privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்நூல் அறிமுகம்காவி பயங்கரவாதம் - புதிய கலாச்சாரம் மார்ச் 2016 வெளியீடு !

காவி பயங்கரவாதம் – புதிய கலாச்சாரம் மார்ச் 2016 வெளியீடு !

-

Puthiya-kalacharam-mar-16

காவி பயங்கரவாதம்

நாட்டின் காடுகள், கனிம வளங்கள், பொதுத்துறைகள் முதல் இறையாண்மை சார்ந்த உரிமைகள் ஈறான அனைத்தையும் ஏகாதிபத்தியங்களிடம் எழுதிக் கொடுப்பதுடன் தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளையும் குழி தோண்டிப் புதைக்கும் மறுகாலனியாக்க நடவடிக்கைகளைத் தீவிரமாக்கி வருகிறது மோடி அரசு. இதற்கு இணையாக, அரசு நிறுவனங்களைப் பார்ப்பன பாசிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் நடவடிக்கைகளும் தீவிரமடைந்து வருகின்றன.

தாத்ரியில் மாட்டுக்கறியின் பெயரில் முசுலீம் பெரியவரைக் கொன்றது, பகுத்தறிவாளர் தபோல்கர் – எழுத்தாளர் கல்புர்கி, பன்சாரே ஆகியோரைச் சுட்டுக் கொன்றது, சமூக வலைத்தளங்களில் எதிர்த்து எழுதுபவரை கைது செய்வது, பூனாவில் ஒரு ஐ.டி துறை முசுலீம் இளைஞரை வாட்ஸ் அப் வதந்தியைக் காட்டிக் கொன்றது, சென்னை ஐ.ஐ.டி-யில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்திற்கு தடை, ஐதராபாத் பல்கலையில் ரோஹித் வெமுலாவைத் தூக்கிலேற்றியது, உஸ்மானியா – ஜே.என்.யூ பல்கலைகளில் அசுரர் தினம் கடைபிடிக்க தடை, பூனா திரைப்படக் கல்லூரியின் முதல்வராகத் திணிக்கப்பட்ட இந்துமதவெறிக் கோமாளியை நீக்கப் போராடிய மாணவர்கள் மீது அடக்குமுறை, கர்வாப்சி எனும் கட்டாய மதமாற்றம், ஊடகங்களில் எதிர்க்கருத்துக்களை எழுதுபவர்களை அடக்க கமிட்டிகள், தற்போது ஜே.என்.யூ மாணவர்கள் மீதான ஒடுக்குமுறை!

மறுகாலனியாக்கமும் பார்ப்பன பாசிசமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பது மட்டுமல்ல, நாட்டின் இறையாண்மையும் வாழ்வுரிமையும் பறிக்கப்படுவதை எதிர்த்துப் போராடுவதிலிருந்து மக்களைத் திசை திருப்புவதற்கும் மோடியின் வாய்ச்சவடால்கள் அம்பலமாகி நாறுவதை மறைத்துக் கொள்வதற்கும் பார்ப்பன பாசிச நடவடிக்கைகளை பாரதிய ஜனதா பயன்படுத்துகிறது.

ஆனால் அதன் முயற்சிகள் தோல்வியடைந்து வருவதையே பார்ப்பன பாசிசத்துக்கு எதிராக அதிகரித்து வரும் போராட்டங்கள் காட்டுகின்றன. விருதுகளை திருப்பித் தரும் அறிஞர்களும், தடையை வென்ற ஐ.ஐ.டி அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டமும், அடக்குமுறைக்கு அஞ்சாத ஜே.என்.யூ மாணவர்களும் இதனை நிரூபித்து வருகிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ் கும்பலின் குற்றக் கதைகளை தொகுத்திருக்கும் இந்நூல் காவி பயங்கரவாதத்தை வீழ்த்தும் போராட்டத்துக்குப் பெரிதும் உதவும் என்று கருதுகிறோம்.

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்.

காவி பயங்கரவாதம் – புதிய கலாச்சாரம் மார்ச் 2016 மின்னூல் வடிவில் வாங்குவதற்கு Add to cart அழுத்துங்கள்

20.00Read more

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு (விவரம் கீழே தரப்பட்டுள்ளது) நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

அச்சு நூல் தேவைப்படுவோர் சாதாரணத் தபாலில் பெற ரூ 20-ம் (நூல் விலை ரூ 20, தபால் செலவு இலவசம்), பதிவுத் தபாலில் பெற ரூ 50-ம் (நூல் விலை ரூ 20, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும். வங்கி கணக்கு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

பொருளடக்கம்:

  1. புதுதில்லி JNU-வில் பா.ஜ.க பாசிசம் – நேரடி ரிப்போர்ட்
  2. ஸ்ரீராம் சேனாவின் இந்துத்வா ÷ ரேட் அம்பலம் !
  3. பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் படுகொலை !
  4. மஹிசாசுரனை போற்றுவதில் என்னடா குற்றம் ?
  5. பூனா ஐ.டி இளைஞரை கொன்ற இந்து ராஷ்டிர சேனா!
  6. இந்துக்களே… மரத்துப் போனதா உங்கள் மனசாட்சி ?
  7. அரவிந்தன் நீலகண்டனுடன் ஒரு தலித் இளைஞர் – நேருக்கு நேர்
  8. பா.ஜ.க. எம்.பி.யின் தமிழ்க் காதல்! பார்ப்பன பாசிசத்தின் கபடநாடகம்!
  9. தலித்துக்களை உருவாக்கியது முசுலீம்கள் – ஆர்.எஸ்.எஸ்
  10. சர்வதேச யோகா தினம்: 64 “ஷாகா”வுக்கு ̈ பதிலாக யோகா!
  11. இந்து சாதி அமைப்புதான் முதலாளித்துவத்தின் தாய் – அரு ̧ந்ததி ராய்

பக்கங்கள் : 80
விலை ரூ. 20.00

ஆண்டுச் சந்தா உள்நாடு:  ரூ 400

ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH  IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம்,
2-வது நிழற்சாலை, அசோக் நகர்,
சென்னை – 600 083.

தொலைபேசி
044-2371 8706,
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

1,500.006,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

_____________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க