privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைநுகர்வு கலாச்சாரம்இந்தியா : போதை உலகின் வளரும் சந்தை !

இந்தியா : போதை உலகின் வளரும் சந்தை !

-

ந்திய விமானப்படை அதிகாரி ஒருவர் சர்வதேச போதை பொருள் வலைபின்னலின் முக்கிய தலைவனாக செயல்பட்டுவந்தது தெரியவந்துள்ளது. விமானப்படையின் கமாண்டராக செயல்பட்டுவந்த ராஜசேகர் ரெட்டி என்ற அந்த அதிகாரி தற்போது போதை பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

போதை பொருள் கடத்தல் மட்டுமல்லாமல் அதை தயாரிக்கும் வேலையையும் ஒருங்கிணைத்துள்ளார் இவ்விமானப்படை அதிகாரி. பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் ஆராய்ச்சி விஞ்ஞானியாக பணியாற்றி வரும் தனது நண்பராண வெங்கட்ராம ராவ்(37) மற்றும் அவரது மனைவியுடன் இணைந்து “ஆம்ஃபிடமின்” என்ற போதை பொருளை தயாரித்து பல நாடுகளுக்கு விநியோகித்து வந்துள்ளனர். இதற்கென ஹைதராபாத்தில் பிரத்யேக ஆய்வக வசதிகளுடன் கூடிய போதை பொருள் உற்பத்தி நிலையத்தையும் ஏற்படுத்தியுள்ளனர். ஹைதாராபாத்தில் தயாரிக்கப்பட்டு தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா போன்ற தென் கிழக்காசிய நாடுகளுக்கும் விற்பனை செய்துவந்துள்ளனர். அவ்விஞ்ஞானி மற்றும் அவரது மனைவியும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் தவிர விமானப்படையின் மேலும் பல அதிகாரிகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கைப்பற்றப்பட்ட போதை பொருள் மாதிரி படம்
கைப்பற்றப்பட்ட போதை பொருள் மாதிரி படம்

“சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கடந்த டிசம்பர் மாதம் “மெத்தாம்பெடாமைன்” என்ற போதை பொருளுடன் ஜீவன் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் தொடர்ச்சியாக தற்போது இவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார் சென்னை மண்டல் போதைபொருள் தடுப்பி பிரிவு இயக்குநர் பிரேம் ஆனந்த் சின்ஹா.

தமிழகத்தில் சமீப காலமாக டாஸ்மாக் போதையோடு விதவிதமான நவீன போதை பொருள்கள் அதிக அளவில் புழங்கி வருகின்றன. குறிப்பாக பள்ளி மாணவர்களை குறிவைத்து போதைபொருள்கள் விற்கப்படுகின்றன. சமீபத்தில் ஆர்.கே நகர் பள்ளி அருகில் மாணவர்களிடம் போதை சாக்லேட்கள் விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டு ஊடகங்களில் வெளியானது. இது தொடர்பாக சென்னை சவுகார்பேட்டையின் மொத்த விற்பனையாளர் கணேஷ் சுக்லாவிடம் விசாரணை நடத்துதாக அப்போது அறிவித்திருந்தது தமிழக அரசு.

சென்னை பள்ளி மாணவர்களிடம் வெகு வேகமாக பரவி வரும் மதுவல்லாத பிற போதைபொருள்கள் குறித்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சென்னை மாவட்ட செயலாளர் தோழர் ராஜா கூறியதாவது “கடந்த ஐந்து ஆண்டுகளாகவே மதுவல்லாத பிற போதை பொருள் பழக்கம் மாணவர்களிடையே அதிகரித்து வருகிறது. அரசு பள்ளிகளை பொருத்தவரை “கூல் லிப்”(COOL LIP) என்று மாணவர்களால் அழைக்கப்படும் ஒரு வகையான போதை பொருள் புழக்கத்தில் உள்ளது. ஹான்ஸ் புகையிலை போன்று வாயில் ஒராமாக வைத்துக்கொள்ளப்படும் இப்போதை பொருளை வகுப்பறையிலேயே பயன்படுத்துகிறார்கள். மாணவர்களையே கஞ்சா விற்பனை பிரதிநிதியாக்கி பள்ளிகளில் விற்கவைக்கிறார்கள் கஞ்சா வியாபாரிகள். இவர்கள் மூலம் பள்ளிகளின் ரூ.30-க்கே கஞ்சா கிடைக்கிறது. மேலும் பெண்களுக்கு பிரசவத்தின் போது தரப்படும் மாத்திரைகளை பயன்படுத்தியும் போதை ஏற்றிக்கொள்கிறார்கள்.

