privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்பெண்களை இழிவுபடுத்தும் சபரிமலை ஐயப்பனை கைது செய் !

பெண்களை இழிவுபடுத்தும் சபரிமலை ஐயப்பனை கைது செய் !

-

விண்வெளியில் பறந்த கல்பனா சாவ்லா அமெரிக்காவின் குடிமகன் என்றாலும் இந்தியாவின் தூரத்து சொந்தம் என்ற வகையில் அவரை இங்கே அப்துல் கலாம் வகையறா கனவான்களும், சீமாட்டிகளும் கொண்டாடுவர். அப்பேற்பட்ட நாட்டில்தான் சாமி கும்பிடுவதற்கு கூட பெண்களுக்கு அனுமதியில்லை.

Sabrimala-woman-entry
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது கூடாது என்பதை பெண்களே ஏற்கிறார்கள் என்று காட்டுவதற்கு “Ready to wait” என்ற ஹேஷ்டெக்குடன் இந்துமதவெறியர்கள் செய்யும் பிரச்சாரம்!

சபரிமலை ஐயப்பனை ஆண்கள் மட்டுமே வழிபடவேண்டும், மாத விலக்கு பருவத்திற்கு முந்தைய பிந்தைய பெண்கள்தான் அனுமதிக்கப்படுவார்கள் என்பது அவாள்கள் உருவாக்கிய விதி முறை. இது குறித்து அவ்வப்போது பெண்கள் அமைப்புக்களும், முற்போக்கு அமைப்புக்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

அதன்படி 2006-ம் ஆண்டில், கோவிலில் பெண்களையும் அனுமதிக்க வேண்டுமென ஒரு பொது நல வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இதற்கு ஐயப்பனன் கோவிலை நிர்வாகம் செய்யும் திருவாங்கூர் தேவசம்போர்டு மற்றும் பரம்பரை அறங்காவலரான பந்தளம் மகாராஜா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மதநம்பிக்கையில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்று ஏற்கனவே உத்திரவு பிறப்பித்திருக்கும் நீதிமன்றம், தானே அதை மீறக்கூடாது என்றும் அவர்கள் எச்சரித்திருந்தனர்.

இந்த வழக்கில் எல்லா பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிக்கலாம் என்று இதற்கு முன்னர் அச்சுதானந்தன் தலைமை தாங்கிய இடதுசாரி முன்னணி அரசு, 2007-ம் ஆண்டில் ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அதன்பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு உ ம்மன் சாண்டி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி எனும் காங்கிரசு கூட்டணி அரசு பதவிக்கு வந்தது. அவர்கள் பெண்களை அனுமதிக்க கூடாது என்று கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர். என்ன இருந்தாலும் இவர்கள் ‘மென்மையான’ இந்துத்துவா அல்லவா!

தற்போது மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது கேரள அரசின் நிலைப்பாடு என்ன என்று நீதிபதிகள் கேட்கின்றனர். உடனே முந்தைய அச்சுதானந்தன் அரசு எடுத்த அதே நிலைப்பாடுதான் மாற்றமில்லை என்று தற்போதைய இடதுசாரி முன்னணி அரசு கூறியிருக்கிறது. உடனே தேவசம்போர்டு வழக்கறிஞர், “இப்படிமாநில அரசு அடிக்கடி நிலைப்பாடை மாற்றக்கூடாது. பெண்களை அனுமதிக்க கூடாது” என்று வாதிட்டிருக்கிறார்.

பிறகு நீதிபதிகள் இந்த வழக்கை அடுத்த ஆண்டு 2017 பிப்ரவரிக்கு மாற்றி வைத்திருக்கிறார்கள். இந்த தள்ளிவைப்புக்கு காரணம் இது போன்ற பிரச்சினைகளை ஆறப்போட்டு கொல்வது மனுநீதிமன்றத்தின் வழக்கம். அது உண்மையெனும் விதமாக இந்துமதவெறியர்கள் தொலைக்காட்சி விவாதங்களில் அணிவகுத்து, பெண்களை விடக்கூடாது, நம்பிக்கையில் தலையிடக்கூடாது என்று கத்த ஆரம்பித்து விட்டார்கள்.

magara-jothi
சபரி மலையின் மகரஜோதி என்பது தானே எரிவது அல்ல, அது கோயில் ஊழியர்களால் கொளுத்தப்படுவதுதான்

பொதுவாக சபரிமலை சீசன் வந்து விட்டால் சாமிகளின் அட்டகாசம் தாங்கமுடியாது. டீக்கடையில் பேப்பர் கப், டாஸ்மாக்கில் சரக்கடிக்க தனி பிளாஸ்டிக் டம்ளர் என சரக்கு தொடங்கி சகலத்திலும் அய்யப்பமார் சாமிகளின் புனிதம் காக்கப்படுகிறதாம். இதில் வயதுக்கு வந்த ஒரு பெண் ஐயப்பனை வணங்க வந்தால் அது தீட்டாம். கேட்டால் பெண்ணின் ரத்தவாடை அறிந்து காட்டு விலங்குகள் வந்து விடுமாம்!

