privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்நம்மாழ்வார் அவதாரமெடுக்கும் தமிழக கட்சிகள் - உண்மை என்ன ?

நம்மாழ்வார் அவதாரமெடுக்கும் தமிழக கட்சிகள் – உண்மை என்ன ?

-

ய்யா நம்மாழ்வார் மீதும், இயற்கை விவசாயத்தின் மீதும் நம் அரசியல்வாதிகளுக்கு திடீர் அக்கறை முளைத்திருக்கிறது. நம்மாழ்வார் பெயரில் விவசாயத் திட்டம், இயற்கை விவசாயத்திற்கு மானியங்கள், விவசாயத்திற்கு தனி பட்ஜெட், விவசாயக் கடன் தள்ளுபடி என தேர்தல் வாக்குறுதிகளை பல கட்சிகளும் அறிவித்திருக்கின்றன. காதல்-காமெடி-டூயட்-சென்டிமென்ட்-சண்டை-குத்துப்பாட்டு-என மசாலா படத்தின் வெற்றி பார்முலா போல இருக்கும் இவர்களின் தேர்தல் அறிக்கைகள் ஒரு பக்கம் இருக்க, விவசாயத்தின் மீது இவர்களின் திடீர் அக்கறைக்கு காரணம் என்ன? இவர்கள் கூறுவது நடைமுறை சாத்தியமானதா?

farmers
நடைமுறையில், ஒரு சில பணக்கார விவசாயிகளும், ஐ.டி.துறையிலிருந்து வரும் புதுப் பணக்காரர்களும்தான் இயற்கை விவசாயம் செய்கின்றனர்

50 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக பயன்படுத்திய ரசாயான உரங்களால் மேல்மண்ணில் உள்ள உயிர்ச்சத்துக்களை முற்றிலுமாக இழந்து நிலமே மலடாகிவிட்டது! பிள்ளைக்கு புட்டிப் பால் ஊட்டுவதைப் போல, அவ்வப்போது ரசாயான உரம் போட்டால்தான் எதுவும் விளையும் என்கிற அளவுக்கு சீரழிந்து கிடக்கிறது விவசாயம்! இந்நிலையில், எருவையும்-மண்புழு உரத்தையும் போட்டு ஒரே நாளில் இயற்கை விவசாய நிலமாக மாற்ற முடியுமா?

“ரசாயன உரத்தின் பாதிப்பிலிருந்து நிலத்தை இயற்கை விவசாயத்திற்கு மாற்ற வேண்டுமானால், குறைந்தது 3 வருடமாகும். முதல் வருடத்தில் ரசாயன உரம் 75 சதவீதம், இயற்கை உரம் 25 சதவீதம், அடுத்த ஆண்டில் 50:50, அடுத்து 25:75 என்று படிப்படியாக இயற்கை உரப் பயன்பாட்டை அதிகரிப்பதன் வாயிலாகவே இயற்கை விவசாயத்திற்கு உகந்ததாக நிலத்தை மாற்றமுடியும்! இந்த 3 வருடத்திலும் சராசரியை விட குறைந்த விளைச்சலே கிடைக்கும்!” என்கிறார்கள் நிபுணர்கள்! இவ்வாறு முறையான பரிசோதனைக்கும்,கண்காணிப்புக்கும் உட்படுத்தப்பட்ட நிலத்திற்குத்தான் ‘அபெடா’ நிறுவனம் ‘ஆர்கானிக்’ சான்றிதழ் வழங்குகிறது! இச்சான்றிதழ் இருந்தால்தான் விளைபொருள்களை ஏற்றுமதி செய்ய முடியும்!

ஏற்கனவே உரம் முதலான இடுபொருட்கள் விலை உயர்வு, விளைபொருட்கள் விலை வீழ்ச்சி என்று கடனில் மூழ்கி நிலத்தை விட்டு ஓடும் நிலையில் உள்ள சிறு-குறு விவசாயிகளுக்கு இதுவெல்லாம் ஒத்துவருமா?

நடைமுறையில், ஒரு சில பணக்கார விவசாயிகளும், ஐ.டி.துறையிலிருந்து வரும் புதுப் பணக்காரர்களும்தான் இயற்கை விவசாயம் செய்கின்றனர். 10 ஏக்கர் நிலம் இருந்தால், 9 ஏக்கரில் ரசாயன உரம் போட்டுவிட்டு, ஒரு ஏக்கரில் இயற்கை விவசாயமும் செய்கிறார்கள். இவர்களுக்கு 3 வருட இழப்பு அல்லது வருமானக் குறைவு என்பது பெரிய பாதிப்பாக இருக்காது. மேலும் நம்மாழ்வார் முன்வைக்கும் இயற்கை விவசாயம், நம் பாரம்பரிய விவசாயத்தோடு தொடர்புடையது. இது பன்னாட்டுக் கம்பெனிகளின் வீரியரகப் பயிர்களுக்கு பயன்படாது என்பதே உண்மை! ஏனெனில், வீரியரகப் பயிர்கள் அனைத்தும் ரசாயன உரங்களின் தன்மைக்கு ஏற்பவே உருவாக்கப்படுகின்றன.

