privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்கருப்புப் பணம் : மோடியின் கறைபடிந்த நாடகம் !

கருப்புப் பணம் : மோடியின் கறைபடிந்த நாடகம் !

-

black money 1நூறு, ஆயிரம் ரூபாய் செல்லாது என மோடி அறிவித்த உடனே யார் யார் எப்படி செயல்பட்டார்கள் என்பதற்கு இந்தச் செய்தி ஒரு சான்று. கூடவே மோடியின் இந்த நாடகத்தில் பாதிக்கப்பட்டோரும், பலனடைந்தோரும் யார் எனப் பார்க்கலாம்.

செல்லாத 500, 1000 ரூபாயை மாற்றுவதற்கு சென்னையில் உள்ள பல்வேறு நகைக்கடைகள் நவம்பர் 8 நள்ளிரவு தாண்டியும் திறந்திருந்தனவாம். இது குறித்து தினகரன் நாளேடு செய்தி வெளியிட்டிருக்கிறது. செல்லாத ரூபாய்களை டிசம்பர் மாத இறுதி வரை வங்கியிலும், மார்ச் மாத வரையில் அடையாளச் சான்றுடனும் மாற்றிக் கொள்ளலாம் என்பதால் நகைக் கடை முதலாளிகள் கிடைத்த வரை சுருட்டியிருக்கின்றனர்.

மற்ற கடைகள் போல விற்பனைப் பொருட்கள் சில்லறை விலையில் இங்கே இல்லை என்பதால் ஐநூறு, ஆயிரம் ரூபாய்களில் புழங்கும் பல்வேறு முட்டாள் புதுப் பணக்காரர்களும், மேட்டுக்குடியினரும் தி.நகருக்கு படையெடுத்தனர். வந்தவர்கள் அனைவரும் கார்களில் வந்தனராம். நள்ளிரவில் பேருந்து சேவையும் இல்லை, இருந்திருந்தாலும் தமது பணத்தை அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தும் சாதாரண மக்களுக்கு இங்கே வரவேண்டிய தேவையில்லை.

நான்கு இலட்சத்திற்கு மேல் நகை வாங்கினால் கணக்கு காட்ட வேண்டும் என்பதால் வந்த மேட்டுக்குடியினர் தங்களது கார் ஓட்டுநர், வீட்டுப் பணியாளர்கள் பெயரில் ரசீது வாங்கிக் கொண்டு நகைகளை வாங்கியிருக்கின்றனர். சிலர் பிடித்த நகைகளையும், பலர் கிடைத்த நகைகளையும் வாங்கிக் கொண்டனர். சிலர் தங்க நாணயம், மற்றும் தங்க கட்டிகளை வாங்கிச் சென்றனர். சாலைகளில் கார்கள் அணிவகுத்து நிற்க, போலீசார் போக்குவரத்தை ஒழுங்கு செய்ய நகைகள் அமோகமாக விற்றிருக்கின்றன.

black money 2நேற்று நள்ளிரவில் மட்டும் பல கோடிகளுக்கு நகை விற்பனை இருந்திருக்கும் என ஒரு நகை வியாபாரி தெரிவித்ததாக தினகரன் செய்தி கூறுகிறது.

இவர்களெல்லாம் தகவல் கிடைத்த உடன் பணத்தை புத்திசாலித்தனமாக தங்கமாக மாற்றிக் கொள்வதாக நினைத்து அப்படி அலை பாய்ந்திருக்கின்றனர். 500, 1000 ரூபாய்களை ஒன்றரை மாதத்தில் மாற்றிக் கொள்ளலாம் என்பதை தெரிந்து கொள்ளும் அளவுக்கு அறிவோ, நேரமோ இவர்களுக்கு இல்லை. மேலும் வங்கியில் மாற்றினால் ஆயிரத்தெட்டு பிரச்சினைகள் என்றும் நினைத்திருக்கலாம். கூடவே அன்றாட வாழ்க்கையில் லஞ்சம், ஊழல், கழிவு மூலம் பணம் சுருட்டும் புதுப் பணக்காரர்களாகவும் இவர்கள் இருக்கலாம். அதில் அரசு மற்றும் தனியார் நிறுவன அதிகாரிகளும் இருக்கலாம். இவர்களில் பலர் ஓசியில் தொந்தி வளர்க்கும் கூட்டத்தினராக இருக்க வேண்டும். ஒரு வேளை முறைகேடு இன்றி பணம் சம்பாதித்திருந்தாலும், தங்கம் வாங்கினால் தப்பிப்பாய் என்று அவசரப்படும் அப்பாவிகளும் கூட இதில் இருக்கலாம்.

