privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்கோத்தகிரி ஆற்றை ஆக்கிரமிக்கும் கோபால்ஜி !

கோத்தகிரி ஆற்றை ஆக்கிரமிக்கும் கோபால்ஜி !

-

ழைக்கும் மக்கள் பொதுச்சொத்தை பாதுகாத்தால் கூட “நீ யார், அதை பாதுகாக்க” என்று அதிகார வர்க்கம் பொய் வழக்கு, சிறை, சித்திரவதை என்று அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடும்.

kothagiri-destruction-2ஆனால், பெரிய நிறுவனங்கள் காவல்துறை துணையோடு பொதுச்சொத்தை ஈவு இரக்கம் இன்றி சூறையாட அனுமதிக்கிறது இதே அதிகார வர்க்கம்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தாலுக்கா நடுஹட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் ஒரு சிறு ஆறு ஓடுகிறது. சமவெளி பகுதிக்கு நீர் ஆதாரம், விவசாயத்திற்கு பயன்படக்கூடிய பிரதான ஆறு, எந்த கோடைக் காலத்திலும் வற்றாத நீர் ஆதாரத்தைக் கொண்டுள்ள ஆறாக ஓடுகிறது.

தற்போது அதைச் சுற்றிலும் சுமார் 50 ஏக்கர் நிலத்தை வட மாநிலத்தைச் சேர்ந்த கோபால்ஜி என்பவர் வாங்கி, ஆற்றின் இருபுறமும் இருந்த அடர்ந்த செடிகொடிகள், மரங்கள் அனைத்தையும் வெட்டி அழித்து மரத்தை விற்பனை செய்து விட்டார். சிறிய மரங்களை தீயிட்டு எரித்துள்ளார்.

இது தொடர்பாக அந்தப் பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட வனத்துறையினரிடம் புகார் கொடுத்தும் எந்த அதிகாரிகள் எந்து என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று இன்றுவரை யாருக்கும் தெரியாது.

kothagiri-destruction-3அதைத் தொடர்ந்து ஆற்றை ஆக்கிரமித்தும், முள்வேலி போட்டு ஆற்றின் குறுக்கே தடுப்புச் சுவர் எழுப்பி தண்ணீரை தேக்கி வைத்து தேயிலை தோட்டத்திற்கு தண்ணீர் எடுப்பது, காட்டேஜ் கட்ட பயன்படுத்துவது என்று சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆற்றை தன் வசப்படுத்திக் கொண்டார்.

இந்த ஆறுதான் உலக சுற்றுலாத் தலமான கேத்தரின் அருவிக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்த ஆக்கிரமிப்பால், அந்த அருவிக்கும் சமவெளி பகுதியில் குடிநீர், விவசாயம் அனைத்துக்கும் நீர்வரத்து குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் 100 வருடங்களாக அப்பகுதியில் சுமார் 1500 பேர் பயன்படுத்தி வந்த ஆற்றை தனிநபர் தனது சொத்தாக்கிக் கொண்டு பொது மக்களை அனுமதிக்காமல் அடாவடி செய்கிறார். சிறுவர்கள் சென்றால் அடித்து விரட்டுவது, கெட்ட வார்த்தையில் திட்டுவது என்று வட மாநில அடியாட்களைக் கொண்டு மிரட்டி வருகிறார். இது தொடர்பாக அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்தப் பலனும் இல்லை.

kothagiri-destruction-1இந்நிலையில் அப்பகுதி மக்கள் மக்கள் அதிகாரம் அமைப்பினருக்கு அது குறித்து புகார் தெரிவித்தனர். பிரச்சனை குறித்து நேரில் ஆய்வு செய்த மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் பொது மக்கள் அனைவரிடமும் கையெழுத்து வாங்கி வட்டாட்சியரிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.

“ஆறு புறம்போக்கில் உள்ளதா, பட்டா பூமியில் உள்ளதா” என்று கேட்டார் வட்டாட்சியார்.