ஏன் ஆணின் உடலில் கூட மல, சலம், வியர்வை, ரத்தம், சளி என எல்லா எழவும்  இருந்துதானே தொலைக்கிறது. இதைப் பார்த்து காட்டு விலங்குகள் இது ஆண் சமாச்சாரம் என ஓடிவிடுமா? அப்புறம் சேலை கட்டிய பெண்கள் ஒட முடியாதாம். அதனாலென்ன ஜீன்ஸ் போட்ட பெண்கள் ஒடலாமே? ஏதோ சிந்து பாத்தின் சாகசப் பயணம் போல உதார் விடும் இந்த சாமிகள் எவரும் நோகமால் ரயில், பஸ், இதர வாகனங்கள், சுமைதூக்கிகள், சாப்பாட்டுக் கடைகள், மலையிறங்கியதுமே சரக்கடிக்க ஏற்பாடுகள் என எல்லா வசதிகளையும் வைத்துக் கொண்டே பயணம் செய்கிறார்கள்.

இப்பொதேல்லாம் சபரிமலைப் பயணம் என்பது ஒரு பிக்னிக் ஸ்பாட் பயணமாகி விட்டது. தேவைக்கேற்றபடி ஒரு மண்டல விரதம், ஒரு நாள் ஏன் ஒரு வேளை விரதம் என்பதாகவெல்லாம் சுருங்கிய நிலையில் பெண்கள் மட்டும் வரக்கூடாது என்ற அயோக்கியத்தனத்தை என்னவென்று சொல்ல?

பெண்களைக் கண்டால் முகம் சுளிக்கும் ஐயப்பன் பூசை செய்யும் கண்டலரு பார்ப்பான பூசாரியின் அயோக்கியத்தனங்கள் அதுவும் பண மோசடி, விலைமாதர் சகவாசம், கணபதி ஹோமம் மந்திரம் கூட தெரிந்திராத பக்திப் பரவசம் இதையெல்லாம் சகித்துக் கொண்ட சூட்சுமம் என்ன? இந்த கிரிமினல் பார்ப்பானர் ஜெயிலில் கம்பி எண்ணவேண்டிய கேடி இன்னும் குஷாலாக வெளியில் சுதந்திரமாக சுத்தி வருகிறார். இதைக் கண்டெல்லாம் ஆண்பக்தர்களுக்கு கோபம் வருவதில்லை. சபரிமலைக்கு சென்ற நடிகைகள் ஜெயமாலாவும், சுதாசந்திரனும் சாமியைத் தொட்டதற்காக தீட்டு கழித்தவர்கள் எவரும் கண்டலறுவின் அயோக்கியத்தனங்களுக்காக அய்யப்பனுக்கு ஒரு எழவுத் தீட்டும் செய்யவில்லை. அப்படி செய்ய வேண்டியிருந்தால் பூசாரியையும், சாமியையும் ஒரு சேர குண்டு வைத்து பிளப்பதே தீட்டுக்கழிப்பாக இருக்கும்.

இதைப்பற்றி எந்த சுரணையும் இல்லாத சாமிகள்தான் ஆண்டுதோறும் பயணம் சென்று சாஸ்தாவைத் தரிசித்து வீரமணி பாட்டுக்களையெல்லாம் குத்தாட்ட ஸ்டைலில் பாடி குழந்தைகளை அச்சுறுத்தி வருகின்றன.

இப்படி பக்தர்களிலேயே பிழைப்பு வாதம் வந்து விட்டாலும் பெண்களை சபரிமலைக்கு அனுமதிக்க கூடாது என்பதில் மட்டும் எல்லா சாமிகளும் ஒன்றுபடுகிறார்கள். அதற்கு ஆயிரத்தெட்டு ‘அறிவியல்’ விளக்கம் வேறு சொல்லி வதைக்கிறார்கள். காலையில் மலத்திற்கு முன் சிறுநீர் வருவது ஏன்? அக்குளில் அரிப்பு வந்தால் ஏன் சொறியவேண்டும், மோர்ச்சோறு ஏன் கடைசியில் விழுங்க வேண்டும் முதலானவற்றுக்கு இந்து மதத்தில் அறிவியல் விளக்கங்கள் உண்டு என்றால் பாருங்களேன். சந்தேகம் உள்ளவர்கள் காஞ்சி காமகேடி ஜெயேந்திரனிடம் போய் கேட்கலாம்.  மனைவி-மகளோடல்லாமல் தனியாக போவது ஷேமம் என்பது அனுபவஸ்தர்கள் வாக்கு.

SABARIMALASசபரிமலைக்கு கிளம்பும் ஆண் சாமிகளுக்கு வேண்டிய எல்லா பணிவிடைகளையும் செய்யும் பெண் மட்டும் சாமி ஆக முடியாதாம். அந்தப் பெண்களின் மாதவிடாய் காலத்தில் ஆம்பளை சாமிகள் வீட்டில் இருக்க மாட்டார்களாம். அவ்வளவு சுத்தமாம். இதே சுத்தம் ஐயப்பனுக்கும் தேவையென்பதால் பெண்களுக்கு தடா!

கடவுள் என்றால் ஆணுக்கும், பெண்ணுக்கும், பாக்டீரீயா, வைரஸ் முதலான சகலவற்றுக்கும் பொதுதானே என்றால் அது வேறு இது வேறு என்று இழுப்பார்கள். இப்படி மனிதகுலத்தின் சரிபாதி பெண்ணினத்தை இழிவு படுத்தும் சபரிமலை அய்யப்பனை வணங்குபவர்கள் காட்டுமிராண்டிகளா இல்லையா?

