privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்இயற்கையை அழித்து யாருக்காக உங்கள் ஆட்சி ? - திருச்சி கருத்தரங்கம்

இயற்கையை அழித்து யாருக்காக உங்கள் ஆட்சி ? – திருச்சி கருத்தரங்கம்

-

நீர் நிலைகளின் மீதான அதிகாரம் மக்களுக்கே வேண்டும், என்ற தலைப்பில் திருச்சியில் மக்கள் அதிகாரம் சார்பாக 12.10.16 அன்று மாலை கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கூட்டம் மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பு குழு தோழர்.ப.தர்மராஜ் தலைமையில் நடைபெற்றது. தி.மு.கவின் திருச்சி வடக்கு மாவட்டச்செயலாளர் திரு.காடுவெட்டி ந.தியாகராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க துணைச்செயலாளர் தோழர்.த.இந்திரஜித், திரு.திருச்சி.வேலுச்சாமி, காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத்தலைவர் திரு.பாலசுப்ரமணியன் தீட்சதர், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத்தலைவர் திரு.ம.ப. சின்னதுரை ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு சிறப்புரையாற்றினார். தோழர் ஜீவா வரவேற்புரை வழங்கினார்.

மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பு குழு தோழர்..தர்மராஜ் உரை:

விவசாயிகளின் வேலை நெல்லை விளைய வைப்பது பிறகு அதற்கு கொள்முதல் விலையை நிர்ணயித்து விற்பனை செய்வது. ஆனால் இன்று எல்லாம் தலைகீழாய் மாற்றப்பட்டு உள்ளது. நீர் வேண்டுமானால் போராட வேண்டும், பொருளாதாரத்தை இழக்க வேண்டும், நீதிமன்றத்திற்கு போக வேண்டும், வழக்கு போட வேண்டும், இவையெல்லாம் நாம் செய்ய வேண்டிய வேலையா?  ஆற்று நீரை, ஏரி குளங்களை பாதுகாப்பது யாருடைய வேலை? பொதுப்பணித்துறை வேலை என்ன? பாசனத்துறை, IAS வேலை என்ன? இவர்கள் எங்கே சென்றனர்? இவர்களுக்கு தானே இந்த வேலை. விவசாயிகள் மக்களின் உழைப்பில், வியர்வை சிந்தி கட்டும் வரிப்பணத்தில் தானே சம்பளம் வாங்குகிறார்கள்? அப்படியானால் இந்த மக்களின் உரிமைகளுக்காக தானே நிற்க வேண்டும். ஆனால் அதிகாரிகள் என்ன செய்கிறார்கள், கடமையை செய்யவில்லை. இதை யாராவது கேள்வி கேட்கிறார்களா? நமக்கென்ன யாராவது போராடட்டும் என்று ஒதுங்கிப்போவதாக உள்ளது. நமக்கு இவர்கள் தான் எதிரி  நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல் சண்டித்தனம் செய்யும் கர்நாடக அரசு மட்டும் எதிரி அல்ல நமக்கான கடமையை செய்ய தவறிய அதிகாரிகளும் எதிரி தான். இவர்கள் சுகமாக வாழ்ந்து கொண்டு கடமையை செய்யாததால் தான் இன்று நம் உரிமைகள் கிடைக்காமல் இருக்கிறது என்பது முக்கியமான விசயம்.