ரசாயனப் பாதிப்புகளில்லாத இயற்கை உணவுப் பொருள்கள் என்பது நடுத்தர வர்க்கத்தின் விருப்பம் என்பதையும் தாண்டி பேஷனாகி விட்டது. உடனே முதலாளிகளும் மூலிகை-இயற்கை ஆர்வலர்களாக உருமாறத் தொடங்கி விட்டனர். இதனால்தான் பப்பாளி-வேம்பு சோப்பு, கற்றாழை கிரீம், மூலிகை பற்பசை, துளசி மிட்டாய், புதினா பிஸ்கட்டுகள் போன்றவை சந்தையை ஆக்கிரமித்து வருகின்றன, மேலும், உலக நாடுகளின் ஏற்றுமதி சந்தையில் இது அதிக லாபம் ஈட்டக் கூடியதாகவும் இருக்கிறது. அதிகரித்துவரும் இதன் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், தற்போது நம்நாட்டு விவசாயத் திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.

“நாடு முழுவதும் அடுத்த 3 ஆண்டுகளில் 5 லட்சம் ஏக்கரில் இயற்கை விவசாயம் அறிமுகப்படுத்தப்படும்” என அறிவித்துள்ள பிஜேபி அரசு, நடப்பு பட்ஜெட்டில் இதற்காக 412 கோடி ரூபாயையும் ஒதுக்கியுள்ளது!

‘வேளாண் மின்னணு மேடை, வேளாண் சந்தைகளை இணையதளம் மூலம் இணைப்பது, வேளாண் பொருள்களுக்கான ஆன்லைன் சந்தை ஆகியவை மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கப் போகிறோம்” என்று நடப்பு பட்ஜெட்டில் மோடி அரசு தம்பட்டம் அடித்ததையே தி.மு.க, ம.ந.கூ, பா.ம.க ஆகியவற்றின் தேர்தல் அறிக்கைகளும் வழிமொழிகின்றன.

இதன் மூலம், உலகின் ஏதோ ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு, நம்நாட்டில் ஒரு பொருளை அதிகளவில் கொள்முதல் செய்வதன் மூலம் செயற்கையாக தட்டுப்பாட்டை உருவாக்கி, அதன் விலையை உயரவிட்டு, பிறகு அதிக விலைக்கு சந்தையில் விற்றுக் கொள்ளையடிக்க முடியும்! ஏற்கனவே இத்தகைய பன்னாட்டுக் கம்பெனிகள் மற்றும் உள்நாட்டு தரகு முதலாளிகளின் வர்த்தக சூதாட்டத்திற்காக வேளாண் பொருள்களின் மீதான ஆன்லைன் வர்த்தகத்தை ஏற்கனவே அனுமதித்துள்ளது மத்திய அரசு! அண்மைக் காலங்களில் உப்பு, புளி, மிளகாய், மஞ்சள், பயறுவகைகள், எண்ணெய் வகைகள் ஆகிய அத்தியாவசிய உணவுப் பொருள்களின் கடும் விலைவாசி உயர்வுக்கும் இந்த ஆன்லைன் வர்த்தகமே முக்கிய காரணம்!

வேளாண் பொருள்கள் விற்பனைச் சந்தையில், பெரு முதலாளிகளும், பன்னாட்டுக் கம்பெனிகளும் நுழைவதற்கு வழிவகுப்பதுதான் ஆன்லைன் வர்த்தகத்தின் உண்மையான நோக்கம்.! பொட்டலம் மடித்துக் கொடுக்கும் அண்ணாச்சி மளிகைக் கடைகள் இருந்த இடத்தில், சூப்பர் மார்க்கெட்டுகளும், சலுகை விலையில் விற்கும் பெரும் மால்களும், வணிகப் பெயரிட்ட மளிகைச் சாமான்களின் விற்பனையும் அதிகரித்து வருவது, ஆன்லைன் வர்த்தகத்தின் மற்றுமொரு கோர முகம்தான் !

அந்நியக் கம்பெனிகள் சில்லறை விற்பனையில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இவர்களுக்கு தேவையானதை மொத்தமாக ஒரே இடத்தில் கொள்முதல் செய்வதற்கு வசதியாக தற்போது வேளாண் சந்தைகளையும் ஆன்லைனில் இணைக்கும் திட்டத்தில் மோடி அரசு இறங்கியுள்ளது!. அரைகுறையாக இன்னமும் நிலத்தோடு ஒட்டிக் கொண்டிருக்கும் சிறு-குறு விவசாயிகளை, நிலத்திலிருந்து விரட்டியடிக்கவும், சிறுவணிகர்களை முற்றாக ஒழித்துக் கட்டவுமே இது உதவும்!