“சபரி மலையின் மகரஜோதி என்பது தானே எரிவது அல்ல, அது கோயில் ஊழியர்களால் கொளுத்தப்படுவதுதான்” என்று ஐயப்பன் கோயில் தலைமைப் பூசாரியின் குடும்பத்தைச் சேர்ந்த ராமன் நாயர் முன்பு ஒரு பேட்டியில் தெரிவித்தார். இதனை ஒட்டி பதில் சொல்லியாக வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டார் அன்றைக்கு கோயிலின் தலைமைத் தந்திரியாக இருந்த கண்டரரு மகேஸ்வரரு. அவர் சார்பில் அறிக்கை வெளியிட்ட அவரது பேரனும் கோயில் தந்திரியுமான ராகுல் ஈஸ்வர், “வனத்துறை அதிகாரிகளும், தேவசுவம் போர்டு (அறநிலையத்துறை) அதிகாரிகளும், போலீசும் கூட்டாகச் சேர்ந்து கொளுத்தும் தீப்பந்தம்தான் மகரவிளக்கு” என்ற உண்மையை அன்றைக்கு ஒப்புக் கொண்டிருக்கிறார்.

“இந்த அளவுக்கு குட்டு உடைந்த பிறகும் மார்க்சிஸ்டு அரசு மகரஜோதியைக் கொளுத்துமா?” என்ற கேள்விக்கு “சபரிமலையில் மகரவிளக்கு வெளிச்சம் எப்படி உருவாகிறது என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தப்படும். ஆனால் பக்தர்களின் நம்பிக்கைக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாது” என்று பதிலளித்தார் அன்றைக்கு முதல்வராக இருந்த மார்க்சிஸ்டு கட்சியின் அச்சுதானந்தன். யாரை யார் விசாரிப்பது? பந்தம் பிடிப்பவனை பற்ற வைப்பவன் விசாரிப்பதா?  “தீவட்டியைத் தொடர்ந்து கொளுத்துவோம். தீவட்டிக் கொள்ளையைத் தொடர்ந்து நடத்துவோம்” என்பதுதான் அச்சுதானந்தனுடைய கூற்றின் பொருள்.

மகரஜோதி அம்பலமாவது இது முதல் முறையல்ல.  பந்தம் கொளுத்திய மின்வாரிய ஊழியர்களைப் பிடித்துக் கொண்டு வந்தார்கள் கேரள மாநில பகுத்தறிவாளர் சங்கத்தினர். “அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா, அரசாங்க வருமானத்துக்கு ஆப்பு வைக்காதீங்கப்பா” என்று அன்பு வேண்டுகோள் விடுத்து அன்று பகுத்தறிவாளர்களை அமுக்கினார் அந்நாள் மார்க்சிஸ்டு முதல்வர் ஈ.கே. நாயனார்.

இப்பேற்பட்ட மார்க்சிஸ்டுகள் இன்றைக்கு பெண்களை அனுமதிக்கலாம் என்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தாலும் இந்த மகர ஜோதி குறித்து வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்வார்களா? ஒரு மூடநம்பிக்கையை வருமானம் சார்ந்து மறைக்கும் போது இன்னொரு மூட நம்பிக்கை பாலினம் சார்ந்து ஒடுக்குகிறது. இதையெல்லாம் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து பார்ப்பனியத்தை கேள்வி கேட்கும் தைரியமோ, அறிவோ, தெளிவோ மாரக்சிஸ்டு கட்சியிடம் இல்லை. அப்படி பிரச்சாரம் செய்தால் ‘இந்துக்களின்’ வாக்கு போய்விடும் என்பது மார்க்சிஸ்டுகளின் பயம். மக்கள் மத்தியில் இதை பிரச்சாரம் செய்யாமல் நீதிமன்றத்தில் மட்டுமே கொண்டு வந்து விட முடியாது.

மேலும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் நடத்திய வழக்கில் தீர்ப்பு கொடுத்திருக்கும் உச்சநீதிமன்றம் சபரிமலை வழக்கிலும் என்ன கொடுத்து விட முடியும்? ஒருவேளை பெண்கள் போகலாம் அதை முடிவெடுக்க வேண்டியது பந்தளம் மகாராஜா என்று கொடுத்து விட்டால், யாரும் யாரையும் குற்றம் சொல்ல முடியாமல் பிரச்சினையை அமுக்கிவிடலாம். பிறகு பெண்களும் கோவிலுக்கு போக முடியாது. போக கூடாது என்று நீதிமன்றம் சொல்லவில்லையென  லாவணியும் பாடலாம்.

happytobleed“இது நம்பிக்கை சார்ந்த விசயம். இதை அரசோ, நீதிமன்றமோ திணிக்க முடியாது” என்கிறார் விடுதலை சிறுத்தைகளின் ஆளுர் ஷாநவாஸ். அதை தானும் ஏற்பதாக பா.ஜ.கவின் கே.டி. ராகவனும் கூறுகிறார். ஆதிக்க சாதிவெறியைத்தான் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கேட்காமலே தடை செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது, இது போன்ற மதநம்பிக்கைகளை அப்படி பார்க்க முடியாது என்று சப்பைக் கட்டு கட்டுகிறார் ஷாநவாஸ்.