தோழர். தர்மராஜ்
தோழர். தர்மராஜ்

அடுத்த உலகப்போரே நீருக்காகதான் வரும் என்று சொல்கிறார்கள். ஆனால் தமிழகம் இப்பொழுதே நீருக்கான போராட்டத்தை துவங்கிவிட்டது. இந்த சூழலில் திடீரென வரும் மழை, வெள்ளம் போன்றவற்றை பாதுகாத்து ஏரிகளில் நிரப்பினால் 300 டி.எம்.சி தண்ணீர் தமிழகத்திற்கு பெற முடியும் என்று அறிஞர்கள் சொல்லுகிறார்கள். தமிழ்நாடு முழுவுதும் ஆறு, ஏரி, குளங்கள் 32,000த்திற்கு மேல் இருக்கிறது. இன்று அவை பராமரிக்கப்படுகிறதா? பாதுகாக்கப்படுகிறதா? வரக்கூடிய நீர் மக்களுக்கு முறையாக போய் சேருகிறதா? என்றால் கிடையாது. ஒரு ஆறு எங்கே உருவாகிறதோ அங்கு மட்டும் சொந்தமில்லை. அது ஓடி வரும் கடைமடை பகுதி பாசன பகுதிக்கும் சொந்தம் இந்த காவிரி தமிழகத்திற்கும் சொந்தமானது. இந்த காவேரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும். அவன் தரவில்லை என்பது ஒருபுறம். ஆனால் இதற்கு இங்கு இருக்க கூடிய IAS,IPS  இவர்களும் தான் காரணம். இங்கிலாந்தில் கார் கம்பெனிகாரன் ஒருமுறை காரை கழுவி விட்டால் 1 லட்சம் அபராதம் விதிக்க வேண்டும். ஆனால் இங்கு இங்கிலாந்து காரன் கார் கம்பெனி துவங்கினாலே நாம் 3 ½ லட்சம் லிட்டர் தண்ணீர் தர வேண்டுமாம். என்னடா இது கேவலம். இவற்றிற்கு உறுதுணையாக இருப்பது யார் அதிகாரிகள் தான். இவர்களுக்கு எதிராக போராடுவது, ஏரி, குளங்களை மீட்டெடுத்து நம் உரிமைகளை பெற அனைவரும் ஒன்றிணைந்து மக்கள் அதிகாரத்தை கையில் எடுத்து போராட வேண்டும் என்று தனது தலைமை உரையை முடித்தார்.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் திருச்சி மாவட்டதலைவர் மா..சின்னதுரை உரை:

மா.ப. சின்னதுரை
திரு. மா.ப. சின்னதுரை

ட்டுப்பூச்சி பூங்காவனம் பகுதிக்கு கட்டாயம் எல்லோரும் சென்று பாருங்கள். இன்று இங்கு எல்லாமும் பட்டு போய்கிடக்கிறது. அதிமுக வினர் இன்று முதல்வருக்கு உடல்நிலை சரியில்லை என்று காவடி    தூக்குகிறார்கள். வேல் குத்துகிறார்கள் அது உங்கள் விசுவாசம் பாசம். ஆனால் 1 ½  கோடி உறுப்பினர்களை கொண்ட நீங்கள் காவேரி பிரச்சனைக்கு போராடலாம்ல, ஏன் போராடல? நீங்கள் எங்கள் வேலை காரர்கள் நாங்கள் போட்ட ஓட்டு தான் இன்று நீங்கள் சுகபோகமாக வாழ்வது. இந்த பிரச்சனை துவங்குவதற்கு முன்பே 2014-லில் நானும் மக்கள் அதிகாரத்தின் தோழர். ப.தர்மராஜ்-ம் கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளுவதை பார்வையிட சென்றோம். அங்கு 42 அடி தோண்டி எடுத்து உள்ளனர். கவுத்தரசநல்லூர் முதல் இடையாற்று மங்களம் வரை. இதை மாவட்ட ஆட்சியாளரிடம் சென்று முறையிடும் போது பேச்சே இல்லை. இப்பொழுதே தெரிகிறது எல்லாம் கூட்டு களவாணி என்று. ஏரி குளங்களை பட்டா போட்டதே அரசியல் வாதிகளும் அதிகாரிகளும்தான்.  நதிகரையில் இருந்த மக்களின் நாகரீகத்தையே அழித்து விட்டனர். யாருக்காகடா உங்கள் ஆட்சி எங்கள் இயற்கையை அழித்து விட்டு பின் எப்படி மழை பெய்யும்.  நான் வந்தது மேடை பேச்சுக்காக அல்ல நாட்டை காக்க என் உயிரை கொடுத்தாவது நான் போராடுவேன் என்று தனது முழு ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்.

காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத்தலைவர் திரு.பாலசுப்ரமணியன் தீட்சதர் உரை:

திரு.பாலசுப்ரமணியன் தீட்சதர்
திரு.பாலசுப்ரமணியன் தீட்சதர்

போற்றுதலுக்கும், பாராட்டுதலுக்கும் உரிய மக்கள் அதிகார அமைப்பினருக்கு நன்றி நாங்கள் அதற்கு முன் பல போராட்டங்கள் செய்து வெற்றி பெற்றுள்ளோம். இப்பொழுது எங்களின் அனைத்து போராட்டத்திலும் மக்கள் அதிகார தோழர்களும் இணைந்து பல போராட்டங்கள் செய்துள்ளனர். அரசியல் கட்சிகளை நம்பி இனி பயனில்லை என நீதிமன்றத்திற்கு சென்றோம். 90 மீட்டர் உள்ள அணையை கட்டி கொள்ள அனுமதி கொடுத்தார்கள். காவேரி அணை கட்ட தொடங்கிய உடனே பிரச்சனையும் தொடங்கியது. குடகுபகுதியை அப்பொழுதே தமிழ்நாட்டோடு இணைத்திருக்க வேண்டும் ஆனால் அப்பொழுது நம் ஆட்கள் அதை விட்டு கொடுத்தார்கள். இதில் கர்நாடக காரர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.1928 -ல் இது நடந்தது. தண்ணீர் பிரச்சனை எல்லாம் வராது என்று நினைத்தோம், ஆனால் இன்று வந்து விட்டது. என்ன செய்வது? அன்று கர்நாடககாரர்கள் 5 லட்சம் ஏக்கர் விவசாயம் செய்த இடத்திலே இன்று 24 லட்சம் ஏக்கர் விவசாயம் செய்கிறார்கள் என்றால் அதற்கான நீர் எங்கே இருந்து வந்தது? ஆனால் இன்று குடிப்பதற்கே தண்ணீர் இல்லை என்று கூறுகிறார்கள் இதை எப்படி ஏற்றுக் கொள்வது. மறுபுறம் தமிழ்நாட்டில் மணல் அள்ளுவதை தடுத்து நிறுத்தவேண்டும். மணலை எடுக்க கூடாது என்று நாங்கள் சொல்ல காரணம் மணல் இருந்தால் தான் ஆவியாகி மேலே சென்று மேகத்தை குளிர்வித்து மழை வரும். இந்த பிரச்சனைக்கு காரணம் ஆட்சியாளர்கள் தான். அது நடக்கவில்லை. அதிகார பலத்திலுள்ளவர்கள் எதை பற்றியும் கவலைபடுவதில்லை.  இனி நாம் மக்கள் இயக்கமாக ஒன்றிணைந்து போராடவேண்டும். இதை ஏற்படுத்திய மக்கள் அதிகாரத்தினருக்கு எனது கோடான கோடி நன்றி என்று தனது உரையை முடித்தார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க துணைச்செயலாளர் தோழர்.த.இந்திரஜித் உரை:

