privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.க“படிப்படியான மதுவிலக்கு” என்ற பம்மாத்து

“படிப்படியான மதுவிலக்கு” என்ற பம்மாத்து

-

மக்கள் அதிகாரம் தமிழ்நாடு

நெ.16, முல்லைநகர் வணிக வளாகம், இரண்டாவது நிழற்சாலை, அசோக்நகர், சென்னை83

27.06.2016

பத்திரிகை செய்தி

“படிப்படியான மதுவிலக்கு” என்ற பம்மாத்து

AMMA_BONGU_SC“படிப்படியான மதுவிலக்கு” என்று ஜெயலலிதா தேர்தல் பரப்புரையில் அறிவித்தவுடன் “அது போங்காட்டம்” என்று மக்கள் அதிகாரம் சொல்லி விட்டது. பல லட்சம் பேர் கேட்கும் வகையில் “அம்மா போங்கு! ஐயா போங்கு!”என்ற பாடல் குறுந்தகடும் போட்டுவிட்டது. “படிப்படியான மதுவிலக்கு” என்று ஜெயலலிதா அரசு அறிவித்துவிட்ட பிறகும், அவர் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் 500 மதுபானக் கடைகளை மூடுவதாகவும் மதுபான விற்பனையை இரண்டு மணிநேரம் குறைப்பதாகவும் கையெழுத்துப் பாட்ட பிறகும் “மூடு டாஸ்மாக்” என்ற போராட்டத்தைத் தொடர்வதன் அவசியம் என்ன என்று ஊடகங்கள் திரும்பத் திரும்ப கேள்வி எழுப்பின. இத்தனை ஆண்டுகளாக ஜெயலலிதாவின் அரசியலையும் ஆட்சியையும் கண்ட ஊடகத்தாருக்கு இது போங்காட்டம் என்று தெரியாதா என்ன!

இப்பாது 500 மதுபானக் கடைகளை மூடிவிட்டதாகவும் மதுபான விற்பனையை இரண்டு மணிநேரம் குறைத்து விட்டதாகவும் ஜெயலலிதா அரசு அறிவித்துள்ளது. இதிலுள்ள உண்மை நிலைபற்றி மற்றெவரையும் விட ஊடகத்தாருக்குத்தான் அதிகம் தெரியும்! இலாபகரமில்லாத மதுபானக் கடைகளோடு, உயிரைக் கொடுத்தும், கைகால் முறிபடவும் பலநாள் போராடி மூடச் சொல்லி மக்கள் போராடிய மதுக்கடைகள் சிலவும் எதிர்க் கட்சியினரின் பார் நடத்தும் இடங்களிலுள்ள மதுக்கடைகள் சிலவும் மூடப்பட்டிருக்கின்றன. ஆனால், மூடப்பட்டதாகக் கூறப்பட்ட கடைகளுக்கு ஈடுகட்டும் அளவு வருமானம் தரும் புதிய கடைகளும் 24 மணிநேர பார்களிலும் கள்ளச் சந்தை வியாபாரமும் அதிகரிக்கப்பட்டிருக்ககின்றன; அரசு மதுபான வியாபாரமும் விற்பனை நேரமும் குறையவே இல்லை. கள நிலைமைகளும் ஊடகங்களும் இப்படித்தான் சொல்லுகின்றன.

shutdown-tasmac-kovai-siege-10
டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி கோவையில் மக்கள் அதிகாரம் நடத்திய போராட்டம் (கோப்புப் படம்)

