privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகவிதைநரகாசுரன் அந்தக் கால நக்சலைட் !

நரகாசுரன் அந்தக் கால நக்சலைட் !

-

ப்போது என் மகளுக்கு
எட்டு வயது
அக்கம் பக்கத்தில்
தீபாவளி பரபரப்பு.

குடும்பம்
கொண்டாடவில்லை என்றாலும்
தெருவே தீபாவளியை
மகள் கண்ணில் காட்டியது.

ஏம்ப்பா….
நம்ம வீட்ல
இதெல்லாம் இல்ல – என
புதுத்துணி, பலகாரம்
பூவாணம் பார்த்து
கேட்டாள் மகள்

naraஎதுவோ..
மனிதனுக்கு ஒரு கொண்டாட்டம் !
என ஊரே திளைக்கையில்
கருத்தியல் கனத்தை
குருத்து தாங்குமோ?
அச்சத்தோடு,
”கொண்டாட்டம் கூடாதென்பதல்ல
இது அவமானம்….” என
ஆரம்பித்தேன் காரணத்தை.

”வேற இருக்கட்டும்
வெடியாவது கிடையாதா?” என
வேண்டினாள் மகள்.
முடியாத கருத்தை
முகை அவிழ்க்கும் இயல்பாய்
கதையாகத் தொடர்ந்தேன்….

நரகாசுரனை கொன்றதற்கு
தீபாவளி – என
ஊர்க்காரணம் சொன்னவுடன்,
”அப்ப அவன் கெட்டவனா?
அடுத்த கேள்வியோடு
ஆவலாய் அருகே வந்தாள்.

நடந்தது இதுதான்,
அசுரர்களின் காட்டுக்குள்
ஆரியப் பார்ப்பனர்கள்
அத்து மீறி நுழைந்தார்கள்.

சுரா எனும் சாராயத்தை
ஊர் கெடுக்க கலந்தார்கள்.

அசுரர்களின்
ஆடு, மாடுகளை
அடித்து யாகத்தில் எரித்தார்கள்
அடுத்தவன் உழைப்பில்
திருடித் தின்றார்கள்.

தேவர்களின் தீய செயலை
எதிர்த்துக் கேட்டான் நரகாசுரன்
எங்களுக்கா தொல்லை தருகிறாய் ?
என
விஷ்ணுவை விட்டு கொன்றார்கள் !
இதுதான்
கதைக்கு பின்னால் உள்ள
கள வரலாறு!

இன்னும் புரியும்படி
சொல்கிறேன்,
எங்கிருந்தோ வந்து
ஊரில் ஒரு
சாராயக்கடையை திறக்கிறான்
நான் எதிர்த்துக் கேட்டால்
நரகாசுரன்,

நம்ப ஊர் ஆத்துல ஒருவன்
மணலைத் திருடுகிறான்
எதிர்த்துக் கேட்டால்
நான் நரகாசுரன்,

படிக்குற
உன் பள்ளிக் கூடத்தை
ஒருவன் மூடுகிறான்
எதிர்த்துக் கேட்டால்
நான் நரகாசுரன்.

எங்கிருந்தோ வந்து
நாம இருக்கும்
இடத்தை ஒருவன் பறிக்கிறான்
எதிர்த்துக்கேட்டால்
நான் நரகாசுரன்.

இதுக்காகவெல்லாம்
அப்பாவை
ஒருவன் கொலை செய்தால்
கொண்டாடுவாயா?

கேட்ட மாத்திரத்தில்
கண்களை உருட்டி
கைவிரல் ஆட்டி
”ஊம்…
தொலச்சி புடுவேன்!” – என
மகள் வெடித்த
வெடிப்பு இருக்கிறதே
அந்த வீரியத்தை
பட்டாசு எதிலும்
பார்க்க முடியாது.

குழந்தைக்கு உணர்த்துவது
சிரமம் என நினைத்திருந்தேன்
பிற்பாடுதான் புரிந்தது
பெரியவர்களுக்கு
புரிய வைப்பதுதான்
பெரும்பாடு.

இன்று
வளர்ந்துவிட்ட மகளிடம்
மீண்டும் தொடர்ந்தேன்.