“எந்த பூமியில் இருந்தாலும் ஒரு ஆறு தனியாருக்கு எப்படிச் சொந்தமாகும். தனி நபர் சொத்தாக ஆற்றை எப்படி அனுபவிக்க முடியும்” என்று கேட்ட போது,

“அதுவும் சரிதான், தற்போது தேர்தல் நேரம், ஒன்றும் செய்ய முடியாது, தேர்தல் முடிந்ததும் பார்க்கிறேன்” என்றார்.

“தேர்தல் முடியும் வரை அவர்கள் ஆக்கிரமிப்பு செய்து கொள்ளலாமா” என்று பதிலுக்குக் கேட்டதும் வட்டாட்சியருக்கு கோபம் வந்து விட்டது.

“நீங்க இப்படி சொன்னா எப்படிங்க” என்றார்.

“நடவடிக்கை எடுக்க உங்களுக்கு அதிகாரம் இல்லை என்றால் சொல்லுங்க, நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்றதும்.

kothagiri-destruction-3அப்போதே, கிராம நிர்வாக அதிகாரிகளை அழைத்து, “உடனே போய் சம்பந்தப்பட்ட இடத்தை பார்த்து விட்டு வாருங்கள்” என்று கூறி “நீங்களும் அவர்களுடன் சென்று வாருங்கள்” என்று ஒருங்கிணைப்பாளரிடம் கூறினார்.

அதன்படி அவர்களுடன் சென்று விபரங்கள் காட்டப்பட்டது.

அரசுக்குச் சொந்தமான பகுதியில் ஆக்கிரமிப்பு நடந்துள்ளது, தண்ணீர் திருட்டு, மரம் திருட்டு, அனுமதி இன்றி காட்டேஜ் கட்டுவது, கல் உடைப்பது என பல்வேறு குற்றச் செயல்கள் நடந்துள்ளது நிரூபிக்கப்பட்டது.

கிராம நிர்வாக நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி கொடுத்தார். “15 நாட்களுக்குள் ஆக்கிரமிப்பை அவர்களே அகற்ற வேண்டும். இல்லை என்றால், நாங்கள் வந்து அகற்றுவோம், அதற்கான செலவை அவர்கள் கொடுக்க வேண்டும்” என்று உறுதி கொடுத்தார்.

15 நாட்கள் கடந்தன. எந்த ஆக்கிரமிப்பும் அகற்றப்படவில்லை. கூடுதலாக ஆக்கிரமிப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது.

கிராம நிர்வாகிகளிடம் கேட்டால், “நாங்கள் தேர்தல் வேலையில் பிசி ஆகி விட்டோம். வரும் 3-ம் தேதிக்குப் பிறகு நானே நேரில் வந்து அகற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடுகிறேன்” என்றார்.

ஆனால், இவர்களின்ன் செயல்பாடு நம்பிக்கை அளிப்பதாக இல்லை. ஆக்கிரமிப்பாளருக்கு சாதகமாக செயல்படுவதாக சந்தேகம் எழுந்துள்ளது.

இனிமேலும் இந்த அதிகாரிகளையும் அவர்களது அரசுக் கட்டமைப்பையும் நம்பி பலனிக்கை, மக்கள் அதிகாரம்தான் மாற்று என்று ஊர் மக்களிடம் கூறியுளோம்.

மக்களைத் திரட்டி களத்தில் இறங்கி உழைக்கும் மக்களின் அதிகாரத்தை நிலைநிறுத்தினால் மட்டுமே அரசுக் கட்டமைப்புக்கு “மக்கள் அதிகாரம்தான் மாற்று” என்பதை உணர்த்த முடியும். அதை நோக்கி மக்களை திரட்டும் கடமையை மக்கள் அதிகாரம் செய்து வருகிறது.

தகவல், புகைப்படங்கள்:
மக்கள் அதிகாரம், கோத்தகிரி.

  1. கோத்தகிரி ஆறு மட்டுமல்ல , தமிழகத்தின் இயற்கை வளங்கள் அத்தனையும் பாதுகாக்க வேண்டும் . ஆக்கிரமிப்பு செய்த கோபால்ஜி கயவனை கழுவில் ஏற்ற வேண்டும் .

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க