privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விநீட் தேர்வால் சட்டப்பூர்வமாகும் மருத்துவக் கல்லூரிக் கொள்ளை !

நீட் தேர்வால் சட்டப்பூர்வமாகும் மருத்துவக் கல்லூரிக் கொள்ளை !

-

children_injectionமிழக தனியார் மருத்துவ கல்லூரிகளின் கல்வி கட்டணம் இவ்வாண்டு பல மடங்கு அதிகரித்து ஒரு கோடியாக உயர்ந்துள்ளது. “நீட்” என்ற அகில இந்திய நுழைவுத்தேர்வு மூலம் “மெரிட்” அடிப்படையில் தான் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்ற அரசு உத்தரவை அடுத்து இக்கட்டண உயர்வை அறிவித்துள்ளார்கள். இந்த “நீட்” தேர்வால் அரசு கல்லூரிகளில் ஏழை மாணவர்கள் படிக்க முடியாது என்பது ஒரு புறமிருக்க, தனியார் சுயநிதிக் கொள்ளையர்கள் இந்த தேர்வை வைத்து தமது வருமானத்தை மிக அதிகமாய் உயர்த்திவிட்டனர். இப்படி ஒரே கல்லில் இரு மாங்காய்!

சான்றாக கல்வி கொள்ளையன் பச்சமுத்துவின் எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியின் வருடாந்திர கல்விக் கட்டணம் 2014-ல் 9 லட்சமாகவும், 2015-ல் 10 லட்சமாகவும் இருந்தது. இவ்வாண்டு (2016) அது இரண்டு மடங்குக்கும் மேல் உயர்ந்து 21 லட்சமாகியுள்ளது. ராமச்சந்திரா மருத்துவகல்லூரி  மற்றும் செட்டிநாடு கல்வி குழுமங்களில் 15 லட்சமாக உயர்ந்துள்ளது. இது போக நூலகக் கட்டணம், விடுதிக் கட்டணம், உணவு கட்டணம், ஆய்வகக் கட்டணம் என்பது தனி கணக்கு. அதற்கு சில லட்சங்கள் வரை வாங்கிக் கொள்கிறார்கள்.

நீட் தேர்வு மதிப்பெண்களை கொண்டு மாணவர்கள் பல்வேறு கல்லூரிகளுக்கு விண்ணப்பம் செய்யவேண்டும்; அதன் அடிப்படையில் தனியார் பல்கலைகழகங்கள் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்பது அரசு விதி. இதன் மூலம் முந்தைய ஆண்டுகளைப் போல அதிக பணம் தருபவர்களுக்கே முன்னுரிமை என்ற விதிப்படி கொள்ளை லாபம் அடிப்பதில் சிறிது தடங்கல் ஏற்பட்டிருக்கிறது.

அதாவது பணத்தோடு கூடவே “மெரிட்”டையும் கணக்கில் கொள்ள வேண்டும். இதை தகர்ப்பது என்ன கம்பசூத்திரமா என்ன? அதன்படி தற்போது ஆண்டுக் கட்டணம் கிட்டத்தட்ட கால் கோடி ரூபாய் என்பதால் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு “மெரிட்” இருந்தாலும் பணமும் வேண்டும். பணமில்லாத “மெரிட்” மாணவர்கள் விண்ணபிக்கமுடியாது. பணமுள்ளவர்கள் “மெரிட்” இல்லையென்றாலும் விண்ணப்பித்து பெற முடியும். ஏனெனில் விண்ணப்பிக்கும் மாணவர்களின் மெரிட் வரிசைப்படி எடுப்பதென்றாலும், பணமுள்ளவர்கள் மட்டுமே அதில் வருவது உறுதி.

ஆகையினால் இது நாள் வரை கருப்பாக வாங்கிய பணத்தை தற்போது அதிகாரப்பூர்வமாக வெள்ளையாகவே வாங்குகிறார்கள். அரசும் அதை சட்டபூர்வமாக்கியுள்ளது. அரசு சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், “தனியார் கல்லூரிகள் கல்வி கட்டணம் நிர்ணயித்துக் கொள்ள தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது” என்று கைவிரிக்கிறார்கள். அதாவது “மெரிட்டை” அரசு தீர்மானக்கும். “அட்மிஷனை” தனியார் முதலாளிகளின் பணம் தீர்மானிக்கும்.

