privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்இந்திய இராணுவத்தின் காஷ்மீர் கொடூரம் - அதிர்ச்சிப் படங்கள் !

இந்திய இராணுவத்தின் காஷ்மீர் கொடூரம் – அதிர்ச்சிப் படங்கள் !

-

ந்திய அரசின் உத்தரவோடு காஷ்மீரில் சமீபகாலமாக இராணுவம் நடத்திய தாக்குதலில் 45-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன் 160க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இத்தாக்குதலில் இந்திய இராணுவம் பெல்லட் கன் (pellet gun) எனப்படும் காற்று துப்பாக்கியின் (Air Gun) மூலம் சிறு குண்டுகளை பயன்படுத்தி காஷ்மீர் மக்களை ஒடுக்கியுள்ளது. இதனால் பலர் கண்பார்வையை இழந்துள்ளனர். ஸ்ரீநகரில் உள்ள ஸ்ரீ மகாராஜா ஹரி சிங் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் “இந்த 4 நாட்களில் மட்டும் நாங்கள் 100 கண் அறுவை சிகிச்சைகளை செய்துள்ளோம்” என்று கூறுகின்றனர். மேலும் சிகிச்சை மேற்கொண்ட அனைவரும் தங்களின் கண் பார்வையை இழக்க நேரிடும் என்று ஒரு பெயர் வெளியிட விரும்பாத மூத்த மருத்துவர் அல் ஜசீராவிடம் கூறியுள்ளார்.

காஷ்மீரில் முதன்முதலில் பிரிட்டிஷ் காலத்தில் வாத்து வேட்டையில் (Duck-Hunting) அறிமுகப்படுத்தப்பட்ட இத்தகைய பெல்லட் துப்பாக்கிகள் ஒரு முறை சுடும் போது அதிவேகத்தில் சுமார் 600 சிறு குண்டுகளை வெளியிடும். இதனால் எதிரில் உள்ளவர்கள் மீது சரமாரியாக தாக்கும் இச்சிறு குண்டுகள் ஆர்ப்பாட்டக்காரர்களை செயலிழக்க வைத்துவிடும். இந்த தாக்குதல் முறை நீண்டகாலமாக இந்திய இராணுவத்தால் காஷ்மீரில் போராட்டத்தை ஒடுக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.

எவ்வித உயிரிழப்பும் ஏற்படாமல் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு இது பயன்படுவதாக காஷ்மீர் போலீசார் கூறுகின்றனர். அதை மறுக்கும் போராட்டக்காரர்கள் இக்குண்டுகள் பொதுமக்களின் கண்களை இழக்க செய்கின்றன, அதனால் இதை தடை செய்ய வேண்டும் என்று கோருகின்றனர். தற்போது இக்குண்டினால் 4 வயது சிறுமி உள்பட பல குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையை இரகசிய பிரிவு போலிசார் சுற்றி வருவதால் குண்டடிப்பட்டு சேர்க்கப்படும் இளைஞர்களின் விவரங்களை பெற்று பின்னர் தாக்கக்கூடும் என்ற அச்சத்தால் பாதிக்கப்பட்டோரின் பெயர் மற்றும் உண்மை தகவல்களை குறிப்பிடாமல் எண்களை கொண்டு நோயாளிகளை அடையாளம் காண்கின்றனர்.

புட்கம் மாவட்டத்தை சேர்ந்த 18 வயது மாணவன்,” நான் என்னுடைய அம்மாவிற்கு மருந்து வாங்க வெளியில் சென்று கொண்டிருந்தேன். திடீரென்று இராணுவ வீரர்கள் என்னை சூழ்ந்து கொண்டு பெல்லட் குண்டுகளால் சுட்டனர். இத்தனைக்கும் அப்போது கலவரம் எதுவும் நடைபெறவில்லை”, என்கிறார்.