இவ்வாறு ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பும் மக்கள் விரோத,தேசத்துரோகக் கொள்கைகளால் கட்டி எழுப்பப் பட்டிருக்கும் நிலையில், தனி பட்ஜெட், கடன்தள்ளுபடி, இயற்கை விவசாயம், ஆகியவற்றால் விவசாயிகளை வாழ வைக்கப் போகிறோம் என்கின்றன ஓட்டுக்கட்சிகள்!

வெயிலில் விவசாய மக்களை வம்படியாக அழைத்து வந்து கொல்லும் அ.தி.மு.கவின் தேர்தல் கூட்டங்கள் ஒரு புறம். இன்னொரு புறம் நம்புகின்ற அப்பாவிகளுக்கு, “தமிழகத்தின் தொழில்வளர்ச்சியை மேம்படுத்த, முதலீட்டாளர்களின் நீண்டகால நண்பனாக அரசு செயல்பட, அரசியல் சாராதவர்களைக்!! கொண்ட மாநில பொருளாதார வளர்ச்சி வாரியம் அமைக்கப்படும்” என்று முதலாளிகளுக்கு ஆதரவாக ஆப்படிக்கிறார் கலைஞர்! தி.மு.க, அ.தி.மு.க வுக்கு மாற்று தேடுபவரா நீங்கள்? இதோ, பெரும் முதலீட்டாளர்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் அனுமதி வழங்கப்பட்டும்” என்கிறது மாற்று அரசியல் புகழ் ம.ந.கூட்டணியின் தேர்தல் அறிக்கை! நீங்கள் ஓடி ஒதுங்குவதற்கு சட்டமன்ற ஜனநாயகத்திற்குள் பாதுகாப்பான இடம் எதுவுமில்லை!

– விவசாயிகள் விடுதலை முன்னணி,
தேனி.

  1. ரசாயன உரங்கள், பூச்சிகொல்லிகளை பயனப்டுத்துவது தவறு, பன்னாட்டு நிறுவனங்களின் சதி என்று சொல்லும் மார்க்சியர்கள், 1920களில் துவங்கி, லெனின், ஸ்டாலின் ஆட்சிகளில் சோவியத் ரஸ்ஸியா, ஏன் இயற்க்கை வேளான்மையை கைவிட்டு, ரசயான நவீன வேளாண்மைக்கு மாறியது என்பதை விளக்க வேண்டும். இதே ரசாயன உரங்கள், பூச்சி கொல்லிகள், அதிக வீரியம் கொண்ட கலப்பின விதைகள் அனைத்தையும் எந்த பன்னாட்டு நிறுவன ‘உதவி’ இல்லாமல் ரஸ்ஸிய தனது வழியில் ‘பசுமை புரட்சியை’ உருவாக்கி பயன்படுத்தியது. ஏன் ? பிரச்சனை நவீன விவசாய முறைகளிலா அல்லது முதலாளித்த்துவ பாணி ரசாயன உர தொழிற்சாலைகளிலா ? கூபா 90களுக்கு பின்னர் இயற்க்கை வேளான்மை முறைக்கு மாறிவிட்டதை சொல்பவர்கள். 1959 முதல் 90கள் வரை ஏன் கேஸ்ட்ரே ஆட்சியில் அதை செய்யவில்லை என்பதை விளக்க வேண்டும்.

    உணவு உற்பத்தி இன்று பல மடங்கு பெருகி, உணவு பண்டங்களின் விலை (relative prices) மிக குறைந்து விட்டது. ஆன்லைன் வர்த்தகம் இதற்க்கு உதவி, விவசாயிகளுக்கு price discovery and planningக்கு மிக உதவுகிறது. இதை நிருபிக்க லிங்குகள் அளிக்க முடியும். உத்திர பிரதேசத்தில் மென்த்தால் விவசாயிகளுக்கு MCX (Multi commoditiy Exchange) மூலம் ஏற்பட்ட அபாரமான உதவி பற்றி பேசலாம்.

    பொதுவாக இங்கு கட்டுரைகள் full of shallow slogans, rhetoric and not based on data, proof and informed arguments.

