privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விதிருச்சி களச் செய்திகள் 26/08/2016

திருச்சி களச் செய்திகள் 26/08/2016

-

மீண்டும் மனுதர்ம ஆட்சி! மீண்டும் காலனியாக்கம்! சேட்டுகள் – பார்ப்பனர்களின் சதித் திட்டத்தை முறியடிப்போம்!

new-education-policy-trichy-protest-6மோடி அரசு கடந்த வருடம் டிசம்பர் மாதம் 15 ம் தேதி காட்ஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதனூடாக புதிய கல்விக் கொள்கையின் வரைவுத் திட்டத்தை மத்திய மனித வளத்துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய கல்விக் கொள்கை என்பது அரசுப் பள்ளிக் கல்லூரிகளின் மானியங்களை ரத்து செய்வது, அனைத்து கல்வி நிறுவனங்களையும் தனியாரிடம் ஒப்படைப்பது, தொழிற்கல்வி என்ற பெயரில் குலக் கல்வி முறையை ஊக்குவிப்பது, இந்து மத மூட நம்பிக்கைகளை கல்வியில் புகுத்துவது, இந்துத்துவா மனுதர்ம கொள்கையின் படி சாதித் தீண்டாமையை கொண்டு வருவதாக உள்ளது. மேலும் சி.பி.எஸ்.இ பள்ளிகள் முதல் ஐ.ஐ.டி க்கள் வரை சமஸ்கிருதத்தை கட்டாயப் பாடமாக்கப்படுவதன் மூலமாக பல்தேசிய இனங்களின் மொழியையும் அழிப்பதாகவே உள்ளது. குறிப்பாக கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மத்தியப் பட்டியலுக்கு கொண்டுவருதன் மூலம் மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கிறது. அதனால் இந்த புதிய கல்வி கொள்கைக்கு எதிராக இந்தியா முழுவதும் கல்லூரி மற்றும் பல்கலைகழக மாணவர்கள், பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் ஆர்ப்பாட்டம் – உண்ணாவிரதம் என்ற பெயரில் அவர்களது எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.

new-education-policy-trichy-protest-8அதன் ஒரு பகுதியாக மாணவர்களிடம் இந்த புதிய கல்வி கொள்கையின் அபாயத்தை கொண்டு செல்லும் வகையில் இன்று 24-08-2016 திருச்சியில் உள்ள பெரியார் ஈ.வெ.ரா கல்லூரியில் மாணவர்களை திரட்டி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் பெரியார் ஈ.வெ.ரா கிளை அமைப்பாளர் தோழர் விஜய் தலைமை தாங்கினார். புதிய கல்விக் கொள்கையின் அபாயத்தைப் பற்றியும், அதனால் மாணவர்களின் எதிர்கால் கல்வி உரிமைகள் பறிபோவதைம், இதனால் மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் பற்றியும், இந்த புதிய கல்விக் கொள்கையையும், காட்ஸ் ஒப்பந்தத்தையும் எதிர்க்க வேண்டுமானால் மாணவர்கள் அனைவரும் ஒன்றுபட்ட அமைப்பாக இருந்து போராட வேண்டும் என புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாவட்ட அமைப்பு கமிட்டி உறுப்பினர் தோழர் செழியன் சிறப்புரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளாக மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை காட்டும் வகையில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

முழக்கங்கள்

new-education-policy-trichy-protest-7கிழித்தெறிவோம்! கிழித்தெறிவோம்!
புதிய கல்விக் கொள்கையை
கிழித்தெறிவோம்! கிழித்தெறிவோம்!

முறியடிப்போம்! முறியடிப்போம்!
மானியத்தை ரத்து செய்து
அரசு பள்ளி கல்லூரிகளை
இழுத்து மூடும் சதித்திட்டத்தை
முறியடிப்போம்! முறியடிப்போம்!

new-education-policy-trichy-protest-5புகுத்தாதே! புகுத்தாதே!
செத்த மொழி சமஸ்கிருதத்தை திணித்து
பார்ப்பன அடிமைத்தனத்தை புகுத்தாதே!

பூசாதே! பூசாதே!
இந்துமத மூட நம்பிக்கைகளுக்கு
அறிவியல் சாயம் பூசாதே!

திணிக்காதே! திணிக்காதே!
இந்துமத மூடநம்பிக்கைகளை
இந்து மதவெறி கருத்துக்களை
சாதி தீண்டாமை கருத்துக்களை
மாணவர்கள் மத்தியில் திணிக்காதே!

new-education-policy-trichy-protest-3தொழிற்கல்வி என்ற பெயரில்
சாதித் தீண்டாமையையும்
குலக் கல்வி முறையையும்
கொண்டுவரும் நோக்கத்தோடு
உருவாக்கப்பட்டதே புதிய கல்விக் கொள்கை!

பல்தேசிய இனங்களின்
அடையாளங்களை அழிப்பதற்கே
சமஸ்கிருத வேத கலாச்சார திணிப்பு!

தகற்தெறிவோம்! தகற்தெறிவோம்!
ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி யின்
இந்து ராஷ்டிர கனவுகளை
தகற்தெறிவோம்! தகற்தெறிவோம்!

விரட்டியடிப்போம்! விரட்டியடிப்போம்!
ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி
ஏ.பி.வி.பி காலிகளை
கல்லூரியிலிருந்து விரட்டியடிப்போம்!

new-education-policy-trichy-protest-4பெரியார் பிறந்த மண்ணிலே
பார்ப்பனியத்திற்கு கல்லறை கட்டுவோம்!

