privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஇதரபுகைப்படக் கட்டுரைபெண்ணுக்கு தைரியமளிப்பது புனித நூலா, சண்டைக் கலையா ?

பெண்ணுக்கு தைரியமளிப்பது புனித நூலா, சண்டைக் கலையா ?

-

பெண்களை அடிமைப்படுத்துவதற்கு ஆண்களும் கடவுள்களும் சேர்ந்து அமைத்த கூட்டணிக்கு இசுலாமும் விதிவிலக்கல்ல. கருவறை முதல் கல்லறை வரை ஒரு பெண் எப்படி அடிமையாக ஆயுள்கைதியாக வாழவேண்டும் என்று பார்ப்பனியம் மட்டுமல்ல, அல்லாவைத் தொழும் முசுலீம் மதமும் வரையறுத்து வைத்திருக்கிறது. ஆனால் உலகெங்கிலும் முசுலீம் பெண்கள் அப்படித்தான் வாழ்வதாக வகாபிய வெறியர்கள் பொய்ப் பிரச்சாரம் செய்து தத்தமது நாட்டின் பெண்களை அடக்கி வருகிறார்கள்.

அது உண்மையல்ல என்பதற்கு இந்த புகைப்படக் கட்டுரை ஒரு சான்று. மதமோ, மார்க்கமோ, புனித நூலோ தராத ஒரு தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் ஒரு சண்டைக் கலை தந்ததாக மகிழ்கிறார்கள் இந்த பெண்கள். உழைக்கும் மகளிர் தினத்தை ஒட்டி இந்த இளம் பெண்கள் கூறும் செய்தியை நினைவிலிருத்துவோம்.

She Fighter ஷி ஃபைட்டர்– ஜோர்டான் நாட்டில் 2012-ம் ஆண்டில் முதன் முதலாக நிறுவப்பட்ட பெண்களுக்கான தற்காப்பு பயிற்சி நிலையமாகும்.

இதன் நிறுவனர் லீனா கலீப் கூறுகையில் பாரம்பரிய தற்காப்பு நுட்பங்களோடு ஒரு பெண்ணின் சுய பாதுகாப்பு மற்றும் சுய பலத்தை ஒருங்கிணைத்து பயிற்சி அளிக்கப்படுகிறது என்கிறார். பெண்களின் உரிமைக்காக 10 மாநாடுகளை நடத்துவதை காட்டிலும் SheFighter அவர்களின் வாழ்வில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிடுகிறார்

ஒரு வருடத்திற்கு முன்பு அவருடைய சக ஊழியர் ஒருவர் சொந்த சகோதரனால் பாலியல் துன்பறுத்தலுக்கு ஆளானார். அதுவே லீனா இந்நிறுவனத்தை தொடங்குவதற்கு காரணமாக அமைந்தது. தலைநகரம் அம்மானில் அமைந்துள்ள இந்நிறுவனத்தில் இதுவரை 3000-க்கும் மேற்பட்ட பெண்கள் பயிற்சி முடித்திருக்கின்றனர்.

ஒவ்வொரு வாரமும் இங்கு இளம் பெண்களுக்கு சுவராசியமான முறையில் தற்காப்பு பயிற்சி கற்றுத் தரப்படுகிறது. பயிற்சியில் முடிவில் “ அவள் கோபமானவள், அவள் அடிப்பாள்” என்று முழக்கமிடுகிறார்கள் இந்த பெண்கள்.

லீனா_கலீப்_நிறுவனர்
லீனா காலிஃப் – She Fighter சண்டை பயிற்சி நிலையத்தின் நிறுவனர். 15 வயதிலிருந்தே சண்டைக் கலையில் பயிற்சி பெற்றவர்.
13வயது_யாரா
ஒரு வருடமாக பயிற்சி பெற்றுவரும் 13 வயது யாரா தன்னுடைய பள்ளி வகுப்பில் ஆண் மாணவர்களை இப்போதெல்லாம் அனாயசமாக சமாளிப்பதாக கூறுகிறாள்.
இளம்பெண்கள்
பல இளம் பெண்கள் இந்த பயிற்சி மையம்தான் தங்களின் பாதுகாப்பு வெளி என்று கூறுகிறார்கள்.
இறுதிநாட்களில்_பிஸியாக_இருக்கும்_பெண்கள்
பயிற்சி செய்யும் ஒரு இளம்பெண். பின்னணியில் “ இனி நான் அமைதியாக இருக்கமாட்டேன்” என்ற வாசகம்.
சாரா_பயிற்சியாளர்
27 வயது சாரா இங்கு பயிற்சியாளராக பணியாற்றுகிறார். இதற்கு முன் வெளியே செல்லும் போது ஆண்கள் கும்பலை பார்த்தால் ஒதுங்கி செல்லும் அவர் தற்போது அவர்கள் முன் கம்பீரமாக கடக்கிறார். சண்டைக் கலை மூலம் அவரது உடல் மொழி, நடை, சிந்தனை அனைத்தும் மாறியிருக்கிறது என்கிறார் சாரா.
சிறப்பு_வகுப்புகள்
சிறப்பு வகுப்புக்களில் ஆறு வயது சிறுமிகளும் உண்டு. பின்னணியில் ஒரு பாலஸ்தீன் ஓவியரின் படம் வரையப்பட்டுள்ளது.
பயிற்சியில்_ஈடுபடும்_பெண்கள்
பயிற்சிக்கு தாமதமாக வரும் பெண்கள் “பார்பி பொம்மை” என்று கிண்டல் செய்யப்படுவார்கள். ஆம் “SheFihter”-க்கு அந்த அலங்கார பொம்மைப் பெண் பிடிக்காது.
பிரெஞ்சு_நாட்டை_சேர்ந்த_இளைஞி
அம்மானில் வசிக்கும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 17 வயது மாணவி பயிற்சி வகுப்புக்கு தயாராகிறாள்.
பெண்களின்_அதிகாரம்_அவசியம்
“ ஒரு குத்தின் பலம் என்பது உடல் பலத்தை விட உள்ளத்தின் வலிமையையே அதிகம் சார்ந்திருக்கிறது என்கிறார் சாரா.
பயிற்சியாளர்2
பயிற்சி மையம் தொடங்கும்போது இந்தப் பகுதி ஆண்களிடமிருந்து மிரட்டல்கள் இருந்த போதிலும் தொடர்ந்து இதை வெற்றிகரமாக நடத்திவருகிறேன் என்கிறார் லீனா காலிஃப்!

செய்தி – புகைப்படங்கள்: நன்றி அல் ஜசிரா