privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்புதிய ஜனநாயகம் – ஆகஸ்டு 2016 மின்னிதழ் : நாறுது உன் கோமாதா !

புதிய ஜனநாயகம் – ஆகஸ்டு 2016 மின்னிதழ் : நாறுது உன் கோமாதா !

-

puthiya-jananayagam-august-2016

புதிய ஜனநாயகம் ஆகஸ்டு 2016 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்

1. நீதி வேண்டுமா? வீதியில் இறங்கு! – தமிழக வழக்கறிஞர்கள் போராட்டம்

2. பிரெக்ஸிட்: முதலாளித்துவத்திலிருந்து வெளியேறுவது எப்போது?

3. குஜராத் : நாறுகிறது உன் கோமாதா!
குஜராத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் நடத்திவரும் கலகம், இந்து மதவெறி பாசிச அரசியலின் உயிர்நாடியைத் தாக்கியிருப்பதோடு, ஆர்.எஸ்.எஸ்-ன் கோட்டையாகக் கொண்டாடப்படும் குஜராத்தைக் கதிகலங்க வைத்து விட்டது.

4. காஷ்மீர் : தோற்றுவரும் இந்தியாவின் யுத்தம்!
துப்பாக்கி ரவைகள், பெல்லட் குண்டுகள் என அடக்குமுறைகளாலோ, தேர்தல் வளர்ச்சி என்ற மாய்மாலங்களாலோ காஷ்மீர் மக்களை இந்திய அரசால் வெல்ல முடியாது என்பது மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது.

5. காஷ்மீர் : துரோகத்தின் வரலாறு

6. வேத கல்வி வாரியம் : பிணத்துக்கு சிங்காரம்
சமஸ்கிருதத்தைப் பள்ளிக்கல்வி தொடங்கி ஐ.ஐ.டி வரையிலும் சிம்மாசனத்தில் அமர்த்துவதற்கு பார்ப்பன பா.ஜ.க அரசு எடுக்கும் முயற்சிகள் அருவெறுக்கத்தக்கவை, ஆபத்தானவை.

7. சனாதன் சன்ஸ்தா : ஆர்.எஸ்.எஸ்-இன் இன்னொரு விஷக் கொடுக்கு
முஸ்லீம் பயங்கரவாத அமைப்புகளுக்கு “ஸ்லீப்பர் செல்கள்” இருப்பது போல, ஆர்.எஸ்.எஸ்-க்கும் இருப்பதை சனாதன் சன்ஸ்தாவின் பயங்கரவாதச் செயல்கள் நிரூபிக்கின்றன.

8. புதிய கல்விக் கொள்கையல்ல, கல்வி மறுப்புக் கொள்கை
ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே அனைவருக்கும் தேர்ச்சி என்பது தொடங்கி இந்தி-சமஸ்கிருதத் திணிப்பு, கல்லூரிக் கட்டண உயர்வு என்ற ஐந்து தலை நாகப்பாம்பாக வருகிறது, புதிய கல்விக் கொள்கை.

9. “மூடு டாஸ்மாக்கை” – பட்டினப்பாக்கம் மக்களின் உறுதிமிக்க போராட்டத்தின் வெற்றி!

10. நீதிபதிகள் ஆண்டைகளா? அவர்களின் அடிமைகளா நாம்?
கடவுளைப் பற்றிய பிரம்மசூத்திரம் தனக்கு மட்டுமே என்று சொல்லும் பார்ப்பன பூசாரிகளைப் போல, இந்திய சட்டத்திற்கு வியாக்கியானம் செய்யும் ஏகபோகத் தகுதி தமக்கு மட்டுமே உண்டென்று கூறி, சமூகத்தின் மீது ஏறி மிதிக்கிறார்கள், நீதிபதிகள்.

11. அரசு கூர்நோக்கு இல்லங்கள் : சிறுவர் வதை முகாம்கள்
அரவணைத்து நல்வழிப்படுத்த வேண்டிய இளம் குற்றவாளிகளை, தமது கேடுகெட்ட சித்திரவதைகளின் மூலம் தப்பி ஓடவோ, கிரிமினல் பாதையில் செய்யவோ தூண்டுகிறது, தமிழக அரசு.

12. கிரிமினல் போலீசைப் பாதுகாக்கும் ஊடகங்கள்!
வேலைப்பளு, அதனால் ஏற்படும் மன அழுத்தம் என அருவருப்பான காரணங்களை அடுக்கி, தமிழக போலீசின் அத்துமீறல்களுக்கு நியாயம் கற்பிக்கின்றன, தமிழக ஊடகங்கள்.

13. ஏகலைவனின் கட்டை விரல், மாணவன் லெனினின் உயிர்!

புதிய ஜனநாயகம் ஆகஸ்டு 2016 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 3 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.