ஒருவேளை மசூதிகளில் பெண்கள் தொழ முடியாமை, மவுல்விக்களில் பெண்கள் இல்லாமை, புர்கா, தலாக், பொதுசிவில் சட்டம் போன்றவற்றில் இசுலாமிய மதத்தின் தனித்துவத்தை பேணவும், அதை நீதிமன்றமோ, அரசோ திணிக்க முடியாது என்பதற்காக அவர் இப்படி சேம்சைடு கோல் போட்டிருக்கலாம்.

சபரிமலை விவகாரத்தில் பெண்கள் இழிவுபடுத்தப்படுகிறார்கள் என்பதை வெறுமே நம்பிக்கை விவகாரமாக அவர் பார்க்கிறார். அப்படி எனில் நேரடி வன்முறை சாராமல், ஆதிக்கசாதிவெறியர்கள் நடத்தும் தீண்டாமைக் கொடுமைகளையும் அவர் தனிப்பட்ட மத,சாதி நம்பிக்கை என்று அவர் ஏற்க வேண்டும்.

மக்களின் நம்பிக்கை, உரிமை அனைத்தையும் மதச்சார்பின்மையில் இருந்து பார்க்காமல் எல்லா மதங்களுக்கும் உரிமை உண்டு, அனைத்தையும் அனுசரித்து போகவேண்டும் என்று போனால் அது இப்படித்தான் கேடி ராகவனோடு அணிசேர வேண்டியிருக்கும். இதையே அரசியல் ரீதியாக பா.ஜ.க வுடன் கூட்டணி அமைப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள் ரவிக்குமார் கூறுகிறார். அப்போது கண்டனம் தெரிவித்த ஷாநாவாசை இப்போது ரவிக்குமார் திருப்பிக் கேட்டால் என்ன  சொல்ல முடியும்?

ஒடுக்கப்படும் மக்களையெல்லாம் கடவுளின் குழந்தைகள் என்று சொல்லி ஒடுக்குதலை நியாயப்படுத்துவது பார்ப்பனிய மரபு. “ஹரியின ஜனங்கள்தான் ஹரிஜனங்கள்” என்று காந்தி காலத்தில் துவங்கியது இந்த கணக்கு. மோடி பிரதமரானதும் துப்புறவுத் தொழிலாளிகளின் பணியை கடவுளின் பணியென்றார். அதே போல வீட்டில் மட்டும்தான் பெண் இருக்க வேண்டும் என்று  கூறும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் வழியில்தான் “பாரத தேசம் பெண்களை தாயாக போற்றும் நாடு” என்று வானரக் கூட்டம் ஓதி வருகிறது.

நியாயமாக சபரிமலையில் பெண்களை அனுமதி, என்று தற்காப்பு நிலையில் இன்று பேசுவதை விட, பெண்களை இழிவுபடுத்தும் ஐயப்பனை கைது செய் என்று போராடுவதே சரியாக இருக்கும். சட்டப்படி கோவில் சொத்துக்களின் உரிமையாளரான அந்தந்த கோவில் கடவுள்களை ஒரு தனி நபராகவே சட்டம் கருதுகிறது. ஆகவே ஐயப்பன் சிலையை தூக்கி மத்திய சிறையில் அடைத்து விசாரியுங்கள் !

  1. ஏம்ப்பா இடதுசாரிகளா உங்களுக்கு தான் கடவுள் நம்பிக்கையே கிடையாதே பிறகு ஏன் ஹிந்துமத விஷயங்களில் தலையிடுகிறீர்கள். மசூதிகளில் பெண்களை அனுமதிப்பது இல்லை அதற்கு நீங்கள் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று கேட்பீர்களா ? பெண்களை இழிவு படுத்தும் இஸ்லாமிய கடவுளை கைது செய்ய வேண்டும் என்று சொல்விர்களா ? இதேபோல் கட்டுரைகளை வெளியிடுவீர்களா ?

    நீங்கள் எல்லாம் போலி மதச்சார்பற்றவாதிகள், உங்களுக்கு எல்லாம் ஊருக்கு இளிச்சவாயர்களான ஹிந்துக்களை இழிவுபடுத்த வேண்டும் என்பதே குறிக்கோள்.

    • இடதுசாரிகளுக்கு கடவுள் மேல தான் நம்பிக்கை இல்லை. மனிதர்கள் மேல இருக்கு.

      அதன் வெளிப்பாடு தான் இதுவும்.

      கடவுள் நம்பிக்கைன்குற பேருல சரிபாதி பெண்கள் மீதும் தாழ்த்தப்பட்டவர்கள் மீதும் ஹிந்து மதம் செய்யும் ஹிம்சையை தடுப்பதற்கு ஹிந்து மதத்தை தான் தோலுரிக்க வேண்டும்.

      நாங்க(ஹிந்து) தான் பெரும்பான்மைனு கெத்தா காளர தூக்கி சொல்றீங்க அதுக்கு தகுந்த மாறி தானே கவனிக்கணும். இல்லீணா கோவிச்சுக்கமாட்டீங்க.

