privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திமோடியின் ஆட்சியில் புதுதில்லி குற்றங்களில் நம்பர் ஒன் !

மோடியின் ஆட்சியில் புதுதில்லி குற்றங்களில் நம்பர் ஒன் !

-

நாட்டில் நடக்கும் நகரக் குற்றங்களில் நான்கில் ஒரு பங்கு தலைநகராம் தில்லியில் நடக்கிறது. பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழும் 53 பெரு நகரங்களில், தேசிய குற்றப் பதிவு மையம் (National Crime Records Bureau ) செய்த ஆய்வின் படி இது தெரிய வந்துள்ளது. இந்நகரங்களில் பதியப்பட்ட குற்ற வழக்குகளில் 25%-த்தை தில்லி வைத்துள்ளது. இந்நிலவரம் 2015-ம் ஆண்டின் விவரங்களிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டெல்லி
டெல்லி

அந்த 53 பெருநகரங்களில் பதிவு செய்யப்பட்ட 6,76,086 வழக்குகளில் தில்லி மட்டும் 1,73,947 வழக்குளை கொண்டிருக்கிறது. ஒரு கோடி அறுபத்து மூன்று இலட்சம் மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் புது தில்லியின் குற்றக் கணக்கு 1066 ஆகும். அதாவது ஒரு இலட்சம் பேர்களுக்கு 1066 குற்ற வழக்குகள்.

இந்தியாவின் பொருளாதார தலைநகரம் எனப்படும் மும்பையில் 184 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். இங்கே 2015-ம் ஆண்டின் படி 42,940 வழக்குகள் பதிவாகின. இலட்சம் பேருக்கு 233 வழக்குகள். 53 பெருநகரங்களில் மொத்த வழக்குகளின் விகிதத்தில் மும்பை மட்டும் 6.4 சதவீதத்தைக் கொண்டிருக்கிறது. தில்லியோ 25%-த்தில் முதலிடம்.

மும்பையை விட அதிக குற்ற வழக்குகளைக் கொண்டிருப்பதோடு எல்லா வகைக் குற்றங்களிலும் புது தில்லி முன்னிலை வகிக்கிறது. மும்பையில் கொலைகள் 169 என்றால் தில்லியில் 464. மொத்த திருட்டுக்கள் மும்பையில் 10,422 என்றால் தில்லியில் 96,294. வழிப்பறியைப் பொறுத்தவரை மும்பையில் 1,708-ஆகவும், தில்லியில் 6,766 ஆகவும் உள்ளன.

ஆள் கடத்தல் வழக்குகள் மும்பையில் 1,583, தில்லியில் 6,630. பாலியல் வன்புணர்ச்சி வழக்குகள் மும்பையில் 712-ஆகவும், தில்லியில் இருமடங்காக 1,893-ஆகவும் உள்ளன. மத-இன கலவர வழக்குகளில் மட்டும் மும்பை முதலிடத்தில் 396-ஆகவும், தில்லியில் 108-ஆக குறைவாகவும் உள்ளன.

பண்டைய வரலாற்றில் இந்திரப் பிரஸ்தம் என அழைக்கப்பட்ட புதுதில்லி இன்றைக்கு வன்முறையில் நம்பர் ஒன் பிஸ்தாவாக இருப்பதன் காரணம் என்ன?

இன்னமும் நிலவுடமை சமூக அமைப்பின் ஆதிக்கத்தில் இருக்கம் வட இந்தியாவின் குவி மையமாக அல்லது அதிகார மையமாக தில்லி உள்ளது. இந்தி பெல்ட் எனப்படும் இம்மாநிலங்களில்தான் ஆதிக்க சாதி வெறியும், முஸ்லீம்கள் மீதான தாக்குதலும், பெண்கள் மீதான வன்முறையும், தலித்துக்கள் மீதான கொடுமைகளும் அதிகம் நடக்கின்றன. மற்ற மாநிலங்களில் இவை இல்லாமல் இல்லை என்றாலும் இந்தி பேசும் மாநிலங்களில் இவை இயல்பான சமூக உரிமையாக அங்கீகரிக்கப்படுகின்றன.

இத்தகைய பிற்போக்குத்தனங்களின் உதவியால்தான் பாரதீய ஜனதா தனது செல்வாக்கை அங்கே உருவாக்கியிருக்கிறது.

அவ்வகையில் மோடியின் ஆட்சியில் புதுதில்லி நகரம் குற்றங்களில் நம்பர் ஒன் என்ற சாதனைக்கு பொருத்தமானதுதான்.

செய்தி ஆதாரம்:
One out of every 4 crimes in India take place in Delhi: NCRB data

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க