மருத்துவ கல்லூரி சீட் விவாகாரத்தில் பல கோடிகள் புழங்குவது பச்சமுத்து-மதன் விவகாரத்தில் ஆதரப்பூர்வமாக வெளிவந்துள்ளது. தன்னை பினாமியாக கொண்டு எஸ்.ஆர்.எம் பச்சமுத்து ஒவ்வொரு சீட்டுக்கும் அடித்த கொள்ளையை காணாமல் போன மதன் தனது கடிதத்தில் அம்பலப்படுத்தியுள்ளார். பணத்தை கொடுத்தவர்கள் போராட்டம் நடத்தியுள்ளார்கள். தற்போது பணத்தை திருப்பி தர பச்சமுத்து தரப்பு ஒத்துக் கொண்டுள்ளது. அதனாலென்ன? இனி வேந்தர் மூவிஸ் வரும் பெற்றோரிடம் கருப்பாக பணம் வாங்க வேண்டிய அவலநிலை இல்லை. வெள்ளையாகவே எஸ்.ஆர்.எம் கல்லூரி கவுண்டரில் வாங்கிக் கொள்ளலாம். யாரும் பச்சமுத்துவை கொள்ளையன் என்று திட்ட முடியாது.

இப்படியாக இந்த பகற்கொள்ளையை நீட் தேர்வுக்கு பிறகும் தொடர்கிறார்கள் என்பதுதான் இக்கட்டண உயர்வு சொல்லும் செய்தி.

srm fee ssஅதே சமயத்தில் “மெரிட்”டில் வரும் மாணவர்களிடமும்  40-85 லட்சம் வரை நன்கொடையும் வசூலிக்கிறார்கள் கல்வி வியாபாரிகள். மூன்று தனியார் பல்கலைக் கலைகழங்களில் தன் மகளுக்கு சீட் கேட்டுள்ள ஒரு பெற்றோர் “ மெரிட்-ன் படி தான் இருக்கவேண்டும் என்று நான் வாதிட்டேன். ஆனால் உச்சநீதிமன்ற உத்தரவில் அப்படி குறிப்பிடவில்லை என்று பல்கலைகழக நிர்வாகத்திர் கூறுகின்றனர்” என்கிறார். “மெரிட்” மாணவர்களுக்கென்று தனிக்கட்டணமெல்லாம் எங்குமில்லை. அப்படி “தரம்” பொதுவோ அப்படித்தான் “கட்டணமும்” பொது. இது தெரியாத பெற்றோர்கள் “மெரிட்” இருந்தாலே கட்டணமும் குறைவாக இருக்கும் என்று தவறாக நினைக்கிறார்கள்.

ஆக குறைந்தபட்சமாக ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு 20 லட்சம் வரை செலவாகிறது. எனில் அவர் கல்வி முடித்து வெளியே வரும்போது 1 கோடிக்கும் மேல் செலவு செய்தாக வேண்டும். அரசு கல்லூரியில் ஆண்டு கல்வி கட்டணம் 11,500 ரூபாய். அதாவது கிட்டதட்ட அதிகபட்சம் 1 லட்ச ரூபாய் செலவில் மருத்துவ கல்வியை முடித்துவிடமுடியும்.

இடஒதுக்கீடு மூலம் தகுதியும் திறமையும் சிதைக்கப்படுகிறது என்று புலம்பும் கும்பல் இதற்கு வாய்திறப்பதில்லை. தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு குறித்து அங்கலாய்க்கும் நடுத்தரவர்க்கம் பணக்கார இடஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்கிறது. டைம்ஸ் ஆப்ஃ இந்தியா கட்டுரையில் தனியார் கல்வி கட்டணம் காரணமாக தன் மகனை மருத்துவராகக் முடியாத ஒரு தந்தை அதற்கு இடஒதுக்கீட்டின் மீது பழியை போடுகிறார். ஆக இட ஒதுக்கீட்டிற்கு எதிரான பார்வையும், பணத்தால் விலை பேசும் கல்வி அமைப்பும் இங்கே பொருத்தமாக சங்கமத்திருக்கின்றன.

இப்படி ஒரு கோடி செலவழித்து வெளியே வரும் மருத்துவர்கள் தங்கள் போட்ட முதலை எடுக்க முயற்சிப்பார்களா? மருத்துவத்தைத்தான் ஒழுங்காக கற்பார்களா? இல்லை சமூக நலனுக்காகத்தான் சிந்திப்பார்களா? பாடையைச் தூக்கிச் சுமக்கும் ஏழைகளின் பிரச்சினையோ, மொழியோ, யதார்த்தமோ இந்த ஒரு கோடி ரூபாய் மருத்துவர்களுக்கு தெரியவே தெரியாது.

doctorகிட்னி திருட்டு முதல் மருந்து நிறுவனங்களின் ஏஜென்டுகளாக மக்களை பரிசோதனை எலியாக்குவது முதல் பல வகைகளில் மக்களை கொள்ளையடித்து தாங்கள் செலவழித்த பணத்தை வசூலிக்க போகிறார்கள். இறுதியில் பிள்ளைகளை மருத்துவப் படிப்பு படிக்கவைக்கவில்லை என்றாலும் உங்களது பணம் இப்படி சுற்று வழியில் முதலாளிகளுக்கு பறிபோகப் போகிறது.

இது யாரோ மருத்துவம் படிப்பவர்களின் பிரச்சனையல்ல. நம் அனைவரின் பிரச்சனை. உயிர்காக்கும் மருத்துவத்தையே இப்படி ஏலம் போட்டு விற்கிறார்கள் என்றால் இந்த அரசும், அமைப்பும் நாசாமாக போகட்டும் என்று புலம்புவது போதுமா? புறப்படுங்கள் – போராட்டத்திற்கு!

செய்தி ஆதாரம்:

  1. காய்ச்சலுக்கும் கீமோ தெரபி கொடுத்தால் தான் போட்ட காசை எடுக்க முடியும் 🙂

  2. நீட் தேர்வு என்பது நாடெங்கிலும் நடைபெறும் பல்வேறு வகையான தேர்வுகளை ஒருங்கிணைக்கும் ஒன்று என்று தான் அரசே சொல்லிக்கொள்கிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒருவர் தான் மருத்துவம் பயில முடியும். இதை தாண்டி இத்தேர்வுக்கும் மாணவர்களை சேர்க்கும் நடைமுறைக்கும் சம்பந்தமில்லை. மாணவர் சேர்க்கையை அந்த அந்த நிர்வாகங்கள் கவனித்துகொள்ள வேண்டும். ஒரே ஒரு நிபந்தனை சேர்க்கபடும் மாணவர் நீட் தேர்வில் மெரிட் லிஸ்டில் இருக்க வேண்டும்.
    நீட் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை இதை உறுதிசெய்கிறது. தீர்ப்பின் ஒரு பகுதி

    The Supreme Court has consistently held that the
    right to administer an educational institution would also
    include the right to admit students, which right, in our
    view, could not be taken away on the basis of
    Notifications issued by the MCI and the DCI which had no
    authority, either under the 1956 Act or the 1948 Act, to
    do so. The MCI and the DCI are creatures of Statute,having been constituted under the Indian Medical Council
    Act, 1956, and the Dentists Act, 1948, and have,
    therefore, to exercise the jurisdiction vested in them by
    the Statutes and they cannot wander beyond the same. Of
    course, under Section 33 of the 1956 Act and Section 20
    of the 1948 Act, power has been reserved to the two
    Councils to frame Regulations to carry out the purposes
    of their respective Acts. It is pursuant to such power
    that the MCI and the DCI has framed the Regulations of
    1997, 2000 and 2007, which set the standards for
    maintaining excellence of medical education in India.
    The right of the MCI and the DCI to prescribe such
    standards has been duly recognised by the Courts.
    “”However, such right cannot be extended to controlling all
    admissions to the M.B.B.S., the B.D.S. and the Postgraduate
    Courses being run by different medical
    institutions in the country. At best, a certain degree
    of control may be exercised in regard to aided
    institutions, where on account of the funds being

  3. நீட் தேர்வு ஏழை மாணவர்களுக்க் எப்படி உதவும் என்பது குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பிலிருந்து. கொடுமை.

    128.The
    learned ASG submitted that NEET had been introduced in
    the national interest to ensure that meritorious students
    did not suffer the problem of appearing in multiple
    examinations conducted by various agencies which also
    resulted in different standards for admission, which hadthe effect of compromising merit. Mr. Luthra urged that
    the earlier system of multiple examinations was neither
    in the national interest nor in the interest of
    maintaining the standards of medical education, nor did
    it serve the interest of poor/middle class students

    ”who had to buy forms of several examinations and travel
    across the country to appear in multiple examinations”.

    It was urged that any Regulation framed in the national
    interest must necessarily apply to all educational
    institutions, whether run by the majority or the minority
    groups. It was also urged that such a Regulation must
    necessarily be read into Article 30 of the Constitution.
    Mr. Luthra referred to the views expressed in that behalf
    in Paragraph 107 of the judgment in the T.M.A. Pai
    Foundation case (supra). The learned ASG submitted that
    the amended Regulations do not restrict or in any manner
    take away the rights of the minority institutions under
    Articles 19(1)(g) and 30 of the Constitution to admit
    students from their community.

  4. பத்தாம் வகுப்பு மற்றும் பனிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் சிறப்பான தேர்ச்சி பெற்றவர்களிடம் ”என்னவாக போகிறீர்கள்?” என்று ஒரு வழக்கமான கேள்வி கேட்கப்படும். நாமெல்லோருமே சலித்துக் கொள்வதைப்போல அந்த மாணவர்கள் “டாக்டராகி சேவை செய்யப்போகிறேன்” என்றோ ”ஐ ஏ எஸ் அல்லது ஐ பி எஸ் ஆகி நல்லது செய்வேன்” என்றோ சொல்வார்கள்.வெகு சிலர் மட்டுமே பொறியியல், ஆடிட்டர் என்று சொல்வதையும் பார்த்திருப்போம். (அவர்கள் இரண்டாம் தலைமுறையாக பட்டதாரியாகப் போகும் மாணவர்களாக இருப்பர்).இப்படி பெரும்பான்மையான மாணவர்கள் அதிலும் சாதாரண குடும்பத்திலிருந்து வரும் மாணவர்கள் மருத்துவர் மற்றும் அரசு உயரதிகாரம் பெற்றவர்களாகி ”சேவை” செய்யப்போகிறேன் என்று சொல்வதை பெரியவர்களாகிய நம்மில் சிலர் ஒரு போலித்தனமான லட்சியம் என்பது போல ஒரு நமட்டு சிரிப்போடு கடந்து போவோம்.ஆனால் அந்த மாணவர்கள் அந்த வயதில் மனதிலிருந்து தான் பேசுகிறார்கள் என்று நாம் முதலில் அங்கீகரிக்க வேண்டும்.அந்த வயதின் புரிதலில் அவர்கள் அவ்வாறு பேசுவது யதார்த்தமில்லை என்பது இந்த நாட்டில் ’எல்லா அனுபவமும்’ நிறைந்த நமக்கு புரிகிற அளவிற்கு மாணவர்களுக்கு புரிந்திருக்க முடியாது என்பதையும் நாம் சேர்த்து புரிந்து கொள்ள வேண்டும்.ஆனால் நீட் தேர்வு, அதன் முடிவுகளுக்கு பின்னர் ஒரு தனியார் கல்லூரியில் சேர்வதற்கான பணத்தகுதி என்னவென்பது எல்லாம் இப்போது வெளிப்படையாக தெரிய வைக்கிற வேலையைத் தான் உச்ச நீதிமன்றமும், மத்திய மாநில அரசுகளும் செய்து கொண்டிருக்கின்றன. இனி வரும் ஆண்டுகளில் மாணவர்களே ”மருத்துவம் படிக்கிற அளவிற்கு என்னிடம் பணமில்லாததால் நான் ஐ டி ஐ தான் படிப்பேன்” என்று சொல்லக் கூடிய ‘உலகறிவை’ அந்த வயதில் அடைந்திருப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.அந்த வகையில் புதிய கல்விக் கொள்கையின் அடிநாதமான ‘நோக்கம்’நிறைவேறப் போகிறது.

    நீட் தேர்வு பற்றி பல்வேறு தரப்பிலும் கடுமையான எதிர்ப்பு நிலவி வந்த போதிலும் ஒரு சில ஊடகங்கள், மத்திய அரசுத் தரப்பு மற்றும் உச்ச நீதிமன்றம் போன்றவர்கள் நீட் தேர்வு என்பதன் வாயிலாக தனியார் மருத்துவ கல்லூரிகளில் நிலவி வரும் பணத்தின் ஆதிக்கம் தடுத்து நிறுத்தப்படும், தகுதியும் திறமையும் கொண்ட மாணவர்கள் மருத்துவ கல்வியை பயிலும் வழிமுறைகள் எளிதாகும் என்றெல்லாம் ஆசை வார்த்தைகள் மக்கள் முன் வைத்து வந்தனர்.இந்த வார்த்தைகள் நீதிமன்றத்திலும் நீதிபதிகளின் நோக்கமாக பல கட்டங்களில் உச்சரிக்கப்பட்டன.ஆனால் நீட் தேர்வு முடிவை வெளியிட்டபின் மருத்துவ கவுன்சிலானது தன்னுடைய கடமையாக 15% அரசு கல்லூரிகளுக்கான இடங்களை நிரப்புகின்ற வழக்கமான நிலையிலேயே நின்று கொள்வதாக அறிவிக்கை வெளியிட்டிருக்கிறது.தவிரவும் 15% அரசு கல்லூரி இடங்களுக்கான கலந்தாய்விற்கு தகுதி பெற்றவர்கள் என ஒரு பகுதியினரையும், அதற்கடுத்த கட்ட மதிப்பெண் பெற்றவர்களை ”நீட் தகுதி பெற்றவர்கள் ” என்று இரண்டு நிலைகளில் முடிவை அறிவித்துள்ளனர். முதல் நிலையில் தேர்வு பெற்றும் அரசு ஒதுக்கீடு கிடைக்கப்பெறாதவர்களும், நீட் தகுதி பெற்றவர்களும் தனியார் கல்லூரிகளை மட்டுமே நம்பியுள்ள நிலையில் மருத்துவ கவுன்சிலானது அதற்கான எந்த நெறிமுறைகளையும் வகுக்காமல் ஒரு கள்ள மொளனத்துடன் ஒதுங்கி கொண்டிருக்கிறது.

    மருத்துவ கவுன்சிலின் பாராமுகம் இந்த பிரச்சினையில் தனியார் மருத்துவ கல்லூரி நிர்வாகத் தரப்பிற்கு ஆதரவாக இருப்பதாகவே சந்தேகிக்க வேண்டியுள்ளது.ஊழலுக்கும் மருத்துவ கவுன்சிலுக்கும் உள்ள உறவு நகமும் சதையுமானது என்பதை அனைவரும் அறிவர்.15% அரசு கல்லூரிகளுக்காக 1:4 என்ற விகிதத்தில் அதாவது ஒரு இடத்திற்கு 4 மாணவர்கள் என்கிற அளவில் தகுதியானவர்கள் பட்டியல் வெளியிட்டுள்ள மருத்துவ கவுன்சில் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கான இடங்களுக்கு மட்டும் 1:8 என்ற விகிதத்தில் தகுதி படைத்தோர் என அறிவித்திருப்பது தனியார் கல்லூரி இடங்களுக்காக தேர்ச்சியான மாணவர்களிடையே கடும் போட்டியை உருவாக்கி கல்லூரிகளின் பேர வலிமையை கூட்டியுள்ளது.வேறு வார்த்தைகளில் சொல்வதானால் தனியார் கல்லூரிகளின் வேட்டைக்காக ஒரு பெரும் கூட்டத்தை/சந்தையை ஏற்படுத்தி தந்திருக்கிறது.

    இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகளுக்கு பின்னர் இந்திய மருத்துவ கவுன்சிலை நோக்கி எழுப்பப்படும் அதிகரித்துவரும் மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலாக மருத்துவ கவுன்சில் தனது 17ம் தேதியிட்ட அறிவிக்கையொன்றில் தனியார் மருத்துவ கல்லூரி சேர்க்கை தொடர்பாக அந்தந்த மாநில மருத்துவ கல்வி இயக்குனரகத்தை அணுகுமாறு கோரப்பட்டுள்ளது.அந்த அறிவிக்கை என்பது ஒரு அரசு உத்தரவு என்கிற அடிப்படையில் எந்த அதிகாரியின் பெயரோ, பதவியின் பெயரோ,கையொப்பமோ இன்றி உள்ளது என்பது ஒரு வியப்பான செய்தியாகும்.இந்த அறிவிப்பானது பொதுமக்கள் மாணவர்கள் தரப்பில் எழுப்பப்படும் கேள்விகளுக்கான மழுப்பலான கைகாட்டலாகவே வழங்கப்பட்டுள்ளது என்று கருத ஏதுவாகிறது.(அந்த அறிக்கை இணைப்பாக இங்கே உள்ளது::க்ட்ட்ப்://ந்ந்ந்.ம்ச்ச்.னிச்.இன்/MCCறெச்/ஸ்கொந்-Pட்f?Tய்பெ=ஏ0184ஆDஏDF913B076626646D3F52C3B49C39ஆD6D&ஈD=B888B29826BB53DC531437ஏ723738383D8339B56 )

    இந்த சூழலில் இந்த அறிவிப்பையே சான்றாக கொண்டு மாநில அரசுகள் தனியார் மருத்துவ இடங்களை நீட் தேர்வு முடிவின் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் நிரப்ப முன்வருமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.குறிப்பாக தமிழக அரசு இந்த கடமையை தானே கையிலெடுக்குமா என்பது சந்தேகமே.ஏனெனில் ஆளும்,ஆண்ட கட்சிகளின் பிரமுகர்கள் மட்டுமல்லாது பச்சமுத்து மற்றும் விஜயகாந்த் குடும்பத்தினரும் கூட இத்தகைய தனியார் கல்லூரிகளின் உரிமையாளர்களாக கல்லா கட்டி வருவது தான்.தனியார் மருத்துவ கல்லூரி இடங்களைப் பொறுத்தவரை அவை அரசியல் பிரமுகர்கள், உயரதிகாரிகள், ஏன் நீதித்துறையின் பிரமுகர்கள் வரை அனைவரின் வாரிசுகளுக்கும் அன்பளிப்பாகவோ பேரம் பேசியோ திருட்டுத்தனமான வழிகள் மூலமாக இடம் வாங்கும் வாய்ப்பாக இருந்து வருகிறது.இந்த கள்ள வழிகள் அடைக்கப்பட்டு நேர்மையான வழியில் சேர்க்கை நடைபெறுவதை இவர்கள் எல்லோரும் சேர்ந்து தடுக்க முனைவர் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

