privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திமோடியின் விளம்பரமும் திரிபுரா நெடுஞ்சாலையும்

மோடியின் விளம்பரமும் திரிபுரா நெடுஞ்சாலையும்

-

“பிரதமர் அலுஅவலக அதிகாரி அழைத்த போது மாவட்ட ஆட்சியருக்கு சில வினாடிகள் மூளையே உறைந்து போய் விட்டது. தனது கால்களில் நடுக்கத்தை உணர்ந்தார். உங்களால் பிரதமரிடம் பேச முடியுமா என்று கேட்கப்பட்ட போது மெல்ல “ஆம்” என கிசுகிசுத்தார் அந்த மாவட்ட ஆட்சியர். சில பல “பீப்”(*) சத்தங்களுக்குப் பின் இணைப்பில் பிரதமர் மோடி வந்தார். இரவு பத்து மணிக்கு மேல் அழைத்ததற்காக வருத்தம் தெரிவித்துக் கொண்ட பிரதமர், வேறு வழியில்லாததால் அழைக்க நேர்ந்தது என குறிப்பிட்டார். பழுதான தேசிய நெடுஞ்சாலையை உடனடியாக சீர்படுத்த வேண்டும் எனவும், இது தொடர்பாக அஸ்ஸாம் மற்றும் திரிபுரா மாநில அதிகாரிகளுக்கு தாம் உத்தரவிட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

மோடி மேஜிக்
மோடி மேஜிக்

மறு நாள் காலை மாவட்ட ஆட்சியருக்கு 15 கிலோ மீட்டர் நெடுஞ்சாலையை செப்பனிட அசாம் மாநில அரசும் இந்திய அரசும் நிதி ஒதுக்கியுள்ள விவரம் தெரிய வந்தது. அவர் உடனடியாக நேரில் சென்ற போது ஆறு ஜே.சி.பி இயந்திரங்கள் தயாராக நின்று கொண்டிருந்தன. அடுத்த நான்கு நாட்களில் சுமார் 300 லாரிகளில் கட்டுமானப் பொருட்கள் வந்து குவிந்தன.. சில நாட்களில் சேதமடைந்த சாலை செப்பனிடப்பட்டு அத்தியாவசியப் பொருட்கள் திரிபுராவிற்கு தங்குதடையின்றி வரத் துவங்கின”

குறிப்பு : (*) – இது சிம்புவின் பீப் அல்ல; மின்னணு இயந்திரங்கள் எழுப்பும் ஒருவகையான ஒலி.

மேலே விவரிக்கப்பட்ட சோட்டா பீம் கதையை கொட்டாவிகளை அடக்கிக் கொண்டு கடும் சிரமங்களுக்கிடையே படித்ததற்கு நன்றி. ஆனால், இந்தக் கதை சமூக வலைத்தளமான கோராவில் (quora.com) கடந்த சில நாட்களில் வைரலாக பரவியுள்ளது. சுமார் 2.5 லட்சம் பேரால் வாசிக்கப்பட்டு, 12,500 பேர்களால் விரும்பப்பட்ட இந்தக் ”கதை” நடந்ததாக சொல்லப்படும் களம் திரிபுரா மாநிலம்.

பெங்களூருவில் உள்ள சிக்கிம் மணிப்பால் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த புஷ்பக் சக்ரபர்த்தி என்பவர் தன்னை பாரதிய ஜனதாவின் தகவல் தொழில்நுட்ப பிரிவுடன் அடையாளப்படுத்திக் கொள்பவர். சமீபத்தில் இவரது தந்தையின் நண்பரான திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர் ஒருவருக்கு நேர்ந்த அனுபவம் என்பதாக மேற்கண்ட கதையை விவரித்திருந்தார்.