    • அட அரைமண்டை மணிகண்டா எதை சொன்னாலும் மசூதி இஸ்லாம் முஸ்லிம்….ஒரு விஷயத்தில்கூடவா உங்களிடம் பதிலில்லை? மணிகண்டா இந்து மதம் என்பதை இதை விட யாரும் கேவலப்படுத்த முடியாது.சரி எடுத்ததற்க்கெல்லாம் இஸ்லாம் முஸ்லிம் என்று கையை காட்டுபவர்கள் குறைந்த பட்சம் அந்த மதத்தின் அடிப்படை சித்தாந்தங்களையாவது விளங்கி இருக்க வேண்டும்.பெண்களை பள்ளிவாசலுக்கு வரக்கூடாது என்று எந்த தடையும் இஸ்லாம் மார்க்கத்தில் கிடையாது.பெண்கள் விரும்பினால் அவர்களை தடுக்க கூடாது என்றுதான் இருக்கிறது.ஆண்கள் தொழுகைக்கு பள்ளிவாசலுக்கு கண்டிப்பாய் வந்தாக வேண்டும் என்றிருக்கிறது.பெண்களுக்கு இந்த கட்டாயம் இல்லை.முடிந்தால் நான் அழைத்துக்கொண்டு போகிறேன்.பெண்கள் தொழுவதை பள்ளிவாசல்களில் பார்க்கலாம்.ரொம்ப பாவம் மணிகண்டா நீயும்தான் எவ்வளவு நேரம்தான் சமாளித்துக்கொண்டிருக்கிறாய்.

      • மரியாதைக்குரிய மணிகண்டனே சபரிமலைக்கு பெண்கள் போகக்கூடாது என்று இந்து மதத்தில் இருக்கிறதா? அந்த ஆதரத்தை காட்டி இதோ இருக்கிறது. இன்ன காரணத்தால் போக்கூடாது என்ற காரணத்தையும் சொன்னால் அது நியாயம்.அதை விட்டு விட்டு நேராய் மசூதிக்கு வந்தால் இது என்ன நியாயம்?அப்படி ஒரு விவாதம் வந்தால் நாங்கள் விளக்குகிறோம்.

        • நீங்கள் எல்லாம் பெண் உரிமையை பற்றி பேசுவதற்க்கே தகுதியில்லாதவர்கள். 3 முறை தலாக் சொல்லி ஒரு பெண்ணை நட்டாற்றில் அம்போ என்று விடும் ஆட்கள் தானே நீங்கள் எல்லாம். பிறந்த ஒரு பச்சிளம் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை கூட தடுப்பவர்கள் தானே நீங்கள், அந்த தாய் எங்கே தனது கணவன் 3 முறை தலாக் சொல்லிவிடுவானோ என்று பயந்து குழந்தைக்கு பால் கொடுப்பதற்கு கூட தயங்கி இருக்கிறாள். நீங்கள் எல்லாம் பெண் உரிமையை பற்றி பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது. முதலில் நீங்கள் உங்கள் பெண்களை மசூதியில் தொழுகை நடத்த அனுமதித்து விட்டு பிறகு ஏன் சபரிமலையில் பெண்களை அனுமதிக்கவில்லை என்ற கேள்வியை கேளுங்கள்.

          • ஹலோ மணிகண்டன்,

            அதுக்கான பதிலை சொல்ல கடமைப்பட்டவர்கள் இசுலாமியர்களே என்றாலும் என்னை பொறுத்த வரையில் இசுலாம், கிருத்துவம் என்று அனைத்தும் சரிசமமாக பிற்போக்குத்தனமானது தான்.

            பிறப்பினால் மட்டுமல்ல சான்றிதழ்களின் அடிப்படையிலும் நான் ஒரு இந்து என்ற அடிப்படையிலும் சொந்த இந்து மதத்தின் பிற்போக்குத்தனங்களை குறித்தும் அதன் வன்முறைகளை பற்றியும் தோலுரிப்பது தான் சாலப்பொருத்தமானது.

            இந்தியாவில் உள்ள பிரச்சினைகளை பற்றி பேசினால் உடனே பாகிஸ்தான்,சீனா என்று நீங்கள் அனுமனை போல தாவுவது ஏன்?

          • பெண் உரிமையைப் பற்றி பேச அண்ணன் மணிகண்டன் மற்றும் இந்துத்துவ கும்பலுக்கே முழுத் தகுதி உண்டு.

            கைம்பெண்களை மொட்டையடித்து மூலையில் அமர்த்துவது / அல்லது கணவன் எரியும் சிதையில் தூக்கி எரிவது போன்ற பெண்ணுரிமை நடவடிக்கைகள் மட்டுமில்லை – சங்கரமடாதிபதியாக ஒரு மாமியை நியமிக்கும் அளவுக்கு பெண்ணுரிமைப் போராளிகளாக இவர்களே இருக்கிறார்கள் என்று சொல்வது மிகையல்ல.

            இடதுசாரி அறிவிலிகளே கேளுங்கள் – ஆர்.எஸ்.எஸ் தலைவியாக இருப்பது கூட பகவதி என்கிற பெண் தான்… என்ன மணிகண்டன், நான் சரியாத் தானே பேசறேன்?

            இடதுசாரிகள் முத்தலாக்கை எதிர்க்கிறார்கள் – பெண்களை சபரிமலைக்குள் அனுமதிப்பதை ஆதரிக்கிறார்கள்
            இந்துத்துவவாதிகள் முத்தலாக்கை எதிர்க்கிறார்கள் – பெண்களை சபரிமலைக்கு அனுமதிப்பதையும் எதிர்க்கிறார்கள்

            இந்த இரண்டில் எதற்குப் பெயர் ஹிப்போக்கிரஸி என்பதை வாசகர்களே முடிவு செய்து கொள்ளட்டும் மணிகண்டன் – நீங்க போயி ஆர்.எஸ்.எஸ் காரியாலையத்தில் இந்த மாதிரி அறிவாளித்தனமா கமெண்டு போடறதுக்கு கூலியா கொடுத்த 500 ஓவாய மாத்தற வழியப் பாருங்க.

