privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திவழக்கறிஞருக்கு ஆதரவாக பு.ஜ.தொ.மு-வின் உயர்நீதிமன்ற முற்றுகை !

வழக்கறிஞருக்கு ஆதரவாக பு.ஜ.தொ.மு-வின் உயர்நீதிமன்ற முற்றுகை !

-

“நீதிமன்ற பாசிசத்திற்கு எதிரான தமிழக – புதுவை வழக்கறிஞர்களின் போராட்டத்தை ஆதரிப்போம்!” என்ற முழக்கத்தின் அடிப்படையில் 18-07-2016 காலை 11 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அருகில் உள்ள அரண்மனைக்கார தெருவில் குழுமியிருந்த வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி காஞ்சிபுரம், திருவள்ளூர் (கிழக்கு – மேற்கு) மாவட்டத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான தோழர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

lawyers-strike-highcourt-demo-8காஞ்சிபுரம் மாவட்ட செயலர் தோழர் சிவா தலைமையில் வழக்கறிஞர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முழக்கமிட்டவாறு சென்னை உயர்நீதிமன்றத்தை நோக்கி பேரணியாக வந்தனர். ஏற்கெனவே உயர்நீதிமன்ற வளாகத்தை சுற்றி நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டிருந்தனர். உயர்நீதிமன்றத்தின் எதிரில் பேரணியாக திரண்டு வந்த நூற்றுக்கணக்கான தோழர்களை தடுத்து நிறுத்தினர் காவல்துறையினர். தடுத்து நிறுத்திய அந்த இடத்தையே போராட்ட களமாக மாற்றிய தோழர்கள் விண்ணதிரும் முழக்கங்களை இட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர். அப்பகுதியில் உள்ள வணிகர்கள் மற்றும் வழக்கறிஞர்கள், பொது மக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டத்தை கவணித்தனர்.

இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அப்பகுதியில் திரண்ட சென்னை உயர்நீதிமன்றத்தை சேர்ந்த வழக்கறிஞர்களும், போராட்டத்தை தொடர்ந்து வழிநடத்தி கொண்டு செல்லக் கூடிய வழக்கறிஞர் சங்கத்தின் முன்னணியாளர்களும் பு.ஜ.தொ.மு நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், வாழ்த்தியும் பேசினர். குறிப்பாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் துணைத் தலைவர் தோழர் கிணி இம்மானுவேல் வழக்கறிஞர் போராட்டத்திற்கு ஆதரவளித்தமைக்கு நன்றி தெரிவித்தும், மக்கள் மன்றத்தில் வழக்கறிஞர் போரட்டத்திற்கான ஆதரவினை புரட்சிகர அமைப்புகளால் தான் திரட்ட முடியும் எனவும், 25-ம் தேதி வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் நடத்தவுள்ள சென்னை உயர்நீதிமன்ற முற்றுகை போராட்டத்திற்கும் இதேபோல் ஆதரவளிக்க வேண்டும் எனவும் கூறினார். பின்னர் மூத்த வழக்கறிஞர் பாவேந்தன் பு.ஜ.தொ.மு நடத்திய ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி பேசினார்.

lawyers-strike-highcourt-demo-6ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய காஞ்சிபுரம் மாவட்ட செயலர் தோழர் சிவா, “சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளால் கொண்டு வரப்பட்டுள்ள வழக்கறிஞர்களுக்கு எதிரான கருப்பு சட்டத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் கடந்த ஒன்றரை மாதங்களாக பலப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்த தலைமை நீதிபதி கவுல் அவர்கள், வழக்கறிஞர்களின் போராட்டத்தால் நீதிமன்றத்தின் பணிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றும், 90% நீதிமன்ற பணிகள் நடந்து வருவதாக கூறியுள்ளார். இது வழக்கறிஞர் போராட்டத்தை கொச்சைப்படுத்துவது மட்டுமல்லாமல் நீதிமன்ற பாசிசமாகும். மேலும் வழக்கறிஞர்கள் மீதான இந்த கருப்பு சட்டம் கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன? தொடர்ந்து மக்களுக்கு ஆதரவான போராட்டங்களை வழக்கறிஞர்கள் முன்னெடுத்துள்ளனர். குறிப்பாக ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு எதிராகவும், காவிரி – பெரியாறு மீட்பு போராட்டம்,  இந்தி – சமஸ்கிருத திணிப்பிற்கு எதிராகவும், தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க கோரியும், ஊழல் நீதிபதிகளுக்கு எதிராகவும் போராட்டத்தை நடத்தியவர்கள் தான் நமது தமிழக வழக்கறிஞர்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் போராட்ட பாரம்பரியத்தை தன்னகத்தே கொண்டவர்களாகவும் தமிழக – புதுவை வழக்கறிஞர்கள் உள்ளனர். இது தான் நீதிபதிகளையும், ஆளும்வர்க்கத்தை அச்சுறுத்துகின்றது. இதனால் தான் வழக்கறிஞர் போராட்டத்தை தனது பாசிச நடவடிக்கையின் மூலம் ஒடுக்க நினைக்கிறது நீதிமன்றம். அதனை எதிர்த்து நடைபெறும் வழக்கறிஞர்களின் தொடர் போராட்டத்திற்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆதரவளிக்கும்” என்பதை வலியுறுத்தி பேசினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தோழர்களை கைது செய்வதாக காவல்துறையினர் அறிவித்தனர். முழக்கமிட்டவாறே தோழர்கள் கைதாகினர்.

இவண்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் மாவட்டம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க