பாரம்பரிய பணக்காரர்கள் மற்றும் முதலாளிகளது கருப்புப் பணம் வரியில்லா சொர்க்கங்கள் என அழைக்கப்படும் வெளிநாட்டு தீவுகளில் பத்திரமாக இருப்பதால் அவர்கள் இப்படி ‘அற்பத்தனமாக’ நடக்க வேண்டியதில்லை. அவர்களைப் பொறுத்த வரை கருப்புப் பணமும் பாதுகாப்பாக இருக்கும். தேவைப்பட்டால் இந்தியாவில் தொழில் தொடங்கவோ சொத்துக்களை வாங்கவோ மொரிஷியஸ் போன்ற அன்னிய முதலீடுகளுக்காகவே ஆண்டு முழுவதும் சேவை செய்யும் நாடுகள் மூலம் சட்டப்பூர்வமாகவே அந்த பணத்தை கொண்டு வர முடியும்.

மோடிக்கு மட்டுமல்ல அவரது கூட்டாளிகளான அதானி, அம்பானி போன்ற கேடிகளுக்கும் இந்த கேடிகளுக்காக இந்திய பொருளாதாரத்தை இயக்கும் ரிசர்வ் வங்கி அறிஞர்களுக்கும் இது தெரியும். இருப்பினும் நாட்டு மக்களிடம் ஏதாவது செய்து காட்ட வேண்டிய தேவை மோடிக்கு இருக்கிறது. உத்தரகாண்ட் பேரழிவின் போது தானே விமானத்தில் சென்று, இனோவா கார் மூலம் 15,000 குஜராத் மக்களை காப்பாற்றியவர் என்பதால் இந்த நள்ளிரவு தடை மூலம் இந்தியாவின் கருப்புப்பணத்தை நொடியில் கைப்பற்றிவிட்டார் என்று விரைவில் பாலிவுட்டில் படமும், பாராட்டு விழாவும் நடக்கலாம். தொடர்ந்து ஏதாவது செய்தால்தான் தனது வெத்துவேட்டு இமேஜை தக்கவைக்க முடியும் என்பது பாசிஸ்டுகளின் பாலபாடம்.

black money 4
கருப்புப் பண மோசடி பாபா ராம் தேவுடன் கை தூக்குகிறார் கருப்புப் பண மீட்பு போராளி மோடி!

வோடோபோன், நோக்கியா போன்ற நிறுவனங்கள இங்கே வரிஏய்ப்பில் கொண்டு சென்ற பணம் எத்தனை ஆயிரம் கோடி? மோடி அரசும் சரி, அதற்கு முந்தைய மன்மோகன்சிங் அரசும் முதலாளிகளுக்கு தள்ளுபடி செய்த வராக்கடன் எத்தனை இலட்சம் கோடி? சமீபத்திய பனாமா லீக்சில் இந்திய முதலாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் முதலீடு செய்திருப்பது எத்தனை இலட்சம் கோடி?

இவற்றையெல்லாம் யாரும் கொண்டு வரவோ மீட்கவோ முடியாது. அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றிக்கு அருகில் இருக்கும் நாளில் மோடி இதை அறிவித்திருக்கிறார். பகவான் அமெரிக்காவின் உற்சவர் மாற்றத்தில் அடிமை இந்தியாவின் வாழ்த்தாகவும் இதை சொல்லலாம்.

ஏனெனில் அனைவருக்கும் ஆதார், அனைவருக்கும் வங்கிக் கணக்கு அவசியம், மானியங்கள் வங்கிக் கணக்கில் அளிக்கப்படும், வணிக நடவடிக்கைகளில் ரொக்க புழக்கத்தை குறைத்து டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகமாக்குதல், ஜி.எஸ்.டி வரி விதிப்பு, பாதுகாப்பு துறையிலும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி, பொதுத்துறையை தனியார்மயமாக்குவதை விரைவு படுத்துதல், ரிலையன்சின் ஜியோ அனைத்தும் இந்த செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டு அறிவிப்போடு தொடர்புடையது.