    • உங்களது பின்னூட்டத்தில் தரவுகள், ஆதாரங்கள் என ஏதுமில்லாமல் ரசியா, பசுமைப்புரட்சி என நிறைய சொல்லி உள்ளீர்கள். நீங்களும் முன்வைக்கவில்லை அல்லவா

    • ஈமு கோழி மோசடியில் விவசாயிகள் துவண்டு தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த பொழுது, இதே அதியமான், ராசிபுரத்தில் தன்னுடைய உறவினருக்கு ஈமுகோழி வர்த்தகம் சூப்பராக போகிறது என்று வினவில் அடித்து சத்தியம் செய்தவர். இப்படிப்பட்டவர் ஆன்லைன் வர்த்தகம் உத்தரபிரதேச மென்த்தால் விவசாயிகளுக்கு அபார உதவியை வழங்கியிருக்கிறது என்று சொன்னால் இங்கு முன் கூட்டியே உத்திரபிரதேசத்தில் வாழும் அவரது உறவினர் யார் என்று கேட்டு தெரிந்துகொள்வது உத்தமம்! அப்புறம் யாராவது அதியமானின் ராசிபுரத்து உறவினர் ஈமு கோழி முதலீட்டில் இப்ப நல்லாயிருக்காரான்னு கேட்டு சொல்லுங்க!

      • தென்றல்,

        அன்று உண்மையில் அப்படி நம்பி தான் சொன்னேன். அதனாலேயே அனைத்து தரவுகளும் பொய்யாகிவிடாது. உபி மெந்த்தால் விவ்சாயிகளுக்கு MCXஆல் ஏற்பட்ட நன்மை பற்றி :
        http://www.businesstoday.in/magazine/reporters-diary/up-farmers-mint-it-big/story/2335.html Ram Lakhan (35) and Rajendra Prasad (35), also farmers and Kumar’s neighbours, say they both are growing mint for 9-10 years and earning good profits. Khanuja points out that the price discovery for mint oil has improved since his institute began working with commodity exchanges like MCX and NCDEX to develop a system of fixing prices according to the content of menthol.

    • அதியமான் சோவியத் யுனியனும் இராசயன வேளாண்மையை பயன்படுத்தி தன்பாணியில் பன்னாட்டு கம்பெனிகளின் உதவியின்றி பசுமைப்புரட்சியை உருவாக்கிக்கொண்டது ஏன் என்று வினவியிருக்கிறார். இரசாயனம் என்ற வார்த்தையை சோவியத் யுனியனுக்கு பயன்படுத்தப் போய் சோவியத்தில் பசுமைப்புரட்சி என்று ஒப்புதல் வாக்குமூலம் நல்கியிருக்கிறார். நாம் மேற்கொண்டு அதியமானிடம் கேட்க வேண்டியது இரசாயனத்தைப் பயன்படுத்தி இந்தியாவில் வேளான்மை செய்தது பசுமைப்புரட்சியா என்பதுதான்.

      1. 1920 அமெரிக்க உரச்சந்தைகள் நெருக்கடிக்குள்ளானபோது மூன்றாம் உலகநாடுகளை கவ்விப்பிடித்த தாரக மந்திரம் தான் பசுமைப்புரட்சிக்கான முதல் வித்து. போர்டு, ராக்பெல்லர் பவுண்டேசனின் உரக்கம்பெனிகள் இந்தியாவில் நிலையாக தங்கின.

      2. இந்தியா போன்ற நாடுகளில் வேளான்மைக்கு நீர்ப்பாசனம் வெகு சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்பது யதார்த்தம் என்கிற பொழுது இரசாயனத்தை இங்கு வந்து கொட்டியதன் மூலம் ஏகாதிபத்தியங்கள் இந்தியாவை சூறையாடியதை அதியமானின் கருத்து அக்குவேறு ஆணிவேராக அம்பலப்படுத்திக்கொண்டு விடுகிறது.

      3. அதியமான் சொல்வதைப்போன்று சோவியத் தன்பாணியில் இராயசனங்களைப் பயன்படுத்தி, தானே வேளாண்மையை அபிவிருத்தி செய்ததைப்போல் நீர்வளம் குன்றிய இந்தியா ஏகாதிபத்திய நிறுவனங்களின் இராயசனங்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் இந்தியாவிற்கு ஏன் வரவேண்டும்?

      இராயசனத்திற்கு ஆதரவு என்று வாதாடப்போய் சோவியத்தை இழுத்து, ஏகாதிபத்திய நிறுவனங்களுக்கு சப்புகொட்டுகிறார் அதியமான்! வேளாண் கொள்கையே இந்தியாவின் வேளாண் தன்மையே என்னவென்று தெரியாமல் லிங்கு போடுவேன் என்று மிரட்டல் வேறு!