    ஒருவகையில் நீட் தேர்வு தவிர்க்க முடியாதென்றால் அதன் பலனை தனியார் மருத்துவ கல்லூரிகளின் நலனுக்கானதாக இல்லாமல் மாணவர்களின் நலனுக்கு உகந்ததாக அந்த இடங்களை முறையாக ஒதுக்குகின்ற நடைமுறை வேண்டியுள்ளது.இதற்கு மாநில அரசின் தலையீடு அவசியமாகிறது.இதற்கான அழுத்தம் தர வேண்டியது மருத்துவம் சேவைத்துறையாக இன்னும் சில காலமாவது நீடிக்க விரும்புகிறவர்கள் செய்ய வேண்டிய காரியமாக இருக்கிறது.தமிழகத்தில் உள்ள எந்த தனியார் மருத்துவ கல்லூரியும் சேர்க்கை அறிவிப்பு எதனையும் செய்யாத நிலையில் (எஸ் ஆர் எம், ராமசந்திரா போன்றவை நிகர்நிலை பல்கலை என்ற பிரிவில் தனித்து கொள்ளையடிக்கும் ‘தகுதி’யை சட்ட பூர்வமாக பெற்றுள்ளதாம்) தனியார் கல்லூரிகளின் முகவர்கள் என்று தம்மை அறிமுகம் செய்து கொண்டு பலரும் மாணவர்கள் மற்றும் பெற்றோரை அணுகி வருகின்றனர்.இந்த அதிகாரபூர்வமற்ற செயல்பாடுகளை நம்பி பலரும் ஏமாறுகின்ற நிலை உருவாகி வருகின்றது என்பதும் கவனிக்கத்தகுந்தது. மாணவர்கள் அலைக்கழிக்கப் படுவதில் இருந்தும், பெற்றோர் முகவர்களின் தவறான வழிகாட்டுதலுக்கு இரையாவதில் இருந்தும் தடுக்கும் பொருட்டும் அகில இந்திய நீட் தேர்வின் தரவரிசைப் பட்டியலின் படி ஒரு திறந்த, நேர்மையான கலந்தாய்வுக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குனரகம் விரைவில் தொடங்க வேண்டும்.கேரள மாநிலமும், மகாராஷ்டிரமும் இதனை ஒழுங்கு படுத்தி வருகின்றன.கேரளம் ஒரு முன்னோடி திட்டமாக வசதி குறைந்த பிரிவினருக்கான தனியார் மருத்துவ கல்லூரி கட்டணம் வெறும் 25,000 என நிர்ணயித்துள்ளது.(அங்கும் பிற பிரிவினருக்கான கட்டணம் 11 லட்சம் வரையுள்ளது)அந்த வகையில் தமிழக அரசு அதன் மருத்துவ கல்வி இயக்குனரகம் ஒற்றை சாளர முறையில் கலந்தாய்வு செய்து தனியார் கல்லூரி இடங்களை முறையாக ஒதுக்கீடு செய்யவும் கட்டண விகிதத்தை கேரளம் போல குறைந்த அளவில் நிர்ணயம் செய்யவும் குரல் எழுப்பவும் வேண்டும். அதேநேரத்தில் எஸ் ஆர் எம், செட்டிநாடு குழுமம், ராமசந்திரா போன்ற தனியார் நிகர்னிலை பலகலைத் தகுதியை ரத்து செய்யவும் கோரவேண்டும்.

  5. //அதாவது பணத்தோடு கூடவே “மெரிட்”டையும் கணக்கில் கொள்ள வேண்டும். இதை தகர்ப்பது என்ன கம்பசூத்திரமா என்ன? அதன்படி தற்போது ஆண்டுக் கட்டணம் கிட்டத்தட்ட கால் கோடி ரூபாய் என்பதால் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு “மெரிட்” இருந்தாலும் பணமும் வேண்டும். பணமில்லாத “மெரிட்” மாணவர்கள் விண்ணபிக்கமுடியாது.//

    அமெரிக்க முறைப்படி மெரிட் உள்ள ஏழை மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கப்படும் . அதை அவர்கள் வாழ்நாள் முழுவதும் பணி செய்து அடைந்துவிடலாம் .

    • That means the poor students who avail educational loans will become bonded laborers for life time.Private universities and banks will flourish at the cost of poor students.State Bank of India,after becoming “big”after merger of subsidary banks,like American big banks,may refuse to give educational loans to poor students.Then like poor in America,the parents of poor medical students will be at the mercy of “payday loan sharks”who charge interest rates ranging from 100 to 300 percent.There is mushroom growth of “payday loan”shops in America even outstripping branches of Walmart.Big banks of America are no longer opening accounts for poor people.

Leave a Reply to ravi பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க