privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்அறிவியல்-தொழில்நுட்பம்ஆட்டோமேசன் பெயரால் பலியிடப்படும் ஐ.டி ஊழியர்கள் !

ஆட்டோமேசன் பெயரால் பலியிடப்படும் ஐ.டி ஊழியர்கள் !

-

ட்டோமேசன் எனப்படும் தானியங்கி தொழில்நுட்பம், ரோபோட்டிக்ஸ் எனும் எந்திர மனிதன், ஆர்ட்டிபிஷல் இன்டலிஜென்ஸ் எனப்படும் செயற்கை அறிவு தொழில்நுட்ப வளர்ச்சியால் யாருக்கு இலாபம்? இவற்றை பயன்படுத்தி இந்திய ஐ.டி துறையில் அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 6.4 லட்சம் வேலைகள் பறிக்கப்படும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவை சேர்ந்த எச்.எஃப்.எஸ் என்ற நிறுவனத்தின் ஆய்வின்படி 2021-ல் உலக அளவிலான ஐ.டி வேலைவாய்ப்புகள் சுமார் 9% அல்லது 14 இலட்சம் வேலை வாய்ப்புகள் பறிபோகும் என்று தெரிகிறது.

BPOகடந்த ஆண்டு நாஸ்காம் வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, 2025-ல் 26 கோடி வேலைகள் உலக அளவில் நீக்கப்பட்டு அவை இயந்திரங்களை மையப்படுத்திய புதிய தொழில்நுட்பத்தை கொண்டு நிரப்பப்படும். செய்த வேலைகளையே மறுபடியும் செய்யும் படியான வேலைகள் முதற்கட்டமாக ஆட்டோமேசனுக்கு மாற்றப்படும். ஆய்வு பணித் திறன் குறைவாக தேவைப்படும் வேலைகள் 30% குறையும் போது மிதமான மற்றும் அதிக திறன் தேவைப்படும் வேலைகள் அதிகரிக்கும் என தெரிவிக்கிறது. பின்னர் படிப்படியாக இவ்வேலைகளும் குறைக்கப்படும்.

இதில் ஐ.டி துறையில் ஒரு பகுதியாக செயல்படும் பி.பி.ஓ துறை மிக அதிகமாக பாதிக்கப்படும். “ரோபோட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேசனின் பாதிப்புகளை பி.பி.ஓ துறை இரண்டு ஆண்டுகளில் அனுபவிக்க போகிறது. இது அத்துறை மட்டுமில்லாமல் நாடும் எதிர்கொண்டாக வேண்டிய சவாலாகும்.” என்கிறார் அன்ட்ஒர்க்ஸ் பி.பி.ஓ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அசீஸ் மெஹ்ரா.

ஐ.டி துறையில் பணியாட்களின் எண்ணிக்கையை குறைக்கும் வேலைகள் ஏற்கனவே துவங்கி விட்டன. டெக் மகெந்திரா நிறுவனம் கடந்த ஆண்டு முதல் தானியங்கி தொழில்நுட்பத் துறையில் கவனம் செலுத்தபோவதாக கூறிய நிலையில் அதன் ஊழியர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு மொத்தத்திலிருந்து 2000 எண்ணிக்கை  குறைந்திருக்கிறது. அக்செனசர் நிறுவனமும் புதிதாக ஊழியர்கள வேலைக்கு எடுப்பதை குறைக்கபோவதாக அறிவித்துள்ளது. அதன் தலைமை செயல் அதிகாரி நன்டெர்மி கூறுகையில் “தானியங்கி தொழில்நுட்ம் மற்றும் எங்கள் வேலை திறன் காரணமாக இனி எங்கள் வருமானம் அதிவேகமாக வளரும் அதே வேளையில் ஊழியர்களின் எண்ணிக்கை மிகக்குறைவான எண்ணிக்கையில் வளரும்” என தெரிவித்துள்ளார்.