”பூர்வகுடி மக்களை
இன்று
காட்டை விட்டு துரத்துவது
வேதாந்தா கம்பெனி,

பூர்வகுடி திராவிடர் வளத்தை
அன்று
ஆட்டையப் போட்டது
வேதக் கம்பெனி.

அரசாங்க மொழியில் சொன்னால்,
நரகாசுரன்
அந்தக் கால நக்சலைட்!”

மகள்
வெடித்துச் சிரித்தாள்
பூவாணம் தோற்றது
புது அர்த்தம் பொலிந்தது.

– துரை. சண்முகம்.

  1. இப்படியே அசுரர்கள் பேய் பிசாசுகளை வைத்து அரசியல் செய்து கொண்டு இருங்கள்.

    பேய் பிசாசுகள் கூட ஆரிய பிராமண கற்பனை, பேய்களும் பிசாசுகளும் எவ்வுளவு நல்லவர்கள் தெரியும்மா ? அப்பாவி பேய் பிசாசுகளை திட்டமிட்டு ஆரியர்கள் கெட்டவர்களாக மாற்றி விட்டார்கள் என்று கதை அளந்து விடுங்கள்… ஹிந்து மத பண்டிகை தானே யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் அவதூறுகளை பரப்பலாம் கேட்பதற்கு யாரும் கிடையாது.

      • ஆரியரும் பிராமணரும் காவிகளை பேயை விடப் பயங்கரமானவர்கள். திவிரவதிகள்

    • சரிங்க அப்படி என்றால் நீங்கள் ஏன் தீபாவளி கொண்டாடுகிறீர்கள் அதன் உண்மை கதையை உண்மையாக சொல்லுங்கள் , எது சொன்னாலும் செய்தாலும் அதன் உண்மை என்ன என்று தெரிந்து செயல் படவேண்டும்..

  2. இன்னும் ஒரு நூறு வருடம் கழித்து துரை சண்முகத்தின் வாரிசுகள் ஒசாமா பின்லேடனுக்கு வாழ்த்து கவிதை பாடுவார்கள்….. _______ துரை, மெக்காவுல கருப்பு கல் மேலே கல் எரியுரானே ______ அது எதுக்குன்னு தெரியுமா??? பகுதறிவு பேசும் புரட்சியாளா, ஏசு மூணு நாள் கழிச்சு “அப்படியே” கிளம்பினாருன்னு சொல்றானே உலகம் முழுவதும் அத பத்தி ஏதாவது எழுதலாம்ல??? கால் ______ காலை ____ மட்டுமே செய்யவேண்டும்… அவர்கள் காலை “பிடித்து” விடவேண்டும் என நினைப்பதே தகுதி மீறல் தான்…புரியுதா?????????

    • ஆரிய சாம்ராஜ்ய விஸ்தரிரிப்புக்கு எதிரான போரில், வீரமரணத்தை தழுவிக்கொண்ட அசுரர் குல தேசியத் தலைவன் நரகாசுரனுக்கு எங்கள் வீரவணக்கம்!!!

  3. பூர்வகுடி திராவிடர் வளத்தை என்பதை
    பூர்வகுடி தமிழர் வளத்தை

    என எளிதி இருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும் .

  4. மகா பிராமணன் ராவணனுக்கும் நரகாசுரனுக்கும் வீர வணக்கம்.

    எங்கள் முப்பாட்டன் திரும்பி வரும் தீபாவளி திருநாளை கொண்டாடுவோம்.

    ஜெய் ஸ்ரீ ராவணா! ஹாப்பி தீபாவளி!

    • நல்ல விசயம் தான் ஐயர் ..

      ராவணனையும், நரகாசுரணுக்கும் புதிய வரலாறு எழுதியிருக்கிறிர்ர்கள். உங்கள் முப்பாட்டன்மார் திரும்பிவரும் போது முப்பாட்டன்மார்களைக் கொன்ற இராமனையும், கிருஸ்ணனையும் எந்தப் பீயில் தோய்த்த செருப்பால் அடிக்க வேண்டும் என்றக் குறிப்பையும் நவில்ந்தால் மிக்க உதவியாய் இருக்கும், புதிய வரலாறு எழுத வசதியாக இருக்கும் அல்லவா ?