சில மேதாவிகள் மோடியின் இந்த அறிவிப்பால் கருப்புப் பணம், பதுக்கல் பணம், அரசியல்வாதிகள் நோட்டுக்கு வாக்கு பெறுவது அனைத்தும் ஒழிக்கப்படும் என்று மடத்து ஆண்டிகள் மாளிகை கட்டும் கனவுத் திட்டம் போல பிதற்றுகிறார்கள். இத்தகைய முட்டாள்களே மோடியின் பிரச்சாரத்தின் காலாட்படையாக கதறுகிறார்கள் அதாவது உளறுகிறார்கள்.

ரொக்கப் புழக்கம் சுற்றும் லஞ்சம் எல்லாம் கலெக்டர் ஆபீஸ், அரசு மருத்துவமனை, இதர அரசு அலுவலகங்களில்தான். ஊழல் எனப்படும் உயர் மட்ட கொள்ளைகளில் இந்த ரொக்க புழக்கம் தேவையே இல்லை. அது பினாமி சொத்துக்களாகவும், வரியில்லா நாடுகளில் வங்கிக் கணக்காகவும், வரியில்லா தீவுகளில் பினாமி தொழில் நிறுவன பங்குகளாகவும் இன்னும் எண்ணற்ற வழிகளில் செயற்படுகின்றன. இனி வரும் தேர்தல் காலங்களில் மோடியின் நடவடிக்கை ஒரு வெங்காயத்தையும் ஒழித்து விடாது. ஏற்கனவே ஒரு வாக்குக்குக்கு 500, ஒரு குடும்பத்திற்கு 2000 என்று இருப்பதை இனி கூப்பன்களாகவோ, சேவைகளாகவோ கொடுத்து விட்டால் போதும். இவற்றை கொடுக்கல் வாங்கல் இல்லாமலே கூட சட்டப்பூர்வமாக செய்யமுடியும். ரிசர்வ் வங்கியின் ரகுராம் ராஜனே தமிழகத்தின் தேர்தலில் சில ஆயிரம் கோடி புழங்கும் அதை ஒன்றும் செய்ய முடியாது என்று கூறியதை இங்கே நினைவு கூர்க.

black money 3இதைத்தாண்டி ஜெயா கும்பல் பகிரங்கமாக கொடுக்கும் பணத்தை என்ன செய்ய முடியும்? திருப்பூர் கன்டெயினர் விவாகரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வளவு பெரிய மலை முழுங்கி கொள்ளை நடக்கும் நாட்டில் இந்த செல்லாத 500 ரூபாய் நோட்டு நாடகம் யாரை தண்டிக்கும்? இனி இந்தியாவில் லஞ்சம், ஊழல், மற்றும் அரசியல்வாதிகளின் பணத்தேவைகளை சட்டப்பூர்வமான பெயரில் சட்டத்தின் ஓட்டைகளில் புகுந்து சேவை செய்யும் உள்நாட்டு ஹவாலா நிறுவனங்கள் வரும்.

மோடியின் அறிவிப்பால் நேற்றிரவு இரவு உணவு இல்லாமல் அதாவது 500 ரூபாய் நோட்டை மாற்ற முடியாமல் பட்டினி கிடந்தோர் பலர். அன்றாடக் கூலி வேலைகளுக்கு மாலையில் கொடுக்க சில்லறை இல்லை என்பதால் பல நூறு கட்டிடத் தொழிலாளிகள் வேலை இழந்திருக்கின்றனர். சில்லறை பிரச்சினைகளுக்காக சிறு வியாபாரிகளும், அன்றாடம் அண்ணாச்சி கடைகளில் வாங்கும் சாதாரண மக்களும் சொல்லணாத் துயரங்களை அடைந்திருக்கின்றனர்.

