privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்நீதிமன்றம்நீதி கேட்டு போராடும் வழக்கறிஞர்கள் - செய்தித் தொகுப்பு

நீதி கேட்டு போராடும் வழக்கறிஞர்கள் – செய்தித் தொகுப்பு

-

புதிய சட்டத்திருத்தத்தை திரும்ப பெறக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் 22/06/2016 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம்!

நன்றி படம்: தி இந்து
நன்றி படம்: தி இந்து

இந்தியாவில் எங்கும் இல்லாத
கருப்புச் சட்டம் தமிழன் மீது மட்டுமா?
நீதித்துறையில் சர்வாதிகாரத்தை எதிர்த்திடுவோம்!

வழக்கறிஞர்கள் சமூகத்தை ஒடுக்கும் சட்டதிருத்ததிற்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல்லில் நடந்த வழக்கறிஞர்கள் பேரணியில் வழக்கறிஞர்கள் வாயில் கருப்புத்துணி கட்டிக்கொண்டு எதிர்ப்பு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் நீதிமன்ற புறக்கணிப்பிலும் ஈடுபட்டனர்.

————————————————-

‘புதிய சட்டத்திருத்ததை முழுமையாக திரும்ப பெறு!’

வழக்கறிஞர்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் சட்ட திருத்தம் 34(1)ஐ திரும்ப பெறக்கோரி  தமிழகம் தழுவிய அளவில் வழக்கறிஞர்களின் உண்ணாநிலை போராட்டம் 22 ஜூன் 2016 அன்று நடைபெற்றது!

Adv_sturggle

தமிழகமெங்கும் நடைப்பெற்ற உண்ணாநிலை போராட்ட புகைப்படங்கள்

வழக்கறிஞர்களின் போராட்டம் தொடர்பான அறிவிப்புகள், கேலிச்சித்திரங்கள், புகைப்படங்கள்

வழக்கறிஞர்களின் போராட்டம் தொடர்பான பதாகைகள், சுவரொட்டிகள்

தகவல் : மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், சென்னை

———————————————————————————

வக்கீல்களை நிரந்தரமாக தொழில் செய்ய தடைவிதிக்கும் சட்டத் திருத்தம் ஐகோர்ட்டு அறிவிப்பு
– என்கிற தலைப்பில் தினத்தந்தியில் மே 28 அன்று வெளியான செய்தி

நீதிபதிகளின் பெயரை சொல்லி கட்சிக்காரர்களிடம் பணம் வசூலிப்பது, நீதிபதிகளை அவதூறாக பேசுவது, குடிபோதையில் கோர்ட்டுக்கு வருவது போன்ற செயல்களை ஈடுபடும் வக்கீல்களை நிரந்தரமாக தொழில் செய்ய தடை விதிப்பதற்கு ஏற்ப வழக்கறிஞர் சட்டத்தில் சென்னை ஐகோர்ட்டு திருத்தம் கொண்டு வந்துள்ளது.

சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் டி.ரவீந்திரன் ஒரு அறிவிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

சட்டத்திருத்தம்

வழக்கறிஞர் சட்டம் பிரிவு 34(1), அந்த சட்டத்தின் திருத்தம் கொண்டுவர ஐகோர்ட்டுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது. இதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்கள் அமைதியாக செயல்படவேண்டும் என்ற நோக்கத்திற்காக வழக்கறிஞர் சட்டத்தில் சில திருத்தங்களை ஐகோர்ட்டு கொண்டுவந்துள்ளது.

வழக்கறிஞர் சட்டப்பிரிவு 14-ஏ-வின் கீழ் குற்றச்செயல்களில் ஈடுபடும் வக்கீல்களை, நிரந்தரமாகவோ அல்லது குறிப்பிட்ட சில காலத்துக்கோ வழக்கறிஞர் தொழில் செய்வதில் இருந்து நீக்கப்படுவார்கள்.

அதாவது கீழ்கண்ட குற்றங்களை செய்யும் வக்கீfல்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

குற்றச்செயல் என்ன?

* நீதிபதிகளின் பெயரை சொல்லி தன் கட்சிக்காரர்களிடம் இருந்து பணம் வசூலிப்பவர். நீதிபதியிடம் செல்வாக்கு உள்ளது என்று பொய் சொல்பவர்.

* நீதிமன்றங்களில் உத்தரவு மற்றும் ஆவணங்களை திருத்துபவர்கள். சேதப்படுத்தி அழிப்பவர்கள்.

* நீதிபதிகளை அவதூறாக, கேவலமாக பேசுபவர்.

