privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்நீதிமன்றம்உடுமலை : போராட்டத்தை ஆதரித்தால் கைதா ?

உடுமலை : போராட்டத்தை ஆதரித்தால் கைதா ?

-

டுமலை பகுதியில் “நீதிபதிகள் ஆண்டைகளா? அவர்களின் அடிமைகளா நாம்” என்ற தலைப்பில் வழக்கறிஞர் போராட்டத்தை ஆதரித்து மக்கள் அதிகாரம் சார்பில் ஒரு வாரமாக பிரச்சாரம் செய்து வரப்பட்டது.அதை ஒட்டி 12-08-2016 அதிகாலை 3 மணியிலிருந்து தோழர் சூர்யா, தங்கவேல் ஆகியோரின் வீட்டை காரில் இருந்தவாறு போலிசார் கண்காணித்து வந்தனர். பிறகு 4.30 மணியளவில் தளி காவல் நிலைய ஆய்வாளர் ஆறு பேரும், 2 பெண் போலீசும் தோழர் சூர்யா (உடுமலை மக்கள் அதிகார ஒருங்கிணைப்பாளர்) மற்றும் தோழர் தங்கவேல் இருவரையும் முன்னெச்சரிக்கையாக கைது செய்வதாகக் கூறினர்.

“எதுக்காக கைது செய்கிறீர்கள்” என தோழர் சூர்யா கேட்டபோது “வழக்கறிஞர்கள் போராட்டத்தை ஆதரித்து பொதுக்கூட்டம் நடத்துவதால் கைது செய்கிறோம். அதற்கு மேல் எங்களுக்கு எதுவும் தெரியாது” என்று கூறினர்.

people-powerதோழர்கள் “பொதுக் கூட்டத்திற்குச் செல்வதால் என்ன பாதிப்பு ஏற்பட்டுவிடும்” என்று கேட்டனர்.  “இல்லை, நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது” எனக் கூறி தோழர் சூர்யாவை மட்டும் அழைத்துச் செல்ல முயன்றனர். அதற்குள் பகுதி மக்கள் கூடிவிட்டனர். ஒரு பெண்ணை இரவில் கைது செய்யக்கூடாது என்பதை மீறி தோழர் சூர்யாவைக் கைது செய்தனர். பிறகு அவர் முழக்கமிட, பகுதி மக்கள் “எதற்காக அழைத்துச் செல்கிறீர்கள்” எனக் கூறி, தோழர் சூர்யாவின் கையைப் பிடித்துக் கொண்டனர்.

“கைது செய்வது எங்களது பணி” என்று கூறி தோழர் சூர்யாவை கைது செய்து காரில் அழைத்துச் சென்றனர்.

தோழர் தங்கவேல் “நான் கைது ஆகிறேன். ஆனால் பாலை கடைகளில் விநியோகித்துவிட்டு நானே தளி வருகிறேன்” என்று கூறினார். ஆனால் போலீசு ஏற்றுக்கொள்ளவில்லை. தோழர் தங்கவேல் பாலை கடைகளில் போட, போலீசு பின் தொடர்ந்து சென்று கொண்டே இருந்தது. பிறகு 6 மணியளவில் அவரையும் கைது செய்தனர். தளி காவல் நிலையத்தில் இருவரையும் காவலில் வைத்தது, போலீசு.

இச்சம்பவத்தால் மக்கள் மிகவும் கொதிப்படைந்து விட்டனர்.”எப்படி ஒரு பெண்ணை இரவில் கைது செய்வது” என்று பகுதி மக்கள் காலை 8 மணியளவில் சாலை மறியல் செய்வது என முடிவு செய்தனர்.

pp-arrest-struggle-daily-thanthiஅதற்குள் காவல் துறை இதை அறிந்து ஊருக்குள் 7.30 மணியளவில் தோழர் சூர்யாவின் வீட்டுக்கு வந்துவிட்டனர். தோழர்கள் மணி, சக்திவேல், சுகதேவ் ஆகிய மூவரை கைது செய்ய முற்பட்டனர். அதற்குள் பெண்கள் 20 பேர் திரண்டு விட்டனர்.

தோழர்களும் தோழர் சூர்யா வீட்டிலிருந்து முழக்கமிட்டுக்கொண்டே வந்னர். மூன்று தோழர்களை வண்டியில் ஏற்றிக்கொண்டே இருக்கும் போதே பஸ் ஸ்டாண்ட் நோக்கி 15 பெண்கள் 5 குழந்தைகளுடன் அந்தியூர் பஸ் ஸ்டாண்டில் கூடினர். பஸ் ஸ்டாண்டில் தோழர்கள் முழக்கமிட்டபோது அணிதிரண்ட மக்கள் முழக்கமிட்டுக்கொண்டே கைதானர்.

