privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திகாஷ்மீர் : இந்தியாவின் பாலஸ்தீனம் ! புதிய கலாச்சாரம் - அக்டோபர் 2016

காஷ்மீர் : இந்தியாவின் பாலஸ்தீனம் ! புதிய கலாச்சாரம் – அக்டோபர் 2016

-

puka16_sep_16 vinavuடந்த 25 ஆண்டுகளாக ஊரடங்கு சட்டம் இல்லாமல் காஷ்மீர் இல்லை. ஆனால், ஈத் பண்டிகை அன்றும் ஊரடங்கு  அமலில் இருந்தது இந்த 2016-ம் ஆண்டில்தான்.

இதுதான் இன்றைய காஷ்மீர். காஷ்மீரை ஒடுக்கும் பா.ஜ.க.வின் முயற்சி பாலஸ்தீனை ஒடுக்கும் இஸ்ரேலோடு போட்டி போடுகிறது. இழிபுகழ் பெற்ற பெல்லட் ரவைகளை இஸ்ரேலிடமிருந்து இந்திய அரசு இறக்குமதி செய்திருக்கிறது. புர்ஹான் வானியின் கொலையைத் தொடர்ந்து நடைபெறும் போராட்டத்தில் இதுவரை 10,000 பேர் காயம்பட்டிருக்கிறார்கள். 73 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சுமார் 700 இளைஞர்களின் பார்வை பறிபோயிருக்கிறது. “விழிகளில் பாய்ந்திருக்கும் இந்த கடுகு அளவே உள்ள இந்த காரீய ரவைகளை அகற்றுவது எப்படி என்று எந்த மருத்துவப் பாடநூலிலும் சொல்லித்

தரப்படவில்லை” என்று கண்ணீர் வடிக்கிறார்கள் ஸ்ரீநகர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள். பெல்லட் குண்டுகளுக்கு மாற்று உத்திகளை யோசிப்பதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடகமாடிய உடனேயே,  ஒவ்வொன்றிலும் 635 ரவைகள் கொண்ட ஒரு இலட்சம் தோட்டாக்கள்  படைகளுக்கு வந்து சேர்ந்தன.

இருப்பினும், தோட்டாவால் துளைக்கப்பட்ட மக்கள் “ஆசாதி..ஆசாதி” என்று முழங்க, துப்பாக்கி ஏந்திய பா.ஜ.க. அரசின் இராணுவம் அவர்களின் முன்னே மண்டியிடும் காட்சியை நாம் காண்கிறோம். காஷ்மீருக்குச் சிறப்புத் தகுதி வழங்கும் 370-வது பிரிவை அரசியல் சட்டத்திலிருந்தே நீக்க வேண்டும் என்று பேசிவரும் பா.ஜ.க.-வின் ராஜ்நாத் சிங், “அரசியல் சட்டத்தின் வரம்புக்கு உட்பட்டு யாருடன் வேண்டுமானாலும் பேசத் தயாராக இருக்கிறோம்” என்று கூறி, 370-வது பிரிவை விழுந்து கும்பிடுகிறார்.

பத்திரிகையாளர்களின் கேள்விக்கணைகளை எதிர்கொள்ள முடியாமல் ஆத்திரம் கொண்ட முதல்வர் மெகபூபாவை அடக்க முயன்று, அனைவர் முன்னிலையிலும் அசடு வழிகிறார் ராஜ்நாத் சிங். அவருடன் காஷ்மீர் சென்ற யெச்சூரி, ராஜா உள்ளிட்ட சர்வ கட்சி பிரமுகர்களை சந்தித்த ஹுரியத் தலைவர்கள் “உங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி, எங்கள் போராட்டத்தின் புனிதத்தன்மையைக் கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை” என்று கூறி ஒருமைப்பாட்டு புரோக்கர்களை நிலைகுலைய வைக்கிறார்கள்.

எனினும், நம் கண்முன்னே நடந்து வரும் ஒரு மாபெரும் மக்கள் திரள் போராட்டத்தின் கம்பீரத்தை, இழப்புகளுக்கு அஞ்சாமல் பார்ப்பன பாசிசத்தை மண்டியிட வைத்த காஷ்மீரை நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

வலியும் உறுதியும் நிறைந்த காஷ்மீர் மக்களின் போராட்டத்தை அறிமுகம் செய்கிறது இந்த தொகுப்பு.

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்

நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • காஷ்மீர்: தொலைந்த சொர்க்கத்தின் மறைந்த வரலாறு!
  • காஷ்மீர் மக்களின் கண்களை பறிக்கும் இராணுவம்
  • காஷ்மீர்: போலீசு கொடுமையால் உருவாகும் போராளிகள்!
  • குண்டுவெடிப்பு குறித்து நிரபராதி அப்சல் குருவின் அறிக்கை!
  • காஷ்மீரில் காசு கொடுத்து ஜனநாயகம் வழங்கும் இராணுவம்
  • எங்கள் வேதனையை உணருங்கள்” என்கிறார்கள் காஷ்மீர் மக்கள்
  • காஷ்மீர் போராட்ட செய்திகளுக்கு தடை போடும் ஃபேஸ்புக்
  • பத்ரிபால் தீர்ப்பு: கொலைகாரர்களே நீதிபதிகளானால் ?
  • காஷ்மீருக்கு உதவினால் ஆர்.எஸ்.எஸ் அடித்து நொறுக்கும்
  • காஷ்மீர் : காங்கிரசு – பாஜக-வின் கள்ளக்கூட்டு !
  • நூலறிமுகம்: காஷ்மீர் –  அமைதியின் வன்முறை
  • ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் – அரச பயங்கரவாதத்தின் கேடயம்
  • காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை!
  • இரணுவத்துடன் படுப்பதா தேசபக்தி ? காஷ்மீர் மாணவி நேர்காணல்
  • காஷ்மீர் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் தினமணி!

பக்கங்கள் : 80
விலை ரூ. 20.00

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 300

ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1600

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்
vinavu@gmail.com