“படிப்படியான மதுவிலக்கு” என்று அறிவித்த ஜெயலலிதா அரசு அது பற்றிய நடவடிக்கைகள் எதையும் வெளிப்படையாக மேற்கொள்ளவே இல்லை. சட்டமன்றத்தில் 101 விதியின் கீழ் அறிவிப்பு செய்வது போல, உளவுத்துறை போலீசையும் அதிகாரிகளையும் தனது விசுவாச ஊடகத்தாரையும் வைத்து வெற்றுப் பிரச்சாரத்தை மட்டும் செய்கிறது. மதுவிலக்கு தனது கொள்கை என்று அறிவிக்கும் ஜெயலலிதா அரசு அதற்காக என்ன செய்திருக்க வண்டும்? மதுவிலக்குக்காகப் போராடியவர்கள் மீதான வழக்குகளை விலக்கிக் கொண்டு, அவர்களையும் அதற்காக களஆய்வுகள் நடத்திய சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், நிபுணர்கள், மருத்துவர்களையும் அழைத்து ஆலோசனைகள் கேட்டிருக்க வேண்டாமா? தனது புகழ் பாடும் விளம்பரங்களுக்காக கோடிக்கணக்கில் கொட்டும் ஜெயலலிதா அரசு மதுவின் கேடுகளை விளக்கி குடிநோயாளிகளை மீட்பதற்கு என்ன செய்தது? குறிப்பாக, பள்ளி கல்லூரி மாணவர்கள், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த என்ன செய்தது? கோர்ட்டு உத்தரவுப்படி நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகளையும் பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத்தலங்கள் அருகேயுள்ள மதுபானக் கடைகளையும் மூடியதா? அவற்றை மூடக்கோரி இன்றும் தொடர்ந்து மக்கள் மனு கொடுத்தும் போராடியும் கோரியும் அடாவடியாக மூட மறுக்கிறதே, ஏன்?

valarmathi-natham
“முடியவே முடியாது! அண்டை மாநிலங்களில் மதுவிலக்கு இல்லாத போது தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமலாக்கவே முடியாது! இங்கு அரசு சாராயக் கடைகளை மூடினால் குடிகாரர்கள் அங்கே போய்க் குடிப்பார்கள். கள்ளச்சாராயம் பெருகிவிடும்” – நத்தம் விசுவநாதன்

“படிப்படியான மதுவிலக்கு” என்ற கொள்கை அறிவிப்புக்கு சில மாதங்களுக்கு முன்புதான் “முடியவே முடியாது! அண்டை மாநிலங்களில் மதுவிலக்கு இல்லாத போது தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமலாக்கவே முடியாது! இங்கு அரசு சாராயக் கடைகளை மூடினால் குடிகாரர்கள் அங்கே போய்க் குடிப்பார்கள். கள்ளச்சாராயம் பெருகிவிடும்” என்று மதுவிலக்கு மந்திரி நத்தம் விசுவநாதனை ஜெயலலிதா உறுதிபடப் பேச வைத்தார். இப்பாது இந்த வக்கணைப் பேச்செல்லாம் என்ன ஆனது? 500 மதுபானக் கடைகளை மட்டும் மூடினால் அடுத்துள்ள கடைகளுக்குப் போய் குடிகாரர்கள் குடிக்க மாட்டார்களா? இப்போது என்ன கள்ளச்சாராய விற்பனை நடக்கவில்லையா? இல்லை, டாஸ்மாக் சாராயம் மட்டும் நல்ல சாராயம் என்று சோதனை செய்தார்களா? நேரக் குறைப்புதான் குடிகாரர்களை மீட்டு விடுமா? அது கள்ளச் சந்தையைத்தான் பெருக்கியிருக்கிறது. போலீசு அதிகாரிகளின் உடந்தையில்லாமல் கள்ளச் சாராயமோ, கள்ளச் சந்தையோ இருக்காது. மக்களிடம் நேரடி அதிகாரம் வந்தால்தான் கள்ளச் சாராயத்தைம், அதன் கள்ளச் சந்தையையும் ஒழிக்க முடியும். சில ஊர்களில் மக்கள கூடி அவற்றுக்குத் தடைவிதிக்கவில்லையா? ஏன், போலீசு நுழையவே தடைவிதித்துச் சோதிக்கவில்லையா? பீகாரில் கள்ளச்சாராய, கள்ளச் சந்தை வியாபாரிகளுக்குக் கடும் தண்டணை விதித்தும், அதற்கான அதிகாரத்தை மக்களிடம் கொடுத்து மதுவிலக்கை அமலாக்க முனையவில்லையா?

jaya police 700 pix“படிப்படியான மதுவிலக்கு” என்பத ஒரு மோசடிக் கொள்கை! குடிப்பழக்கம் படிப்படியாக அதிகரிப்பதுதானே தவிர படிப்படியாகக் குறையக் கூடியதாக யாரும கூறவில்லை. ஜெயலலிதா போன்றவர்களின் மூளையில் மட்டும அப்படி ஒரு குறுக்குப் புத்தி தோன்றும். மதுவிலக்கினால் தனது சாராய சாம்ராஜ்ஜியத்தின் வருமானத்தில் சிறிதும் குறைந்துவிடக் கூடாது என்பதில் ஜெயலலிதா அரசு குறியாக இருக்கிறது. அதனால்தான் உண்ணாமலை சாராயக் கடையை மூடக்கோரிப் போராடி உயிர் துறந்த சசி பெருமாளுக்கு அங்கே நினைவுத்தூண் வைப்பதையும் மூர்க்கமாகத் தடுக்கிறது. மாநகரப் பருந்துகளில் பெயர் பலகையின் நிறத்தையும் பெயரையும் மாற்றிக் கொள்ளை, மின் கட்டணக் குறைப்பு இலவச மின்சாரம் என்று ஒருபுறம் சொல்லிக் கொண்டே நிலைக் கட்டணம் எனக் கொள்ளை, ராஜீவ் கொலையாளிகளுக்கு விடுதலை எனக் கூறிக் கொண்டே அவர்களைப் பரோலில் விடவும் மறுப்பதாடு, அவர்களின் விடுதலைக்கான உயர்நீதிமன்ற வழக்கில் எதிர்ப்பு, அதானிக்குக் கோடி கோடியாகக் கொட்டிக் கொடுத்துக் கொண்டே தமிழகத்தை மின் மிகை மாநிலமாக்கி விட்டதாக சவடால், தலைநகரிலேயே கூலிப் படைகளின் கொலைகளால் இரத்த ஆறு ஓடும்போது அமைதிப் பூங்காவாகத் திகழ்வதாகப் புளுகு, இவை போலத்தான் அம்மாவின் “படிப்படியான மதுவிலக்கு” என்ற போங்காட்டம். இதனால், அரசு சாராய போதை காரணமாக நடக்கும் விபத்துச் சாவுகளும் கொலைகளும் தான் நாளும் அதிகரிக்கிறது.

டாஸ்மாக் வருமானத்தை மேலும் பல ஆயிரம் கோடி ரூபாயாக்குவது மட்டுமல்ல, தமிழகத்தின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேலானவர்களைக் குடிநோயாளியாக்கிவிட வேண்டும் என்பதையும் இலக்கு வைத்து இந்த அரசும் ஆட்சியாளர்களும் செயல்படுகிறார்கள். அப்போதுதான் அவர்கள் எதைச் சொன்னாலும் நம்புவோம்; எதைச் செய்தாலும் அடிமைகளைப் போல, உணர்ச்சியில்லாத சவங்களைப்போல வீழ்ந்து கிடப்போம் என்று அவர்கள் நம்புகிறார்கள். மதுவிலக்குத்தான் தனது கொள்கை என்று ஒருபுறம் சொல்லிக்கொண்டே அதற்காகப் போராடும் மக்களைக் கொடூரமாக ஒடுக்குவதன் மூலம் நமது நியாயமான தேவைகளையும் உரிமைகளையும் கூடப் போராடிப் பெறுவதை விட நத்திப் பெற்றுப் பிழைப்பதுதான் காரிய சாத்தியமானது என்று நம்பும்படியான பொதுக் கருத்தும் கோழைத்தனமும் அரசாலும் ஆட்சியாளர்களாலும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. அவர்களின் நம்பிக்கையையும் பலரிடமும் பரவிக் கிடக்கும் பிழைப்புவாதம் கோழைத்தனத்தையும் தகர்த்து “படிப்படியான மதுவிலக்கு” என்ற பம்மாத்தை முறியடிப்பாம்

இவண்

சி. ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர்.
மக்கள் அதிகாரம்
தமழ்நாடு.