  2. 1960களில் பஞ்சத்தை எதிர்னோக்கியிருந்தோம். சரி, சோவியத் ரஸ்ஸியா ஏன் மாற்றியது என்ற கேள்விக்கு direct answer சொல்ல முயல்க. ஏகாதிபத்தியம், etc என்பதெல்லாம் வெத்து rhetoric. உருக்காலைகளில் சோவ்யத் ரஸ்ஸியாவின் உதவியை இந்தியா நாடியது போல், பசுமை புரட்சியிலும் நாடியிருந்தால் வேறு பாட்டு பாடுவீக. அமெரிக்க உதவி தான் தவறா போச்சு. ரஸ்ஸிய உதவி என்றிருந்தால் ? உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் உங்களால் ‘வெறுக்கப்படும்’ எம்.எஸ்.சாமினாதனின் இந்த பேட்டியில் பதில்கள் உள்ளன :
    நடந்தது பசுமைப் புரட்சி அல்ல; பேராசைப் புரட்சி!: எம்.எஸ். சுவாமிநாதன் பேட்டி
    http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/article6000463.ece

    • எம்.எஸ்.சாமினாதனின் பேட்டியில் இருந்து :

      வறட்சியையும் பஞ்சத்தையும் நேரடியாகப் பார்த்துத் துடித்த தலைமுறை என்னுடையது. இந்தியாவின் பிரதமர்கள் அன்றைக்கெல்லாம் நாட்டின் உணவுத் தேவையைப் பூர்த்திசெய்ய எவ்வளவு துடித்தார்கள் என்பதை நேருவின் எழுத்துகளைப் படித்தால் புரிந்துகொள்ள முடியும். சாஸ்திரி வாரத்தில் ஒருநாள் விரதம் இருக்குமாறு நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்ட காலம் அது. இன்றைக்கு அபரிமித உணவு உற்பத்திக் காலத்தில் இதையெல்லாம் அறியாதவர்கள் யாரைப் பற்றியும் எதையும் பேசலாம்.

      நாட்டில் அன்றைக்கு இருந்த உணவுப் பற்றாக்குறையையும் ஒரு வேளாண் புரட்சிக்கான தேவையையும் யாரும் மறுப்பதற் கில்லை. அதே சமயம், ஆயிரக் கணக்கான வருஷ விவசாயப் பாரம்பரியமிக்க நாடு இது. இப்படியொரு பிரச்சினைக்கான தீர்வுகளைத் தேடும்போது, நீங்கள் எந்த அளவுக்கு நம்முடைய பாரம்பரிய விவசாய முறைகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டீர்கள்?

      ஒரு ஆராய்ச்சியாளன், இருக்கும் ஆதாரங்களைத் தொடாமல் தன் ஆராய்ச்சியைத் தொடங்க முடியாது. அது போதாதபோதுதான் புதியவற்றை நோக்கி நகர்கிறான். புதிய ரகப் பயிர்கள் கண்டுபிடிக்கப்பட்டது இப்படித்தான். ரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் ஏன் நமக்குத் தேவைப்பட்டன என்றால், அவைதான் நம் தேவையைப் பூர்த்திசெய்ய வல்லவையாக இருந்தன. ஒரு டன் நெல்லை உற்பத்திசெய்ய 20 கிலோ நைட்ரஜனும் 15 கிலோ பாஸ்பரஸும் வேண்டும். செயற்கை உரங்கள் என்றால், இது ஒரு மூட்டை போதும். இயற்கை உரங்கள் என்றால், வண்டி வண்டியாக வேண்டும். இன்றைக்கும் எரு நல்ல உரம்தான். ஆனால், வீட்டுக்குப் பத்து மாடுகள் வளர்ப்பது எத்தனை சிறு விவசாயிகளுக்குச் சாத்தியம்? அடிப்படையில் இந்த மனோபாவம் மோசமானது. எல்லாத் தரப்பினருக்கும் அறிவியலும் வளர்ச்சியும் மாற்றமும் வேண்டும்; விவசாயிகள் மட்டும் அப்படியே அன்றைக்கிருந்த நிலையிலேயே இருக்க வேண்டும் என்பது. தபால் அனுப்புவதில்கூடத்தான் நமக்குப் பாரம்பரியம் இருக்கிறது – புறாவிடம் கொடுத்தனுப்பிய பாரம்பரியம். ஏன் நமக்கு செல்போன்கள்?

      அப்படி என்றால், இந்திய விவசாயிகளிடத்தில் விஞ்ஞானிகள் கொண்டுவந்த பசுமைப் புரட்சியில் தவறே இல்லை என்கிறீர்களா?

