privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.ககபாலி - மோடியின் உண்மை முகம் ! குறுஞ்செய்திகள்

கபாலி – மோடியின் உண்மை முகம் ! குறுஞ்செய்திகள்

-

கபாலி…….இது ரியலு…………

கபாலின்னா சிவாஜி படத்துல வரும் கருப்பு பண முதலாளிகளை தண்டிக்கிற ஹீரோன்னு நினைச்சியாடா? அம்மான்னு சொன்னா சும்மாவே வெலவெலத்துப் போற கபாலிடா….! ஆள வுடுடா!!
கபாலின்னா சிவாஜி படத்துல வரும் கருப்பு பண முதலாளிகளை தண்டிக்கிற ஹீரோன்னு நினைச்சியாடா? அம்மான்னு சொன்னா சும்மாவே வெலவெலத்துப் போற கபாலிடா….! ஆள வுடுடா!!

ஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அனைவரும் தங்களது கடமையை உணர்ந்து வாக்களிக்க வேண்டும். அது நமது கடமை. ” என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பணம் பட்டுவாடா குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ” நோ கமெண்ட்…(அது குறித்து கருத்துக் கூற விரும்பவில்லை)” என்று தெரிவித்தார்.

கபாலின்னா சிவாஜி படத்துல வரும் கருப்பு பண முதலாளிகளை தண்டிக்கிற ஹீரோன்னு நினைச்சியாடா? அம்மான்னு சொன்னா சும்மாவே வெலவெலத்துப் போற கபாலிடா….! ஆள வுடுடா!!

———————————————————————-

இந்து பயங்கரவாதிகளுக்கு மோடி அரசின் பகிரங்க ஆதரவு !

2008-ம் ஆண்டு அபினவ் பாரத் அம்பலப்பட்ட சமயத்திலேயே என்.டி.டீ.வி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தற்போதைய மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், இந்த சம்பவங்களில் பிரக்யா சிங்குக்கு சம்பந்தம் இல்லை என்று அடித்துக் கூறியிருந்தார்.

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள தேசிய புலனாய்வுத் துறை, வழக்கில் இருந்து ஏ.பி.வி.பியைச் சேர்ந்தவரும், அபினவ் பாரத் என்கிற பரிவார பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவருமான பிரக்யா சிங்கின் மீதான குற்றச்சாட்டைக் கைவிட்டுள்ளது. மேலும், இதே வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இராணுவ அதிகாரி புரோகித்துக்கு எதிராக தீவிரவாத தடுப்புப் பிரிவின் தலைவராக இருந்த ஹேமந்த் கர்கரே தாக்கல் செய்த சாட்சியங்கள் இட்டுக்கட்டப்பட்டவை என்றும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது மத்திய புலனாய்வுத் துறை.

2006 மற்றும் 2008-ம் ஆண்டுகளில் மலேகானில் நடந்த குண்டு வெடிப்புகளில் பலர் உயிரிழந்தனர். 2005 துவங்கி 2008 வரை மாலேகான், நாண்டெட், ஹைதராபாத், ராஜஸ்தான் ஆஜ்மீர், சம்ஜாவ்தா எக்ஸ்ப்ரஸ் மற்றும் குஜராத் போன்ற இடங்களில் முசுலீம் மக்கள் மீது குறிவைத்து நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்புகளில் பலர் உயிரிழந்தனர், ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.

தொடர் குண்டுவெடிப்புகளுக்கு ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் அசீமானந்தா மற்றும் ஆர்.எஸ்.எஸ் பரிவார அமைப்பான அபினவ் பாரத் போன்ற அமைப்புகளுக்கு தொடர்பிருப்பது சாட்சிகள் மற்றும் வலுவான ஆதாரங்களின் அடிப்படையில் நிறுவப்பட்டது. பிரக்யா சிங், அசீமானந்த் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட சஞ்செய் ஜோஷியை பிரக்யா சிங் கைது செய்யப்படுவதற்கு முன்பே திட்டமிட்டு தீர்த்துக் கட்டி விட்டதாக தனி வழக்கும் நடக்கிறது. கல்சங்ரா, டாங்கே, அமித் ஆகிய முக்கிய குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளனர்.

2008-ம் ஆண்டு அபினவ் பாரத் அம்பலப்பட்ட சமயத்திலேயே என்.டி.டீ.வி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தற்போதைய மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், இந்த சம்பவங்களில் பிரக்யா சிங்குக்கு சம்பந்தம் இல்லை என்று அடித்துக் கூறியிருந்தார். பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்த உடனேயே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அபினவ் பாரத் அமைப்பினர் மீது “மென்மையான போக்கை” கடைபிடிக்குமாறு தான் வலியுறுத்தப்பட்டதாக அப்போதைய அரசுத் தரப்பு வழக்கறிஞர் ரோஹினி சலியான் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த வழக்கின் குற்றவாளிகளான பிரக்யா சிங் மற்றும் அசீமானந்தாவின் சொந்த வாக்கு மூலங்கள் மூலமாகவே அவர்களது குற்றத்தை நீருபித்தது கேரவான் ஆங்கிலப் பத்திரிகை. இது வினவு தளத்திலும் மொழிபெயர்ப்பில் வெளியிடப்பட்டது.

பா.ஜ.க ஆட்சியில் இப்படித்தான் நடக்கும் என்றால் நீதிமன்றங்களையும், போலீசையும் கலைத்து விட்டு நாடெங்கும் கப் பஞ்சாயத்துகளையே திறந்து விடலாமே?

வினவு ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான குறுஞ்செய்திகள்

இணையுங்கள்:

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க