privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாவெங்கும் காஷ்மீர் மாணவரைத் தாக்கும் ஆர்.எஸ்.எஸ் கூட்டம்

இந்தியாவெங்கும் காஷ்மீர் மாணவரைத் தாக்கும் ஆர்.எஸ்.எஸ் கூட்டம்

-

காஷ்மீரில் 45-க்கும் மேற்பட்டோரை கொன்று, 160-க்கும் மேற்பட்டோரை காயமடையச் செய்து இந்திய ராணுவம் ஆக்கிரமிப்பு அட்டூழியம் செய்துவரும் நிலையில் பிற மாநிலங்களில் காஷ்மீர் மக்கள் மீது இந்துமதவெறி அமைப்பினர் தாக்குதல் தொடுத்து வருகின்றார்கள்.

மத்திய பிரேதேச மாநில தலைநகரான போபாலில் இருக்கும் பரகத்துல்லா பல்கலைகழகத்தின் ஆராய்ச்சி மாணவரான உமர் ரசீத் கடந்த திங்களன்று சக மாணவர்களால் தாக்கப்பட்டுள்ளார். இவர் காஷ்மீரின் பாம்ப்பூர் பகுதியை சேர்ந்தவர் என்பதே தாக்கியவர்களுக்குபோதுமான காரணமாக இருந்திருக்கிறது. காஷ்மீரின் நிலைக்கு நீங்கள்(காஷ்மீர் முஸ்லீம்கள்) தான் காரணம் என சொல்லி சொல்லி இம்மாணவர் தாக்கப்பட்டுள்ளார்.“அவர்கள் என்னை தாக்கும்போது என்னை காத்துக்கொள்ள மன்னிப்புகோரினேன், ஆனால் பல்கலைகழகத்தில் காவலாளிகள் கண் முன்னாலேயே அம்மாணவர்கள் என்னை தாக்கினார்கள்” என்கிறார் உமர் ரசீத்.

kashmiri-students-protest
போபாலில் பரகத்துல்லா பலகலைகழகத்தில் காஷ்மீர் மாணவர்கள் நடத்திய போராட்டம்

இத்தாக்குதல் சம்பவம் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காததோடு மாணவர் ரசீத் பொய் சொல்வதாக கூறுகிறார் பல்கலைகழக துணை வேந்தர் எம்.டி.திவாரி. இதை மறுத்துள்ள உமர் ரஷீத் பல்கலைகழக நிர்வாகம் தன்னை தாக்கியவர்களை பாதுகாக்க முயலுவதாக குற்றம் சாட்டியுள்ளார். தான் தாக்கப்பட்டதை நேரில் கண்ட சாட்சிகள் இருந்த போதிலும், தனது உடலில் காயங்கள் இருந்தபோதிலும் அதை பல்கலைகழகம் கண்டுகொள்ளவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

இம்மாணவர் மட்டுமில்லாமல் வளாகத்தில் பிற காஷ்மீர் மாணவர்களும் எந்நேரத்திலும் தாக்கப்படலாம் என அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். காஷ்மீரின் குலாம் பகுதியிலிருந்து இப்பல்கலைகழகத்தில் பயின்று வரும் மாணவர் ஆசிப் அலி, “ பல்கலைக்கழக நிர்வாகம் காஷ்மீர் மாணவர்களுக்கு மட்டும் தனிச்சிறப்பான விதிமுறைகளை செயல்படுத்தி வருகின்றது. பிற மாணவர்களைப் போலல்லாமல் நாங்கள் எந்நேரமும் அடையாள அட்டையை உடன் வைத்திருக்க வேண்டும். ஏனெனில் நாங்கள் பல்கலைகழக வளாகத்திற்குள்ளும் சரி வெளியிலும் சரி எந்நேரம் வேண்டுமானாலும் அதை காட்டவேண்டியிருக்கும். அனால் இப்பிரிவினைகளைவிட எங்கள் மீதான தாக்குதலே கவலைக்குரியதாக இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

இதே போன்று ஹைதராபாத் பல்கலைகழகத்திலும் காஷ்மீர் மாணவர் என சந்தேகித்து காஷ்மீர் மக்களுக்கு குரல் கொடுத்த மாணவர் ஒருவரை ஆர்.எஸ்.எஸ்-ன் ஏ.பி.வி.பி குண்டர்கள் தாக்கியுள்ளார்கள்.

