privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.ககோவன் மீண்டும் கைது செய்யப்படுவாரா ?

கோவன் மீண்டும் கைது செய்யப்படுவாரா ?

-

slider 1பத்திரிகையாளர் அருள் எழிலன், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச் செயலர் தோழர் மருதையனோடு நடத்தும் நேர்காணல் – முதல் பாகம்

அருள் எழிலன் :  வணக்கம்.  மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பாடகர் கோவன் அவர்கள் கைது செய்யப்பட்டு சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்தார் ஆனால் தமிழக அரசு அவரது வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது. கோவன் விவகாரம் தொடர்பாக இணையதளங்களில், பொதுவெளியில், அரசியல் தளத்தில், தொலைக்காட்சி விவாதங்களில் என கருத்துப் பரிமாற்றம் செய்வோர் அனைவருமே பல்வேறு கருத்துக்களைத் தெரிவிக்கிறார்கள். இது தொடர்பாக நாமும் கேட்க வேண்டிய பல கேள்விகள் உள்ளன.

கோவன் கைது தொடர்பாக நிலவும் குழப்பங்கள்,  கேட்க விரும்பும் கேள்விகள்,  எனப் பல்வேறு கேள்விகளை மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலப் பொதுச்செயலர் தோழர் மருதையன் அவர்களிடம் முன்வைத்தோம்.

கேள்வி: வணக்கம். தோழர் கோவன் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. தோழர் கோவனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கனும் அப்படின்னு போயிருக்கா? அல்லது அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் ஜாமீனையே ரத்து செய்யனும் அப்படின்னு போயிருக்காங்களா? என்ன காரணத்திற்காக உச்சநீதிமன்றத்தைத் தமிழக அரசை நாடியுள்ளது?

பதில்:  கோவனை மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்றுதான் அவர்களது மனு முதன்மையாகக் குறிப்பிடுகிறது. ஆனால், இந்த வழக்கில் என்ன நடந்தது,  என்ன கேட்டிருக்கிறார்கள் என்பது பற்றி, ஊடகங்களில் நடைபெறும் விவாதங்களில் ஒரு தெளிவின்மை இருக்கிறது. அதனால் அதனை நான் தெளிவு படுத்துகிறேன்.

கோவன் கைது செய்யப்படுகிறார். சிறைவைக்கப்பட்ட பிறகு, அவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசு கேட்கிறது. அதை நம் வழக்கறிஞர்கள் ஆட்சேபிக்கிறார்கள். இங்கே குற்றம் என்று அவர்கள் சொல்கிற அந்தப் பாடலை எழுதியது நான்தான், பாடியது நான்தான் என்று ஒப்புக்கொள்கிறார் கோவன். அது பிரசுரிக்கப்பட்டது வினவு இணையதளத்தில். அந்த வினவு இனையதளத்தின் பொறுப்பாளர் தோழர் காளியப்பன்,  குற்றஞ்சாட்டப்பட்ட முதன்மை குற்றவாளி. இதற்குமேல் இந்த வழக்கில் விசாரிக்க ஏதுமில்லை. யாரும்  மறுக்கவில்லை.  இதற்குமேல் விசாரிக்க எதுவுமில்லாத போது, இதில் போலீஸ் காவல் எதற்கு என்பதுதான் நம்முடைய வாதம். ஆனால், இந்த வாதத்தை மீறி எழும்பூர் நீதிமன்றம் 5 நாள் போலீசு காவலுக்குப் பதிலாக 2 நாட்கள் போலீஸ் காவல் எடுத்து விசாரிக்க அனுமதி கொடுக்கிறது. இந்த 2 நாள் போலீஸ் காவலே தவறு, சட்டவிரோதமானது என்று உயர்நீதிமன்றத்தில் மனு செய்கிறோம்.

