privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திதருமபுரி, சென்னையில் உழைக்கும் பெண்கள் தினம்

தருமபுரி, சென்னையில் உழைக்கும் பெண்கள் தினம்

-

தருமபுரி

wwd-dpi-bannerமார்ச் 8 கொண்டாடும் தினம் அல்ல கொதித்தெழுந்து போராட வேண்டிய நாள் என்பதை பறைசாற்றும் வகையில் தருமபுரியில் விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் தெருமுனைப்பிரச்சாரம், விளக்கக்கூட்டம் நடத்தப்பட்டது. நீதித் துறையின் அருகில் உள்ள ஏரியில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை செய்யும் பெண்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

wwd-dpi-admk
பெண்களை கேவலப்படுத்தும் நிகழ்வுகள்

மேலும் புது வாழ்வு திட்டத்தின் கீழ் இயங்கும் நர்சிங் கல்லூரியில் பெண்கள் தின கொண்டாட்டம் என்கிற பெயரில் குத்தாட்டம், பாட்டுப்போட்டி, பெண்களை கேவலப்படுத்தும் நாடகம், புது வாழ்வு திட்டத்தை புகழ்ந்து தள்ளும் தினமாகவும், மார்ச் 8-க்கான சுவடே இல்லாமல் அழிக்கும் வகையில் கொண்டாடப்பட்டது. அங்கே சென்று மார்ச் 8 என்பது புது வாழ்வு திட்டத்தை புகழும் தினமல்ல,அது புது வகையில் போராட்டத்திற்கு தயாராகும் போராட்டம் என்பதை உணர்த்தும் வகையில் 100 க்கணக்கான பிரசுரத்தை கொடுத்து பேசப்பட்டது.

மேலும் அருகில் இருக்க கூடிய கிராமங்களில் வீடு வீடாக சென்று பெண்களை சந்தித்து பிரசுரம் கொடுத்து மார்ச் 8 குறித்து பேசப்பட்டது. பிறகு அன்று மாலை 5 மணியளவில் விளக்கக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தோழர் ஜெயந்தி தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில், “மார்ச்8 என்பது போராட்ட தினம் இதனை திட்டமிட்டே பத்திரிக்கைகளும், ஊடகங்களும் மறைக்கின்றனர். ஆனால் மார்ச் 8 என்பது வாக்குரிமை, 8 மணி நேர வேலை, சங்கம் சேரும் உரிமைகளை ஆயிரகணக்கான பெண்கள் ரத்தம் சிந்தி போராடி பெற்ற நாள்” என்று விளக்கி பேசினார்.

dpj women day 3சிறப்புரை ஆற்றிய தோழர் பழனியம்மாள் பேசுகையில், “பெண்கள் எந்த விதத்திலும் ஆண்களை விட கீழானவர்கள் இல்லை என்பதும், ஏன் ஆண்கள் நம்மை சமமாக நடத்துவது இல்லை என்பது நம்மை முதன்மையானவர்களாக நிலை நிறுத்தி பார்க்கும் போதுதான் புரியும். இந்த உயர்ந்த நிலையிலிருந்து பார்க்கும்போதுதான் சமுகத்தில் பெண்களுக்கு நடக்கும் அநீதிக்கெதிராக போராட முடியும்.

இன்றைக்கு பெண்களுக்கு இருக்கும் முக்கியமான பிரச்சினை டாஸ்மாக். இதனால் அன்றாடம் வருமானத்தை இழந்து வறுமைக்கு தள்ளப்படுகிறோம். நம் கண்முன்னே நம்முடைய குழந்தைகள் சீரழிக்கப்படுகின்றன. இன்னொரு பக்கம் விலைவாசி உயர்வு, சினிமா சீரழிவுகளால் அன்றாடம் செத்துக் கொண்டிருக்கிறோம். நம்மை வாழவிடாமல் சீரழிப்பது, சீரழித்து ரசிப்பது இந்த அரசுதான். இந்த அரசை நம்பி பலனில்லை. நாம் தான் வீதியில் இறங்கி போராட வேண்டும். அப்போதுதான் நம்முடைய வருமானம், கணவர், குழந்தைகளின் எதிர்காலமும் சிறப்பாக அமையும் அத்தகைய போராட்டத்திற்கு தயராக வேண்டும். மேலப்பாளையூர் பெண்கள் போராட்டத்தைபோல, கேரள தேயிலை தோட்ட பெண்களை போல நாம் போராட வேண்டும்” என்று உணர்வூட்டி பேசியது புதியதாக வந்த பெண்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.

தகவல்
பு.ஜ செய்தியாளர்
தருமபுரி

சென்னை

பெண்களின் வாழ்வைச் சீரழிக்கும் டாஸ்மாக்கை இழுத்து மூடுவோம் !
உலக பெண்கள் தினமான மார்ச் 8-ல் உறுதியேற்போம் !!

என்ற முழக்கத்தின் கீழ் பெண்கள் விடுதலை முன்னணி சார்பாக தெருமுனை பிரச்சாரம் பொழிச்சலூர், பள்ளிக்கரணை, அசோக் நகர், மதுரவாயல் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. பிரச்சாரத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சென்னை கலைக்குழு தோழர்கள் கலைநிகழ்ச்சி நடத்தியது பகுதி மக்களிடையே குறிப்பாக சிறுவர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றது.

அசோக் நகர் பகுதியில் “அப்பாவை கெடுத்திட்டியே அம்மா” என்ற பாடலைப் பாடும் போது ஒரு குழந்தை அழுது கொண்டே இருந்தது. பிரச்சாரம் முடியும் வரையும் அழுது கொண்டு இருந்த அந்த குழந்தையிடம் தோழர் “ஏன் குட்டி பொண்ணு அழுதுகிட்டே இருக்கே?” என்று கேட்டவுடன் மேலும் அழுகை அதிகமானதில் பதில் சொல்ல முடியாமல் நம்மையே பார்த்துக் கொண்டே நின்றாள்.

அவளோடு பக்கத்தில் நின்று கொண்டிருந்த அவளுடைய தோழி “இவளுடைய அப்பாவும் தினமும் குடிச்சிட்டு வந்து இவளையும் இவங்க அம்மாவையும் அடிப்பாரு. நீங்க பாடினதை கேட்டவுடனே அவளால அழுகையை நிறுத்த முடியல. நீங்க பாடின மாதிரி சாராய கடையை மூடினா நாங்க சந்தோஷமாக இருக்கலாம்” என்று பதில் கூறினாள்.

இந்தக் குழந்தையின் அழுகை – தமிழ் நாட்டின் ஒட்டு மொத்த குழந்தைகளின் வாழ்வை பிரதிபலிக்கும் விதமாக இருந்தது.

பாட்டில் வருவது போல “இந்தக் கடைய யாராச்சும் மூடினாக்கா தேவல” என்று நாம் சும்மா இருக்க வேண்டிய தருணம் அல்ல! இந்த சனியனை ஒழிக்காமல் தமிழகத்தில் விடிவில்லை என்பதை உணர்ந்து போராட வேண்டிய தருணம்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தோழமையுடன்

பெண்கள் விடுதலை முன்னணி,
சென்னை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க