  5. வினவு. கவிதை அருமை. இந்த கவிதையை நான்கு நாட்கள் முன்பே வெளியிட்டிருக்க வேண்டும். முடிந்தவரை மக்களிடம் கொண்டு சேர்த்திதிருப்போம்.

    • இராமன்,

      நீங்கள் தீபாவளி வாழ்த்து கூறுவது சில சமூக மக்களின் மனதை புண்படுத்தும் என்பதை உணர்ந்து உள்ளீர்களா?

      இராமன் ஒருவனுக்கு ஒருத்தியாக வாழ்ந்தான் என்று கம்பன் புனைந்த கட்டுக்கதையை நம்புவதற்கும் நாளை ஹிட்லர் சக மனிதனை நேசித்தவன் என்று புனைவு ஒருத்தன் எழுதுவதை நம்புவதும் ஒன்றுதான்.

      அம்பேத்கர் சொல்வது போல இராமனிடம் ஒரு சாதரான மனிதனிடம் இருக்கும் மனித பண்புகளைக் கூட காண முடியாதபட்சத்தில் எப்படி நீங்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பை கண்டீர்கள்?

      • செல்வம்,

        இராமன் (புராண இராமனல்ல) பற்றி நீங்கள் குறைத்து எடை போட்டுள்ளீர்கள்.. நீங்கள் பாபர் மசூதியை ஏன் இடித்தீர்கள் என்று கேட்டால், இராமன் அங்கு தான் பிறந்தான் என்பார். இராமன் சம்பூகனை ஏன் கொன்றான் என்று கேட்டால், புராணங்களுக்கு சாதி முலாம் பூசி மக்களை மோத விடும் நாசிக்கள் என்று நம்மையே திருப்பிக் கேட்பார்.

        பார்ப்பனக் குசும்பு தெரியுமா .. அதற்கு இந்த ஆண்டு தன் பெயரில் பேடண்ட் எடுத்திருக்கிறார் இராமன் ..

  6. நல்ல வழிகாட்டுக் கவிதை. எப்படி விளக்குவது சிறுவர்களுக்கு என்று நினைப்பவர்களுக்கு நல்ல கவிதை விளக்கம். பாராட்டுகள். தீபாவளிக்கான காரணம் தப்பு, தீனிகள் கெடுதல், பட்டாசு விபரீதம் சுற்று சூழல் மாசு. எல்லா வகையிலும் தீமை.

    • ஆமா ஆமா எப்படி சிறுவர்களை மூளை சலவை செய்து தீவிரவாதிகளாக மாற்றுவது என்பதற்க்கு நல்ல எடுத்து காட்டு இந்த கவிதை

  7. எனது செல்ல மகளுக்கு தீபாவளியின் வக்கிரத்தை புரிய வைக்கும் எளிமையான பொருள் பொதிந்த கவிதை.

    உண்மையில் போராடும் மக்கள் யாவரையும் அன்றிலிருந்து இன்றுவரை ஆளும் வர்க்கம் சதி செய்து தான் கொன்று வருகிறது. அதை யாரும் புரிந்து கொள்ள முடியாத வண்ணம் அசுரர் என்றும் நக்சலைட்டுகள் என்றும் மாவோயிஸ்டுகள் என்றும் முத்திரைக் குத்தி அதை வெகு மக்கள் மத்தியில் பரப்புரை செய்கிறது ஆளும் வர்க்கம்.

    வாழ்க அசுரகுலம் வீழ்க பார்ப்பனீயம். வாழ்க நக்சலைட்டுகள் வீழ்க கார்ப்பரேட்டு முதலாளிகள்.

  8. இந்த நவீன உலகில் தீவிரவாதிகள் தானே அசுரர்கள், அதனால் வினவு அசுரர்களை கொண்டாடுவதில் வியப்பு ஏதும் இல்லை, வினவை சேர்ந்தவர்கள் கூட அசுரர் வழி தோன்றல்களாக (தீவிரவாதிகளாக) இருக்கலாம் யார் கண்டது.

    • மணி அண்ணே ..

      கவிதையப் படிச்சிங்களா ?.. அசுர குலம் தான் நாங்கன்னு தான எழுதிருக்கு ?.

