privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திகாஷ்மீர் - ஒடிசா : எத்தனை காலம்தான் சுட்டுக் கொல்வார்கள் ?

காஷ்மீர் – ஒடிசா : எத்தனை காலம்தான் சுட்டுக் கொல்வார்கள் ?

-

ஒடிசா: பழங்குடி – தலித் மக்களை கொன்ற போலீசு!

orissa tribalsடந்த 08.07.2016 வெள்ளியன்று ஒடிசாவின் காந்தமால் மாவட்டத்தில் இரண்டு வயது ஆண் குழந்தை உள்ளிட்டு ஆறு பழங்குடி – தலித் மக்கள் போலிசால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒடிசா போலிசின் மாவோயிஸ்ட் ஒழிப்பு சிறப்பு படைக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் நடந்த மோதலில் இம்மக்கள் கொல்லப்பட்டதாக காந்தமால் காவல் துறை கண்காணிப்பாளர் பினாக் மிஸ்ரா கூறினார். பிறகு மோதல் மாவோயிஸ்ட்டுகளோடு நடக்கவில்லை என்று சமாளித்தார்.

கொல்லப்பட்டவர்கள் அனைவரும் ஒரு ஆட்டோவில் பயணம் செய்த எளிய மக்கள். ஊரக வளர்ச்சி திட்ட வேலை செய்யும் அம்மக்கள் அருகாமை சந்தையில் பொருட்களை வாங்கிக் கொண்டு கங்குரிமாஹா கிராமத்திற்கு திரும்பும் போது இப்படுகொலை நடந்தேறியது. இரண்டு தரப்புக்கும் மோதல் என்றால் ஆட்டோவின் ஒரு பக்கத்தில் மட்டும் 16 தோட்டாக்கள் பாய்ந்த தடம் இருக்கின்றன, மறுபக்கத்தில் ஏன் இல்லை என்று கேட்கிறார் அந்த கிராமவாசி ஒருவர்.

ஆட்டோவில் வந்தவர்கள் ஆயுதங்கள் வைத்திருக்கவில்லை என்பது ஏன் போலிசுக்கு தெரியவில்லை என்றால் இரவு மழையில் போலிசால் முழுவீச்சில் செயல்படமுடியவில்லை என்கிறார் எஸ்.பி மிஸ்ரா. ஏதோ ஒரு சிறு மனிதத்தவறு என்பதாக இவர்கள் சமாளிப்பது ஆறு குடும்பங்களது அழிந்து போன வாழ்க்கை!

orissa-tribals-killedதனது 2 வயது பேரனுக்காக அழும் பாட்டி, தனது மனைவி சாவதை நேரில் பார்த்த கணவன், இரத்தக் காயத்தோடு அம்மாவின் இறுதி மரண ஓலத்தை கேட்ட மகன் இவர்களெல்லாம் கொழுப்பெடுத்த அந்த மிஸ்ராவின் இதயம் உணராத ஜீவன்கள்!
போலிசு செத்தால் கோடிகளில் பரிசு, மேடைகளில் பதக்கம், ஊடகங்களில் தியாகி பட்டம்! அதே போலிசால் மக்கள் கொல்லப்பட்டால் கொலைகாரர்களுக்கு தண்டனை இல்லை, கொல்லப்பட்டவர்களுக்கு இழப்பீடும் இல்லை.

ஆதிவாசி மக்களுக்கு எதிராக பாரதிய ஜனதா தள் அரசாங்கம் செயல்படுவதாக பா.ஜ.க ஓநாய் ஊளையிடுகிறது. மாவோயிஸ்ட்டுகளையும், பழங்குடிகளையும் ஒழித்தால்தான் ஒடிசா, சட்டீஸ்கார் கனிமவளத்தை முழுங்க முடியும் என்று காங்கிரசோடு போட்டி போடும் பா.ஜ.கவும் சரி, இவர்களது ஆணைக்கு வேலை செய்யும் ஒடிசா அரசும் சரி இந்த படுகொலைக்காக தண்டிக்கப்பட வேண்டியவர்கள்!

இன்றைய சமூக அமைப்பும் நீதிமன்றமும் இதைச் செய்யாது. ஆனால் கொல்லப்பட்டவர்களைப் பறிகொடுத்த மக்களும் அந்த மக்களுக்காக போராடும் இதர உழைக்கும் மக்களும் அதிகாரத்தை கையெலெடுக்கும் போது கொன்றவர்கள் தண்டிக்கப்படுவார்கள் !

—————————————————————

காஷ்மீர்: எத்தனை காலம்தான் இந்தியத் துப்பாக்கி சுடும் ?

ஹிஸ்புல் முஜாகிதின் தளபதி புர்ஹான் வாணி இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு காஷ்மீரில் அடுத்த சுற்று மக்கள் போராட்டங்கள் துவங்கி விட்டன. இப்போராட்டங்களில் பாதுகாப்பு படைகளால் சுட்டுக் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை 21-ஐ தாண்டிவிட்டது. அதிகாரப்பூர்வ கணக்கின் படியே 800-க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர். வழக்கமான சிகிச்சைகளை தள்ளிவைத்து, மருத்துவர்களின் விடுமுறைகளை ரத்து செய்தும் கூட ஸ்ரீநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய அளவு மக்களை கவனிக்க முடியவில்லை.

srinagarகாஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் பாதுகாப்பு படைகளோடு மக்கள் போராடுகிறார்கள். சிறுவர்கள்-இளைஞர்கள் கல்வீசுகிறார்கள். தொட்டதுக்கெல்லாம் துவக்கு தூக்கும் இராணுவம் சுட்டுக் கொல்வது அதிகரித்தாலும் தெருவில் இறங்கி போராடுவதற்கு மக்கள் அஞ்சவில்லை. 21 வயது சபீர் அகமதை துரத்திச் சென்ற பாதுகாப்பு படையினர் அவனது தந்தையின் முன்னால் சுட்டுக் கொன்றிருக்கின்றனர்.

ஜம்மு காஷ்மீர் அரசாங்கமோ அனைத்து கட்சிகளையும் அமைதியை மீட்டுத் தருமாறு கெஞ்சுகிறது.

“நேற்று வரை நாங்கள்தான் அமைதிக்கு எதிரி என்று கூறி ஜெயிலிலே வீட்டிலோ முடக்கிவிட்டு இன்று அமைதியை மீட்டுத்தருமாறு கோருகிறார்கள்” என்கிறார் ஹூரியத் மாநாட்டுக் கட்சியின் தலைவர் மிர்வைஸ் உமர் பரூக். தீப்பிடித்து எரியும் போது கிணறை வெட்டி என்ன பயன்? காஷ்மீர் பிரச்சினையை அரசியல் பிரச்சினையாக அங்கீகரிக்காமல் எங்கே அமைதி வரும்? என்கிறார் அவர்.

காஷ்மீர் போராட்டம் பாக்கின் சதி என்று காஷ்மீருக்கு வெளியே வேண்டுமானால் ஏமாற்றலாம். இந்திய இராணுவத்தின் அடக்குமுறையும், கொல்லப்படும் ஒவ்வொரு காஷ்மீரியும் அங்கே மக்களை அஞ்சாமல் போராட பணித்திருக்கிறார்கள்.

வினவு பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட குறுஞ்செய்திகள்.