* நீதிபதிகளுக்கு எதிராக ஏற்றுக் கொள்ள முடியாது, பொய்யான அவதூறான குற்றச்சாட்டுகளை சுமத்துபவர் அல்லது பரப்புபவர் அல்லது பொய்யான குற்றச்சாட்டுகளுடன் நீதிபதிக்கு எதிராக ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டுக்கு புகார்களை அனுப்பவர்.

* நீதிமன்ற வளாகத்துக்குள் போராட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் போன்ற செயல்களில் தீவிரமாக ஈடுபடுபவர்கள். நீதிமன்ற அறைக்குள் முற்றுகையிட்டு கோஷம் போடுபவர்கள், பதாகைகளுடன் வருபவர்கள்.

* குடிபோதையில் நீதிமன்றங்களில் ஆஜராகி வாதிடுபவர்கள்.

தொழிலுக்கு தடை

மேற்சொன்ன செயல்களில் ஈடுபடும் வக்கீல்கள், ஐகோர்ட்டு மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள கீழ் கோர்ட்டுகளில் வக்கீல் தொழில் செய்ய நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ தடைவிதிக்கப்படும்.

இதன்பின்னர், நடவடிக்கைக்கு உள்ளான வக்கீல் குறித்த அறிக்கையை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு, ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் அனுப்பி வைப்பார்.

இவ்வாறு வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்க, வழக்கறிஞர் சட்டப்பிரிவு 14-பி வழிவகை செய்கிறது.

அதேபோல, மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டுகளில், மேற்சொன்ன குற்றச்செயல்களை வக்கீல்கள் ஈடுபட்டால், அந்த மாவட்டம் முழுவதிலும் உள்ள நீதிமன்றங்களில் வக்கீல் தொழில் செய்ய சம்பந்தப்பட்ட வக்கீல்களுக்கு தடை விதித்து, மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவு பிறப்பிக்கலாம்.

விளக்கம் கேட்கவேண்டும்

சார்பு நீதிமன்றங்கள், முன்சீப் அல்லது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுகளில் மேற்சொன்ன செயல்களில் வக்கீல்கள் ஈடுபட்டால், அந்த சம்பவம் குறித்து அறிக்கையை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதிக்கு, சம்பந்தப்பட்ட கீழ் கோர்ட்டு நீதிபதி அனுப்பி வைக்கவேண்டும்.

அந்த அறிக்கையின் அடிப்படையில், மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில், அந்த வக்கீல் ஆஜராக தற்காலிக தடைவிதித்து மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவிடவேண்டும்.

அதன்பின்னர், சம்பந்தப்பட்ட வக்கீலுக்கு, அவர் செய்த குற்றச்செயல் குறித்து அவருக்கு தெரிவித்து, அவரது விளக்கத்தை கேட்டு சம்மன் அனுப்பவேண்டும். நீதிமன்றங்களில் ஆஜராக நிரந்தரமாக தடைவிதித்து இறுதி உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பு அவரது கருத்தை கேட்பது அவசியமாகும்.

அமலுக்கு வந்தது

அதன்பின்னர், அந்த வக்கீல் செய்ய குற்றச்செயல்களில் தன்மைக்கு ஏற்ப, ஐகோர்ட்டு உட்பட மாவட்ட கோர்ட்டுகளில் ஆஜராக நிரந்தர தடைவிதித்து மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதி உத்தரவிடலாம். இந்த புதிய சட்டத்திருத்தம், அறிவிக்கை வெளியிட்ட நாள் முதல் அமலுக்கு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளன.

இந்த அறிவிக்கை கடந்த 20-ந் தேதி தலைமை பதிவாளர் வெளியிட்டுள்ளார். அதன்படி, இந்த புதிய சட்டத்திருத்தம் கடந்த 20-ந் தேதி முதல் அமலுக்கு வந்துவிட்டது.

மேலும், இந்த சட்டத்திருத்தத்தை தமிழக அரசு தன்னுடைய அரசிதழிலும் வெளியிட்டுள்ளது.

————————————————————————

17/06/2016 அன்று சென்னை உயர் நீதிமன்ற அனைத்து நீதிபதிகள் கூட்டத்தில் எடுத்த முடிவு என்பது ஒரு பக்க சார்பானது மற்றும் வெறும் கண் துடைப்பு என்பதை விளக்குகிறது மூத்த வழக்கறிஞர் NGR பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கை!.

The amendment to the High Court Rules empowering the High Court to directly debar the Lawyers was passed without consulting the legal community. These amendments have got far reaching consequences and will affect the democratic spirit of legal profession. These amendments if enforced will silence the Lawyers. The Lawyers are also the guardians of the Judiciary. Before the amendments of rules was made under Sec. 34 of the Advocates Act, the High Court in all fairness should have widely published in the High Court website, causelist etc and called for open discussion. These amendments came as a surprise to many Lawyers. The District Bar Associations were unaware of these amendments.