தோழர். இந்திரஜித்
தோழர். இந்திரஜித்

ங்கள் தலைப்பை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். நீர் நிலைகள் மீதான அதிகாரம் மக்களுக்குதான் வேண்டும்.தஞ்சை பெரிய கோவிலை கட்டும் போது ராஜராஜசோழன் மக்களிடம் கட்டாய வரி வசூல் செய்தான். தராதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த காலத்தில் நீர்நிலைகளை மக்கள் தான் பராமரித்தார்கள், பாதுகாத்தார்கள். ஆனால் இன்று நிலைமை தலைகீழாக உள்ளது. இயற்கை அழிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்பொழுது வெள்ளம் வந்தபோது வெள்ளம் புகுந்து விட்டது என்று எல்லாம் சொன்னார்கள். ஆனால் அது தனது அழிக்கப்பட்ட இடத்தை தேடி கண்டுபிடித்துவிட்டது. அதிகமாக பள்ளிகள், கல்லூரிகளுக்குள் தான் வெள்ள நீர் புகுந்துள்ளது. என் முப்பாட்டன் 36ஆயிரம் ஏரி, குளங்களை வெட்டி வைத்தான். ஆனால் இன்று அவை எங்கே? நீர் இன்று வணிக பொருளாக விற்கிறது. கர்நாடகத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் விட கூடாது என்று போராடுபவர்கள் விவசாயிகள் அல்ல இனவெறியர்கள் லும்பன்கள் இவர்கள் அங்கு உள்ள விவசாயிகளுக்காகவோ, மக்களுக்காகவோ போராடுபவர்களும் அல்ல ஏதாவது ஒரு பிரச்சனையை வைத்து கலவரம் செய்வது மட்டுமே இவர்களின் வேலை.

காவேரி நதி நீர் பிரச்சனைக்கு எல்லோரும் ஒன்றிணைந்து போராடுவதே சரியாக இருக்கும். அதை ஏற்பாடு செய்த மக்கள் அதிகாரத்தோழர்களுக்கு நன்றி. 1992-ல் மத்திய அரசு கொண்டு வந்த கொள்கை என்பது நாட்டையே அடகு வைப்பதற்காக போடப்பட்டதுதான். 1976-90வரை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 1976 வரை 489 டி.எம்.சி தண்ணீர் இருந்தது. பிறகு 389 டி.எம்.சி ஆக குறைந்தது ஆனால் கர்நாடகாவிற்கு 92 டி.எம்.சி  தண்ணீராக இருந்தது 155 டி.எம்.சி ஆக உயர்ந்தது. குடிநீர் தேவைக்காக பேசும் போதெல்லாம் நமக்குதான் தண்ணீர் குறைந்தது. இருதியாக நமக்கு 323டி.எம்.சி ஆக குறைந்தது. கருநாடகத்திற்கு 293 டி.எம்.சி ஆக உயர்ந்தது. 1956-ல் மொழி வாரி மாநிலம் பிரிக்கப்பட்டதில் குடகு காரர்கள் தங்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என்றுதான் கேட்டார்கள். ஆனால் கர்நாடகத்துடன் இணைக்கப்பட்டார்கள். இதுதான் உண்மை. உச்ச நீதி மன்றத்தின் மீது எங்களுக்கு துளியும் நம்பிக்கை இல்லை. கர்நாடக அரசு நீதி மன்றத்தின் தீர்ப்பை ஒருபோதும் மதித்தது கிடையாது. ஆனால் உச்ச நீதி மன்றம் கண்டனம் தெரிவிக்கவில்லை. ஏன் என்றால் மக்களுக்கானதாக இல்லை. நீருக்காக நாம் ஒன்றிணைந்து போராடியே ஆக வேண்டும் என்ற தருனத்தில் உள்ளோம், நாம் ஒன்றினைந்து போராடுவோம் என்று கூறி தனது உரையை முடித்தார;.

திரு.திருச்சி..வேலுச்சாமி அவர்கள் உரையாற்றும்:

நான் எனது பள்ளி பருவ காலத்தில் பள்ளி விட்டு வரும்போது ஆற்றில் விழுந்து புரண்டுவிட்டுதான் வீட்டுக்கு போவோம், போவதற்குள்ளே துணிகளும் காய்ந்து விடும்.

