 100 கோடி இந்துக்கள் சேர்ந்து _________ போது.

    • Mr. Indian, You are a simple ignorant Indian, Your fascist comments are showing who you are. Would I compare your fascist comments with ISIS ideology ? You are not an Indian but a Fascist Indian.

  8. ஆம்புர் கலவரம் நடந்த பொது உங அம்மாவை கூட்டி குடுக்க போனீஙகலாடா ??

    • ஆம்பூரில் நடந்தது தன்னிச்சியாக , மதத்திற்காக நடந்த கலவரம் அல்ல .
      அப்பாவி ஒருவரை, காவல் துறையில் உள்ள சில தவறான மனிதர்கள் , தவறாக கையாண்டதால் கொல்லப்பட்டார் . அவரது கொலைக்கு நியாயம் கேட்கத்தான் செய்வார்கள் ?

      உங்களடைய அம்மாவை சந்தேகத்தின் பேரில் கைது செய்து கொலை செய்துவிட்டால் , நீங்கள் என்ன செய்வீர்கள் சாம் ?

      • அப்ப, குஜராத் கூட இரயில் கோத்ரா எரிப்புக்காக தன்னிச்சையாக நடந்தது தானே?

        இன்னொரு பக்கம், மாடு திருடினதுனாலனு கூட தான் ஒரு கதை ஓடுது. கேட்டு ரிஜெக்ட் பன்றத விட, கேட்காமலேயே ரிஜெக்ட் செய்யுறது தானே நடக்குது…

        • சரியா சொன்னேள் சீனுவாள்.மாடு திருடுனதுக்காகவும் மாட்டுக்கறி தின்னதுக்காகவும் முகம்மது அக்லக்கை போட்டு தள்ளுனது சரிதானே.அதுதானே மனுதர்மம.இப்படித்தான் உங்களவா முன்ன தில்லி ஆட்சில இருந்தப்ப லச்சார்ல மாட்டை கொன்னுட்டாங்கன்னு சொல்லி ஐந்து தலித்களை போட்டு தள்ளிட்டு அவங்க மேலேயே FIR போட்டு மனுதர்மத்தை நிலை நாட்டுநீங்க.அதேமாதிரி முகம்மது அக்லக் குடும்பத்து மேல ஒரு திருட்டு கேசு FIR-ஐ போட்டு மனுதர்மத்தை நிலை நாட்டுங்க.

          அப்படியே அரசியல் சட்டம் செல்லாது. மனுதர்மம் தான் செல்லும்னு மோகன் பகவத் ஐ விட்டு அறிவிச்சுற சொல்லுங்க.மாடு திங்கிறவன எல்லாம் காவல்துறையை விட்டே போட்டு தள்ளிரலாம்.

  9. மாட்டுக்கறி தின்னும் ஒபாமாவை “உள்ளே வராதே” என்று தடுக்க வேண்டியதுதானே இந்தக் காவி வெறியர்கள்? அல்லது “மாட்டுக்கறி தின்னும் மிலேச்சர்கள் நாட்டுக்குச் செல்லமாட்டேன்” என்று மோடி சொல்ல வேண்டியதுதானே? ஏனடா அமெரிக்கர்கள் என்றால் நாக்கத் தொங்கப்போட்ட்ண்டு அலையரேல்?

Leave a Reply to i.v.chellan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க