கருப்புப் பணத்தின் ஊற்று மூலமான முதலாளிளுக்கும், அவர்களின் எலும்புத் துண்டை கவ்வித் தின்னும் அதிகார வர்க்கத்திற்கும் இந்த அறிவிப்பால் எந்தப் பிரச்சினையும் இல்லை. மக்களுக்கு  இந்த உண்மை தெரியவில்லை. மோடியின் அறிவிப்பால் நடைமுறை சிக்கல்களை சந்திக்கும் அளவே அவர்கள் இதை பேசுகிறார்கள். கருப்புப் பணத்தை ஏதோ அந்தக் கால நம்பியாரின் படுக்கை அறையில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் பணப்பெட்டியாகவே அவர்கள் கருதுகிறார்கள். மோடி அதை எப்படியாவது எடுக்க முயல்கிறார் என்று கொஞ்சம் நம்புகிறார்கள். இதுதான் மோடியின் நோக்கம். இதை அர்னாப் கோஸ்வாமி முதல் ரங்கராஜ் பாண்டே முதல் மாபெரும் வெற்றி என கூவுவார்கள்.

இத்தகைய ஊடகங்களுக்கு விளம்பரங்களையும், பிரதமர்களுக்கு புரவலர்களையும் அளிக்கின்ற முதலாளித்துவ உலகம் இந்த அறிவிப்பால் தனது இலாபத்தை கச்சிதமாக கணக்கு போட்டுக் கொண்டிருக்கும்.

  1. “””இந்திய பொருளாதார யானையின் மீது அதன் பாகன் மோடி அவர்களே மண்ணை எடுத்து வாரியிறைத்து விட்டார்..”””
    ———————————————–

    வினவு பொருளாதார கள நிலவரத்தை தி.நகரில் இருந்து ஆய்வு செய்தது ஓரு கோணம் மட்டுமே…ஆய்வுகள் ஏழை எளிய மக்களின் நிலைகள் மீது தான் ஆய்வுக்கு உட்படுத்தி இருக்கவேண்டும்… அத்தகைய ஆய்வுகள் முழுமையற்று தான் இந்த கட்டுரையில் உள்ளது. மளிகைக்கடை, காய்கறிக் கடை, பால் கடை என்று சென்று ஆய்வு செய்யுங்கள் வினவு… நிலமை மிகவும் கோரமாக உள்ளது. கற்பனையாக இந்தியா பாக் ,சீனா விடம் போரிடும் நிலையில் உள்நாட்டில் ஏற்படும் பொருளாதார பின்னடைவை போன்ற நிலை எதிர் கோணத்தில்(reverse angle) ஏற்பட்டு உள்ளது. கடைகளில் பொருள்கள் குவிந்து இருக்க வாங்க மக்களிடம் பணம் இல்லை. hole sale கடைகளில் வாங்கும் சிறு வணிகர்கள் கூட்டம் எங்கு போனது என்றே தெரியவில்லை. கடைகாரர்களின் கலையிழந்த முகங்கள் மட்டுமே கல்லா பெட்டியில் முகம் வைத்து வீதியை நோக்குகின்றன…வேலை செய்யும் கட்டுமான தொழிலாளர்களுக்கு தினக் கூலி கொடுக்க கட்டிட உரிமையாலர்களிடன் ரூ 1000 ,500 களில் நோட்டுகள் பெருத்த காசு இருந்தும் அவைகள் செல்லா காசாக நிற்கின்றது…. உள்ளூர் மருத்துவர்களிடம் மக்கள் கடன் சொல்லிச் செல்கிறார்கள்… மருந்து கடைகளில் 500 ரூபாய் நோட்டுகளை வாங்குவர்களா என்ற எங்க நிலையில் மனித முகங்கள்….

    இது தான் நான் கண்ட கள தமிழ் நாட்டின் பொருளாதார நிலவரம்…மெல்ல மெல்ல நடை பயிலும் இந்திய பொருளாதார யானையின் மீது அதன் பாகன் மோடி அவர்களே மண்ணை எடுத்து வாரியிறைத்து விட்டார்.. விளைவுகள் படு பயங்கரமாக வரும் நாட்களில் இருக்கும்… சிறு முதலாளிகள் மட்டும் அல்ல பெரு முதலாளிகளின் நிறுவனங்களுமே வரும் நாட்களில் பெருத்த பாதிப்புகளை எதிர்கொள்ளும்… பண புழக்கம் வரும் நாட்களில் செயற்கையாக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. மக்கள் உள்நாட்டு சந்தையில் வாங்கும் பொருட்களுக்கு தேவை குறையும்… அதனால் உள்நாட்டு பொருள் உற்பத்தியும் குறையும்… உள்நாட்டுக்குள் ஒரு பொருளாதார உள்நாட்டு போரை அறிவித்து உள்ளார் மோடி….