திரு. திருச்சி. வேலுச்சாமி
திரு. திருச்சி. இ. வேலுச்சாமி

எல்லா நதிகளிலும் இன்று அணைகட்டி விட்டார்கள். குடகு மலை அருகில் கூட தமிழர்கள் இருந்தார்கள். அப்பொழுது தமிழகத்திற்கு எல்லா உரிமையும் இருந்தது. இன்று நீர் மீதான உரிமை மறுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் 1 ½  கோடி பேர் உள்ளனர். நமக்கு எதிராக செயல்படுவது கர்நாடகா அரசும் பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் கும்பலும்தான். கர்நாடகாவிலிருந்து நீர் கேட்டு போராடுவது ஒருபுறம் இருக்கட்டும். நீர் வந்தால் அதை தேக்கி வைக்க தமிழகத்தில் வாய்க்கால்,ஆறு,ஏரி,குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளதா? அதை நாம் கண்டு கொள்கிறோமா? இயற்கை பல வற்றை நாமே அழிக்கிறோம். 40 ஆயிரம் ஏரிகள் இருந்த இடத்தில் இன்று எவ்வளவு உள்ளது. ஓட்டுப்போடுவதிலும் சட்டமன்றத்தில் சென்று கொட்டாவி விடுபவர்களைத்தான் தேர்ந்தெடுக்கின்றனர்.  நான் தேர்தலில் போட்டியிடும் போது வயதான பார்பனர் ஒருவர் என்னை அழைத்து உங்கள் திறமை பற்றி கல்லூரி படிக்கும் போதிலிருந்தே எனக்கு தெரியும். மக்களின் பிரச்சனையை பற்றி தெளிவாக பேசுபவர் நீங்கள் என என்னிடம் பேசினார்.  கேட்ட உடனே எனக்கு உச்சு குளிர்ந்து விட்டது. நான் தான் வெற்றி பெறுவேன் என நினைத்தேன். ஆனால் அவர் அடுத்த வார்த்தை சொன்னார் .நீ வெற்றி பெற மாட்டாய், என்றார். எனக்கு தூக்கி வாரி போட்டது. ஏன் என்று கேட்கும் போது உன்னிடம் பணம் இருக்கா என்றார். இன்று சமூகம் இப்படி மாறி விட்டது. தனது ஓட்டு உரிமையே வியாபாரமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையை தீர்க்க என்ன செய்வது? ஒன்றிணைந்து போராட வேண்டும். கர்நாடகாவில் கலவரம் செய்த அனைவருமே பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் கும்பல் தான். எனவே மக்கள் அதிகாரம் சொல்வது போல் இந்த கட்டமைப்புக்குள்ளே தீர்வை  தேடக்கூடாது, மாற்று வழிகளை சிந்திப்போம் அது தான் சரியானது என தனது உரையை முடித்தார்.

தி.மு.க வின் திருச்சி வடக்கு மாவட்டச்செயலாளர், திரு.காடுவெட்டி .தியாகராஜன் உரை:

திரு.தியாகராஜன்
திரு.தியாகராஜன்

அனைவருக்கும் வணக்கம். நம்மை நாம் இன்னும் மாற்றி கொள்ள வேண்டும்.  என்ன செய்ய போகிறோம் என்ற விழித்துக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்காக போராடிக் கொண்டிருக்கும் மக்கள் அதிகாரத்திற்கு நன்றி. எனக்கு முன்பு உரையாற்றிய அனைவருக்கும் நன்றி. நான் முன்பு மக்கள் அதிகாரம் என்றாலே எதோ சும்மா போராடிட்டே இருப்பாங்க என்று தான் நினைத்தேன். ஆனால் இங்க பேசும் போது தான் நான் எல்லாம் என்ன பேசபோகிறேன் என்று திகைத்து போகும் அளவுக்கு இருந்தது. காலமாற்றத்தில் நாமும் மாற வேண்டும். அண்ணா முதல்வராய் இருக்கும் போது அண்ணாவிற்காக உயிரை கொடுக்க 1000 தொண்டர்கள் இருந்தனர். அதே போல் இளைஞர்கள் நிறைய பேர் அண்ணா வழியில் நின்றனர். அதே போல் இன்று இந்த கருத்தரங்கில் இளைஞர்கள் பட்டாளத்தை பார்க்கிறேன். இவர்கள் தான் சமூகத்தை மாற்றப் போகிறார்கள். முதலில் நாம் ஒற்றுமையாக இணைந்து போராட வேண்டும் நமக்குள் எதிரணி இருக்க கூடாது.