ஊழியர்களை வைத்து செய்யும் வேலையின் குறிப்பிடத்தக்க பங்கை மென்பொருளாக மாற்றி எழுதிதருவதை ஊழியர்களின் வருடாந்திர இலக்கில் வைத்து ஏற்கனவே செயல்படுத்திவருகின்றன ஐ.டி நிறுவனங்கள். இதனால் கிரயமாக பத்து பேர் செய்யும் வேலையினை ஒருவர் செய்தால் போதும் என்ற நிலை தோற்றுவிக்கப்படுகிறது.

இன்போசிஸ் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக சிக்கா என்பவர் நியமிக்கப்பட்டதும் தானியங்கி தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தபோவதாக கூறி அது தொடர்பான நிறுவனங்களை வாங்கி இணைத்துக்கொண்டது இன்போசிஸ் நிறுவனம். இது போன்று பிற ஐ.டி நிறுவனங்களும் இத்துறையில் அதிக கவனம் செலுத்திவருகிறார்கள்.

ஏற்கனவே உற்பத்தித் துறையில் தானியங்கி எந்திரங்களின் வருகையால் வேலைவாய்ப்புகள் பறிபோயுள்ளது அனைவரும் அறிந்ததே. இனி கல்வி, ஊடகம், மருத்துவம், சட்டம், வங்கி உள்ளிட்ட துறைகள் தானியங்கி திறனை பயன்படுத்தி வேலைவாய்ப்புகளை ஒழிப்பது நடக்கும்.

புதிய பொருளாதார கொள்கைகளின் விளைவாக “வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி”(Jobless growth) என்பது தான் நாடு தழுவிய நிகழ்ச்சிப்போக்காக இருக்கிறது. பல லட்சம் இளைஞர்கள் படித்துமுடித்து வேலையில்லாமல் திண்டாடுகின்றனர். அவர்களுடன் தானியங்கி தொழில்நுட்பத்தின் பேரில் பலியாகிறவர்களும் இணையப் போகிறார்கள்.

பல்வேறு ஐ.டி ஊழியர்களின் உழைப்பால்தான் எண்ணிறந்த மென்பொருட்களும், தானியங்கி தொழில்நுட்பங்களும் உருவாக்கப்படுகின்றன. பிறகு அவற்றை பயன்படுத்தி தனது இலாபத்தை அதிகப்படுத்த விரும்பும் நிறுவனங்கள் ஈவிரமிக்கமின்றி அவ்வூழியர்களை தூக்கி எறிகின்றன. ஐ.டி என்றால் சொர்க்கம், அமெரிக்கா என்று கனவில் காத்திருக்கும் புதியவர்களோ என்ன செய்வதென்று திகைத்துப் போகிறார்கள்.

முன்னேறிய உற்பத்திமுறை உண்மையில் தொழிலாளிகளின் பணிச் சுமையை குறைப்பதாக இருக்கவேண்டுமா? இல்லை முதலாளிகளின் லாபத்தை அதிகமாக்குவதாக இருக்க வேண்டுமா? என்பது தான் கேள்வி?.

சோசலிச நாடுகளில் மட்டும்தான் தானியங்கி தொழில்நுட்பம் தொழிலாளிகளின் பணிச்சுமையை குறைத்து அவர்களின் ஆற்றலை அறிவியல், கண்டுபிடிப்புகள், கலை உள்ளிட்ட மற்ற துறைகளில் செலுத்துவதாக அமையும். மாறாக முதலாளித்துவத்தில் முதலாளியின் லாபத்தை அதிகரிப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டிருக்கும். அதன் தவிர்க்கமுடியாத விளைவு வேலை பறிப்பு. இப்படி வேலையிழந்து தெருவில் நிற்கும் பட்டாளம் அதிகரிக்கும் போது முதலாளிகள் ஆசைப்படும் பிரம்மாண்டமான விற்பனை அகலபாதாளத்தில் சரியும். உற்பத்தி தேங்கும். சங்கிலித் தொடராய் சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகள் நெருக்கடிகள் ஏற்படும்.

தானியங்கி தொழில்நுட்பத்தை தடுக்கமுடியாது. ஆனால் முதலாளித்துவத்தை வீழ்த்த முடியும். என்ன செய்யலாம்?

– ரவி

மேலும் படிக்க: