privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்பா.ஜ.ககாவிரி முழு அடைப்பு - தமிழகமெங்கும் மக்கள் அதிகாரம் போராட்டம்

காவிரி முழு அடைப்பு – தமிழகமெங்கும் மக்கள் அதிகாரம் போராட்டம்

-

1. தர்மபுரி

cauvery-issue-dharmapuri-rail-roko-agitation-6காவிரி நதிநீர் வழங்ககோரி தமிழகம் தழுவிய பந்தை ஆதரித்து அனைத்து கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் தருமபுரியில் நடைப்பெற்றது. 16-09-2016 வெள்ளிக்கிழமை மதியம் 1 மணியளவில் நடந்த இந்த ரயில் மறியல் போராட்டத்தில் வி.சி.க, கம்யூனிஸ்ட், ம.தி.மு.க, தி.க உள்ளிட்ட கட்சிகளை சார்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர். தோழர் முத்துக்குமார் தலைமையில் மக்கள் அதிகாரமும் ரயில் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.

அனைத்துக் கட்சிகளும் சுமார் 12 மணியளவில் அரசு மருத்துவமனை அருகில் ஒன்று திரண்டு பேரணியாகச் முழக்கமிட்டவாறே சென்றனர், அப்போது மூன்று இடங்களில் தடுப்பரண்களை அமைத்தது போலீசு. அனைத்தையும் கடந்து சென்று ஆக்ரோசமாக முன்னேறினர்.

கைதாகும்படி இன்ஸ்பெக்டர் கூறினார். ரயிலை மறித்து பின்னால்தான் கைதாகுவோம் என்று அனைவரும் கூறினர். பின்னர் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக முழக்கமிட்டவாறே ரயில் நிலையத்தில் காத்திருந்தனர். ரயில் வந்த பின்னர், போலீசார் கயிறு மூலம் ஏற்படுத்திய தடுப்பரண்களை கடந்து ரயிலை மறித்தனர். அதன் பிறகே 160 பேரை போலீசார் கைது செய்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மக்கள் அதிகார முழக்கங்களை அனைத்து கட்சிகளும் ஆக்ரோசத்தோடு முழங்கினர். இந்தப் போராட்டம் மக்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றது.

செய்தி
மக்கள் அதிகாரம்.
தருமபுரி
9043400580

2. கரூர்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம்,
கரூர்

3. புதுச்சேரி

cauvery-issue-puduvai-demo-1காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவோம்! செப் – 16 : புதுச்சேரியில் முழக்க ஆர்ப்பாட்டம்!

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக, கன்னட வெறியர்கள் கர்நாடகா வாழ் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களின் உடமைகள், சொத்துக்கள் சேதப்படுத்தி வருகின்றனர். மேலும் தமிழக பேருந்துகளை தாக்கியும், எரித்தும் வருவதுடன், வாகன ஓட்டிகள் தாக்கப்பட்டும் வருகின்றனர். இவ்வாறு தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற வகையில் வருகின்ற 16 – செப், 2016 அன்று தமிழகம் புதுவை ஆகிய மாநிலங்களில் பல்வேறு கட்சிகள் – அமைப்புகள் ஒரு நாள் கதவடைப்புக்கு (பந்த்) அழைப்பு விடுத்திருந்தன. இந்தக் கதவடைப்புப் போராட்டத்தினை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆதரித்து புதுச்சேரி நகரின் முக்கிய சாலைச் சந்திப்பான ராஜீவ் காந்தி சதுக்கத்தில் புதுச்சேரி பு.ஜ.தொ.மு தலைவர், தோழர் சரவணன் தலைமையில் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இப்போராட்டத்தில் புதுச்சேரி மக்கள் அதிகாரம் அமைப்புத் தோழர்களும் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.

cauvery-issue-puduvai-demo-3செப் – 16 கதவடைப்புப் போராட்டத்தை ஆதரித்து பல்வேறு கட்சிகள், அமைப்புகள் காலை முதலே பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்ததால், தமிழக அரசின் பேருந்துகள் மற்றும் வாகனங்களை நகரத்தின் எல்லையில் நிறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை எல்லாம் கைது செய்து அப்புறப்படுத்தி விட்டு பகல் 11.00 மணிக்கு மேல் வாகனங்களை நகரத்திற்குள் அனுமதித்திருந்தது போலிசு. நமது போராட்டம் பகல் 11.30 மணிக்கு மேல் நடத்தப்பட்டதால் நமது முழக்கம் மக்கள் மத்தியில் சென்றடையும் வகையில் இருந்தது.

போராட்டத்தில்

  • தமிழகத்துக்கான பங்கில் சூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதங்களில் காவிரி டெல்டா பகுதியின் சம்பா பருவ விவசாயத்துக்கு 100 டி.எம்.சி. தண்ணீர் விடப்பட வேண்டும். ஆனால், வெறும் 35.97 டி.எம்.சி. தண்ணீரை மட்டுமே விடுவித்ததால் டெல்டா விவசாயிகளது வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகி உள்ளது. இவர்களின் வாழ்வாதாரம் காப்பதற்கு காவிரியில் தமிழகத்திற்கான உரிமையை நிலைநாட்டுவோம்!
  • cauvery-issue-puduvai-demo-4மாநிலத்தில் ஆளும் காங்கிரசு, தனது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள வன்முறையைக் கட்டுப்படுத்தாததால் கர்நாடக வாழ் தமிழ் மக்களின் உடமைகள், சொத்துக்கள், சேதப்படுத்தப்படுத்தப்பட்டதற்கும், தமிழக வாகனங்கள் எறிக்கப்பட்டதற்கும் உரிய நட்ட ஈடு வழங்க கர்நாடக அரசினை நிர்ப்பந்திப்போம்!
  • தேசிய ஒருமைப்பாடு பேசுகின்ற காங்கிரசு, பி.ஜே.பி. கட்சிகளோ காவிரிப் பிரச்சினையில் மாநிலத்திற்கு ஒரு நிலைப்பாடு எடுத்து உழைக்கும் மக்களைப் பலியிட்டு பன்னாட்டு நிறுவனங்களின் தரகர்களாக செயல்பட்டு வருவதை அம்பலப்படுத்தி அவர்களைப் புறக்கணிப்போம்!
  • கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கும், பார்ப்பனிய எதிர்ப்புப் பாரம்பரியமிக்க தமிழகத்திற்கு எதிராக திட்டமிட்டே இனவெறியைத் தூண்டி வன்முறையை தலைமை ஏற்று நடத்தி வரும் பி.ஜே.பி. சங் பரிவார் கும்பலை அம்பலப்படுத்துவோம்!
  • மழை வளம் குறைவதும், நிலத்தடி நீர் குறைவது – மாசடைவதும் தனியார்மய, தாராளமய, உலகமயம் உள்ளிட்ட மறுகாலனியாக்கக் கொள்கைகள் அமல்படுத்தப் படுவதால், உருவானவையே. தனது லாபவெறிக்காக இயற்கை வளங்களைச் சுரண்டி மக்கள் விரோதக் கொள்கைகளை அமல்படுத்தும் முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கும், அதற்கு துணைநிற்கும் இந்த அரசுக் கட்டமைப்பை வீழ்த்தப் போராடுவோம்!

ஆகிய விசயங்களின் அடிப்படையில் தொடர்ச்சியாகவும் வீச்சாகவும் முழக்கமிடப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

முழக்கமிடத் துவங்கிய 20 நிமிடத்தில் போலிசு அனைவரையும் கைது செய்தது. வழக்கமான நடவடிக்கைகளுக்குப் பிறகு, அதிகாரிகள் சொன்னால் தான் வெளியில் அனுப்புவோம் என கூறியதால், வந்திருந்த தோழர்கள் மத்தியில் காவிரிப் பிரச்சினையைப் பற்றி விளக்கக்கூட்டம் நடத்தப்பட்டது. சிறிது நேரத்தில் நம்மை அழைத்த போலிசு, அதிகாரி இங்கு வர வாய்ப்பில்லாததால், போனில் தொடர்பு கொண்டு பேசி நம்மை அனுப்புவதாகக் கூறி விடுவித்தனர்.

தகவல்,

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி
தொடர்புக்கு: தோழர். பழனிசாமி, 9597789801

4. தேனி

cauvery-issue-theni-meeting-1காவிரியை முடக்கும் கர்நாடக அரசு!
தீர்ப்பை அமுலாக்கா வக்கற்ற மோடிஅரசு!!
நடுநிலை நாடகமாடும் உச்சநீதி மன்றம்!!!
செயலற்று கிடக்கும் ஜெயா அரசு!!!

ஆகியவற்றைக் கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் தென்மண்டலம் சார்பில் 15-09-2016 அன்று கூடலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இறுதிநேரம் வரை அனுமதிக்கான விண்ணப்பத்தையே வாங்க மறுத்த போலிசு, கடைசியாக “சரி உங்களுக்கு தெரிந்தைப் பாருங்கள்.எங்களுக்கு முடிந்ததை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்!” என்று கூறிய பிறகுதான் அனுமதியளித்தது.

cauvery-issue-theni-meeting-4ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த தோழர் மோகன் போலிசின் மேற்கண்ட அலட்சியத்தை வன்மையாக கண்டித்ததுடன், தனது தலைமை உரையில்,”காவிரி, முல்லைப் பெரியாறு ஆகிய நதிநீர் பிரச்சனைகளில் உள்ளூர் அரசியல் பிரமுகர்களின் துரோகத்தை அம்பலப்படுத்தினார். குறிப்பாக தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ இராமகிருஷ்ணன் தனது கல்லூரியின் விழாவுக்கு கர்நாடக சாமியாரைக் கூட்டிவந்து கவுரவப் படுத்துகிறார்! அந்த சாமியாரோ பெங்களூரில் தமிழகத்திற்கு தண்ணீர் விடக்கூடாது என்று போராட்டம் நடத்துகிறார்! மேலும் முல்லைப்பெரியாறின் நீரை உறிஞ்சி விற்பதற்காக பெப்சி கம்பெனி அரசின் எந்தத் துறையிலும் அனுமதிபெறாமல் தனது ஆலைக் கட்டிடத்தை பகிரங்கமாக கட்டி வருகிறது. மாவட்டத்தின் அனைத்து அதிகாரிகளுக்கும் இது நன்கு தெரிந்தாலும் திட்டமிட்டே இதை மூடிமறைத்து வருகிறார்கள். இதற்கு எதிராக ஒரு கட்சியும் வாய்திறக்க மறுப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பியதோடு, ஆற்று மணலைக் கொள்ளையடிப்பதிற்கும், விளைநிலத்தை தரிசாக்கி பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு விற்பதற்கும்தான் திட்டமிட்டு நதிநீர் பிரச்சனைகளில் ஓட்டுக்கட்சிகள் அமைதி காக்கின்றன!” என்று பேசினார்.

cauvery-issue-theni-meeting- thiru-karuppaiya-mullai-periyaru-dam-protection-movement
முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த தேவாரம் திரு.கருப்பையா

அடுத்து, முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த தேவாரம் திரு.கருப்பையா, “பிஜேபி கட்சியும், இனவெறி அமைப்புக்களும்தான் கர்நாடகாவில் இன்று கலவரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ‘இந்தியா ஒரேநாடு! நாம் எல்லோரும் இந்தியர்கள்! இந்துக்கள்!” என்று கூப்பாடுபோடும் இவர்கள் தமிழகத்திற்கு மட்டும் தண்ணீர் தரக்கூடாது என்கிறார்கள். ஏன்?…தமிழகம் இந்தியாவில் இல்லையா? தமிழகத்தில் இந்துக்கள் இல்லையா?

ரஜினியை கூட்டிப் போனால் காவிரி நீர் நமக்கு வந்துவிடும் என்கிறார் தமிழிசை. உங்கள் பிள்ளையாரை தூது விட வேண்டியதுதானே?” என்று காவிரி பிரச்சனையில் பிஜேபி-யின் இரட்டை வேடத்தை தோலுரித்தார்!

மக்கள் அதிகாரத்தின் மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் குருசாமி தனது உரையில்,”காவிரியில் தமிழகம் தனது தேவைக்காக பிச்சை எடுக்கவில்லை. காவிரி நடுவர் மன்றம் சட்டரீதியாக தமிழகத்திற்கு ஒதுக்கிய பங்கீட்டு நீரைத்தான் கேட்கிறோம். இதுநம் உரிமைப் பிரச்சனை! என்று விளக்கியதோடு, கர்நாடகாவுக்கு எதிராக வன்முறையை-இனவெறியை தூண்டுவது நம் நோக்கமல்ல. தமிழகத்தின் உரிமைக்காக விவசாயிகள் கட்சி வேறுபாடின்றி போராட முன்வர வேண்டும் என்றுதான் கோருகிறோம்!” என்றார்.

தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் துணைத்தலைவர் திரு.செங்குட்டுவன், ”காவிரி நீருக்கான போராட்டத்தில் வியாசாயிகள்தான் ஒன்றுபட்டு போராடவேண்டும். கட்சிகளை நம்பி எந்தப்பயனும் இல்லை. முன்பெல்லாம் ஆடுமாடுகள் நீர்குடிக்கும் குளத்தில்தான் நம்மளும்குடித்தோம். அப்போதெல்லாம் யாருக்கும் எந்த நோயும் வரவில்லை. இப்போ விவசாயியே பாட்டில் தண்ணியை வாங்கி குடிக்கும் நிலைக்கு ஆளாயிட்டோம்! பன்னாட்டுக் கம்பெனிக் காரனுக்கு நட்டம்னா ஓடிப்போயி உதவிசெய்யிற இந்த அரசு, சொந்த நாட்டு விவசாயிக்கு நட்டம்னா காசில்லைங்குது! ஒரு கட்சியும் நம்மளப்பத்தி கவலைப்படுறதில்ல! எனவே நம்மதான் நமக்காக போராடி பிரச்னையை தீத்துக்கணும்!” என்று விவசாயிகள் மொழியிலேயே சிறப்பாகப் பேசினார்.

cauvery-issue-theni-meeting-com-kathiravan-pala-joint-sec
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைச்செயலர் தோழர் கதிரவன்

சிவகங்கை தோழர் நாகராஜ் தனது உரையில், ”ஒன்றோடு ஒன்று எதிரி நாடுகளாக நின்று போரிட்டுக்கொள்ளும் நாடுகள் எல்லாம் தங்களுக்குள் நதிநீரை பங்கிட்டுக் கொள்வதில் ஒற்றுமையாக இருக்கின்றன. ஆனால் இந்தியாவிற்குள் இருக்கும் இருமாநிலங்களுக்கு இடையில் உள்ள நதிநீரை பகிர்ந்து கொள்ளமுடியா விட்டால் இந்திய ஒருமைப்பாடு எங்கே இருக்கிறது? நாட்டின் கணிமவளத்தைக் கொள்ளையடிப்பதிலும், விவசாயத்தை ஒழித்துக்கட்டி விவசாயிகளை நிலத்திலிருந்து விரட்டியடிப்பதிலும் ஓட்டுக்கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக நிற்கின்றன என்பதை விவசாயிகள் புரிந்துகொள்ள வேண்டும்!” என்று கூறினார்.

இறுதியாக பேசிய மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைச்செயலர் தோழர் கதிரவன், “பெங்களூரு நகரம் கன்னடர்களுக்கு மட்டும் சொந்தமல்ல. அங்கு மூன்றில் ஒரு பங்கினராக உள்ள தமிழர்களின் உழைப்பில்தான் பெங்களூரு இன்று பெருநகரமாக உயர்ந்து நிற்கிறது” என்று தொடங்கி, காவிரி பிரச்சனையில் பி.ஜே.பி.யின் இரட்டைவேடத்தை தோலுரித்துப் பேசியதோடு, அதன் இந்துமதவெறி அரசியலையும் அம்பலப்படுத்திப் பேசினார்.

கூடியிருந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் காவிரி பிரச்சனையில் நமது நிலையை விரிவாக எடுத்துரைக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் அமைந்தது.

தகவல்
மக்கள் அதிகாரம்,
தேனி

5. திருவள்ளூர்

  • காவிரியை முடக்கும் கர்நாடக அரசு!
  • தீர்ப்பை அமலாக்க வக்கற்ற மோடி அரசு!!
  • நடுநிலை நாடகமாடும் உச்ச நீதிமன்றம்!!!

காவிரி நதிநீரில் தமிழகத்தின் உரிமையை மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், மெளனம் காக்கும் மத்திய அரசை அம்பலப்படுத்தியும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பில் தொழிலாளர்களை அணிதிரட்டி 16-09-2016 காலை 10:30 மணியளவில் கும்மிடிப்பூண்டி தபால் நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் தோழர் கே.எம்.விகந்தர் தலைமை தாங்கினார். மாநில இணைச்செயலாளர் தோழர்.ம.சி.சுதேஷ்குமார் ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றினார்.

தமிழக விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சினையாக காவிரி நதிநீர் பிரச்சினை இருந்துவருகிறது. இந்த பிரச்சினையில் நீதிமன்ற தீர்ப்பையுங்கூட நடைமுறைபடுத்த மறுத்து திட்டமிட்டு இனக்கலவரத்தை நடத்தி தமிழகத்தை வங்சித்து வருகிறது, கர்னாடக இனவெறி அமைப்புகள். இத்தகைய சூழலில் காவிரி நதிநீரில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட பல்வேறு சங்கங்கள் ஒன்றிணைந்து அறிவித்த ஒருநாள் பந்த் அன்று நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டம் பகுதி மக்களிடையே மிகுந்த ஆதரவை பெற்றது. கும்மிடிப்பூண்டி பகுதியில் பல்வேறு அரசியல் கட்சிகள் இருந்தபோதிலும், எந்த ஓட்டுக்கட்சியும் எதுவும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்,

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்.
தொடர்புகொள்ள: 9444461480

6. திருவெண்ணெய் நல்லூர் ரயில் மறியல்

திருவெண்ணெய் நல்லூர், மக்கள் அதிகாரம் , வி.வி.மு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைந்து ரயில் மறியல் போராட்டம். 100 க்கும் மேற்பட்டோர் கைது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம்,
திருவெண்ணெய் நல்லூர்

7. திருவாரூர்

காவிரியில் உரிய தண்ணீர் முழுவதும் பெற்று கொடுத்திட, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட, காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்றுக் குழு அமைத்திட, கர்நாடகாவில் தமிழர்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்திட வேண்டி மத்திய – மாநில அரசுகளை வலியுறுத்தி காவிரி போராட்டக்குழு சார்பில் மாபெரும் முற்றுகைப் போராட்டம் 16-09-2016 அன்று திருவாரூர் வெள்ளக்குடியில் உள்ள மத்திய அரசின் GAIL நிறுவனம் முற்றுகையிடப்பட்டது. முன்னதாக அப்பகுதியில் உள்ள மன்னார்குடி சாலையில் காலை 10 மணியில் இருந்து, 11.30 வரை மறியல் போராட்டம் நடத்தப்பட்டு அதன்பிறகு GAIL நிறுவனம் முற்றுகையிடப்பட்டது. பிறகு காவல் துறையினர் அனைவரையும் கைது செய்து மண்டபத்தில் அடைத்து மாலையில் விட்டனர். இதில் தி.மு.க., தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்கள், மக்கள் அதிகாரம் மற்றும் பல்வேறு ஜனநாயக அமைப்புகளை சேர்ந்தவர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

8. பட்டுக்கோட்டை

பட்டுக்கோட்டையில் மக்கள் அதிகாரத்தை சார்ந்த 20 தோழர்கள் கொடி மற்றும் முழக்கத்துடன் மணிக்கூண்டில் பேரணியாக சென்று அருகில் உள்ள தபால் நிலையத்தை முற்றுகையிட்டனர். தள்ளுமுள்ளுடன் தோழர்களை காவல்துறையினர் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம்,
திருவாரூர் மாவட்டம்
PH.:9626352829

9. விருத்தாச்சலம்

விருத்தாசலம் தலைமை தபால் நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம்,
விருத்தாச்சலம்

10. வேதாரண்யம்

மிழகத்தின் காவிரி உரிமையை அடாவடியாக மறுத்து வரும் கர்நாடக அரசையும் கள்ள மௌனம் சாதிக்கும் தமிழக அரசையும்,தமிழர்களின் உயிருக்கும் உடைமைக்கும் பெரும் சேதம் விளைவிக்கும் கன்னட வெறியர்களைக் கண்டித்தும் 16-09-2016 அன்று தமிழகம் தழுவிய அளவில் நடைபெறும் கடையடைப்பு ,பேருந்து மற்றும் சாலை மறியல் போராட்டத்தின் ஒரு பகுதியாக வேதாரண்யம் மக்கள் அதிகாரம் அமைப்பினர் 15 பேர் பகுதி தி.மு.க அணிகளுடன் இணைந்து வேதாரண்யம் நாகப்பட்டினம் சாலையில் பேருந்து மறியலில் ஈடுபட்டு கைதாகி உள்ளனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம்
வேதாரண்யம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க