நாமக்கல் மாவட்டத்தில் ஒரு தொகுதியில் தி.மு.க ஜெயித்ததிற்காக மந்திரி அந்த தொகுதிக்கு தண்ணீர் திறந்து விடக் கூடாது என்று கலெக்டருக்கு உத்தரவு போட்டார்.  எவ்வளவு கேவலம் இது.

மக்கள் அதிகாரம் சொல்லும் பாதை தான் சரியானது அந்த வகையில் நாம் இணைந்து போராடுவோம் என்றார்.

மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு உரை:

தோழர் .ராஜீ
தோழர் .ராஜீ

னக்கு முன்பு பேசியவர்கள் காவிரி உரிமை, நிலைமை, செய்ய வேண்டிய பணிகள் பற்றி பேசினார்கள். மலரும் நினைவுகளையும், நம்மிடம் முன்பு இருந்த தடங்களையும்  பார்க்கிறோம். ஆனால் கோபம் யாருக்கும் வந்ததாக தெரியவில்லை. இந்த கூட்டத்தை பொதுக்கூட்டமாக நடத்த வேண்டும், இதை மக்கள் அமர்ந்து கேட்பார்கள். நீர் நிலைகள் மீதான அதிகாரம் மக்களுக்கே வேண்டும், இது நாம் இழந்தது புதிய விஷயம் அல்ல. இந்தியா பாகிஸ்தான் வாகா எல்லையில் இப்பொழுதும் போராட்டம் நடக்கிறது. சரக்கு லாரி சென்று கொண்டு தான் இருக்கிறது. ஆனால் கர்நாடகாவில் என்ன நடக்கிறது. சிந்து நதி உடன்படிக்கையை மறு பரிசீலனை செய்வோம், விட மாட்டோம் என்கின்றார்கள். காவேரி பிரச்சனையை தீர்ப்பதற்காக அதிகாரம் நம் நாட்டில் இல்லை. நீரை வர விடாமல் தடுப்பது என்பது ஓரு போர் குற்றம். இங்கு நடுநிலை என்பதே கிடையாது. நீதிபதி, பிரதமர் அனைவரும் போலீஸ்காரர்கள் போல் தான் பேசுகிறார்கள். நம்மிடம் இருந்து எடுத்துக் கொண்டு போகும் மணல் மீண்டும் வருமா?

இந்த பிரச்சனையை தீர்க்க இங்கு அமைப்பு கிடையாது. போராடுபவர்கள் மீது கேஸ் போட்டுக் கொண்டே இருப்பதில் ஜெயலலிதாவை மிஞ்ச ஆளே கிடையாது. காவேரி நதி மீது தமிழகத்தின் உரிமை என்ன? மத்திய மாநில அரசுகளின் தவறான நிலைபாடே  காரணமாக உள்ளது. 25 லட்சம் ஏக்கர் நிலம் பாதிக்கப்பட்டபோது. தமிழ்நாட்டை ரௌடி லிஸ்டில் வைத்துள்ளனர். இங்கு நாம் பண்பாடு பேசுவதால் பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் கதை நடக்கவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு கலவரம் செய்ய மட்டும் தான் தெரியும். கலவரம் நடத்தி ஆட்சியை பிடிக்கின்றனர். இந்துக்களுக்கு இங்கு எந்த உரிமையும் இல்லை பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ்-ஐ நாம் தமிழகத்தில் உள்ளே நுழைய விடாமல் விரட்டி அடிக்க வேண்டும் ஏனென்றால் இவர்கள் தமிழினத்திற்கே எதிரானவர்கள். நாகரீகத்தின் உச்சத்தில் வாழ்ந்த நாம் இன்று மிக கேவலமாக உள்ளோம். இயற்கை என்பதே இன்று தலைகீழாக மாறி விட்டது. ஒரு உண்மையான பிரச்சனைக்கு தீர்வு கானும் வகையில் எந்த கட்சிகளும் இல்லை. ஏனென்றால் இங்கு அரசு கட்டமைப்பே நாறித்தொலைகிறது. எனவே மாற்று மக்கள் அதிகாரம் தான் கட்சி பேரும் அதுதான்.