            • ஹிந்து கோவில்களில் பெண்கள் வழிபட எந்த தடையும் இல்லை ஆனால் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மசூதிகளில் பெண்கள் நுழைவதற்கு கூட தடை… சிவனை வழிபடும் முறைக்கும் பெருமாளை வழிபடும் முறைக்கும் வித்தியாசம் இருக்கிறது, அது போல் சபரிமலை ஐயப்ப கோவிலில் வழிபடவும் சில கட்டுப்பாடுகள் உள்ளன… அந்த கட்டுப்பாடுகள் தேவையா என்ற முடிவு செய்ய வேண்டியவர்கள் ஹிந்துக்கள் மட்டுமே.

              ஹிந்து மத நம்பிக்கைகளில் நிச்சயம் இடதுசாரிகள் தலையிட தகுதியில்லை என்றே சொல்வேன், அவர்களின் ஒவ்வொரு நோக்கத்தின் மீதும் சந்தேக கரை படிந்து இருக்கிறது,

              • இசுலாமிய சட்டப்படி மசூதிகளில் பெண்கள் வழிபடலாம். எனவே மீண்டும் அண்ணனின் கருத்துக்கு ஒரு பொழிப்புரை :

                இசுலாமிய பெண்கள் தலாக் சொல்ல எந்த தடையும் இல்லை. ஆனால், உலகம் முழுவதும் உள்ள இந்துப் பெண்கள் சங்கரமட தலைமைப் பொறுப்புக்கு வரத் தடை உள்ளது. ஆண்கள் சொல்லும் தலாக்கிற்கும் பெண்கள் சொல்லும் தலாக்கிற்கும் சில வித்தியாசங்கள் இருக்கிறது. அது போல் தலாக் சொல்ல சில முறைகள் உள்ளன. அந்த முறைகள் தேவையா என்பதை முடிவு செய்ய வேண்டியவர்கள் முசுலீம்கள் மட்டுமே

                இசுலாமிய மத நம்பிக்கையில் நிச்சயம் இந்துத்துவவாதிகள் தலையிட தகுதியில்லை என்றே சொல்வேன், அவர்களின் ஒவ்வொரு நோக்கத்தின் மீதும் சந்தேக கரை படிந்து இருக்கிறது.

                *&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*

                இப்போது நான் : முன்பே சொன்னது போல் முத்தலாக் முறையில் முற்போக்கு சக்திகளுக்கு உடன்பாடில்லை – அதே போல் கோயில்களில் தலித்துகள் மற்றும் பெண்கள் தடுக்கப்படுவதன் மேலும் உடன்பாடில்லை. பெண்களுக்கு இரண்டு தரப்பிலும் உரிமைகள் தரப்பட வேண்டும் என்பது எங்கள் நிலை — இதில் ஒரு ஓர்மை உள்ளது.

                மணிகண்டன் : அய்யய்யோ… முசுலீம் பெண்கள் தலாக்கால் பாதிக்கப்படுகிறார்கள் ; முசுலீம் மதத்தில் ஜனநாயகமே இல்லை; ஆனா நாங்கள் பெண்களை சபரி மலைக்கு அனுமதிக்க மாட்டோம், தலித்துகளை கோயிலுக்குள் அனுமதிக்க மாட்டோம், தமிழை கருவறைக்குள்ளேயே விட மாட்டோம்… நாங்கதான் உலகிலேயே சகிப்புத்தன்மை கொண்ட மதம் என்று எல்லோரும் நம்புங்கள்
                Bloody Hipocrites

                • இந்தியாவில் எந்த ஊர் மசூதியில் பெண்கள் அனுமதிக்கப்படுகிறார்கள் என்று சொன்னால் நன்றாக இருக்கும், இஸ்லாமை பொறுத்தவரையில் பெண்கள் தான் அவர்களின் தலித்துகள், கார் ஓட்டுவதற்கு கூட இப்போது தான் சவுதியில் பெண்களுக்கு அனுமதி கொடுத்து இருக்கிறார்கள்.

                  • ராசா நீ எந்த ஊரில் இருக்கிறாய் என்று சொல்.உனக்கு நான் விலாசம் சொல்கிறேன்.உனக்கு தெரியாத இன்னுமொரு பெரிய அதிர்ச்சி என்ன தெரியுமா? வெள்ளிக்கிழமை நாங்கள் ஜும்மா என்று சொல்லக்கூடிய மிக முக்கியமான தொழுகையில் இஸ்லாமிய பெண்களோடு அவர்க்ளோடு நட்பு கொண்ட இந்து பெண்களும் தங்களின் அடையாளத்தோடு (பொட்டோ பூவோவைத்துக்கொண்டே)ப் போய் வருவதை நான் காட்டுகிறேன்.இது ஒரு புறம் இருக்க பெண்கள் பள்ளிவாசல்களுக்கு வருவதில் எந்த தடையும் இல்லை என்று ஒரு இஸ்லாமியனாக நான் உறுதியாக சொல்கிறேன்.ஒருவேளை தடையிருந்தால் ஆம் வரக்கூடாதுதான் இது இஸ்லாத்தின் கட்டளை என்று சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.நீ வெளியில் இருந்து கொண்டு இஸ்லாமிய சட்டத்தை எங்களுக்கு சொல்லித்தருகிறாயோ? இப்போ இதிலிருந்தும் தாவி கார் ஓட்டுவதற்க்கு போய் விட்டாய்.அப்போ நீ திருந்துகிற அபிப்பிராயமே இல்லை.!?உன் பொழப்பே இதுதான்.சரி இப்படியே காலத்தை ஓட்டு நீயும் உன் இந்து மதமும் நல்லா வருவீங்க..