    • ஐயோ பாவம் உங்களை போன்றவர்களுக்கு தான் எங்கள் நாட்டின் மீது எவ்வுளவு அக்கறை 🙂

      கருப்பு பண முதலைகள் இப்படி தான் ஏழைகள் மீது அக்கறை இருப்பது போல் புலம்ப வேண்டும், அதுவும் உங்களை போன்ற சினிமா துறையில் இருப்பவர்களின் நிலை இன்னும் மோசம், அரசியல், தீவிரவாதத்திற்கு பிறகு சினிமா துறையில் தான் அதிக கருப்பு பணம் புழங்கும் இடம் அவர்கள் எல்லாம் கணக்கில் வராத பணத்தை வங்கியில் கட்ட முடியாது கட்டினால் பணம் எப்படி வந்தது என்று சொல்ல வேண்டும் கட்டாவிட்டால் அவர்கள் சம்பாதித்து வைத்த அத்தனை பணமும் வீணாகி விடும்… மோடி உண்மையில் மிக சிறந்த ஒரு செயலை செய்து இருக்கிறார், ஒரு நேர்மையான ஊழல் கறைபடியாத அரசியல்வாதியால் மட்டும் தான் இப்படி ஒரு முடிவை எடுத்து செயல்படுத்த முடியும்…

      வாழ்க இந்தியா

      • என்னைய சினிமா காரன் என்றே முடிவுக்கு வந்துட்டிங்கள மணிகண்டன்….! எப்படி முடிவுக்கு வந்தீங்க? நான் திரைக்கதை எழுதுவதாலா? நிழல் முற்றத்தை திரைக்கதை ஆக்குவது புத்தமாக்கும் முயற்சி தானே தவிர சினிமாவிற்கான முயற்சி அல்ல…. கல்கியின் சிவகாமியின் சப்தம் என்னுடைய அடுத்த இலக்கு…
        உண்மை தான் மணி…. சினிமாகா ரர்களைடம் இல்லாத கருப்பு பணமா? எனக்கு ஒன்னும் இந்த மோடியின் நடவடிகையாள தனிபட்ட முறையில் பிரச்சனை இல்ல… கையில 242 ரூ இருக்கு செலவுக்கு… ரெண்டு 500 ரூ நோட்டுகள் இருக்கு…. அது இல்லாம quartaly LIC due கட்ட 5500 ரூ 500 நாட்டுகளாக இருக்கு…. நாளைக்கு வேண்டாம் ஞயிற்றுகிழமை வங்கிக்கு சென்றால் என் அக்கௌன்ட்டில் பணத்தை போட்டு (5500 + 1000 = 6500) மாற்றிவிடுவேன்….
        ஆனால் பொது மக்களின் நிலைமை? சிறு வியாபாரிகளின் நிலைமை? உங்கள் எண்ணப்படியும் மோடியின் எண்ணப்படியும் பொது மக்களும் சிறு வியாபாரிகளும் தான் கருப்பு பணம் வைத்து உள்ளவர்களா மணி?
        NOTE:
        இன்று நாம் ஒரு விசயத்தில் இருவருமே உடன் படுகின்றேம்…சினிமா காரர்கள் பனம் கருப்புப்பணம் வைத்து உள்ளார்கள் என்ற விசயத்தில் … SEE MY FEEDBACK 3.2

      • நேர்மையான ஊழல் கறை படுயாத மோடி தான் குஜராத் மக்களை கூண்டோடு ஒழித்தது. வங்கியில் போடுவதால் வறுமை ஒழிந்து விடுமா?கறுப்பு பணம் மீண்டும் வராதா?