பஞ்சாப் மாநிலம் சண்டிகரை சேர்ந்த அமோல் சிங்(25) ஹைதராபாத பல்கலைகழகத்தில் எம்.ஃபில் பயின்றுவருகிறார். கடந்த சனிக்கிழமை காஷ்மீர் மக்கள் மீதான இந்திய அரசின் அடக்குமுறைகளை கண்டிக்கும் போராட்டத்தில கலந்து கொண்டு திரும்பும் வழியில் 20 முதல் 25 கொண்ட ஏ.பி.வி.பி கும்பல் இவரை தாக்கியுள்ளனர். விடுதி காவலாளிகள் இத்தாக்குதலை பார்த்ததாகவும் ஆனால் ஏ.பி.வி.பி-யினரின் தாக்குதலில் தலையிடவில்லை எனவும் விடுதி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான மாணவர் அமோல் சிங் “என்னை காஷ்மீரைச் சேர்ந்த என் சீனியர் பிலால் என நினைத்து ஏ.பி.வி.பி-யினர் தாக்கியுள்ளனர். அவரும் என்னை போன்றே தோற்றமுடையவர். அவர் வளாக மாணவர், அரசியலில் ஆர்வமுடையவர். காஷ்மீர் முஸ்லீம்களுக்காக குரல் கொடுத்துவந்தார். சில மாதங்களுக்கு முன்னர் தன் ஆய்வு பட்டபடிப்பை முடித்துவிட்டு காஷ்மீர் திரும்பிவிட்டார். அவர் மீது ஆத்திரம் கொண்டிருந்த ஏ.பி.வி.பி-யினர் இருட்டில் அடையாளம் தெரியாமல் என்னை தாக்கியிருக்கின்றனர். பிற மாணவர்கள் தலையிட்ட பிறகே என் மீதான தாக்குதலை நிறுத்தினர்” என தெரிவித்துள்ளார்.

ஏ.பி.வி.பி-யினர் தடாலடியாக விடுதியினுள் நுழைந்து ”பிலால் எங்கே? அந்த தேசவிரோதிக்கு பாடம் புகட்டவேண்டும்” என தங்களிடம் கேட்டதாக அவ்விடுதி மாணவரான முன்னா என்பவர் இச்சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

தலித மாணவர் ரோகித் வெமுலா தற்கொலைக்கு காரணமான அதே ஏ.பி.வி.பி-யின் தலைவன் சுசில் குமார் தான் இதையும் முன்னின்று செய்துள்ளார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர் அமோல் சிங் தன்னை தாக்கியதாக சுசில் குமார் தொடுத்த பதில் வழக்கில் தாக்குதலுக்குள்ளான அமோல் சிங் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தலித் மாணவர் ரோகித் வெமுலாவை தற்கொலைக்கு தள்ளிய பிறகும் ஏ.பி.வி.பி-யினர் மீது எவ்வித நடவடிகையும் எடுக்கபடாததாலும், பல்கலைகழக நிர்வாகத்தை கையில் வைத்திருப்பதாலும் ஏ.பி.வி.பி குண்டர்கள் கொட்டம் அடித்து வருகின்றனர்.

இதே போன்று பஞ்சாப் மாநிலத்திலும் காஷ்மீர் லாரி ஓட்டுநர்கள் மீது சிவசேனாவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். காஷ்மீர் வாகனங்களை மறித்து ஓட்டுநர்களை பாரத மாதாகி ஜெய் என கோஷமிட நிர்பந்தித்துள்ளனர். அதை மறுத்த ஒட்டுநர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது இந்து மத வெறி கும்பல். மேலும் ஓட்டுநர்களை பாகிஸ்தான் கொடியை எரிக்குமாறு நிர்பந்தித்துள்ளது.

வெள்ளையனுக்கு பயந்து மீண்டும் மீண்டும் மன்னிப்பு கடிதம் எழுதி வெளியில் வந்த ”வீர” சாவர்க்கர் வழிவந்தவர்களுக்கு காஷ்மீரிகளின் தீரம் நிச்சயம் திகிலூட்டுவதாகத்தான் இருக்கும்.லட்சகணக்கான ராணுவ துருப்புகளை நிறுத்தியும் எதற்கும் அஞ்சமல் போராடும் காஷ்மீர் மக்களின் தீரத்தை கண்டு இந்திய ஆளும்வர்க்கம் கலங்கித்தான் போயுள்ளது. தங்களின் கோபத்தை கையில் கிடைக்கும் எளிய காஷ்மீரிகள் மீது காட்டிவருகிறார்கள் இந்து மத வெறி கோழைகள்.

இந்து மத வெறியர்களை தனிமைப்படுத்தி காஷ்மீர் மக்கள் மீதான தக்குதல்களை கண்டிப்பதும் அவர்களின் சுயநிர்ணய உரிமை போராட்டத்தை ஆதரிப்பதும், நம் கடமையாகும்.

– ரவி

மேலும் படிக்க
Blame game erupts after Kashmiri student attacked in Bhopal
Kashmiri Student Beaten in Bhopal, Another Who ‘Looked Kashmiri’ Attacked in Hyderabad

  1. ஆர்.எஸ்.எஸ்யின் அழிவு காலம் நெருங்கிவிட்டது

    உண்மை தமிழ்ன் ,நாடுநிலை இந்து ,முஸ்லிம்,தலித், கிருத்தவர், கம்யூன்ஸ்ட் மற்றும் பெரியார் தொண்டன் அனைவரும் இந்த R.S.S நாஜியை ஒழிக்க வருவார்கள்.

    tamil sport Kamhmiri

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க