அனைவரையும் ஜல்லிபட்டியில் பரிமளா மண்டபத்திற்கு அழைத்துச் சென்றர். மண்டபத்திற்குச் சென்றவுடன், “தோழர்கள் சூர்யா, தங்கவேலை எங்களிடம் கொண்டுவந்து விடவேண்டும். அதுவரைக்கும் நாங்கள் நீங்கள் கொடுக்கும் உணவை வாங்க மாட்டோம்” என தோழர்களும் மக்களும் போராடியதால் வேறு வழியின்றி போலிசாரும்தோழர்கள் சூர்யா, தங்கவேலை மண்டபத்தில் ஒப்படைத்தனர்.

சரியாக 11 மணியளவில் மாணவ மாணவிகள் தலைமையில் கலைக்கல்லூரி மாணவர்கள் 15 பேர், 2 பெண் தோழர்கள் உட்பட ஜல்லிபட்டியில் மண்டபத்தின் அருகாமையில் சாலை மறியல் செய்து கைதாகினர். மொத்தம் 40 பேர் வழக்கறிஞர் போராட்டத்தில் கலந்து கொண்டு மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

அதன்பின் தோழர் சக்திவேல் தலைமையில் கூட்டம் அதே மண்டபத்திலேயே நடைபெற்றது. தோழர் சக்திவேல் வழக்கறிஞர்கள் போராட்ட அவசியத்தை வலியுறுத்தி பேசினார். தோழர் மணி மாணவர்கள், வழக்கறிஞர்கள் போராட்ட அனுபவத்தை பேசினார். அடுத்ததாக உடுமலை மக்கள் அதிகார ஒருங்கிணைப்பாளர் தோழர் சூரியா சிறப்புரை ஆற்றினார். நீதிபதிகளுக்கான போராட்ட அவசியம், டாஸ்மார்க்கில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம், இதற்கு மாற்று மக்கள் அதிகாரமே எனக் கூறி பேசினார்.

சிறுவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி மாணவர்கள் பெயர் கூறிக்கொண்டே இருக்கும்போது போலீசு மண்டபத்தின் உள்ளே போட்டோ எடுத்தது. அதற்க்கு தோழர் சூர்யா “மண்டபத்தின் உள்ளே போட்டோ எடுக்கக் கூடாது” எனக் கூறினார்.

pp-arrest-struggle-the-hindu“போட்டோ எடுத்தால் என்ன செய்வீர்கள்” எனக் கான்ஸ்டபிள் கேட்டார்.

“தைரியம் இருந்தால் எடுத்துப் பார், இங்கே என்ன நடக்கும் என்று தெரியும். எங்கள் அமைப்பைப் பற்றி ஆய்வாளர் அவர்களுக்கு நன்றாகத் தெரியும். உடுமலை காவல் நிலையத்தில் பெண்ணை போலீசு கற்பழித்ததே உங்கள் யோக்கியதை அதுதான்” என்று பேச போலீசு அமைதியாக இருந்து கொண்டது.

மதிய உணவிற்குப் பின் தோழர்கள் மண்டபத்தில் கல்லூரி மாணவர்களுடன் பேசிக் கொண்டு இருந்தனர். பின்பு மாலை நேரம் ஆகியும் விடுதலை செய்யவில்லை. பொதுவாக மண்டபத்திலும் சரி பகுதியிலும் சரி பொதுமக்கள் போலீசை மதிக்கவே இல்லை. உளவுத் துறையினரையும் கேலி செய்தனர். குழந்தைகளே போலீசைக் கண்டு பயப்படவில்லை. துணிச்சலாக கேள்வி கேட்டனர். “கொலை, கொள்ளையில் ஈடுபட்டவர்களிடம் உங்கள் கடமையைச் செய்ய வேண்டியதுதானே, மாறாக மக்களுக்காக போராடுபவர்களிடம் இப்படி நடந்து கொள்கிறீர்கள்” எனக் கேட்டனர். அதற்கும் போலீசு மௌனம் காத்தது.

பிறகு மாலை 7.00 மணிக்கு விடுதலை செய்வதாக அறிவித்தனர். தோழர் சூர்யா, “இத்தனை மணிக்கு விட்டால் போக முடியாது எப்படி அழைத்து வந்தீர்களோ அப்படிக்கே கொண்டுவந்து விட வேண்டும்” என்று பேசினார். காவல் ஆய்வாளர் சரி என ஊரிலேயே அனைவரையும் கொண்டு வந்து விட்டார். அடக்குமுறையினால் மக்கள் போராட்டங்களை ஒடுக்கிவிடலாமென்று நினைக்கும் போலிசையும் அரசையும் கண்டு மக்கள் பயப்படவில்லை என்று இந்த சம்பவம் காட்டுகிறது. வரும் நாட்களில் இந்த ஒடுக்குமுறை அவ்வளவு சுலபமாக நடக்காது என்பது மட்டும் நிச்சயம்!

தகவல்
மக்கள் அதிகாரம்,
உடுமலை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க