privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

நழுவல்

-

லூ சுன். – (சீனப்புரட்சி எழுத்தாளர், கவிஞர். ஒவியர்)

லூ சுன்
லூ சுன்

மிகச் சிக்கலான சீன சமூக சூழ்நிலைமைகளில் பொறுப்பேற்கத் தயங்கிய நடுத்தரவர்க்கப் பிரதிநிதிகளை லூ சுன் கேள்வி கேட்கிறார். கிண்டல் நடையில் பெயர் பெற்ற அவரது இக்கவிதை, குறிப்பாக, தமிழகத்தில் உள்ள அறிவுஜீவிகள் மற்றும் போலி மார்க்சீயவாதிகளுக்கும் பொருந்தும்

எந்த ஒரு அரசியல், கலாச்சார, சமூகப் பிரச்சினைக்கும் தெளிவான கருத்து (பதில்) சொல்லிவிட்டால் அது வறட்டுவாதம் என்ற கருத்து மேற்படி ஆகாமிகளால் பரப்பப்பட்டு வருகிறது. ’இதுதான் சரியான கருத்து என்று வெளிப்படையாகச் சொல்லாதே!’ என்பது அவர்களின் புதிய வேதம். முடிவுக்கே வராமல் சந்தேகத்திலேயே நிரந்தரமாக நில் என்று சொல்லும் இவர்கள் முரண்பாடுகளை ’கண்ணியமாக’ ’நாகரிகமாக’ விவாதிக்கலாம் என்கிறார்கள். இனறோ பல பிரச்சினைகளில் கருத்து சொல்லவும் தயங்குகிறார்கள். இதுதான் கும்மிருட்டில் கரிக்குருவி பிடிக்கப் புறப்பட்டிருக்கும் ’புதிய தத்துவக்காரர்’களின் தேடல்

____________

நடுத்தர வர்க்கத்தின் நழுவல்

னவு.
பள்ளிப்பருவக் கனவு.
ஓர் ஆரம்பப் பள்ளிக்கூடம்.
வகுப்பறையில் உட்கார்ந்திருக்கிறேன்.
ஒரு கட்டுரை எழுத ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறேன்.
கட்டுரையில் எனது அபிப்பிராயத்தை
எப்படி எழுதுவது எனக் கேட்டேன் ஆசிரியரை.

“அது மிகக் கடினம்! இரு… உனக்கு ஒரு கதை சொல்கிறேன்”
அவர் மூக்குக் கண்ணாடிக்கு மேலாக ஒரப்பார்வை பார்த்துக்கொண்டே கூறினார்.
“ஒரு குடும்பத்தில் ஆண்குழந்தை பிறந்தது.
பெற்றோருக்கு மிகவும் மகிழ்ச்சி.
குழந்தைக்கு ஒரு மாதம் ஆனது.
வந்து போகிறவர்களிடமெல்லாம் பெற்றோர் குழந்தையைக் காட்டினர்.
பாராட்டுகளைக் கேட்க அவர்கள் ஆசைப்படுவது இயல்புதானே!

’இந்தக் குழந்தை பெரிய பணக்காரன் ஆவான்’ – என்றார் ஒருவர்.
அந்த உத்தமருக்கு பெற்றோர் நெஞ்சார நன்றி தெரிவித்தனர்.
’இந்தக் குழந்தை பெரிய அதிகாரியாவான்’ என்றார் மற்றொருவர்.
அவருக்குப் புகழாரங்களைச் சூட்டினர்.
இன்னொருவன் வந்தான் –
’இந்தக் குழந்தை மரணமடைவான்’ என்றான்.
பெற்றோர் உள்ளம் கொதித்தது;
எல்லோரும் சேர்ந்து அவனை அடித்துப் புரட்டி விட்டார்கள்.”
ஆசிரியர் மேலும் சொன்னார்:
“அந்தக் குழந்தை பணக்காரனாய் வருவதும்,
பெரிய அதிகாரியாய் வருவதும் நாளை பொய்யாகிப் போகலாம்.
ஆனால் அவன் மரணமோ உறுதி.
எனினும் இங்கே
பொய்யைச் சொன்னவனுக்குப் புகழாரம்!pseudo intellectual
உண்மை பேசியவனுக்கு அடி உதை!”

அவர் அப்படிச்சொல்லிவிட்டு என்னைப் பார்த்துக்
கேட்டார்: ”அப்ப… அந்த இடத்துல நீ என்ன சொல்லுவே?”
“ஐயா. நான் பொய் சொல்லவும் விரும்பவில்லை,
உதைபடவும் விரும்பவில்லை.
அப்படியானால் என் கருத்தை எப்படிச் சொல்வது?”

ஆசிரியர் நிதானமாகச் சொன்னார்:
”அந்த மாதிரி நேரங்களில் சொல்லவேண்டியது
இதுதான். இந்தக் குழந்தையைப் பாருங்களேன்!
ஆகா! ஆகா! இவன் வந்து…. ஒஹோ! ஒஹோ!
குழந்தை பற்றி என்னுடைய கருத்தா? ஹி..ஹி..
ஹி..ஹி..ஹி….

– லூ சுன்,
தமிழாக்கம்:மருத்துவன்,
புதிய கலாச்சாரம் (நவ, டிச 1990, ஜன 1991)

  1. உண்மையை சொன்னாலே பிரச்சினைதானே? இந்தகாலத்தில் நழுவக்கூடிய மக்கள்தான் நல்லவர் என்ற பட்டம் பெறுகிறார்கள், இது தந்திரக்காரர்கள் வாழும் உலகம், இங்கு உண்மைக்கு மதிப்பில்லை, அப்பன் காங்கிரஸ், மகன் அண்ணா திமுக, பேரன் பி ஜே பி இப்படி வாழும் மக்கள் நேர்மையானவர்களா இருக்க முடியுமா? தந்திரம் தாண்டவம் ஆடுகிறது, இதிலே யார் முட்டாள்? இவர்களை ஏற்று கொள்கிறார்களே மக்கள், இவர்கள்தான் முட்டாள்கள். பட்டம் வாங்குவது எதற்கு, தொழில் செய்யவா? அரசியலில் வந்து தந்திரமாக சொத்து குவிக்கவா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க