  2. பொய் பேசி ஓட்டுக் கேட்ட கோமாளிக்கு ஓட்டுபோட்ட மக்களை நினைத்தால் வேதனையாக இருக்கிறது. துக்ளக் returns …… இன் தி நேம் ஆப் மோடி….. விரைவில் அறிவிப்பு வரும் ….. பழைய நோட்டுகள் செல்லும் என்று…..

  3. கருப்பு பணத்தை மீட்பதில் மோடி தோல்வி – வினவு அப்போது
    கருப்பு பணத்தை மீட்க மோடி நாடகம் – வினவு இப்போது

    ஆக மொத்தம் மோடி என்ன செய்தாலும் அதை குறை சொல்ல வேண்டும் அது தான் இடதுசாரிகளின் கொள்கை… இந்த நாட்டிற்காக அரசியல் செய்தால் தானே சரி தவறு தெரியும் பாகிஸ்தானுக்கும் சீனாவிற்கும் அரசியல் செய்தால் இப்படி தான்.

    • ஒரு இலச்சம் கோடிகளுக்கு மேல் பெரு நிறுவனங்களில் இருந்து வராத கடன்… பல இலச்சம் கோடிகள் நாட்டுக்கு வெளியே உள்ள நிதி நிறுவனங்களில் இந்திய பெரு முதலாளிகளின் கருப்புப் பணமாக பதுங்கி இருக்க அவற்றை எல்லாம் மீட்க திறன் அற்ற மோடி ஓட்டு போட்டு வரம் கொடுத்த மக்களின் தலையில் கையை வைத்து உள்ளார் என்பதனை சிந்தைக்கு உட்படுத்தியுள்ளீர்களா மணிகண்டன்?

    • உண்மையில் இந்தியாவுக்குள் உள்ள கருப்புப் பணத்தை தான் மீட்பது என்பது மோடியின் நோக்கம் என்றால் அதற்கு மாறாக கருப்பு பணத்தில் குளிர்காயும் கார்பொரேட் நிறுவனங்களின் தலைவர்களும் .., தொடர்ந்து வரி எய்ப்பு செய்யும் நடிகர்களும் மோடியின் கட்டளையை ஆதரிகின்றார்கள் என்ற உண்மையின் பின்னணி என்ன? யார் பணத்தை சூரையாட .., யார் பணத்தை சுரண்ட இந்த திட்டம் மணிகண்டன்…? மக்களின் பணத்தை தானே அல்லாமல் வேறு யார் பணத்தை இந்த மோடி அரசு அபகரிக்கபோகின்றது ? இது ஒன்றும் உங்கள் ஹிந்துடுவாகளின் தனிபட்ட விசயம் அல்ல… எனது நாடு மக்களின் பிரச்சனை மணி… பொறுமையாக சிந்தனை செய்து பதில் அளியுங்கள்

    • 1990 களுக்கு பின் பெருத்தப்பணம் வெளிநாடுகளில் இந்திய கார்பரேட் நிறுவனங்களால் கருப்புப் பணமாக அனுப்பி வைக்கப் பட்டுவிட்டது… இப்போதும் கூட ஆடிட்டர்களின் துணையுடன் வரி எய்ப்பு செய்து பணத்தை வெள்ளையாக மாற்றி உல் நாட்டில் வைத்து உள்ளார்கள்… அவைகள் வெள்ளை பணமாக சட்டத்துக்கு தெரிவதால் அமலாகத்துறையோ , வருமான வரித்துரையோ அவர்கள் மிது கை வைப்பது இல்லை… மேலும் ஊழல் அதிகாரிகளின் பணமும் ,அரசியல் வாதிகளின் கருப்புப் பணமும் நிலமாகவும் ,தங்கமாகவும் முதலீடுகளாக உள்ளன… கருணாவின் அறிக்கையை பார்த்தீர்களா? மோடியின் இந்த திட்டத்தை வரவேற்கின்றாராம். கொள்ளையடித்த பணம் நல்ல முறையில் அவரின் குடும்பத்துக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டபின் அவருக்கு இந்த அறிவிப்பு மகிழ்வே! ஆனால் ஏழை எளிய நடுத்தரவர்கத்து மக்களின் கையிருப்பு மோடியின் அந்த அறிவிப்பால் கேள்விக்கு இடமாக்கப்பட்டு உள்ளது… வரம் கொடுத்த மக்களின் தலையிலேயே கை வைக்க யாரிடம் இருந்து கற்றுக்கொண்டர் இந்த மோடி?

