privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்மூடு டாஸ்மாக்கை – கும்முடிப்பூண்டியில் முற்றுகைப் போராட்டம்

மூடு டாஸ்மாக்கை – கும்முடிப்பூண்டியில் முற்றுகைப் போராட்டம்

-

கும்முடிப்பூண்டி ரயில் நிலைய டிக்கட் கவுண்டர் அருகில் டாஸ்மாக் கடை எண்: 8742 மற்றும் கும்முடிப்பூண்டி பஜார், ரெட்டம்பேடு சந்திப்பில் டாஸ்மாக் கடை எண்: 8758 வைக்கப்பட்டுள்ளது. மக்கள் குடியிருப்புக்கு மத்தியிலும், பள்ளி கல்லூரி மாணவர்கள் பெண்கள் பேருந்துக்காக காத்திருக்கும் இடத்திலும் உள்ள இந்த இரண்டு கடைகளையும் அகற்றக்கோரி முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 10 அரசுத்துறைகளுக்கு கடந்த ஆகஸ்டு 01-ம் தேதி பழைய கும்முடிப்பூண்டியைச் சேர்ந்த மக்கள் மனு கொடுத்துள்ளனர்.

gummdipoonding-shutdown-tasmac-struggle-2இம்மனுவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், பகுதி மக்கள் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். போலிசு பகுதியில் சென்று போராடும் மக்களிடம் ஐ.ஜி கைது செய்து சிறையில் போட உத்தரவிட்டுள்ளதாகவும், எத்தனை பேர் வந்தாலும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டுமென உத்தரவு வந்துள்ளதாகவும் நீங்கள் வீட்டிலிருந்து வெளியில் வந்தால் கைது செய்து விடுவோம் எனவும் மிரட்டியுள்ளனர்.

போலிசின் மிரட்டலுக்கு அஞ்சாத மக்கள் 17-08-2016 அன்று காலை 11 மணிக்கு ரயில் நிலைய டிக்கட் கவுண்டர் அருகில் உள்ள டாஸ்மாக் கடை முற்றுகைப் போராட்டம் நடத்தினர். மனு கொடுத்த போது மக்களை மதிக்காத தாசில்தார் முற்றுகை போராட்டம் அறிவித்து கடை முன்னர் மக்கள் கூடியதும், ஓடோடி வந்தார். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நூற்றுக்கணக்கான மக்களிடம் பேசினார். இன்னும் ஒரு மாத காலத்தில் டாஸ்மாக் கடை கண்டிப்பாக அகற்றப்படுமென கூறினார். ஆனால் தாசில்தாரின் வாய்ஜாலத்துக்கு மயங்காத மக்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர்.
gummdipoonding-shutdown-tasmac-struggle-3“மனு கொடுத்த போது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? டாஸ்மாக்கினால் இவ்வளவு பிரச்சனை இருக்கிறதென உங்களுக்கு தெரியுமா தெரியாதா? 10, 12 வயதுப் பிள்ளைகள் குடித்து சீரழிகிறதே, நீங்கள் கடையையே அகற்றி விட்டாலும் இங்கு 24 மணி நேரமும் பார் இயங்குகிறது? அதைத் தடுக்க என்ன செய்யப் போகிறீர்கள்” என கேள்வி மேல் கேள்வி கேட்டனர்.

செய்வதறியாது திகைத்த தாசில்தார், மரத்தடியில் நின்று கொண்டிருந்த கும்முடிப்பூண்டி காவல் துறை ஆய்வாளரை அழைத்து “என்னய்யா பண்றீங்க? 10, 12 வயது பிள்ளைகளுக்கு சாராயம் கொடுப்பதை தடுக்க முடியாதா? குழந்தைகளுக்கு சாராயம் தரலாமென சட்டத்தில் இடமுள்ளதா? இங்கு 24 மணி நேரமும் சாராயம் விற்கப்படுவதாக கூறுகிறார்களே உண்மையா?” என ஏகத்துக்கு மக்களின் கேள்விகளை போலிசை நோக்கி திருப்பி விட்டார்.

gummdipoonding-shutdown-tasmac-struggle-1‘இன்னா தலைவா, ஒன்னும் தெரியாததைப் போல நம்மகிட்டயே கேக்கிரியே!’ என பாவனையுடன் தாசில்தாரையே வெறித்துக் கொண்டிருந்தார் காவல் துறை ஆய்வாளர்! போலிசின் பார்வையைப் புரிந்து கொண்ட தாசில்தார் வேகமாக மக்களின் பக்கம் திரும்பி, “இனிமேல் நானும் இன்ஸ்பெக்டரும் அடிக்கடி ரோந்து வருகிறோம். நீங்களும் சாராயம் விற்பனை செய்தால் எனக்குத் தகவல் சொல்லுங்கள்” எனக் கூறி தனது செல்போன் எண்ணைக் கொடுத்தார்.

எல்லாம் தெரிந்தும் மக்கள் முன்னிலையில் நல்லவரைப்போல நடிக்கும் தாசில்தாரை யாரும் நம்பவில்லை எனினும், ஒரு மாத காலத்துக்குள் டாஸ்மாக் கடையை அகற்றிவிடுவதாக உறுதியளித்ததன் அடிப்படையில், “இரண்டும் டாஸ்மாக் கடைகளுக்கு ஒரு மாத கெடு, இல்லையெனில் நாங்களே மூடுவோம்” என அறிவித்து விட்டுச் சென்றுள்ளனர் மக்கள்

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்
9444461480

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க