கண்டேர்பல் மாவட்டத்தை சேர்ந்த 9 வயது தமன்னா அஷ்ரஃப், பெல்லட் குண்டுகளால் பாதிக்கப்பட்டு ஸ்ரீநகர் மருத்துவமனையில் தற்போது சிகிச்சைப் பெற்று வருகிறார். அவள் செய்த தவறு தன்னுடைய வீட்டில் உள்ள சன்னலின் வழியாக பார்த்துக் கொண்டிருந்தது தான், அப்போது இரைச்சலுடன் வெளிப்பட்ட பெல்லட் குண்டுகள் அவளின் இடது கண்களை தாக்கியது என்று அவளின் தாய் ஷமிமா கூறினார். மேலும் அவர் கூறுகையில் “அவளுடைய இடது கண்ணில் சிறு இரும்பு குண்டை பார்த்ததும் அவளை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயலுகையில் போலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு நாங்கள் தாக்கப்பட்டோம். அப்போது இவர்கள் என்னுடைய குழந்தையின் வாழ்க்கையோடு ஏன் விளையாடுகிறார்கள் என்று நான் அழ தொடங்கினேன். அதிர்ஷ்டவசமாக அன்று எங்களால் மருத்துவமனைக்கு வர முடிந்தது ”.

நோயாளி எண் 88 கூறுகையில், “நான் என் பெற்றோருக்கு ஒரே மகன், எனக்கு 3 சகோதிரிகள். அவர்களை இனி யார் காப்பாற்றுவார்கள்”.
நோயாளி எண் 88 கூறுகையில், “நான் என் பெற்றோருக்கு ஒரே மகன், எனக்கு 3 சகோதரிகள். அவர்களை இனி யார் காப்பாற்றுவார்கள்?” என்கிறார்.
நோ.எண் 65-ல் உள்ளவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இரண்டு முறை இராணுவத்தால் தாக்கப்பட்டவர். பெல்லட் குண்டுகளால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் ஒன்று அல்லது இரண்டு கண்களின் பார்வையை இழந்தவர்கள்
நோ.எண் 65-ல் உள்ளவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இரண்டு முறை இராணுவத்தால் தாக்கப்பட்டவர். பெல்லட் குண்டுகளால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் ஒன்று அல்லது இரண்டு கண்களில் பார்வையை இழக்கின்றனர்.
தளபதி புர்கான் கொல்லப்பட்ட போது, என் சகோதரனை அழைத்து வர சென்ற என்னை பெல்லட் குண்டுகளால் தாக்கினர். தற்போது என்னுடைய வலது கண்ணை இழக்கும் தருவாயில் இருக்கிறேன்.
போராளி புர்ஹான் வானி கொல்லப்பட்ட போது, என் சகோதரனை அழைத்து வர சென்ற என்னை இராணுவத்தினர் பெல்லட் குண்டுகளால் தாக்கினர். தற்போது என்னுடைய வலது கண்ணை இழந்து கொண்டிருக்கிறேன்.

 

நோ.எண்.19 கூறுகையில் தேர்வுகளை பற்றி பேசிக் கொண்டிருக்கையில் திடிரென்று பெல்லட் குண்டுகள் என்னுடைய முகத்தில் தாக்கியது, இதனால் என்னுடைய ஒரு கண் பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய இராணுவத்தினர் என்னுடைய கனவு, வேலை, குடும்பம் மற்றும் வாழ்க்கையை அழித்துவிட்டனர்
நோ.எண்.19 கூறுகையில் தேர்வுகளை பற்றி பேசிக் கொண்டிருக்கையில் திடிரென்று பெல்லட் குண்டுகள் என்னுடைய முகத்தில் தாக்கியது, இதனால் என்னுடைய ஒரு கண் பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய இராணுவத்தினர் என்னுடைய கனவு, வேலை, குடும்பம் மற்றும் வாழ்க்கை அனைத்தையும் பாழாக்கிவிட்டனர்

 

மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக சிகிச்சை பெறுவதால் ஒரு படுக்கை பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக சிகிச்சை பெறுவதால் ஒரு படுக்கை இருவரால் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது.

 

மருத்துவ சோதனைகளை முடித்துவிட்ட பிறகு ஆழ்ந்து தூங்கும் பெல்லட் குண்டுகளால் பாதிக்கப்பட்டவர்.  தாக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு தங்களின் கண்களை தக்க வைத்து கொள்ள முடியுமா என்று. இப்போது வரை அவர்களுக்கு மருத்துவர்கள் எந்த பதிலையும் அளிக்கவில்லை.
மருத்துவ சோதனைகளை முடித்துவிட்ட பிறகு ஆழ்ந்து தூங்கும் பெல்லட் குண்டுகளால் பாதிக்கப்பட்டவர். தாக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு தங்களின் கண்களை தக்க வைத்து கொள்ள முடியுமா என்று இன்னும் தெரியவில்லை. இப்போது வரை அவர்களுக்கு மருத்துவர்கள் எந்த தகவலையும் அளிக்கவில்லை.