The far reaching amendments were not put up for discussion in the Madras High Court Advocates Association, Madras Bar Association, Women Lawyers Association. This is an undeniable fact. At a recent meeting of MBA, many members wanted to put to vote the demand for total withdrawal of the amendment. Noticing that the vast majority of members were for withdrawal, the President of the Association very conveniently left the meeting without putting the resolution to vote. 200 lawyers signed a petition to the Chief Justice to withdraw the amendments. The MHAA is also of the same view. The various associations throughout Tamil Nadu are for total withdrawal of the amendments.

The very Senior Lawyer who was amicus in the R.K.Anand’s case openly said that the rules were intended to be framed in the context of the Contempt of Court Act. R.K.Anand case did not say that the High Court can frame rules and take action independently of the Contempt of Court Act. Therefore, these rules which empowers the High Court to debar Lawyers independent of the Contempt of Court Act will stand in the way of Lawyer practising fearlessly. The High Court under the guise of these amendments wants to take over the powers of Bar Council which is intended to protect the interest of Lawyers and the Judiciary.

Therefore, the recent resolution of the Full Court constituting a committee to consider only modifications and not total withdrawal of these amendments is going against the demands of the Lawyers. It is a one sided resolution and a total eyewash. We demand the withdrawal of the full court resolution and to constitute a committee with equal number judges and representatives from the Lawyers Association to hear for total withdrawal of these amendments.

At a time when judicial standards are failing its only but fair that the Lawyers are equally made part of the Committee to decide these amendments. The Supreme Court in Uppal’s case made it very clear that the Lawyers are an integral and important part of the judicial system and they are two parts of the same coin. The Supreme Court suggested in Uppal’s case to constitute a grievance committee consisting of lawyers as well to resolve the problems affecting the judicial system. These draconian amendments are only intended to protect the judges, silence and demoralise the Lawyers. This will be an end to the judicial system which is vibrant part of the democracy.

Therefore, we demand the full court resolution only for modification substituted by total withdrawal of these amendments and to constitute a Committee with equal numbers of Judges and Advocates Association representatives to consider the demand for total withdrawal.

—————————————————————————

திருச்சிராப்பள்ளியில் 18.06.2016 அன்று நடந்த கூட்டத்தில் வழக்கறிஞர்கள் சங்கங்கள் கூட்டு நடவடிக்கைக்குழு நிறைவேற்றிய தீர்மானங்கள்

Adv_struggle_tiruchy1. மேலை நாடுகளில் இல்லாத நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் இந்தியாவில் நீதிமன்றங்கள் மாண்பினையும், நீதிபதிகளையும், பாதுகாக்க இருக்கும் போது, வழக்கறிஞர்கள் சட்டம், பிரிவு 34-ன் கீழ் உயர்நீதிமன்றம், சட்டப்பிரிவு 35-ன் கீழ் பார்கவுன்சிலுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஒழுங்கு நடவடிக்கை அதிகாரங்களை பறிக்கும் விதமாக விதிகளை இயற்ற கூடாது என இம்மாமன்றம் கோருகிறது.

2. நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் தேரின் இரு சக்கரங்கள் என்றும், வழக்கறிஞர்கள் நீதிபதிகளுக்கு சட்டவிளக்கம் அளிப்பவர்கள் என்றும், வழக்கறிஞர்கள் தொழில் புனிதமானது என்று கூறிவிட்டு வழக்கறிஞர்களை கொச்சை படுத்தி மிரட்டும் தொணியில் சொற்களை பார் கவுன்சில் தலைவரும், உயர்நீதிமன்ற பதிவாளரும் உபயோகிப்பது அவர்கள் வகிக்கும் பதவிகளுக்கு அழகல்ல.

3. வழக்கறிஞர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டம், வழக்கறிஞர்களின் அடிப்படை உரிமை, வழக்கறிஞர்கள் பணிப்புறக்கணிப்பின் போது வழக்கறிஞர்கள் தம் பணிகளுக்கு வராமைக்கு நீதிமன்றங்கள் வழக்கறிஞர்களை தண்டிப்பதாக எண்ணி வழக்கு நடத்தும், பொது மக்களுக்கு எதிராக செயல்படுவது வருந்தத்தக்கது. மேலும் பாதிக்கப்பட்ட வழக்காடிகளுக்கு உதவுவது எனவும் தீர்மானிக்கபட்டது.

