privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திபுதிய ஜனநாயகம் – நவம்பர் 2016 மின்னிதழ்

புதிய ஜனநாயகம் – நவம்பர் 2016 மின்னிதழ்

-

puthiya-jananayagam-november-2016புதிய ஜனநாயகம் நவம்பர் 2016 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்

  1. சோசலிசம்: முதலாளித்துவத்தின் கொடுங்கனவு! பாட்டாளி வர்க்கத்தின் கலங்கரை விளக்கம்!!
    “இத்தனை நாடுகளில் தோல்வியடைந்த பின்னரும் சோசலிசம் என்ற இந்தக் கருதுகோள் வெவ்வேறு வடிவங்களில், வெவ்வேறு நாடுகளில் தலையெடுப்பது ஏன்?” என்று ஆராய்ச்சி நடத்துகிறது அமெரிக்க ஏகாதிபத்தியம்.

  2. மாஃபியாவின் ஆட்சி!
    “எனக்குப் பிறகு… பேரழிவு” என்று பிரெஞ்சுப் புரட்சியில் தலையை இழந்த மன்னன் பதினான்காம் லூயி கூறியதாகச் சொல்வதுண்டு. எம்.ஜி.ஆரும் சரி, ஜெயலலிதாவும் சரி, இருவருமே தனக்குப் பின் கட்சி இருக்க வேண்டும் என்று விரும்பியவர்கள் அல்ல.

  3. நரேந்திர மோடி: “வளர்ச்சியின்” நாயகனா, கொள்ளைக்கூட்டத் தலைவனா?
    பண்டிகை காலங்களில் தனியார் ஆம்னி பேருந்துகளில் நடக்கும் கட்டணக் கொள்ளையை விஞ்சி நிற்கிறது, ரயில்வேயின் சிறப்பு ரயில்கள் கட்டண உயர்வு.

  4. தமிழ் மக்களின் வயிற்றிலடிக்கும் மோடி!
    தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தைத் தமிழகத்தின் மீது திணித்து, ரேஷன் பொருட்டகள் விநியோகத்தில் தமிழக அரசின் தனியுரிமையைத் தட்டிப்பறித்திருக்கிறது, மோடி அரசு.

  5. காவிரி : தத்துவஞானி சமஸ் சாப்பிடுவது சோறா, கழிவா ?
    “தமிழகத்துக்கான நீராதாரங்களைக் கொண்டே நம்முடைய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வது என்று மிகவும் பொறுப்புடன பேசுவது போன்ற தோரணையில் சமஸ் கூறும் கருத்தின் உட்பொருள் காவிரி இரவல் நதி” என்பதுதான்.

  6. பத்திரிகை செய்தி: மல்கான்கிரி போலிமோதல் கொலை: சொந்த நாட்டு மக்கள் மீது நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைக்!
    கடந்த 24-10-2016 அன்று ஆந்திரா-ஒரிசா எல்லைப் பகுதியில் நடந்த தேடுதல் வேட்டையில் 28 மாவோயிஸ்டுகளை சுட்டுக் கொன்றுவிட்டதாக அறிவித்திருக்கிறார் ஆந்திர மாநில டி.ஜி.பி. சம்பாசிவராவ். ஒடிசா முதல்வர் காவல்துறைக்கு பாராட்டுத் தெரிவித்திருக்கிறார்.

  7. தமிழக வழக்கறிஞர்கள் மீது வாழ்நாள் தடை ! வ.உ.சி க்குப் பின்னர் இதோ, முதன்முறையாக!!
    தங்களுடைய நடத்தையையும் தீர்ப்பையும் நியாயப்படுத்த முடியாத நீதிபதிகள், தம்மை அம்பலப்படுத்தும் தமிழக வழக்குரைஞர்களைக் குறுக்கு வழியில் ஒழித்துக்கட்டி வருகிறார்கள்.

  8. மரபீனிக் கடுகு: இந்திய உணவுச்சந்தையைக் கைப்பற்றத் துடிக்கும் வல்லரசுகளின் இன்னுமொரு ஆயுதம்!
    பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கூலிகளின் கையில்தான், நமது தாவரங்களின் மரபியல் ஆய்வுகளும், எதிர்கால விவசாயமும் சிக்கியுள்ளது.

  9. சிங்கூர் தீர்ப்பு: விவசாயிகளுக்குக் கிட்டிய வெற்றியா?
    பொதுப்பயன்பாடு என்ற போர்வையில் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை ரத்து செய்யாமல், மொன்னைத்னமான தீர்ப்பை அளித்திருக்கிறது, உச்ச நீதிமன்றம்.

  10. இந்த தீண்டாமைக் குற்றத்தின் மதிப்பு 2.8 லட்சம் கோடி ரூபாய்!
    பட்ஜெட்டுகளில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்களின் நலத் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை, அம்மக்களுக்காகப் பயன்படுத்தாமல், வெவ்வேறு இனங்களுக்குக் கடத்திக் கொண்டு போவதும், நிதியைச் செலவழிக்காமல் கிடப்பில் போடுவதும் சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது.

  11. குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை!
    மாதத்துக்கு 2 கேசு கொடுங்கண்ணே என்று கள்ளச்சாராய வியாபாரியிடம் பேரம் நடத்தும் போலீசு போல, மோடி கும்பலின் கருப்புப்பண மீட்பு நாடகம் நடந்துள்ளது.

  12. பா.ஜ.க. வழங்கும் “தேசியக் கொடிக்கு மரியாதை!”
    முகம்மது அக்லக்கைப் படுகொலை செய்த குற்றவாளிகளுள் ஒருவனான ரவி சிசோடியாவின் சடலத்தின் மீது தேசியக் கொடியைப் போர்த்தியதன் மூலம், கொடிக்கு ஆளும் வர்க்கம் கற்பித்திருந்த புனிதத்தின் மீது காறித் துப்பியிருக்கிறது பா.ஜ.க.

  13. “ராவணனை எரிக்காதே! ” ஓங்கி ஒலிக்கும் அசுரர்களின் கலகக் குரல்!
    பார்ப்பனியத்தை மக்களின் தொண்டைக் குழிக்குள் திணிக்கும் முயற்சி அதிகரிக்க அதிகரிக்க எதிர்ப்பும் அதிகரிக்கிறது. அந்த வகையில் தமிழகத்தைத் தொடர்ந்து, வட மாநிலங்களிலும் அசுரர்களைத் தங்களது மூதாதையர்களாகக் கொண்டாடும் கலகப் பண்பாடு முளைவிட்டிருக்கிறது.

புதிய ஜனநாயகம் நவம்பர் 2016 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 3 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

புதிய ஜனநாயகம் மாத இதழின் ஆண்டுச் சந்தா உள்நாடு ரூ.180

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com