privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திகலாமின் ஆயுதக் கனவு : யாரைப் பாதுகாக்க ?

கலாமின் ஆயுதக் கனவு : யாரைப் பாதுகாக்க ?

-

லாம் அவர்கள் இறந்து ஒரு ஆண்டு ஆச்சு. கலாம் இளைஞர்களை ஊக்குவிச்சாரு, நாட்டுக்காக யோசிக்க வெச்சாரு அப்படின்னு எல்லாரும் சொல்லறாங்க, நம்பறாங்க, நல்லது தான். தனி மனிதனாக அவரை பற்றி எந்த விமர்சனமும் இல்லை, அது தேவையும் இல்லை. மனிதர்களோட கருத்து என்ன, அவங்களோட சித்தாந்தம் என்ன, அப்படிங்கறது தான் நமக்கு முக்கியம். அந்த சித்தாந்தத்தை பத்தி தான் நமது விமர்சனமே தவிர தனி மனிதரை பற்றி ஒருபொழுதும் இல்லை. இந்த எண்ணத்துல, ஆயுதம், ராணுவம் மற்றும் பாதுகாப்பு சம்மந்தமாக பொதுவாக நிலவும் கருத்துக்கள் பற்றிய ஒரு பதிவு தான் இது. கலாம் அவர்களை விமர்சிக்கும் எண்ணம் இந்த பதிவுக்கு இல்லை.

weaponsஆயுதங்களை பத்தியும் ராணுவத்தை பத்தியும் பொதுவா நம்ம எல்லாருக்கும் இருக்கும் கருத்தை கீழ இருக்கற கேள்வியா சொல்லிடலாம். ஆயுதங்களும் ராணுவம் இல்லம நம்ம நாட்ட யாரு காப்பாத்தறது? நம்ம அமைதிய விரும்பி யாரையும் ஆக்கிரமிப்பு பண்ணலைன்னாலும், நம்மை ஆக்கிரமிப்பு பண்ணாம பாதுகாக்கறதுக்கு ராணுவமும் ஆயுதங்களும் தேவை தான?

கலாம் அவர்களும் இந்தக் கேள்விக்கு பின்னாடி இருக்கற கருத்தை நம்புனதுனால தான் ஆயுதங்கள் நம்ம நாட்டுக்கு தேவை அப்டின்னு சொன்னாரு, அதுக்காக பாடுபட்டாரு. பாதுகாப்பு மற்றும் ஆயுதங்கள் பற்றிய இந்த எண்ணங்களை கலாம் இன்னும் வலுவாக்குனாரு, அதுனால தான் அவர் நினைவு நாள்ல இந்த பதிவு.

இந்தப் பதிவு மேல இருக்கற கேள்விக்கான பதில் இல்லை, பதில் கூறும் முயற்சி கூட இல்லை. நாம் கேக்க வேண்டிய கேள்வி இது தானா அப்டின்னு ஒரு புது கேள்வியை எழுப்பும் முயற்சி. பில்ட் அப் போதும்னு நினைக்கறேன்!

இந்த பாதுகாப்பு, அதுவும் பக்கத்து நாடு கிட்ட இருந்து பாதுகாப்பு அப்படிங்கறது நெறையா விஷயங்களை மாதிரி எல்லாரும் யோசிக்காம சொல்றது, எல்லோரும் யோசிக்காம நம்பறது. அதுனால இது என்ன, இந்த காலகட்டங்கள்ல இதுக்கு என்ன அர்த்தம் அப்டிங்கறதை எல்லாம் நம்ம யோசிக்கணும். யாரு கிட்ட இருந்து யாரை காப்பாத்தறாங்க அப்படிங்கறது முக்கியம்.

மொதல்ல நாட்டுல எத்தனை பேரு கிட்ட சொத்துனு ஒன்னு இருக்குது அதை காப்பாத்த ராணுவம் வேணும்னு சொல்றதுக்கு? முக்கால்வாசிப் பேரு வேலை இல்லாம தான் இருக்கான், சொல்லப்போனா சாப்பாட்டுக்கே கஷ்ட்டப்பட்டுட்டு தான் இருக்கறாங்க. இவங்கள யாரு கிட்ட இருந்து காப்பாத்தறது. அப்பிடியே பக்கத்து நாட்டுக்காரன் வந்தாலும் இவங்களை இதுக்கு மேல என்ன மோசமாக்கிட முடியும்? நெறயா பேரு வேலை இல்லாம இருக்கறாங்க அப்டினு சொல்றது பொய் மாதிரி தெரியும். அதுனால வேணும்னா கொஞ்சம் புள்ளிவிவரம் எடுத்துக்கலாம். இந்தியாவுல பாதிக்கு மேல குழந்தைங்க வேணும்ங்கற அளவுக்கு ஊட்டச்சத்து இல்லாம இருக்குதுனு அரசாங்கமே சொல்லுது, அப்போ அவ்வளவு குடும்பங்கள் அவங்க குழந்தைங்களுக்கு சோறு போட முடியாம தான் இருக்கறாங்க, அவங்கள யாரு கிட்ட இருந்து காப்பாத்தறது? பசி கிட்ட இருந்தா இல்ல பக்கத்து நாட்டுக்காரன் கிட்ட இருந்தா?