4. வழக்கறிஞர்கள் சட்டம் பிரிவு 34 (1)-ன் கீழ் இயற்றப்பட்ட விதிகள் சட்டத்திற்கு புறம்பானதும், அரசியல் அமைப்பு சாசனத்தின் படி உறுதி செய்யப்பட்ட அடிப்படை உரிமைகளுக்கு ( Art-21 ) எதிரானது என்பதால் அவற்றினை நிபந்தனையின்றி ரத்து செய்யும் வரை நீதிமன்ற பணி புறக்கணிப்பு தொடரும் என ஏற்கனவே ஈரோடு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட படி நீதிமன்ற பணி புறக்கணிப்பை தொடர்வது என்றும் தீர்மானம் நிரைவேற்றபட்டது.

Adv_struggle25. 11.06.2016-ம் தேதியில் ஈரோட்டில் நடைப்பெற்ற வழக்கறிஞர்கள் சங்கங்கள் கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் பார் கவுன்சில் உறுப்பினர்கள் ராஜினாமா செய்யவில்லை குறைந்த பட்சம் பார் கவுன்சில் தலைவர் திரு.D.செல்வம் அவர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தையாவது அனைத்து பார்கவுன்சில் உறுப்பினர்களும் ஆதரிக்க கோரப்படுகிறது.

6. தமிழ்நாடு பார்கவுன்சில் உரிமை மாண்பு, கண்ணியம் காக்க, தற்போது பதவி வகிக்கும் பார் கவுன்சில் உறுப்பனர்களை அவர்கள் அங்கம் வகிக்கும் சங்கம் அவர்களை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்.

7. அகில இந்திய பார் கவுன்சில் தமிழக பிரதிநிதி திரு.பிரபாகரன், தன் பதவியை துஷ்பிரயோகம் செய்து அகில இந்திய பார் கவுன்சிலை இல்லாத அதிகாரம் கொண்டு தமிழ் மாநில பார் கவுன்சிலுக்கு உத்தரவிடுவதும், தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் திரு.D.செல்வம் தன்னிச்சையாக R.K.ஆனந்த் உச்சநீதிமன்ற வழக்கின் வழிகாட்டுதலை மீறி நாடகமாடி நீதிமன்ற ஆசீர்வாதத்துடன் வழக்கறிஞர்களை இடை நீக்கம் செய்வதையும் இந்த கூட்டு நடவடிக்கை குழு வன்மையாக கண்டிக்கிறது.

8. வழக்கறிஞர்கள் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள அசாதாரமான சூழ்நிலையில் தமிழ்நாடு- புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்கள் கூட்டமைப்பின் செயல்படாத தலைவர் திரு பரமசிவம் உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவரும் தங்களது பதவிகளை உடனே ராஜினாமா செய்ய இந்த வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கோருகிறது.

9. வரும் புதன் கிழமை 22.06.2016-ம் தேதியன்று காலை 10.30 மணியிலிருந்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரதம் நடத்த தீர்மானிக்கப்படுகிறது.

10. வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு மீண்டும் 25.06.2016-ம் தேதியன்று தேனியில் கூடி மேல் நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பது என தீர்மானிக்கப்படுகிறது.

11. சென்னை, மதுரை உள்ளிட்ட 49 வழக்கறிஞர்கள் மீது உயர்நீதிமன்ற வழிகாட்டுதல் படி பார் கவுன்சில் ஆப் தமிழ்நாடு எடுத்த இடைநீக்கம் ( Interim Suspension) உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை உடனடியாக ரத்து செய்யவேண்டும்.

12. தற்போதைய சட்டத்திருத்த போராட்டத்தின் போது தமிழ்நாடு பார் கவுன்சில் வழக்கறிஞர் சங்கங்களுக்கு அனுப்பியுள்ள Show – Cause அறிவிப்பினை எந்தவித நிபந்தனையுமின்றி திரும்ப பெற வேண்டும்.

இவண்
வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு

———————————————————————

வழக்கறிஞர்களின் நியாயமான போராட்டத்தை ஆதரித்து “மக்கள் அதிகாரம்!”

வழக்கறிஞர்களின் சுதந்திரமான வழக்காடும் உரிமையை பறிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்டத்திருத்தத்தை முழுமையாக திரும்ப பெறக்கோரி தமிழகம் தழுவிய அளவில் தொடர்ச்சியாக போராடிவரும் வழக்கறிஞர்களின் போராட்டத்தை ஆதரித்து, “மக்கள் அதிகாரம்” அமைப்பு தமிழகம் தழுவிய அளவில் மக்கள் மத்தியில் தொடர் பிரச்சாரம் செய்துவருகிறது!

“வாதிடும் உரிமையை ஒடுக்கும் சட்டத்திருத்தம்!”

“நீதித்துறை சர்வாதிகாரத்திற்கு எதிரான‌ வழக்கறிஞர் போராட்டத்தை ஆதரிப்போம்!”

”புதிய சட்டத்திருத்ததை முழுமையாக திரும்ப பெறு !”

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை

—————————————————-

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க