          • அட மரைகழண்டா அரை மண்டையா நானா சபரிமலையில் பெண்களை அனுமதிக்காதது பற்றி பேசினேன்? “பெரும்பான்மை இந்துக்கள் 80%சதவீதம் இந்துக்கள்”என்று நீ பொய்யாய் பீற்றி திரியும் அந்த இந்துக்களின் கூட்டத்திலிருந்துதானே ஒருவர் அந்த கேள்வியை வைக்கிறார்.அவருக்கு உன் மதத்திலிருந்து நீயல்லாவா விளக்கம் சொல்ல வேண்டும்.அவரிடமிருந்து ஓடி வந்து மசூதியில் பெண்களை விடுகிறார்களா என்று ஏன் இங்கு வந்து முட்டுகிறாய். ஒருபோதும் உங்கள் மதத்தில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கும் அநாகரிகம் எனக்கு கிடையாது.எடுத்தற்க்கெல்லாம் பதில் சொல்ல வழியில்லாமல் இங்கு ஓடி வருவது உங்களுடைய வேலை.அப்படியிருந்தும் நான் பதிலும் சொல்லிவிட்டேன்.பெண்கள் மசூதிக்கு வரக்கூடாது என்று எந்த சட்டமும் இல்லை.வருகிறார்கள்.தொழுகிறார்கள்.இஸ்லாமிய வழிபாட்டு முறை என்பது உங்களுடையதைப்போன்றது அல்ல. நாள் ஒன்றுக்கு குறிப்பிட்ட நேரக்கணக்கில் ஐந்து முறை கட்டாயம் தொழுது ஆக வேண்டும்.இது பெண்களுக்கு சிரமம்.ஆகவே பெண்களுக்கு கட்டாய்ம் இல்லை என்று சொல்லப்பட்டிருக்கிறது.நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கு கட்டாயம்.இதுதான் விதிமுறை.உனக்கு எதற்க்கு விளக்கம்?சொல்வதை காதில் வாங்காமல் உளறுவதுதானே உன் நோக்கம்.இதில் தலாக்கிற்க்கு போய்விட்டாய். மிகச்சாதாரண விஷயங்களை விளங்குவதற்க்கே உன் கொசு மூளைக்கு விளங்காது. இதில் தலாக்கை பற்றி விளக்கினால் நீ தாங்குவாயா? முதலில் இது தலாக்கை பற்றிய விவாதமா?இது வரைக்கும் உன் பதிவுகளையெல்லாம் மீண்டும் ஒருமுறை படித்துப்பாரேன்.சொன்னதையே சொல்லியும் சம்மந்தமில்லாமல் உளறியும் நீ ஓலமிடுவது புரியும்.

            • பாமர மணிகண்டா நீ அம்பு.உன்னை ஏவி விடுபவன் களிடம் கேள்.”போட்டு முக்கி எடுக்கிறாஙளே விளக்கம் சொல்லுங்கப்பா” என்று கேள்.திரும்ப திரும்ப உளறிக்கொண்டு திரியாதே.தலாக்கிலிருந்து அத்தனையையும் பற்றி எங்களிடம் பேசலாம்.ஆனால் அதை உன்னிடம் பேசமுடியாது.அதற்க்கு நீ கிணற்றிலிருந்து வெளியில் வந்து இந்த உலகத்தின் நிகழ்வுகளை இதன் கடந்த வரலாற்களையெல்லாம் அறிந்திருக்க வேண்டும்.நீ சொன்ன தலாக் பற்றிய விவாதம் வரும்போது இதே தளத்தில் நல்ல கூர்மையான விவாத அறிவு படைத்தவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் கடுமையாக எங்களிடம் மோதுவார்கள்.நாங்கள் அனைத்திற்க்கும் உறுதியாக தெளிவாக விளக்கம் கொடுப்போம்.விவாதம் என்பது ஒருவரின் கருத்தை ஒருவர் ஏற்றுக்கொண்டு ஆக வேண்டும் என்பதில்லை.விவாதிக்கும் பொழுது முரண்பட்டு நாம் கடுமையாக மோதினாலும் அது நம் சிந்தனையை மேலும் மேலும் கூர்மையாக்கி ஒரு நல்ல தெளிவை நோக்கி நம்மை இட்டுச்செல்லும். அதற்க்கு விவாதிக்க வேண்டும். ஊளையிடக்கூடாது.இப்போது என்ன தலைப்போ அதை மட்டும் பேசு.பதில் இல்லையென்றால் பொத்திக்கிட்டு போ.

              • கடைசியில் என் கருத்துக்களுக்கு பதில் சொல்ல முடியாமல் வாதத்தில் தோற்றுவிட்டிர்கள், இப்போது மற்றவர்கள் பதில் சொல்வார்கள் என்ற நிலைக்கு வந்துவிட்டிர்கள். பாவம்

    • Hello Manikandan, There is an Iyappan Temple in Toronto, Canada and there is no any ristrictions for women attending to thos temple. Why the difference here and there ? Do you have any Idea ?