அணிதிரள்வோம்! அணிதிரள்வோம்!
காட்ஸ் ஒப்பந்தத்திற்கு எதிராக
மாணவர்கள் சமூகமாய்
அணிதிரள்வோம்! அணிதிரள்வோம்!

தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
திருச்சி.
99431 76246

புதிய ஜனநாயகம் வாசகர் வட்டத்தில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக உரை

trichy-puja-vasakar-vattam-1கஸ்டு 19, 2016 அன்று திருச்சி பகுதி சார்பில் வாசகர் வட்டம் சிறப்பாக நடத்தப்பட்டது. அதில் 50-க்கு மேலான வாசகர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

அதில் சில: பத்திரிகை உரிய காலத்திற்குள் (பிரதி மாதம் 1ம் தேதிக்குள்) வர வேண்டும். அட்டைப்படம் எடுப்பாக இருக்க வேண்டும். கட்டுரைகளில் எழுத்துப் பிழை இல்லாது எழுத வேண்டும். மாதம் இருமுறை இதழை கொண்டு வர வேண்டும்.

தூயவளனார் கல்லூரி தமிழ் துறைத் தலைவர் திரு.செல்வகுமார் மேற்கண்ட ஆலோசனைகளை வழிமொழிவதோடு மாதாமாதம் போராளிகளைப் பற்றி செய்தி வெளியிட வேண்டும். புதியவர்கள் அறிந்துகொள்ள உதவியாக இருக்கும் என்றும் கட்டுரைகளில் வரும் எழுத்து பிழைகள் இல்லாது சரி செய்து உதவி செய்வதாகவும் கூடுதலாக ஆலோசனைகளை வழங்கினார்.

இந்த கூட்டத்தில் ஆகஸ்டு 2016 புதிய ஜனநாயகத்தில் வந்த “புதிய கல்விக் கொள்கை அல்ல, கல்வி மறுப்பு கொள்கையே!” என்ற தலைப்பில் திரு செல்வக்குமார் “ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் வருவதற்கு முன் குருகுலக் கல்வி இருந்தது. பெரும் பகுதி மக்கள் கல்வியறிவு அற்றவர்களாக இருந்தனர். இந்த நிலையை மாற்ற 1813-ல் ஆங்கிலேய கல்வியாளர் கிருத்துவ மிசினரிகளுக்கு நிதி ஒதுக்கி அதிக மாணவர்களுக்கு கல்வியறிவு கொடுத்தனர். 1834-ல் மெக்காலே என்ற ஆங்கிலேய கல்வியாளர் தங்கள் ஆட்சிக்கு இந்தியர்கள் சேவை செய்யும் வகையில் ஒரு கல்வி திட்டத்தை கொண்டு வந்தார்.

சுதந்திர இந்தியாவில் 1948-ல் நேரு அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்த திரு.ராதாகிருஷ்ணன் என்பவர் தலைமையில் பள்ளிக்கல்வி, கல்லூரி, பல்கலைக்கழகம் உள்ளிட்ட அனைத்தையும் ஒன்றிணைத்து அனைவருக்கும் கல்வி கிடைக்க செய்தனர். 1953-ல் தமிழக முதலமைச்சராக வந்த ராஜாஜி ஒவ்வொரு குழந்தையும் தனது குடும்பத் தொழிலை செய்து கொண்டே கல்வி படிக்கும் வகையில் குலக் கல்வித் திட்டத்தை கொண்டு வந்தார். அதை எதிர்த்து முறியடிக்கப்பட்டது, அடுத்து வந்த முதலமைச்சர் காமராஜர் போதிய நிதி வசதி இல்லாத தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி தர வேண்டும் என்ற எண்ணத்தில் அமுல் படுத்தினார்.

அவருக்கு பின்னர் 1964-ல் கோத்தாரி கமிட்டி தமிழகத்தில் பல்வேறு சாதி, மத பெயரில் தனித்தனியாக இருந்த கல்வி நிலையங்களை ஒருங்கிணைத்து இயக்கப்பட்டது. பெரியார் தனது சொந்த பொறுப்பில் கல்வி நிலையங்களை திறந்தார். மேலும் அரசுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக தனது சொந்த இடத்தை இலவசமாக கொடுத்து ஈ.வே.ரா கல்லூரி தொடங்கப்பட்டது.

2014-ல் மத்தியில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க அரசாங்கம் கல்வியை வளர்ப்பது, முன்னேற்றுவது என்ற பெயரில் பழைய குலக் கல்வியை பெயர் மாற்றி புதிய கல்விக் கொள்கையாக கொண்டு வர துடிக்கிறது. நல்லா படிக்கும் குழந்தைகளுக்கு நல்ல பள்ளி என்றும் சரியாக படிக்காத தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ஏழைப் பிள்ளைகளுக்கு தொழிற்கல்வி என்றும் கல்வியை விட்டே விரட்டியடிக்கும் சதிச் செயலில் ஈடுபட்டு வருகிறது

தமிழ் மொழி உரிமைக்காக உயிர் துறந்த மொழிப் போர் தியாகிகளை நெஞ்சில் ஏந்தி போராடுவோம் ! பார்ப்பனிய சதி திட்டத்தை முறியடிப்போம்” என்று உரையாற்றினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

வாசகர்களின் கருத்துக்கள், சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு, இறுதியாக அனைவருக்கும் நன்றி கூறி கூட்டம் முடிக்கப்பட்டது.

தகவல்:
புதிய ஜனநாயகம், (விற்பனைக்குழு)
திருச்சி.
89731 92924.