அந்த மனு சென்ற 14–ஆம் தேதி சனிக்கிழமையன்று விசாரிக்கப்பட்டது. அப்போ, உயர்நீதிமன்ற நீதிபதி அரசு தலைமை வழக்கறிஞரிடம் சில கேள்விகளை எழுப்புகிறார். முதல் கேள்வி, எதுக்காக உங்களுக்கு போலீஸ் காவல் தொடரணும்னு கேட்கிறார்.  நக்சலைட் இயக்கங்களோடு கோவனுக்கு தொடர்பு இருக்கிறது என்று சந்தேகிக்கிறோம்… அதை விசாரிக்கிறதுக்கு இன்னொருநாள் காவல் வேணும்னு அவர் சொல்றாரு. இந்த ஒருநாள் விசாரிச்சீங்களே, அப்படி ஏதாவது தகவல் கிடைச்சிருக்கான்னு கேட்கிறார் நீதிபதி. இல்லை என்கிறார் அரசு வழக்குரைஞர். அப்புறம் எதுக்கு மேற்கொண்டு கேட்கிறீங்க என்று நீதிபதி கேட்கிறார். இல்லையில்லை நாளைக்கு சொல்லலாமில்லையே என்கிறார் வழக்கறிஞர்.

இரண்டாவது கேள்வி – மக்கள் கலை இலக்கியக் கழகம் என்ற இந்த அமைப்பு தடை செய்யப்பட்ட அமைப்பா என்று கேட்கிறார். இல்லை தடை செய்யப்பட்ட அமைப்பு அல்ல என்று தலைமை வழக்கறிஞர் பதில் சொல்கிறார். அப்போ அது தடை செய்யப்பட்ட அமைப்பும் அல்ல,  அவருக்கு இந்த மாதிரி தீவிரவாத இயக்கங்களோட தொடர்பு இருக்கிறது என்பதற்கு எந்த சான்றுகளும் முதல்நாள் விசாரணையில் உங்களுக்கு கிடைக்கல. அப்போ இந்த வழக்குக்குத் தொடர்பே இல்லாமல், அவரை மேலும் நாலு நாளைக்கு வைத்து விசாரிச்சா வரவழைப்போம்னு சொல்வதே சட்டவிரோதமானது. எனவே, இந்த போலீஸ் கஸ்டடியை நான் ரத்து செய்றேன் என்று சொல்லி அதற்குத் தடை விதிக்கிறார் உயர்நீதிமன்ற நீதிபதி. இது சனிக்கிழமை 14-ஆம் தேதி நடக்கிறது.

அடுத்து திங்கட்கிழமை. திங்கட்கிழமையன்றைக்கு செசன்ஸ் நீதிமன்றத்தில் (அமர்வு நீதிமன்றம்). ஏற்கெனவே இந்த பெயில் விசாரணை முடிந்து அன்றைக்கு தீர்ப்பு சொல்கிறது. இந்த பெயில் கொடுக்கக்கூடாது என்பதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்த ஆட்சேபம் என்ன?  பெயில் கொடுத்தால் கோவன் தலைமறைவு ஆகிவிடுவார் –  விசாரணைக்கு வரமாட்டார் – தீவிரவாத இயக்கம் – இப்படி எதுவும் அவரால் ஆட்சேபமாக சொல்லப்படவில்லை. மாறாக, தலைமை வழக்கறிஞர் என்ன சொல்கிறார் என்றால், முதல்வரை பற்றி ரொம்ப தரம் தாழ்ந்த முறையில் விமர்சித்திருக்கிறார்கள். அதனால் பெயில் கொடுக்கக்கூடாது என்கிறார்.

இந்தக் காரணத்தை செசன்ஸ் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த காரணம், கோவனை,  நீதிமன்ற காவலில் அதாவது சிறையில் வைப்பதற்கு பொருத்தமானது அல்ல. அவர் விசாரணைக்குக் கூப்பிட்டால் வரப்போகிறார். அதனால் அவரை ஜாமினில் விடுவிக்கிறோம் என்று வேறு எந்த நிபந்தனையுமில்லாமல் ஜாமினில் விடுதலை செய்கிறது.  போலீஸ் காவலும் தேவையில்லை. நீதிமன்றக் காவலும் தேவையில்லை என்று நீதிமன்றங்கள் சொல்லிவிட்டன.