      • ஒவ்வொரு கோவிலுக்கும் வழிபாட்டு முறைகள் உள்ளன, அந்த காலத்தில் சபரிமலை கோவிலுக்கு பெண்கள் வர கூடாது என்று சொன்னதற்கு காரணங்கள் இருக்கலாம், ஆண்டாள், காரைக்கால் அம்மையார், மீரா போன்ற பெண்கள் வாழ்ந்த பூமி இது, அதனால் பெண்களை ஹிந்து கடவுள் அல்லது ஹிந்து மதம் அவமதிக்கிறது என்ற பேசீர்க்கே இடம் இல்லை.

        சீனா/ரஷ்யா அதிபர் தான் எங்கள் அதிபர் என்று சொல்பவர்கள் எல்லாம் எங்கள் நாட்டில் உள்ள கோவிலில் எப்படி வழிபட வேண்டும் என்று சொல்ல தேவையில்லை. இடதுசாரிகள் முதலில் இந்தியர்களாக இந்திய மக்களுக்காக பேசட்டும் பிறகு அவர்கள் சொல்வதை கேட்கலாம். எதிரிகளோடு சேர்ந்து கொண்டு நாட்டை பிரிக்கும்(காஷ்மீர்) சதி செய்யும் எல்லாம் இடதுசாரிகள் எங்கள் நாட்டை பற்றி பேச தேவையில்லை.

        • அண்ணன் மணிகண்டன் அவர்கள் சொல்வதை இப்படியும் மொழிபெயர்க்கலாம்.

          ஒவ்வொரு மதத்திலும் சில முறைகள் உள்ள்ன, அந்தக் காலத்தில் திருமண முறிவுக்கு முத்தலாக் முறை சொல்லப்பட்டதற்கு காரணங்கள் இருக்கலாம். ஜாஹிரா பானு, ஆமினா பேகம், சல்மா ஹெய்க் போன்ற பெண்கள் வாழ்ந்த பூமி இது. அதனால் பெண்களை இசுலாமிய கடவுள் அல்லது இசுலாமிய மதம் அவமதிக்கிறது என்ற பேசீர்க்கே (?) இடம் இல்லை.

          நித்தியானந்தா / ஜெயேந்திரன் / ஆசாராம் தான் எங்கள் தலைவர் என்று சொல்பவர்கள் எல்லாம் எங்கள் மத வழக்கப்படி எப்படி விவாகரத்து செய்ய வேண்டும் என்று சொல்லத் தேவையில்லை. இந்துத்துவவாதிகள் முதலில் இந்துக்களாக இந்து மக்களுக்குப் பேசட்டும் – பிறகு அவர்கள் சொல்வதைக் கேட்கலாம். ரேப்பிஸ்ட்டுகளோடு சேர்ந்து கொண்டு மக்களை பிரிக்கும் (கலவரம்) சதி செய்யும் எல்லாம் இந்துத்துவவாதிகள் எங்கள் வழக்கத்தைப் பற்றி பேசத் தேவையில்லை.

        • Mr. Manikandan,

          “அந்த காலத்தில் சபரிமலை கோவிலுக்கு பெண்கள் வர கூடாது என்று சொன்னதற்கு காரணங்கள் இருக்கலாம்”

          So you are accepting that all these ristrictions are very very old. Thats what we all are telling again and again. For modern and civilized age these kind of foolishness should be abolished. Then why are you against our cry ?

  2. கடவுளின் பக்தி பயன்பாட்டுக்கு உபயோகப்படும் ஊதுபத்தி எங்க ஊரு பெண்கள் மாதவிலக்கு நேரத்துலதான் அதிகமா செய்றாங்க. பூ முதல் அதை கட்டும் நாரு வரை பெண்கள் தீட்டு படாத எந்த பூஜை சாமானும் கிடையாது என்ன செய்வீங்க.

  3. பெண்கள் ஐயப்ப மலைக்கு போகலாம் என்றாலும் பெண்கள் கூட்டம் குவியும். அப்பவும் சுரண்டும் அரசும், பொருக்கி தின்னும் பாப்பன கூட்டமும் மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும். வருமானத்தை ஏன் இழக்கிறார்கள் என்று தெரியவில்லை.

  4. இந்த அய்யப்பனை காண பெண்களுக்கான தடை காரணமாக இந்து மக்களில் சமுக பொருளாதார ரீதியாக சாதியின் பெயரால் ஒதுக்கி வைக்கபட்ட, பிரித்து வைக்கபட்ட தலித் மக்களை போன்றே நமது தாயும்,மகளும்,சகோதரிகளும் ஏனைய பெண்களும் தலித் மக்கள் தான் என்பதனை இந்துத்துவாக்கள் மீண்டும் மீண்டும் நிருபணம் செய்கின்றார்கள்….

    வேதங்களும் அதனை தானே வலியுறுத்துகின்றன…. ஏன்….பார்பன பெண்களும் தலித் தானே….!

  5. பெண்களை கருப்பு சாக்குமூட்டையில் மம்மி போல உலாத்த விட்டிருக்கும் அல்லாவை கைது செய்!

    • அப்போ அல்லாவ கைது செஞ்சுட்டா அயப்பனையும் கைது செய்யலாங்றீங்க…..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க