சரி ஏழை பட்டினி அப்டினு பேசுனா நம்ம நடுத்தர சிந்தனைக்கு புடிக்காது, அதுனால அத கொஞ்ச நேரம் விட்ருவோம். ஏற்கனவே இருக்கற ஆயுதங்களை இவங்க என்ன பண்றாங்க? காஷ்மீர்ல பிரச்சனை, வடகிழக்கு மாகாணங்கள்ல பிரச்சனை, நூத்துக்கு மேட்பட்ட மாவட்டங்கள்ல மாவோயிஸ்ட் பிரச்சனை, இன்னும் நமக்கு தெரியாத பிரச்சனைகள். இந்த எல்லா எடத்துலையும் நம்ம நாட்டு மக்களை நம்ம நாட்டு ராணுவம் நம்ம நாட்டு மக்கள் பணத்தை வெச்சு வாங்குன, செஞ்ச, ஆயுதங்களை வெச்சு கொல்றாங்க. ஏன் கொல்றாங்க அப்படிங்கறது வேற கேள்வி. ஆனா நம்ம மக்களை கொல்றாங்க. இதுல யாரை யாரு கிட்ட இருந்து காப்பாத்தறாங்க?

weapons-2மாட்டுக்கறி சாப்டதுக்கு அடிச்சு கொலை, மாட்டுக்கறி வெச்சு இருந்தாங்க அப்படிங்கற சந்தேகத்துல அடி உதை. இந்த கொலையும் அடியும் உதையும் வாங்கறது நம்ம மக்கள் தான? அவங்கள ஏன் நம்ம நாடு காப்பாத்தக் கூடாது? ஆனா யாரு கிட்ட இருந்து காப்பாத்தறது? பக்கத்து நாட்டுக்காரன் கிட்ட இருந்து கண்டிப்பா இல்லை.

அதே மாதிரி ஒரு பையனும் பொண்ணும் புடிச்சுப்போய் கல்யாணம் பண்ணிக்கிட்டா, ஜாதி மதம்னு சொல்லி அவங்கள கொல்றாங்க. இவங்கள நம்ம அரசாங்கம் யாரு கிட்ட இருந்தும் காப்பாத்த முடியாதா?

இந்த மாதிரி இன்னும் நெறையா சொல்லலாம். ஆனா உங்களுக்கு விசயம் புரிஞ்சு இருக்கும்.

இது நம்ம நாட்டு நிலைமை மட்டும் கெடயாது. மொழியை மாத்தி உருதுல எழுதுனா இது பாகிஸ்தானுக்கும் பொருந்தும். பெங்காலில எழுதுனா பங்களாதேசுக்குப் பொருந்தும். அவ்வளவு ஏன், ஆங்கிலத்துல எழுதுனா உலகை ஆளும் அமெரிக்காவுக்கும் உலகை ஆண்ட இங்கிலாந்துக்கும் பொருந்தும். எல்லா ஊர்லையும் இதே தான் நிலைமை. என்ன கொஞ்சம் புள்ளி விவரங்களை மாத்தணும், அவ்வளவே. சாப்பாட்டுக்கு இல்லாம இருக்கறவனையும், மதத்தோட பேருல சாகரவனையும் இந்தியா தான் எதிரி இந்தியா கிட்ட இருந்து காப்பாத்தறம்னு சொல்லி பாகிஸ்தான்ல கதை உட்டுட்டு இருக்கறாங்க. மத்த நாடுகள்ல வேற நாட்டோட பேருங்க, அவ்வளவு தான். என்ன அமெரிக்கா பெருசுங்கறதுனால அவனுக்கு உலகமே எதிரியா தேவைப்படுது, மக்களை நம்பவும் வைக்கறாங்க. யோசிச்சு பாத்தா ஆப்கானிஸ்தான்ல சாப்பாட்டுக்கு கஷ்ட்டப்பட்டு ஒட்டகம் மேய்க்கரைவனால அமெரிக்காவுக்கு ஆபத்து அப்டினு அமெரிக்க மக்களை நம்ப வைக்கறவன் பெரிய கில்லாடியா இருக்கணும்.

நம்ம விசயத்துக்கு வருவோம்.

பக்கத்து நாட்டுக்கிட்ட இருந்து பாதுகாப்பு அப்படிங்கறது ஒரு மாயை. இதை வெச்சு தான் நம்மள எல்லாத்தையும் ஏமாத்தறாங்க. இவங்க பாதுகாப்பது ஆளும் வர்க்கத்தை தான். அம்பானிகளையும் அதானிகளையும் டாட்டாக்களையும், இன்னும் இவர்களை போன்றவர்களுக்கும் தான் பாதுகாப்பு தேவை. அவங்கள பாதுகாக்க தான் இந்த அரசு, அரசு அமைப்பு. முக்கியமான விசயம் என்னண்ணா, முக்கால்வாசி மக்களுக்கு நம்ம சமுதாயத்துல இருக்கற ஆளும் வர்கத்துக் கிட்ட இருந்து தான் பாதுகாப்பு தேவையே. அதை இந்த அரசு அமைப்பால குடுக்க முடியாது, இந்த அரசாங்கம்னு இல்லை, இந்த அமைப்புல வர்ற எந்த அரசாங்கத்தாலையும் குடுக்க முடியாது!

அதுனால நம்ம ஒண்ணா பாதுகாப்பு அமைதி அப்டினு பேசிட்டே ராணுவத்தையும் ஆயுதங்களையும் உலக அளவில் அதிகம் ஆகரதுக்கு துணை கொடுப்போம். இல்ல நம்ம மக்கள் மட்டும் இல்லாம உலகில் உள்ள எல்லா மக்களும் நல்லா வாழணும்னு நெனச்சா எல்லாருக்கும் உணவு, உடை, இருப்பிடம், கண்ணியமான வாழ்க்கை இதுக்கு என்ன வேணுமோ அதை செய்வோம்.

அமைதியை மலரச்செய்வோம், ஆயுதத்தால் அல்ல மானுடத்தால்!

நன்றி: அருண் கார்த்திக்