privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திதேர்தல் புறக்கணிப்பு துண்டு பிரசுரம் - தோழர்கள் மீது வழக்கு

தேர்தல் புறக்கணிப்பு துண்டு பிரசுரம் – தோழர்கள் மீது வழக்கு

-

நேற்று 12.05.2016 இரவு 10 மணியளவில் பாப்பநாயக்கன்பாளையம் பகுதி மக்கள் அதிகாரம் அமைப்புத் தோழர்கள் ஆகாஸ், பிரசாத் ஆகியோரின் இரு சக்கர வாகனத்தை மறித்து தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் சோதனையிட்டனர். தோழர்களிடம் ஓட்டுப் போடாதே என்ற துண்டறிக்கையும் மே 5 டாஸ்மாக் முற்றுகைப் போராட்டத்தில் மக்கள் அதிகார தோழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டிக்கும் சுவரொட்டியும் இருப்பதைக் கண்டவுடன் மற்ற சோதணை வேலைகளை நிறுத்திவிட்டு தோழர்களை ஜீப்பில் ஏற்றிக்கொண்டு அருகில் இருக்கும் (பழைய B15 | புதிய பெயர் C4) காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

அங்கிருந்த தேர்தல் அதிகாரி ஒருவர் “கோடிக்கணக்கில் செலவு பண்ணி தேர்தலில் ஓட்டுப் போட சொல்லிட்டு இருக்கோம். நீங்க ஓட்டு போடாதீங்கனு நோட்டீஸ் போடறீங்களா” என்று தோழர்களை மிரட்டும் தொனியில் பேசினார். காவல்நிலையத்தில் இரு தோழர்களையும் ஏதோ கிரிமினல் குற்றவாளிகளைப் போல நடத்தியது போலீஸ்.

 சுவரொட்டிகளை வாங்கிய உதவி ஆய்வாளர் தனது மேல் அதிகாரியிடம் “ஐயா மக்கள் அதிகாரம் அமைப்பு பேர்ல போஸ்டர் போட்டிருக்காங்க. அதுல போலீஸ் தாக்குதல் நடத்தி மண்டை உடைப்பு, கை, கால் முறிவு-ன்னு போலீசுக்கு எதிராக போட்டிருக்காங்க” என அதிர்ச்சியுடன் பேசிக்கொண்டிருந்தார். போனில் பேசி முடித்தவர் போஸ்டர், நோட்டிஸை போட்டோ எடுத்து யாருக்கோ வாட்ஸ் அப்பில் அனுப்பினார். பின் நம்மிடம் வந்து ‘வெயிட்’ பண்ணுங்க கேட்டுகிட்டு சொல்லுகிறேன் என்றார். 10 நிமிடம் கழித்து தொலைபேசியில் பேசிவிட்டு அது எங்க லிமிட்டுக்கு சேராது என்று கூறி துடியலூர் ஸ்டேசனுக்கு அழைத்து செல்வதாக கூறினர்.

“போஸ்டரை ஒட்ட எடுத்துட்டு போகலைனு சொல்லுங்க. அடிச்சாலும் அப்படியே சொல்லுங்க அப்பத்தான் விடுவாங்க” என்று அச்சுறுத்தி ஜீப்பில் ஏற்றி அனுப்பினார். இரவு 12 மணிக்கு துடியலூர் ஸ்டேசன் சென்றோம். அங்கும் இதே போன்ற முறையிலேயே நடந்தது. ஆய்வாளர் போனிலேயே சுவரொட்டி, நோட்டீஸில் போடப்பட்ட செய்தியை ஒரு வரிவிடாமல் மேல் அதிகாரியிடம் படித்து காட்டினார். இடையில் உதவி ஆய்வாளர் ஒருவர் “சுவரொட்டிக் கூட பிரச்சனை இல்லை. நோட்டீஸில் தான் ஒட்டுப்போடாதே போட்டிருக்கீங்க” என்று கேட்க, அதற்கு நாம் பதிலளித்ததும் ஏற்க மறுத்து வெயிட் பண்ணுங்க என்று கூறி உள்ளே சென்றார்.

சிறிது நேரம் கழித்து ஆய்வாளர் நம்மை அழைத்து மேல் அதிகாரி உத்தரவின் பேரில் கு/எண்: 418/2016 US 188 /PC வழக்கு போட்டு ஸ்டேசன் ஜாமீனில் விடுவதாக தெரிவித்து விட்டு சென்றுவிட்டார். இதற்கு மறுநாள் 13.05.2016  B4 உளவுப்பிரிவு போலீஸார் பாப்பநாயக்கன் பாளையம் பகுதிக்கு சென்று தோழர்கள் ஆகாஸ், பிரசாத் பற்றி வீடு வீடாக விசாரித்தும், அவர்களின் வீட்டிற்கு சென்று மிரட்டும் தோனியில் எச்சரிகை விடுத்தும் சென்றுள்ளனர். இப்படி தோழர்களை மட்டுமல்லாமல் பொதுமக்களையும் உளவியல் ரீதியாக அச்சுறுத்துவதை இப்பகுதி காவல்துறையினர் ஒரு வாடிக்கையாகவே கொண்டுள்ளனர். போலீஸ் அச்சுறுத்தலையும் மீறி பிரச்சாரம் வீச்சாக நடைபெற்று வருகிறது.

தகவல் :மக்கள் அதிகாரம் கோவை

13-5-2016Poster PP paint print

13-5-2016 12+18 Poster Election

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க