    • மோடியின் அறிவிப்பு கருப்பு பணத்தின் மீது மட்டும் எதற்கு? கருப்புப் பணம் என்றால் அது பணம் மட்டும் அல்ல….பல்வேறு தங்கம் ,நிலம், நிறுவங்கள் என்று பல்வேறு முதலீடுகளும் கூடத்தான்.. கருப்புப் பணத்தினால் செய்யபட்ட அத்தகைய முதலீடுகளை பற்றி எந்த ஒரு அறிவிப்பும் செய்யாத மோடி மக்களின் கை பணத்தை மட்டும் ஏன் குறிபார்த்து அரசின் பெயரால் கொள்ளையடிக்க முயல்கின்றார் மணி?>?

  4. சென்னையில் ஆட்டோ ஓட்டுனர் சொன்னார் “இன்னைக்கு நீங்கதான் முப்பது ரூபாய்க்குக் கிடைத்த மூனாவது சவாரி. நேத்து ராத்திரி பிள்ளைங்களுக்கு செலவுக்குக் குடுக்க காசு இல்லை. சில்லரைக்காக டாஸ்மார்குல ஒருத்தருக்கு சரக்கு வாங்கி கொடுத்துட்டு மீதிய வீட்டுக்கு எடுத்துட்டு போனேன்.” என்றார்.

  5. சரி நீங்க சொல்லுங்க. கருப்பு பணத்தை மோடி மீட்டு விட்டாரா? மீட்கிறாரா? மீட்பரா? எங்க அக்கௌன்ட்ல இலட்சங்கள் விழுமா? இழவு காத்த கிளி மாறி ஆகி போச்சு எங்க நிலைமை.

  6. அன்றன்றைக்கு சம்பாதித்து அன்றைக்கே செலவழித்து முடிக்கிற ஒரு வர்க்கம் இருக்கிறது அவ்ர்களுக்கு பிரச்சினை இல்லை.மாத சம்பளம் வாங்கி அது இருபதாம் தேதிக்கே கரைந்து போய் கலங்கி நிற்க்கும் குடும்பங்களுக்கும் பிரச்சினை இல்லை. ஒரளவிற்க்கு சேமிக்கிற வாய்ப்பு கிடைத்து ,கவர்ந்து இழுக்கிற இந்த உலகமயமாக்க மாய உலகத்தின் மினுமினுப்பை புறக்கணித்து பொறுப்போடு சேமித்து ஏதாவது சிறு குறு தொழில் தொடங்கி நேரம் காலம் பாராமல் தன்னை உறுக்கி அந்த தொழிலில் கரைத்துக்கொண்டு சிறுக சிறுக சேமித்து பத்து லட்ச்சமோ இருபது லட்சமோ வைத்திருக்கிற ஒரு பொறுப்புள்ள வியாபாரி மோடியின் பார்வையில் பதுக்கல்காரன். கருப்பு பணத்தின் சொந்தக்காரன்.பல்லாயிரம் கோடியை ஏப்பம் விட்டு திரிபவன் நாட்டின் பொருளாதாரத்திற்க்கு உரம் சேர்ப்பவன்.இது மோடிக்கு மட்டுமா உரியது. முன்பிருந்த காங்கிரஸ் காரனுக்கும் இதுதான் பார்வை.கழுதை விட்டையில் முன் விட்டை என்ன பின் விட்டை என்ன..