மக்கள் மன்றத்தில் என்ன நிலை?  பாரதிய ஜனதா, அண்ணா.தி.மு.கவைத்  தவிர இவர்களுக்கு ஆதரவாகப் பேசுவதற்கு ஒரு ஆள்கூட கிடையாது. தமிழகம் மட்டுமில்லை இந்திய அளவிலும் சரி., சர்வதேச அளவிலும் சரி., பன்னாட்டு பத்திரிக்கைகளும் சரி., எல்லாரும் காறி உமிழ்ந்திருக்கிறார்கள். கண்டித்திருக்கிறார்கள். இப்படி தனிமைப்பட்டு இருக்கிற இந்த அரசு. எப்படியாவது தனது மானத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இந்த நடவடிக்கையில ஈடுபட்டிருக்கிறது.

இதுமட்டும் அல்ல,  இனி யாராவது இந்த அரசை விமர்சித்தோ, டாஸ்மாக்கை விமர்சித்தோ, பாட்டு எழுதினால், சுப்ரீம் கோர்ட் வரைக்கும் போவேன். சும்மா விடமாட்டேன். என்று மிரட்டுவது இவர்களுடைய நோக்கம். எல்லோராலும் சுப்ரீம் கோர்ட் வரை போகமுடியாதல்லவா? அப்படி எங்களை மிரட்டலாம்னு பார்க்கிறாங்க. அது நடக்காது. ஆனால், மக்களுக்கு நாங்கள் சொல்ல விரும்புவது என்னவென்றால், சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞருக்கு 3 இலட்சம், 5 இலட்சம் பீஸ் கொடுப்பார்கள். அது உங்களுடைய வரிப்பணம். உங்களுடைய வரிப்பணத்தில்தான் இந்த அயோக்கியத்தனம் நடத்தப்படுகிறது என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டுவருகிறோம்.

கேள்வி: இதுல தமிழக அரசுக்கு சில சந்தேகங்கள் இருக்கு. இது தொடர்பா சில உண்மைகள் அவங்க தெரிஞ்சிக்கிடனும்னு அவங்க ஆசைப்படலாம். விரும்பலாம். அதுக்காக உச்சநீதிமன்றத்தை நாடுவதை நீங்க எப்படி தப்புன்னு சொல்லுவீங்க?

பதில்: தாராளமாக  நாடலாம். அதில் ரெண்டு விசயங்கள் நான் சொல்ல வேண்டும். முதல் விசயம்., இந்த வழக்கு பாட்டுக்காக போடப்பட்ட வழக்கு. இளவரசன் கொலையில் கோவனுக்கு தொடர்பு இருக்கான்னு விசாரிக்கனும், கோகுல்ராஜ் கொலையில தொடர்பு இருக்கான்னு விசாரிக்கனும், அதற்காக போலீஸ் காவல் வேணும்னு சொன்னா நீங்க ஒத்துக்குவீங்களா? போட்ட கேசு என்ன? போட்ட கேசுக்காகத்தான் விசாரிக்க முடியும். குற்றவியல் நடைமுறைச் சட்டம்னு ஒன்று இருக்கிறது. அந்த சட்டத்தையே தமிழக அரசு நிராகரிக்கிறது. இது முதல் விசயம்.

அப்பீல் போனா என்ன தப்பு என்று ஊடகங்களில் அ.தி.மு.க. காரங்க கேட்கிறாங்க. கைது  செய்ததே தப்பு. இது தப்புக்கு மேல தப்பு. இந்த பிரச்சினையில, ஏற்கெனவே தமிழக அளவில்,  இந்திய அளவில், உலக அளவில், ஒரு  ரவுண்டு இந்த அரசு அம்பலமாகியிருக்கு. ரெண்டாவது ரவுண்டு வரணும்றது இந்த அரசினுடைய விருப்பம். அதை வரவேற்கிறோம்.

கேள்வி: கோவனுடைய ஜாமீன் ஒரு வேளை ரத்தானால் அல்லது அந்த வழக்கு தொடர்பாக பாதகமான சூழல் வந்தால் அதை எப்படி எதிர் கொள்வீர்கள்?

பதில்: பாதகமான சூழல், சட்டப்படி தீர்ப்பு சொன்னால் வராது. வரமுடியாது என்பது எங்களது கருத்து. அதுக்குமேல் பாதகமான சூழல் என்று சொன்னால், என்ன பாதகம் வரப்போகிறது? போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பார்கள். விசாரிக்கட்டும். அதை எதிர்கொள்வோம். அதில் ஒன்றும் பிரச்சினை இல்லை.

–          தொடரும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க