      இந்தப் பசுமைப் புரட்சி என்கிற சொல்லாடலிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. அன்றைக்கு நாட்டின் தேவையைப் பூர்த்திசெய்ய நம்முடைய உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டியிருந்தது. அதற்கேற்ற புதிய ரகப் பயிர்களையும் கூடுதல் மகசூல் தரும் சாகுபடி முறைகளையும் கண்டுபிடிக்க விஞ்ஞானிகளான நாங்கள் போராடினோம். நாங்கள் கண்டறிந்தவற்றைப் பரிந்துரைத்தோம். அவ்வளவுதான். அரசாங்கம் அதை நம் விவசாயிகளிடம் எடுத்துச்சென்றபோது, ஒரு கோடி டன்னாக இருந்த நம்முடைய உணவு உற்பத்தி இரண்டு கோடி டன்னாக உயர்ந்தது. இந்திரா காந்திதான் முதலில் அதைக் கோதுமைப் புரட்சி என்றார். கோதுமை மட்டும் அல்லாமல் நெல், பயறு வகைகள் எல்லாவற்றிலும் கூடுதல் உற்பத்தியைத் தரும் ரகங்களை நாங்கள் கொண்டுவந்திருந்ததால், வில்லியம் காட் என்ற அமெரிக்கர் அதைப் பசுமைப் புரட்சி என்றார். எல்லோரும் அதைப் பிடித்துக்கொண்டார்கள். உண்மையில், புதிய ரகப் பயிர்களிடமோ, நவீன வேளாண் முறையிலோ தவறு இல்லை; தவறு என்பது அவற்றை மனிதர்களாகிய நாம் பயன்படுத்திக்கொண்ட முறையில்தான் இருக்கிறது; மனிதனின் பேராசையில் இருக்கிறது. நடந்தது பசுமைப் புரட்சி அல்ல; பேராசைப் புரட்சி.

      அதீதமான ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் பயன் பாட்டைக் குறிப்பிடுகிறீர்களா?

      ஆமாம். எல்லாவற்றுக்கும் ஒரு கணக்கு இருக்கிறது. இவ்வளவுதான், இப்படித்தான் பயன்படுத்த வேண்டும் என்று ஒரு வரையறை இருக்கிறது. அந்த எல்லையை மீறும்போதுதான் பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம்.

      • நீங்கள் நன்றாக விளக்கம் அளித்தாலும் ,கடைசியில் அமேரிக்கா ஏகாதிபத்தியம் என்று முடிப்பார்கள் இந்த கற்பனாவாதிகள் .

        ரஷ்யாவில் பசுமை புரட்சி என்றும் கூட்டு பண்ணை வைத்து உற்பத்தியை பெருக்கினார்கள் என்றும் புரோபகன்டாவை இவர்கள் உண்மை என்று நம்பி பேசி கொண்டே இருப்பார்கள் .

        சாப்பாடுக்கு வழி இல்லாமல் ஸ்டாலின் உக்ரைனை பிடித்த சம்பவத்தை பேச மாட்டார்கள்.

        இவர்கள் சாப்பாட்டிற்கு இல்லாமல் இருந்த பொழுது அமெரிக்க அவனக்கு தேவை இல்லாத கோதுமையை கொடுத்து உதவியதை பேச மாட்டார்கள் . ஏன் கூட்டு பண்ணை உணவு உற்பத்தியில் கொடி கட்டி பரந்த உருசியா அன்றைக்கு இவர்களுக்கு கொடுத்து உதவ வில்லை என்று லாஜிகலாக சிந்திக்க மாட்டார்கள் .

        காலம் காலமாக விவசாயம் செய்து வரும் நாம் ஏன் ஆர்கானிக் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடையவில்லை அந்த முறையிலேயே நாம் அனைவருக்கும் உணவு அளித்திருக்க முடியமா என்று சிந்திக்க மாட்டார்கள் .

        • //சாப்பாடுக்கு வழி இல்லாமல் ஸ்டாலின் உக்ரைனை பிடித்த சம்பவத்தை பேச மாட்டார்கள்…….//

          இது ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு என்பது எப்பொழுதோ நிருபணம் ஆன ஒன்று. உக்ரேனிய பஞ்சம் என்பது ஸ்டாலின் மீதும், சோஷலிச கட்டுமானத்தின் மீதும் சேற்றை வாரி இறைப்பதற்காக பிரிட்டிஷ் உளவாளிகளால் கற்பனையாக புனையப்பட்ட ஒன்று.

          • நான் உகரைனில் இருந்து வந்தவர்களோடு வேலை செய்து இருக்கிறேன் . தாதனை பஞ்சத்துக்கு பலி கொடுத்தவன் புலம்பலை கேட்டு இருக்கிறேன் .

            நீங்கள் கற்பனை கட்டுரை படித்து பொற்கால ஆட்சியை நினைத்து உருகலாம் .