உயர் நடுத்தர பிரிவினர் படிக்கும் பள்ளி மாணவர்களிடையே ஒரு வகையான பாம்பை கடிக்க வைத்து போதை ஏற்றிக் கொள்ளும் பழக்கம் அதிகரித்து வருகிறது. ஒரு முறை கடிக்க வைப்பதற்கு 10,000 செலவு செய்கிறார்கள் இம்மாணவர்கள். மேலும் கஞ்சா, ஊசி மூலம் போதை ஏற்றிக்கொள்ளும் பழக்கமும் இப்பிரிவு மாணவர்களிடம் அதிகரித்திருக்கிறது.

இதற்கென தனிச்சிறப்பான வலைபின்னல்கள் செயல்படுகின்றன. கணிசமான மாணவர்கள் இவ்வகையிலான போதை பழக்கத்திற்கு ஆழாகியிருக்கின்றனர் ” என்று அதிர்ச்சிகரமான தகவல்களை தெரிவித்தார்.

“உலகில் 15-64 வயதுக்குட்பட்ட மக்கள் தொகையில் அதாவது போதை பொருள் பயன்படுத்த வாய்ப்புள்ள சந்தையில் 18% பேர் இந்தியாவில் இருக்கின்றனர். இப்பிரிவினரை குறிவைத்து போதை பொருள் சந்தையின் முக்கியமான இலக்காக இந்தியா இருக்கும்” என்றும் எச்சரிக்கிறது 2014-ல் வெளியிடப்பட்ட  போதை மற்றும் குற்றங்களுக்கான ஐ.நா அமைப்பின் அறிக்கை. 2004 ஐ.நா மற்றும் சமூக நலன் மற்றும் மேம்பாட்டு அமைச்சக புள்ளிவிவரத்தின் படி இந்தியாவில் 1.07 கோடி பேர் மதுவல்லாத போதை பொருள் பழக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதில் 8 லட்சம் பேர் கஞ்சாவிற்கும், 2 லட்சம் பேர் ஒப்பியத்திற்கு அடிமையாகியுள்ளனர். இந்தியாவில் பஞ்சாப் மாநிலம் போதைப் பொருள் பயன்படுத்துவதில் முதன்மையாக உள்ளது. அம்மாநிலத்தில்  67 சதவீத ஊரக குடும்பங்களில் குறைந்தது ஒரு போதை அடிமையாவது இருப்பதாக தெரிவித்திருந்தது.  எய்ம்ஸ் மருத்துவமனை 2015-ம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வு ஒன்றின்படி, ஆண்டு தோறும் சுமார் 7500 கோடி மதிப்பிலான போதை வஸ்துக்களை பஞ்சாப் மாநிலம் மட்டும் நுகர்ந்து வருகிறது.

போதைப் பொருட்கள் அதிகம் புழங்கும் மாநிலம் பஞ்சாப்
போதைப் பொருட்கள் அதிகம் புழங்கும் மாநிலம் பஞ்சாப்

பஞ்சாபின் போதை புழக்கத்தை பற்றிய வினவில் விரிவான கட்டுரை ஏற்கனவே வெளியிட்டிருக்கிறோம். ( பஞ்சாபின் போதை – பாரதிய ஜனதாவின் சேவை ! ). அம்மாநிலத்தின் போதை மருந்து பிரச்சணைக்கு காரணம் எல்லை தாண்டிய பயங்கரவாத கும்பல் தான் என்று பிரச்சாரம் செய்துவந்தது ஆளும் பா.ஜ.க – அகாலிதள கும்பல். ஆனால் ’தேசபக்த’ ராணுவத்தினர் போதை பொருள் வலைபின்னலில் நதிமூலமாக இருக்கிறார்கள் என்பது மேற்கண்ட விமானப்படை அதிகாரியின் கைதின் மூலம் தெரியவந்துள்ளது. இராணுவத்தை கேள்விகேட்பதே மாபெரும் தேசதுரோக செயலாக பிரச்சாரம் செய்யப்படுவதும் அதற்கு மக்கள் பலியாவதும் இராணுவ கிரிமினல்களுக்கு வசதியாக உள்ளது. யாரும் தங்களை கேள்விகேட்க முடியாது என்பதும் அப்படி கேட்டால் அவகளது தேசபக்தியை சந்தேகத்துள்ளாக்கி அவர்களை மதிப்பிழக்க செய்ய முடியும் என்ற தைரியம் தான் இராணுவ கிரிமினல்களின் மூலதனமாக இருக்கிறது. போதையும், போலீசும், ராணுவமும் வேறு வேறல்ல. ஒன்றுக் கொன்று பொருத்தமான நலன்களுடன் இவைகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. போதை பொருள் ஒழிப்பிற்காக நாம் ஒரு பெரும் போரே நடத்த வேண்டியிருக்கும்.

மேலும் படிக்க :

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க