கதையின் உண்மைத் தன்மை குறித்து நமக்குத் தெரியாது – ஆனால், திரிபுராவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் நிலையை என்னவென்பதைக் குறித்து உலகத்துக்கே தெரியும். அறியாதவர்கள் இந்த இணைப்பைச் சொடுக்கி அறிந்து கொள்ளலாம் (NH 208A tripura road condition)

வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் அனைத்தும் பழைய பாரதிராஜா படங்களில் வரும் ஒத்தையடி பாதைகளை விடக் கேடு கெட்ட தரத்தில் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் பருவ மழைக்காலத்தில் திரிபுராவை தேசத்தின் பிற பகுதிகளோடு இணைக்கும் ஒரே ‘தேசிய நெடுஞ்சாலையின்” பல பகுதிகள் சகதிகளால் நிறைந்து புதைகுழிகளாகி விடுகின்றன. இந்த நிலையை எதிர்த்து போராட்டங்கள் நடப்பது அம்மாநிலங்களில் வருடாந்திர சடங்கு.

7regHighway1_192213வழக்கம் போல் இந்தாண்டும் கடுமையாகப் பெய்த பருவமழையைத் தொடர்ந்து திரிபுராவின் மிக முக்கியமான நெடுஞ்சாலை எண்-8 முற்றாக சேதமடைந்தது. இதன் காரணமாக தொடர்ந்து பலவாரங்கள் சரக்குப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொருட்களின் வரத்து குறையவும், மாநிலம் முழுவதும் அத்தியாவசிய பொருட்களுக்கும் வாகன எரிபொருட்களுக்கும் கடுமையான தட்டுப்பாடு எழுந்தது. ஜூலை மாதம் முழுவதும் தொடர்ந்த பொருட்கள் தட்டுப்பாட்டை அடுத்து விலைவாசிகளும் அதிகரித்துள்ளன. இதைத் தொடர்ந்து கொந்தளித்துப் போன மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இறுதியில் ஜூலை மாத இறுதியில் தற்காலிகமாக சுமார் 20 கிலோமீட்டர் நீள பாதை ஒன்றை அமைத்து அதன் வழியாக எரிபொருட்களையும் அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

இன்றைய தினம் வரை திரிபுராவின் முக்கிய நெடுஞ்சாலை பழுதுபட்டு முடங்கியுள்ளதோடு, தற்காலிகமாக அமைக்கப்பட்ட மாற்றுப் பாதையின் வழியாக அத்தியாவசியப் பொருட்கள் மாத்திரமே எடுத்துச் செல்லப்படும் நிலை உள்ளது. இதன் காரணமாக உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்த நிலையிலேயே தொடர்கின்றன. திரிபுராவின் மேல் மத்திய அரசு கட்டவிழ்த்து விட்டுள்ள திட்டமிட்ட புறக்கணிப்பையும் சித்திரவதைகளையும் தேசிய ஊடகங்கள் கண்டு கொள்ளாத நிலையில், பாரதிய ஜனதாவின் சமூக வலைத்தள புழுகுணி பாண்டிகளோ பிணத்தின் நெற்றிக் காசைக் கூட விடாமல் களவாடுகின்றனர்.

மோடி என்கிற பலூன் மொத்தமும் போலியாக ஊதிப் பெருக்கப் பட்டதென்பது நமக்குத் தெரியும். ஆனால், அந்தப் போலிப் பகட்டின் பின்னே ஒளிந்து கொண்டுள்ள விளம்பர வெறியும், அந்த விளம்பர வெறியின் முன் எளிய மக்களின் துன்ப துயரங்கள் கூட கிள்ளுக்கீரை தான் என்பதையும் நமது மண்டையில் அடித்து உணர்த்துகின்றனர் மோடி பக்தர்கள்.

மேலும் படிக்க:
Viral on Quora: Writer defends post that claimed PM Modi called IAS officer
Food, fuel crisis in Tripura – Pitiable condition of NH 8 from Karimganj to Sabroom
Shankar Prasad demands development of national highways
NH-44 horrible condition continues : why State PWD taken over maintenance from NHAI ? Another embezzlement to fill party funds ? Manik demands another national highway, who will fix present one ?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க