            உக்ரைன் என்னும் நாட்டை எடுத்து கொண்டு, ரஷ்யர்களை குடி அமர்த்தி இன்றைக்கு ஒரு பகுதியை ரஷ்யாவோடு இணைத்து கொண்டார்கள் .
            கம்ம்யோநிசம் தோழர்கள் என்று உகரைநியர்கள் ஏமாந்து நாட்டை பிளந்து நிற்கிறார்கள்

            • யாரும் இங்கு உருகவில்லை.. சோஷலிசத்தை ஏற்பதும் எதிர்ப்பதும் அவரவரின் சொந்த நிலைப்பாடு. ஆனால், எதிர்ப்பதில் உண்மை இருக்க வேண்டும். நான் கேள்விப் பட்ட வரை சோஷலிச ரஷ்யாவின் மீதும், ஸ்டாலினின் மீதும் ஏகப்பட்ட அவதூறுகள் மண்டி கிடக்கின்றன என்பது தான். மேலும்,சோஷலிசத்தை அதன் முழுமையான வடிவில் நான் ஏற்றுக் கொண்டது கிடையாது. அதன் சில கூறுகளில் எனக்கு பிடித்தம் உண்டு. நீங்கள் முதலீட்டு தத்துவத்திற்கு தடையாக இருப்பதனால் சோஷலிசத்தை எதிர்க்கிறீர்கள். நான் தமிழ் தேசியத்திற்கு சோசலிசம் எதிர்ப்பாக இருப்பதனால் அதனை மறுக்கிறேன், வேறுப்பாடுகள் அவ்வளவே.

              • //தமிழ் தேசியத்திற்கு //

                ராம ராஜ்ஜியம் மாதிரியா , இது புதுசா இருக்கே !

                • ஐயோ… ராம ராஜ்ஜியம் மாதிரியோ, இந்திய தேசியம் மாதிரியோ அவ்ளோ கேவலமாலா இருக்காது.

                • மொழி, இனம் ,தொடர்சியான நிலபரப்பு அடிப்டையில் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களை ஒருங்கிணைக்க தமிழ் தேசியம் என்ற சொல்லாடலை பயன் படுத்தும் போது இந்த ராமன் போன்றவர்கள் கிண்டல் அடிப்பதை பார்க்கும் போது எனக்கு வினவின் மீது தான் கோபம் வருகிறது. தமிழ் மக்கள் பற்றிய எனது பின்னுட்டங்கள் நேற்று வினவால் தடை செய்யபடும் நிலையில் இன்று தமிழ் தேசியத்துக்கு எதிரான கிண்டலான கருத்துகளை மட்டும் ஏன் வினவு வெளியிடவேண்டும். வினவும் தமிழ் தேசியத்துக்கு எதிரானதா?

                  கம்யுனிசத்தை புறம் தள்ளி ஐரோப்பிய ஜனநாயகத்தை முன் வைக்கும் ராமன் அவர்கள் தமிழ் நாடு என்று வரும் போது மட்டும் தேசிய இனங்களை குறிப்பாக தமிழ் தேசிய இனத்தை கிண்டல் செய்வது ஏன் ?இவர் வாழும் ஐரோப்பிய நாட்டில் இப்படி இவர் பொது வெளியில் தேசிய இனங்களை கிண்டல் செய்வார் எனில் இவர் நிலை என்னவாகும் என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.

      • “ஒரு ஆராய்ச்சியாளன், இருக்கும் ஆதாரங்களைத் தொடாமல் தன் ஆராய்ச்சியைத் தொடங்க முடியாது. அது போதாதபோதுதான் புதியவற்றை நோக்கி நகர்கிறான். புதிய ரகப் பயிர்கள் கண்டுபிடிக்கப்பட்டது இப்படித்தான்.” என்று சாமிநாதன் சாமர்த்தியமாக போய் சொல்கிறார்.குட்டை ராகமாகவும்,சாமிநாதன்

  3. எங்களுக்கு 6 ஏக்கரில் தென்னந்தோப்பு உள்ளது எனக்கு தெரிந்த வரையில் நாங்கள் உப்பு வைத்தது கிடையாது இப்ப 25 வயது வரை உள்ள தென்னை மரங்களுக்கு வெறும் சாணியுமு ஆட்டு சாணியும் உரமாக வைக்கிறோம் ஆனா வயக்காட்டுல நெல்லுக்கு 2 உப்பு போட்டுதான் ஆகனும் அதான் நிலைமை எனக்கு தெரிஞ்ச வரை விவசாயிகள் இயற்கை விவசாயத்தை பாதுகாக்கத்தான் முயற்ச்சி செய்கிறார்கள் திரும்பவும் இயற்க்கை விவசாயத்துக்கு விவசாயிகளை திருப்பனுமுனா மது அடிமைகளுக்கு மறு வாழ்வு குடுக்குறாமாறி சிவியர் டீரிட்மென்ட் பண்ணபும்…

  4. நானும் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவன் என்பதால், என் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன் ! இதில் அரசியல் இல்லை! எங்கள்நிலம் ஒரு போகம் நெல்லும், ஒரு போகம தெளிவு அல்லது உளுந்து என பயிரிடுவோம்! தொழு உரம் , பசுமை இலைகள் தவிர வேறு உரம் ஆரம்பத்தில் , 50 வருடத்திற்கு முன், பயன்படுத்தியதில்லை! ஏக்கருக்கு இருபது மூட்டைக்கு மேல் விலைந்த நினைவில்லை!