இதன் மீது கட்சிகள் விவாதம் நடத்த வேண்டும். ஏனென்றால் கட்டமைப்பின் வெளியே தான் தீர்வு உள்ளது. ஆட்சியாளர்களோ அதிகாரவர்க்கமோ அவர்கள் போடும் திட்டங்களை அவர்களாளே நடைமுறை படுத்தமுடியவில்லை. ஒரு கோவிலை நிர்வகிப்பதில் கூட மத உரிமைதான் கொடுத்துள்ளனர். தில்லை நடராசர் கோவில் வழக்கில் இதை நேரடியாக பார்த்திருக்க முடியும். அறநிலைத்துறை வசம் கோவிலில் இருந்த போது அரசின் கஜானாவிற்கு நிதி போனது. தீட்சதர் கையில் இருக்கும் போது நட்ட கணக்கு தான் காட்டினார்கள். இதை தான் நீதி மன்றம் ஏற்றுக்கொள்கின்றது. மணற்கொள்ளை எடுத்துக்கொண்டால் பொதுப்பணித்துறை மற்றும் அதிகாரிகள் எல்லோரும் கைகோர்த்துதான் செய்கிறார்கள். கேள்வி கேட்பதற்கு யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. வெள்ளாற்றில் மணல் அள்ளும்போது அதை தடுத்து நிறுத்தியது மக்கள் அதிகாரம் தான். எங்கெல்லாம் மக்கள் வீதியில் இறங்கி கை கோர்த்து நின்று அதிகாரத்தை தன் கையில் எடுத்து போராடுகிறார்களோ அங்கெல்லாம் மக்களின் உரிமைகள் நிலை நாட்டப்பட்டுள்ளது.

மணற்கொள்ளை, திருட்டு போன்ற எல்லா சமூககுற்றங்களிலும் முன்னனியாக நிற்பது மக்களுக்கான காவலர்கள் என்று சொல்லப்படும் காவல்துறை தான். எங்கு பிரச்சனை நடக்கிறதோ அங்கு நாம் நேரடியாக சென்று ஒன்று திரண்டு போராட வேண்டும். இங்கு ஒட்டு மொத்த அரசு கட்டமைப்பும் கிரிமினல் மயமாகி உள்ளது. ஜியோ சிம் அறிமுகப்படுத்தி இருப்பதும் கூட மக்களை ரிலைன்ஸ் முதலாளி உளவுபார்பதற்காக தான். நாம் என்ன உடை, எந்த அளவில் அணிகிறோம் என்பதை கூட அவன்தான் முடிவு செய்கிறான். இப்படி இருக்கும் நிலையில் யாரிடம் சென்று தீர்வு கேட்க முடியும். மக்கள் அதிகாரம் மட்டும் தான் தீர்வு  என்று தனது உரையை முடித்தார்.

இறுதியாக மக்கள் அதிகாரத்தின் தோழர். ஓவியா நன்றியுரை ஆற்றினார்.

 

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:
மக்கள் அதிகாரம், திருச்சி.

  1. Tamil Nadu is nothing before jayalaliitha. Not only Cauveri issue, take receent problems like privatisation of Salem Steel Plant, shifting of CITPET, setting up of AIIMS in Tamil Nadu etc., are neither voiced by Ministers nor nor by spokespersons. No agitations by ADMK followers either.They just want jayalalitha alive thatis all.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க