      உங்களுக்கு என்ன பிரச்சினை ?. புதுசா கண்டுபுடிச்ச மாதிரி பீத்திக்கிட்டு இருகீங்க ..

      உங்க வீடு காட்டுக்குள்ள இருக்குன்னு வச்சிக்கங்க ,…

      ஒரு சொம்பப் பய கூட்டம் காட்டுக்குள்ள தீய வளத்து சாராயம் (சுரா) காச்சி குடிச்சுட்டு, அப்படியே ஹோமம் வளத்து உங்க ஊட்டுல கட்டி வச்சிருக்க ஆடு மாடெல்லாம் எடுத்து ஹோமத்துல போட்டு வேக வச்சி திண்ணான்னு வச்சுக்குங்க … பாத்துட்டு சும்மா இருப்பீங்களா ?..
      சொல்லுங்கண்ணே … அவன அடிச்சுத் தொறத்துவீங்களா இல்லை பக்கத்துல் உக்காந்து ஊத்திக் கொடுப்பீங்களா ?..
      நரகாசுரன் உள்ளிட்ட அசுரர்கள் யாகத்தை எதிர்த்தது இதுக்காகத் தான். பொதுவா அசுரர்கள் மானமுள்ளவர்கள், சுயமரியாதை மிக்கவர்கள் என்பதனால் தான் இந்த பார்ப்பார சொம்பப் பசங்களை அடிச்சு விரட்டிருக்காங்க ..
      திருப்பி அடிக்கு வக்கில்லாத பாப்பாரக் கம்மனாட்டி பசங்க , பக்க்த்து ஏரியால கூலிப்படைத் தலைவர்களான ராமன், கிருஸ்ணனைக் கூப்பிட்டு வந்து போர் விதிகள் எதுவும் ஃபாலோ பண்ணாம அசுரர்களைப் போட்டுத்தள்ளி இருக்கானுங்க ..

      நீங்களே சொல்லுங்கண்ணே … எந்த புராணத்துலயாவது, இல்ல இதிகாசத்துலயாவது நேர்மையா ஒரு போராவது நடத்தி ஜெயிச்சிருக்கானுங்களா இந்த பாப்பார எச்சைப் பசங்க …

      நேர்மையா போர் புரிஞ்சு ஜெயிச்ச சாமிய கண்டு பிடிச்சுக் கொடுங்கண்ணே .. அப்புறம் பேசலாம் ..

  9. ‘வினவை’ ஒரு நாளும் திருத்த முடியாது என்பது எனக்குத் தெரியும்.இருந்தபோதிலும் வினவின் ‘பசப்பு வலையில்’ மாட்டிக்கொண்டு அல்லல் படும் சிலரின் கண்களையாவது திரு.ஜெமோ.அவர்களின் இந்தச் சுட்டியில் உள்ள கட்டுரை மீட்கும் என நம்புகிறேன்.
    http://www.jeyamohan.in/9118#.WBbjCWewvMk

    • சேஷு பாய் .

      வினவைத் திருத்த உங்களை யாரும் அழைக்கவில்லை .. ”தமிழரை ஆரிய திராவிடராகப் பிரிப்பதாக” வருத்தப் படுகிறார் ஜெமோ. மானுடவியல் ஆய்வுகளைப் போய் படித்து வரச்சொல்லுங்கள் ஜெமோ மாமாவிடம் ..

      அப்புறம் கட்டுரை எழுதலாம், அப்புறம் வெண்முரசு , வெள்ளை யானை, வெள்ளைப் பன்றி போன்ற ’வரலாற்று’ நாவல்களை எழுதலாம் ..

      சுய தம்பட்டம், பீற்றல்கள் தான் ஜெமோ, சாநி கும்பலின் ஒரே நாதம். கூடவே, இந்த்துத்துவ, பின்னவீனத்துவ ஊளைகள் இணைந்து தாளம் போடும். அத்ற்குப் பெயர் எழுத்து இலக்கியம் என்றால், மலக்குட்டையை சமையலறை என்று சொல்வதற்குச் சமமானது.

      • அந்தச் சிலரில் நீங்கள் இல்லை என்பதை இப்போது நான் அறிந்தேன், நன்றி!

Leave a Reply to நாடோடி பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க