    ஆனால் , பிற்காலத்தில், அறுபது களில், அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மண்வளமும், பயிரும் சேதமடைவது தொடர்கதையானது! அப்போது குறுகிய காலநெல் ரகத்தை ‘தெளிவு’ என்னும் முறையில் பயிரிட்டு ,அடியுரமாக சூப்பெர் பாஸ்பேட் (வேப்பம் புண்ணாக்கில் கலந்தது), மேலுரமாக ஊரியா தெளிப்பது உண்டு! இதனால் ஈடு அதிகரித்தது உண்மை!

    தமிழ்னாடு அரசின் விவசாய துறையும் வறட்சி தாங்கி விளையும் ஐ ஆர் 20, ஆடுதுறை 27, வெள்ளத்திலும் வளரும் தில்லைனாயகம், கண்ணகி போன்ற ரகஙள் அறிமுகப்படுத்தபட்டன!

    ஆனால், புதிய பொன்னி ரகஙள் அறிமுகமே ஏக்கருக்கு 40-45 மூட்டைகள் விளைச்சல் தந்தது! அரசு எப்போதும் இயற்கை உரத்தைநிறுத்த சொல்லவில்லை! மாறாக மண்பரிசோதனையிட்டு தேவையான அளவே “ரசாயன” என்று தவறாக குறிப்பிடப்படும் செயற்கை உரத்தை , சத்து குறைவை ஈடுகட்டும் விதத்தில் பரிந்துரைக்கின்றனர்! விவசாயிகளின் பேராசையினாலும், கடைக்காரர் பேச்சை கேட்டும் தவறான அளவில் உரம் மற்றும் பூச்சி கொல்லி மருந்து களை பயன்படுத்துவதே சிக்கலுக்கு வழி வகுத்தது!

    மேய்ச்சல்நிலங்கள் குறைந்து விவசாயிகளின்நணபனாகிய மாடுகளும் குறைந்து வெறு வழியில்லாமல்தான் , அதிக விலை கொடுத்தேனும் செயற்கை உரம் வாங்க வேண்டியுள்ளது!

    பெருகிவிட்ட ‘நகரிய’நாகரிகம் , ஆட்டை கடித்து, மாட்டை கடித்து மனிதனையும் இயற்கை வாழ்வு வாழ விடாமல் செய்து விட்டது! கிராமபுற சுற்று சூழல், சாலை வசதிகளை பேணாமல், நகர்ப்புற தொழில் மற்றும் கட்டுமானங்களே இன்றைய எதிரிகள் !

    நகர்புற சி பி எஸ் சி பள்ளியில் படித்து, டி வி யில் கிரிக்கெட் பார்த்து , பிட்சா சாப்பிட்டவர்கள் ஐ ஏ ஸ் , ஐ ஐ டி யில் படித்து அரசு பணியில் அமர்ந்து திட்டமிட்டால் செய்ற்கை உரமென்ன, இனி செயற்கை அரிசி தான் உண்ணவேண்டும்!

  5. ரஷ்யாவில் விவசாய புரட்சிநடந்ததா இல்லையா என்று கேதும் அன்பர்களுக்கு, அங்கு ஆரம்பத்தில், உலகப்போர் காலங்களில் கடுமையான உணவு தட்டுபாடு இருந்தது உண்மையே! குலக்குகள் எனப்படும் சிறு விவசாயிகள் அரசுக்கு ஒத்துழைப்பு தராமலிருந்தார்கள்! குருசேவ் ஒரளவு தாராளமயம் கொண்டு வந்தும், கூட்டு பண்ணையில் நவீன இயந்திரஙகளை புகுத்தியும் சமாளித்தார்!இயற்கை தட்ப வெப்பநிலையால் சொவியத் ரஷ்யா பற்றாக்குறைநாடகவே இருந்தது! அமெரிக்கா உதவ முன்வராவிட்டாலும், மிக மோசமான கம்யூனிச எதிர்ப்பு பிரசாரத்திற்கு நிலைமையை பயன்படுத்தி கொண்டது!

    எழுபதுகளில் துவண்டிருந்த இந்திய விவசாயம், பின்னர்நாலுகால் பாய்ச்சலில் , உலகே அதிசயிக்க வகையில் சாதித்தது, ரஷ்ய மக்களுக்கும் நிவாரணமளித்தது! அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்தியா/இந்திராவின் மீது கோபங்கொள்ள அதுவும் ஒரு காரணம்!

Leave a Reply to தென்றல் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க