 

தாக்கப்பட்டவர்கள் போலீசார்களின் அச்சுறுத்தலுக்கு பயந்து கொண்டு பத்திரிக்கைகளிடம் பேச விரும்பவில்லை
தாக்கப்பட்டவர்கள் போலீசார்களின் அச்சுறுத்தலுக்கு பயந்து கொண்டு பத்திரிக்கைகளிடம் பேச மறுக்கின்றனர்.
ஒவ்வொரு நாளும் மருத்துவமனைக்கு அதிக அளவிலான பாதிக்கப்பட்டவர்கள் சேர்க்கப்படுவதால் தாழ்வாரங்களிலேயே படுக்கைகள் பொடப்பட்டுள்ளது. காஷ்மீரில் இதுவே முதல் முறை பெல்லட் குண்டுகளால் தாக்கப்பட்டவர்கள் அதிக எண்ணிக்கையில் மருத்துவமையில் சிகிச்சை பெற்று வருவது.
ஒவ்வொரு நாளும் மருத்துவமனைக்கு அதிக அளவிலான பாதிக்கப்பட்டவர்கள் சேர்க்கப்படுவதால் தாழ்வாரங்களிலேயே படுக்கைகள் போடப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது. காஷ்மீரில் இவ்வளவு சிறிய காலத்தில் பெல்லட் குண்டுகளால் தாக்கப்பட்டவர்கள் அதிக எண்ணிக்கையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற சேர்க்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.

 

9 வயத் நிரம்பிய தமன்னா தன்னுடைய வீட்டில் ஜன்னலில் வழியாக பார்த்து கொண்டுருக்கையில் பெல்லட் குண்டுகளால் தாக்கப்பட்டவர்.
9 வயது நிரம்பிய தமன்னா – தன்னுடைய வீட்டில் ஜன்னலில் வழியாக பார்த்து கொண்டுருக்கும் போது பெல்லட் குண்டுகளால் தாக்கப்பட்டவர்.
ஆம்புலன்ஸிலிருந்து இறக்கப்படும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அங்குள்ளவர்கள் உதவுவதை ஒரு வயதான பெண்மனி பார்க்கிறார். ஒவ்வொரு பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சேர்க்கும் போதும் விடுதலைக்கான கோஷங்கள் முழக்கங்கப்படுகிறது.
ஆம்புலன்ஸிலிருந்து இறக்கப்படும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அங்குள்ளவர்கள் உதவுவதை ஒரு வயதான பெண்மனி பார்க்கிறார். ஓவ்வொரு பாதிக்கப்பட்டவரும் மருத்துவமனையில் சேர்க்கப்படும்போது விடுதலைக்கான முழக்கம் எழுப்பப்படுவது வழமையாகியுள்ளது.
பெல்லட் குண்டுகளால் தாக்கப்பட்ட இவரை இவரது நண்பர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். வசதி படைத்தோர் பாதிக்கப்பட்ட தமது குழந்தைகளை இந்தியாவிற்கு அழைத்து சென்று சிகிச்சையளிக்கின்றனர்; அவ்வாறு சிகிச்சையளிக்க இந்தியாவிற்கு செல்பவர்களின் எண்ணிக்கையை பற்றிய தகவல்கள் இங்கு இல்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
பெல்லட் குண்டுகளால் தாக்கப்பட்ட இவரை இவரது நண்பர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். வசதி படைத்தோர் பாதிக்கப்பட்ட தமது குழந்தைகளை இந்தியாவிற்கு அழைத்து சென்று சிகிச்சையளிக்கின்றனர்; அவ்வாறு சிகிச்சையளிக்க இந்தியாவிற்கு செல்பவர்களின் எண்ணிக்கையை பற்றிய தகவல்கள் இங்கு இல்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

செய்தி, படங்கள்,நன்றி: அல் ஜசீரா -Al Jazeera

தமிழாக்கம்: கலா