  7. ஓட்டுப்போட்டு தேர்த்தெடுத்த மக்களை மீண்டும் நீண்ட நெடிய வரிசையில் நிறுத்தியுள்ளார் திருவாளர் மோடி அவர்கள்… நன்றி மோடி… உங்களின் நம்பகத்தன்மையை , மக்களின் மிதான விசுவாசத்தை வெளிகாடியமைக்கு… மிக்க நன்றி மோடி ஜீ…. வரிசையில் மக்கள் நிற்கின்றார்கள்…இந்தியன் வங்கி .இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஸ்டேட் வங்கி என்று வங்கிகளுக்கும் வெளியேயும் தெருவில் 100 அடி தொலைவிற்கும் மேல் கியூவில் நிற்கின்றார்கள்… மோடி அண்ணாச்சி எல்லாவற்றையும் தன் இணையத்தில் டிவிட்டரில் பார்த்துக்கொண்டு இருக்கின்றார்…

    மளிகைக்கடை அண்ணாசிகள் வியாபார சுற்றுக்கு அவர்களிடம் இருக்கும் ஒரு லட்சம் ஒரு இலச்சம் சில இலச்சங்கள் பணத்தை கட்டலாமா? கட்டினால் மோடியின் நிதி அமைச்சர் பிடித்து விடுவாரா என்று பயந்துக்கொண்டு இருகின்றார்கள்…

    மறைமலை நகரில் இருந்து செந்தில் குமரன்…

  8. நீங்கள் தான் கருப்பு பணம் என்ற மாயையை உருவாக்குகிறீர்கள், இது கருப்பு பணத்தை வெளி கொண்டு வருமா என்றால், சாத்தியம் மிக குறைவு, அதை வேறு வழிகள் மூலம் வெளிக்கொணருவதும் கஷ்டம் தான்.

    இந்த திட்டம், போலி கள்ள நோட்டுகளையும், பதுக்கல் பணத்தையும், வரி காட்டாமல் பதுக்கி வைத்திருக்கும் பணத்தையும் செல்லாக்காசாக்கி விடும், அவ்வளவு தான்.

    இதனால் கண்டிப்பாக அரசுக்கு ஒரு வழி தெரியும், நாட்டின் பணப்புழக்கம் எப்படி, வரி நிலவரம் எப்படி, சாமானிய மனிதனின் வரவு என்ன என்பது போன்றவை.

    இங்கு இருப்பவர்கள் எல்லாருமே, 5௦௦ 1௦௦௦ பற்றி கவலைப்படுகிறீர்கள், உண்மையை சொன்னால் அது உங்களுக்கு ஒரு பொருட்டாக தெரியவில்லை, இன்றும் இந்தியாவில் 1௦௦ ரூபாய்க்கு குறைவாக வேலை பார்ப்பவர்கள் இருக்க தானே செய்கிறார்கள்.

    • எஸ்.ஜே சார்,

      கட்டுரையின் தலைப்பை பார்த்து ஏதோ கருத்து சொல்லியிருக்குறீங்க…
      ரொம்ப பெரிய கட்டுரையெல்லாம் இது இல்லை தான். இருந்தாலும் படிச்சு பாருங்க…..

      //ரொக்கப் புழக்கம் சுற்றும் லஞ்சம் எல்லாம் கலெக்டர் ஆபீஸ், அரசு மருத்துவமனை, இதர அரசு அலுவலகங்களில்தான். ஊழல் எனப்படும் உயர் மட்ட கொள்ளைகளில் இந்த ரொக்க புழக்கம் தேவையே இல்லை. அது பினாமி சொத்துக்களாகவும், வரியில்லா நாடுகளில் வங்கிக் கணக்காகவும், வரியில்லா தீவுகளில் பினாமி தொழில் நிறுவன பங்குகளாகவும் இன்னும் எண்ணற்ற வழிகளில் செயற்படுகின்றன. இனி வரும் தேர்தல் காலங்களில் மோடியின் நடவடிக்கை ஒரு வெங்காயத்தையும் ஒழித்து விடாது. ஏற்கனவே ஒரு வாக்குக்குக்கு 500, ஒரு குடும்பத்திற்கு 2000 என்று இருப்பதை இனி கூப்பன்களாகவோ, சேவைகளாகவோ கொடுத்து விட்டால் போதும். இவற்றை கொடுக்கல் வாங்கல் இல்லாமலே கூட சட்டப்பூர்வமாக செய்யமுடியும். ரிசர்வ் வங்கியின் ரகுராம் ராஜனே தமிழகத்தின் தேர்தலில் சில ஆயிரம் கோடி புழங்கும் அதை ஒன்றும் செய்ய முடியாது என்று கூறியதை இங்கே நினைவு கூர்க.//

Leave a Reply to Manikandan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க